உ.பியில் மாயாவதியுடன் கூட்டணி முடிவாகாதது குறித்து ராகுல்காந்தி தெரிவித்து இருப்பது எதைகாட்டுகிறது?

அரசை விமர்சிப்பவர்களை மிரட்ட சிபிஐ, வருமான வரித்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம். இவற்றை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது,
குஜராத்தில் எண்கவுண்டர் செய்யப்பட்ட சர்புதீன் வழக்கில் அமீத்ஷாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி சதாசிவம் பதவி ஓய்வு பெற்ற பின் ஆளுநர் பதவி வழங்கியது பாஜக. பாபர் மசூதி வழக்கில் இடித்தவர்களுக்கே இடம் சொந்தம் என்று அநியாயத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரங்கன் கோகாய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்தது. அரசியல் தலைவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐயைத் தவறாகப் பயன்படுத்தி விசாரிக்க பாஜக தவறவில்லை, தங்களுக்கு எதிராக உள்ளவர்கள் மீது வருமான வரித்துறை மூலம் ரைடு செய்து மிரட்டிப் பணிய வைப்பதை கடந்த எட்டு ஆண்டுகளில் மத்தியில் இருக்கும் பாஜக அரசு செயல்படுத்த தவறவில்லை.
தென் இந்தியாவின் தமிழகத்தில் கால் ஊன்ற பாஜக இந்த உக்தியை கையாண்டதை நாம் மறந்திட வில்லை, ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் இப்படித் தான். அப்போது அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மூலம் ரைடு செய்து அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டதோடு பாஜகவை எதிக்க முடியாமல் போகும் அளவுக்கு அதிமுகவின் தலைமையை பலவீன படுத்தி இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசை கண்டிக்காமல் திமுகவை கண்டிக்கும் அளவுக்கு பாஜகவைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது அதிமுக தலைமை.
மோடி எங்கள் டாடி, அதிமுக ஆட்சியில் ராமராஜ்ஜியம் தான் நடந்ததாக தனது அடிமைத் தனத்தை வெளிப்படுத்துவதும் அதிமுக தலைவர்கள் மத்திய பாஜக கையில் இருக்கும் வருமான வரித்துறையைக் கண்டு பயத்தில் தான் என்பது ஊரறிந்த உண்மை,
தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளைக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக உள்ளவர்களை மிரட்டுவதை பாஜக வன்மையாக கொண்டிருக்கிறது,
இப்படித்தான் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளைத் தவறாக பயன் படுத்தியும், மிரட்டியும் பனியவைக்கிறார்கள்.
உத்திரப் பிரதேச தேர்தல் வெற்றியும் இப்படி பெற்றது தான் என்பது இப்போது வெளியே வந்திருக்கிறது,
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியும் எதிர்க் கட்சியை அச்சுறுத்தி பெற்ற வெற்றி.
நாடே உற்று நோக்கிய உத்திரப்பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது தேர்தல் பரப்புரையை தாமதமாகவே துவக்கினார். பெயரளவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்துக் கொண்டார், நான்கு முறை முதல்வராக இருந்த மாயாவதி இந்த முறை தேர்தலில் போட்டியிடவே வில்லை, அது அன்று கடும் விவாதப் புயலை கிளப்பியது இன்று அதன் மர்மம் விலகி இருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முயன்றதாகவும்,, மாயாவதியே முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும் என்றும் அழைத்தும் அது முடியாமல் போகி விட்டது. மாயாவதி மீது இருக்கும் வழக்கை மத்திய பாஜக அரசு மீண்டும் எடுக்கும் என்ற பயமே அவர் கூட்டணிக்கு உடன் படாமல் விலகி நின்றார் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்,
உத்திரப் பிரதேசத்தில் தனது அதிகாரத்தை தக்க வைக்க தங்கள் கட்டுப்பாட்டி இருக்கும் அதிகாரத் துறைகளை காட்டி எதிர்க் கட்சிகளை பாஜக மிரட்டி இருப்பது அம்பலமாகி இருக்கிறது,
தேர்தலில் அரசியல் கட்சிகள் மிரட்டப்பட்டு ஜனநாயகம் கேலி செய்யப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது.
எதையும் எதிர் கொள்ளும் துணிவு அரசியல் தலைவர்களுக்கே இல்லாமல் போனால் அழிவின் பாதையில் இருந்து, நாட்டையும், சாமானிய மக்களையும் யாரால் காப்பாற்ற முடியும்.
இந்தியா சர்வதிகாரத்தை நோக்கி செல்கிறது என்று சொல்லப்படுவது உண்மையாகி விடும்.