ஒவைசியின் அரசியல் நிலைப்பாடுகள் ஒவ்வொரு முறையும் பாஜகவுக்கு சாதகம் ஆகுமா?

ஒட்டு மொத்தமாக பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கே ஒவைசிதான் காரணம் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பாஜக வெல்வதற்கு பல நேரங்களில் ஒவைசி கட்சி ஓட்டுக்களை பிரிப்பது காரணமாகி விடுகிறது.
நடந்து முடிந்த உ.பி சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 7 தொகுதிகளில் பாஜக வெல்வதற்கு ஓவைசி ஓட்டுக்களை பிரித்தது முக்கிய காரணம்.
மெரடாபாத் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவிற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் வெறும் 782 வாக்குகள் தான் வித்தியாசம். அந்த தொகுதியில் ஒவைசி கட்சி 2661 வாக்குகள் பெற்றிருந்தது.
அதே போலத்தான் குரேசி தொகுதியில் பாஜகவிற்கும் சமாஜ்வாதிக்கும் இடையில் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வாக்கு வித்தியாசம் வெறும் 217 தான். இங்கு ஒவைசி கட்சி 8451 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏழு தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி வாக்குகள் பாதித்து பாஜக வெல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போது நடைபெற்ற பீஹாரின் கோபால்கன்ச் இடைத்தேர்தலில் கூட பிஜேபி வெல்வதற்கு ஒவைசி கட்சி காரணமாகி உள்ளது.
பாஜக 70,032 வாக்குகள், ராஷ்டிரிய ஜனதா தளம் 68,243 ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 12,212 வாக்குள் பெற்றுள்ளனர்.
வெறும் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் இந்த தொகுதியில் பாஜக வென்றுள்ளது. ஆனால் ஓவைசி கட்சி பெற்றதோ பன்னிரண்டாயிரம் வாக்குகளாகும்.
இப்படி பலமுறை நடந்துள்ளதிலிருந்து உங்கள் கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.