இந்தித் திணிப்பு எதிர்க்கப்படுவது ஏன்?

நாட்டின் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் அம்சமாக ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன் படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று அமீத்ஷா கூறியதற்கு பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இந்திப் பதாகைகளை அழித்து போரட்டக் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளார்கள்.
நேரு ஹிந்தியை முதன்மை மொழியாக கொண்டுவர முயற்சித்த போது எழுந்த எதிர்ப்புகளால் அப்போது அதை கைவிட்டார்.
தற்போது ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை பாஜக கொண்டு வருவது ஆபத்தானது.
மூன்றாவது மொழியாக ஹிந்தியை நமது பிள்ளைகளை படிக்க செய்வது குற்றமில்லை. ஆனால் ஹிந்தியை திணிப்பது தான் கூடாது. கட்டாய மாக்குவதில் தான் சிக்கல் இருக்கிறது.
பாஜக கொண்டு வரும் சட்டங்கள் ஆரம்பத்தில் விளக்கம் அளிக்கும் போது நாட்டுக்கு நன்மை போலவே தெரியும் ஆனால் தவறாக பயன்படுத்தவே சட்டங்கள் கொண்டு வருவதை பாஜக மறைத்து விடும்.
திருமண விவாகரத்தின் போது முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் பெண்களின் உரிமை காக்க முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வருவதாக ஆரம்பத்தில் பாஜக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இஸ்லாம் வழங்கி இருக்கும் எளிமையான விவாகரத்து முறையை முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வருவதின் மூலம் விவகாரத்து முறையை கடுமையாக்கிட வேண்டும் என்பதே பாஜகவின் முத்தலாக் தடை சட்டத்தின் நோக்கம். இச்சட்டத்தை தவறாக பயன் படுத்தும் பெண்கள் மூலம் முஸ்லிம் ஆண்களை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கவும் பழிவாங்கவும் முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது, உள்ளூர் ஜமாத்துகள் வழியாக இலகுவாக விவாகரத்து பெற்று அடுத்த திருமணம் முஸ்லிம்கள் செய்வதை தடுத்து நீதி மன்றங்கள் வழியாகவே விவாகரத்து பெற வேண்டும் என்பதே முத்தலாக் தடைச் சட்டத்தின் நோக்கம் என்பதை பாஜக மறைத்ததை நாம் மறக்க முடியாது.
ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் செல்லாது என்று திடீர் அறிவிப்பை மோடி வெளியிட்ட போது கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என தெரிவித்தார்.
ஏழை மாணவர்கள் மருத்துவராவதை பறித்த நீட் தேர்வு, இப்படி பாஜக உள்நோக்கம் கொண்டு இயற்றிய சட்டங்கள் நிறைய உண்டு. இது தான் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு. உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே நன்மை போல பிரச்சாரம் செய்யும்.
இப்படித்தான் மாணவர்களிடம் ஹிந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்படுவதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
இந்தியாவில் அதிகமான மாநிலங்களில் மாநில மொழிகளே தாய் மொழியாக கொண்டவை. தமிழ்நாட்டில் தமிழ், கர்நாடகத்தில் கன்னடம், கேரளாவில் மலையாளம், குஜராத்தில் குஜராதி, மஹாராஸ்டிராவில் மராத்தி, பஞ்சாப்பில் பஞ்சாபி, மேற்கு வங்கத்தில் பெங்காளி, காஷ்மீ£¦ல் காஸ்மீரி, ஆந்திராவில் தெலுங்கு, அஸ்ஸாமில் அஸ்ஸாமி, ஆகிய மாநிலங்களில் ஹிந்தி அல்லாத அம்மாநில மொழிகளே தாய் மொழிகளாக பேசப்படுகின்றன.
ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குவது மாநில மொழிகள் சிதைக்கப்படும். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து விடும்.
ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன்பாகவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் ரயில் நிலையங்களிலும் பயணச் சீட்டுகளில் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும். இங்கு மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டு விட்டால் மத்திய அரசு அலுவலங்களில் மாநில மொழிக்கு இடம் இல்லாமல் போகும். நாளடைவில் மாநில மொழிகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும். ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்பது வேறு. அதையே கட்டாயப்படுத்துவது வேறு. கட்டாயப்படுத்துவதே எதிர்க்கப்படுகிறது இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.