உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் நிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது ?

உத்திரப்பிரதேசத்தில் தற்போது பாஜக தலைமையில் யோகி ஆதித்திய நாத் முதலமைச்சராக உள்ளார். 403 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட நாட்டின் மிகப்பெரிய சட்டமன்றம் பெற்ற மாநிலமாக உள்ளது. அங்கு 2022ல் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக செல்வாக்கு பெற்ற மாநிலங்களில் உ.பியும் ஒன்று என்றாலும் வரும் சட்ட மன்ற தேர்தலில் அது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உ.பி யில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் யோகிஆதித்யநாத் அரசு செல்வாக்கை இழந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரியாக கையாளாததும், புலம்பெயர் தொழிலாளிகளான சொந்த மாநில மக்களை எல்லையில் தடுத்து வைத்ததும், பாஜக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகள் கனிசமான தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இந்தச் சமூகங்களின் வாக்குகள் பி£¤யும் போது வெற்றிகள் இடம் மாறி போகின்றன. ஹத்ராஸ் பாலியல் சம்பவம் தலித் மக்களின் வாக்குகளை பாஜகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
மேற்கு உத்திரப்பிரதேச பகுதியில் ஜட் இனமக்கள் அதிக அளவில் இருக்கின்றனர் சுமார் 100 தொகுதிகளில் வெற்றியை தீமானிக்கும் அளவுக்கு பரவி இருக்கின்றனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை தூண்டி ஆட்சியை பிடித்தது போல கடந்த 2013 ம் ஆண்டு முசாபர் நகர் கலவரத்தை தூண்டி பாஜக ஜாட் இனமக்களின் ஆதரவை பெற்றது.
முசாபர் நகர் கலவரத்திற்கு பின்னர் ஜாட் சமுத்துடன் முஸ்லிம்களுக்கான நல்லுணர்வில் விரிசல் ஏற்பட்டு உள்ளது,
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தாலும் உ.பியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஜாட் இன மக்களே முன்னேடுத்து சென்றனர், லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் போது கூட்டத்தில் வாகனத்தை விட்ட சம்பவம் பாஜக மீது கடும் கோபத்தை ஜாட் இன மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. லக்கிம்பூர் சம்பவம் விவசாயிகள் மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட சதவீத பொது மக்களின் கோபத்தை பாஜகவுக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறது.
எப்போதும் பல முனை போட்டி நிலவும் மாநிலமாக உ.பி இருந்து வந்திருக்கிறது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி, அகிலேஸ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியன முக்கிய பிரதான கட்சிகளாக தேர்தலில் போட்டியிடுகின்றன.
சட்ட மன்றத்தில் பிரதான எதிர் கட்சியாக செயலாற்றி வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஸ் யாதவுக்கு இந்த முறை மக்களிடன் ஆதரவு பெருகி வருகிறது.
ஜாட் இன மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று இருக்கும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த சவுத்ரி, அகிலேஷ் யாதவ் உடனான சந்திப்புக்கு பின் கூட்டணி உறுதியாகி விட்டது. மத வாத அரசியலுக்கு உ.பி யில் இடமளித்து விட கூடாது என்று இருவரும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகின்றனர். பாஜகவின் வகுப்பு வாத அரசியலை கட்டுப்படுத்த ராஷ்ட்ரீய லோக் தளத்தின் அரசியல் எழுச்சியே மாற்று மருந்தாக அமையும் என்று கூட்டங்களில் பேசி வருகிறார். இது ஜாட் மக்களிடம் முஸ்லிம்களுடனான நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த முறை உ.பியில் பாஜக எழுவது கடினம் என்பதை விளங்கி கொண்ட பாஜக டெல்லி தலைமை மக்களின் கோபத்தை தணிக்க யோகியை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டுமென்ற குரல் பாஜகவில் எழத்துவங்கி இருக்கிறது.