தமிழ்நாடு நாள் கொண்டாட ஒரு நாளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளாரே, அது குறித்து உங்கள் பார்வை என்ன?

இந்தியாவில் சுகந்திரத்திற்கு பின் 1956 நவம்பர் அன்று மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பெயர் மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர். பின்னர் 1967ஆம் ஆண்டு மறைந்த அண்ணா அவர்களுடைய ஆட்சி காலத்தில் ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்தப் பெயர் வைக்க பல பின்னணி காரணமும் உண்டு. இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த ஒன்றிய அரசாகும்.
மத்தியில் நடுவன் அரசு. மாநிலத்தில் சுயாட்சி அரசு. இது தான் கூட்டாட்சி தத்துவம்.
இதனை மறைந்த அண்ணா அவர்கள் மாநிலத்திற்கு கிடைக்கும் உரிமை முறையாக கிடைக்க பெற வேண்டும் என்பதற்காகவும் மாநிலம் தன் உரிமைகளை விட்டு கொடுக்க கூடாது என்பதற்காகவும் மெட்ராஸ் ஸ்டேட் மாநில உரிமைக்கான நாடாக அமைக்க இந்தப் பெயரை முடிவு செய்து மாற்றியமைத்தார். அந்தநாளை தான் தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் தனிதன்மை ஏற்ற நாள் ” தமிழ்நாடு நாள் “ என்று அறிவித்துள்ளார்.
ஒரு நாடு என்று உருவானதோ அந்த நாள் தான் அதற்கு உரிய நாளாக கருதப்படும். உரிமைக்காக பெயர் மாற்றியமைப்பதை நாடு உருவான நாள் என்று சொல்வது சரியானது தானா என்ற கேள்வி வருகிறது. அரசு தான் அதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுக இதனை மாற்றுக் கருத்துடன் எதிர்க்கிறது. முதலில் மாநிலங்கள் பி£¤க்கப்பட்ட நாளைத்தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாட வேண்டும் என்று கூறி வருகின்றது.
பொதுவாக இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நாளை கொண்டாடுவதால் உரிமைகள் கிடைத்து விடும் என்பது அல்ல. நபிகள் நாயகம் [ஸல்] பல புரட்சிகளை தன்னுடைய வாழ்நாளில் செய்து காட்டினார்கள். அது இன்றும் உயிருடன் இருந்து உலக மக்களை வழி நடத்தி கொண்டு தான் உள்ளது. அவர்கள் எந்த நாளை அறிவிப்பு செய்தார்கள்.
ஒரு நாளை அறிவிப்பதன் மூலம் உரிமை, முனேற்றம் போன்றைவைகள் கிடைத்து விடும் என்பதல்ல. ஒரு நாளை நினைவுகூர்ந்து விட்டு அன்றைய தினத்தை வெடி வெடித்து, மது குடித்து கொண்டாடுவதும் மறுநாள் அனைத்தையும் மறந்து விட்டு அந்த நாளுக்கான எந்த முன்னேற்றமும் இல்லாமல் போவதுமாக தான் நிலைமை உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.