உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என பல ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா?

தேர்தல் வந்துவிட்டால் இரண்டு தொல்லைகளை மக்கள் சந்தித்தே ஆகவேண்டும்.
ஒன்று அரசியல்வாதிகளின் வானளாவிய அறிவிப்புகள். இன்னொன்று தொலைக்காட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் தேர்தல் கருத்துக் கணிப்புகள்.
எந்த ஒரு நிறுவனமும் நேர்மையாக கருத்துக்கணிப்பை நடத்துவதில்லை. பெயரளவில் ஒராயிரம் முதல் சில ஆயிரங்கள் நபர்கள் வரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதையே ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது தேசத்தின் கருத்தாக கட்டமைப்பது.
இதைத்தான் தேர்தல் கணிப்பு பணிகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் செய்கின்றனர்.
எந்த ஒரு நிறுவனமும் ஒரு மாநிலத்தில் உள்ள அத்தனை வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து அவர்களின் வெளிப்படையான கருத்துக்களைக் கேட்டுப் பெற்று கருத்து கணிப்பை வெளியிடுவதில்லை.
இது மூலம் கருத்துக் கணிப்பு என்பது பொய்யான ஒன்று என்பதையும் அது சரியான முறைகளில் எடுக்கப்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
அடுத்து இன்னொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய மாநில அரசுகளுக்கு ஜால்ரா அடிக்கின்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் குறிப்பிட்ட கட்சியிடம் இருந்து நிதியை பெற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் நிறுவனங்களும் நேர்மையாக கருத்துக்கணிப்பை நடத்தி வெளியிடுவார்கள் என்று நாம் நம்புவோமனால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இல்லை எனலாம். தற்போது உத்திரப் பிரதேசத்திலும் அது தான் நடக்கின்றது.
ஏபிபி, ரிபப்ளிக், டைம்ஸ் நவ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எதிர் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என்று கருத்து கணிப்பை அதாவது திணிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒரு சில துணிச்சலான ஊடகங்களை தவிர மற்றவை யாவும் பாஜகவின் காலடியில் விழுந்து கிடக்கின்றன என்பதை அறிய புலனாய்வு அறிவு எல்லாம் தேவையில்லை.
அப்படியான ஊடகங்கள் இப்படி கணிப்பு கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கருத்துக் கணிப்பை வெளியிடுவதில் பாஜவுக்கு உள்ள ஒரு நன்மை துணிந்து வாக்குப்பெட்டியில் கை வைக்கலாம்.
அது தான் முன்பே பாஜகவுக்கு வெற்றி வெற்றி என்று தனது அடியாள் நிறுவனங்களை வைத்து தேவையான அளவு கூவியாச்சு அல்லவா? அதன் பிறகு வாக்கு இயந்திரங்களில் கை வைத்தாலும் மக்களும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் யோகி அரசுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த ஒன்று.
கொரோனா பேரிடர் காலம் உத்தரபிரதேச மாநிலத்தின் அவலநிலையை முழு உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அங்கு மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் யோகியின் ஆட்சியில் செய்து கொடுக்கப்படவில்லை.
நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் திணறினர். மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறின.
பிணங்களை எரியூட்டக் கூட இடமின்றி மக்கள் அவதிப்பட்டனர். கங்கையில் பிணங்கள் மிதந்தன. மத்திய அமைச்சர் ஒருவரே தனது உறவினரை மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.
அது மட்டும் அல்ல. மோடி அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராடிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் மீது பாஜகவினர் காரை ஏற்றி பல விவசாயிகளை கொன்றனர்.
இதற்கு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காத யோகி அரசு, பாஜகவினர் தான் விவசாயிகள் மீதி காரை ஏற்றினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அப்பட்டமாகப் புளுகினர்.
இப்படி ஒட்டுமொத்த மாநில மக்களுக்கு எதிரான ஆட்சிமுறையை செய்து மக்கள் வெறுப்பை சம்பாதித்த யோகி அரசே திரும்ப ஆட்சிக்கு வரவேண்டும் என்று அந்த மாநில மக்கள் கருதுகிறார்களாம்.
இவ்வாறு இந்த வேசி ஊடகங்கள் குடுகுடுப்பைக்காரனை போல கூச்சலிடுகின்றனர் என்றால் இதிலிருந்தே இவர்களின் தரத்தைப் புரிந்து கொள்ளலாம்.
உ.பியில் தேர்தல் நேர்மையாக முடியட்டும். அதன் பிறகு மக்கள் என்ன தீர்ப்பை அளிக்கின்றார்கள் என்பதை பார்ப்போம்.