உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு சாதகமாக இருக்க வேண்டும்?

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 5 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வழக்கம் போல திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டி இடுகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்துப் போட்டி இடுவதாக அறிவித்தாலும் சில இடங்களில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலைப் பொருத்த வரை போட்டியிடும் வேட்பாளரை பொருத்தே மக்கள் வாக்களிப்பார்கள். அதனால் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சுயேட்சையாக போட்டி இடுபவர் கூட வெற்றி பெறுவதுண்டு.
உள்ளாட்சி தேர்தல் என்பது கிராம, நகர வார்ட் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக நடை பெறுவதால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் வளர்சி பணிகள் நடைபெறும் என்பதால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களும் உண்டு.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தார் சாலைகள், சிமெண்ட் ரோடுகள், தண்ணீர் இணைப்புகள், தெரு விளக்குகள் கூட முறையாக செய்து கொடுக்கப்படுவதில்லை. முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
சிஏஏ சட்டம் கொண்டு வர காரணமாக இருந்த அதிமுக அதற்காக பரிகாரம் தேடும் முயற்சியில் இன்னும் இல்லை. தமிழக சட்ட மன்றத்தில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் கடந்த வாரம் கொண்டு வந்த போது அதை ஆதரிக்காமல் முன்கூட்டியே அதிமுக வெளி நடப்பு செய்தது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, தோல்வி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் பலம் பலவீனமாக பார்க்கப்படும்.
அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்குகள் கட்சியின் பலமாகவே பார்க்கப்படும்.
சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவை எதிர்த்து ஒட்டு மொத்த சமுதாயமும் வாக்களித்தது அதிமுகவின் தோல்விக்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
வார்ட் உறுப்பினர் முதல் நகர்மன்ற தலைவர் மேயர் வரை உள்ளாட்சி பதவிகளின் வெற்றிகள் கட்சிகளின் கீழ்மட்ட பலமாக பார்க்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தே அதிமுக போட்டி இடுகின்றது.
சட்ட மன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிமுகவுக்கு கற்றுக் கொடுத்த பாடத்தை உள்ளாட்சி தேர்தலிலும் புகட்ட வேண்டி இருக்கிறது.
எந்த முஸ்லிம் ஊர்களிலும் அதிமுக விற்கு வெற்றி இல்லை என்பதை நாம் பதிவு செய்யும் நேரம் இது.
ஆஸாதிக்காக உயர்த்திய கைகள் அதிமுகவிற்கு வாக்களிக்காது என்பதை அதிமுக உணர வேண்டும்.