பத்திரிகை துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?

முஸ்லிம்கள் அனைத்துத் துறையிகளிலும் கால்பதிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. நீங்கள் கேட்பதோ மீடியாவை பற்றியது மட்டுமாக உள்ளதால் அது சம்பந்தமாக மட்டும் பார்க்கலாம்.
இந்தியாவின் ஜனாநாயக தூண்களில் ஒன்று மீடியா எனலாம். எல்லா கால கட்டத்திலும் இதன் தேவை மக்களுக்கு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது. மக்கள் தங்களின் அண்டை வீட்டு செய்திகளை கூட செய்தியை பார்த்து தொ¤ந்து கொள்ளும் அளவுக்கு அது மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அது கவர்ந்து வைத்துள்ளது. இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையில் முஸ்லிம்கள் மிக மிக அரிதாகவே உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க அல்லது குறைக்க ஒரு முஸ்லிம் அந்தத் துறையில் செல்வது நல்லது. மக்கள் செய்திகளை அதிகம் நம்புகிறார்கள்.
செய்திகள் சரியாக சொல்லப்படுகிறதா? உண்மை செய்திகள்! நடுநிலை செய்திகள் ! பொறுப்புடன் செய்திகள்! நேர்முக செய்திகள் என்றெல்லாம் பல விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் உன்மையில் அது போல செய்திகள் பெரும்பாலும் வருவது இல்லை. அதை மாற்ற ஒரு முஸ்லிம் சமூகம் பாடுபடலாம்.`