தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் பொறுப்பில் இருப்பது நல்லதா? அல்லது பொறுப்பில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது நல்லதா?

பொறுப்பில் இருப்பது, இல்லாமலிருப்பது பிரச்சனையில்லை.
மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை அல்லாஹ்விற்காக எனும் தூய நோக்கத்தில் நிறைவேற்றுவது தான் முக்கியமானது.
பொறுப்பில் இருந்தாலும் இல்லாமற் போனாலும் செய்யும் பணிகளில் தூய்மையான எண்ணத்துடன் ஈடுபடல் அவசியம். எண்ணம் சரியில்லை எனில் அது பயனற்றதாகி விடும்.
தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை உலக ஆதாயத்திற்காக இந்த அமைப்பில் யாரும் அங்கம் வகிப்பதில்லை. மறுமை நன்மைக்காகவே இந்த அமைப்பில் பயணிக்கிறார்கள்.
பொறுப்புகளை பெற பல்வேறு அரசியல் செய்யும் அமைப்புகளுக்கு மத்தியில் பொறுப்புகள் தரப்பட்டால் அதை மறுப்போராகவே தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மக்களும் இருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் பொறுப்புகளை ஏற்க வைக்க வேண்டியுள்ளது.
தூய எண்ணத்துடன் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
நமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டுமே, அல்லாஹ்விடத்தில் மறுமை நாளில் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சம் தான் இத்தகு தயக்கங்களை ஏற்படுத்துகிறது.
பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்பாடுகள் இல்லாமற் போவது எப்படி குறையோ அது போலவே நமக்கு தான் பொறுப்புகள் இல்லையே என்று எவ்வித பணிகளிலும் ஈடுபடமாலிருப்பதும் குறையே.
எண்ணத்தை சரி செய்து கொண்டு பணிகளில் ஈடுபடுவதே சிறப்பானது.