தலைவாரும் ஒழுங்குகள் – இஸ்லாமிய ஒழுங்குகள்

இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு காட்டும் முக்கியத்துவத்தைப் போல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் செயல்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. தலையில் முடி வைத்திருப்போர் எவ்வாறு தனது தலையை பராமரிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றில் சில சட்டங்களை காண்போம்.

தலைவாரும்போது கவனிக்க வேண்டியவை

எண்ணெய் தேய்த்தல்

سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْءٌ وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களுடைய தலையில் (உள்ள நரை முடிகள்) எதுவும் வெளியே தெரியாது. எண்ணெய் தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல் : முஸ்லிம் (4680)

சீப்பை பயன்படுத்ததுல்

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ أَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا ثَائِرَ الرَّأْسِ فَقَالَ أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ رواه النسائي

நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடையவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ”இவர் தனது முடியைப் படிய வைக்கக் கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : நஸயீ (5141)

வலது புறத்திலிருந்தே ஆரம்பித்தல்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ رواه البخاري

” நபி (ஸல்) அவர்கள் உளூச்செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்து கொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.”
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (‏5854)

அடிக்கடி தலைவாரிக் கொள்வது கூடாது

عن أَبي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ رواه أبو داود

” நாள் முழுவதும் (அடிக்கடி) தலைவாரிக் கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் (26)

நெற்றியின் மீது முடியைத் தொங்கவிடத் தடை

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْدِلُ شَعَرَهُ وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ فَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (முன் தலை)முடியை,(தமது நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும் தொங்க விட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்க விட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (3558)

ஒட்டுமுடி வைப்பதும், பச்சை குத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” ஒட்டு முடி வைத்து விடும் பெண்கள், ஒட்டு முடி வைத்துக் கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5933)

பாதி மழித்து பாதி விடுவதற்குத் தடை

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து விட்டு மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),நூல் : புகாரி (5921)

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا فَنَهَى عَنْ ذَلِكَ وَقَالَ احْلِقُوهُ كُلَّهُ أَوْ اتْرُكُوهُ كُلَّهُ رواه النسائي

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நஸயீ (4962)

நரைமுடிக்குச் சாயமிடுவது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5899)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم

(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா “வெற்றி ஆண்டில்’ அல்லது “வெற்றி நாளில்’ (நபி (ஸல்) அவர்களிடம்) “வந்தார்கள்’. அல்லது “கொண்டுவரப்பட்டார்கள்’. அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி), நூல் : முஸ்லிம் (4269)

நரைமுடிக்கு கருப்பு சாயமிடுவதற்குத் தடை

عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ رواه النسائي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : நஸயீ (4988)