சிறுவர்களுக்கான வினாடி வினா – பாகம் 3

நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள்

1. நோயாளியை நலம் விசாரித்துக்கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்

ஆதாரம் : (முஸ்லிம் 5017)

2. யூசுஃப் அத்தியாயத்தை இப்னு மஸ்வூத் (ரலி) ஓதிய போது அதை ஆட்சோபித்த நபர் எந்த நிலையில் இருந்தார்?

மது அருந்திய நிலையில்

ஆதாரம் : (புகாரி 5001)

3. என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டுவிடுவேன் என்று சொன்ன நபித்தோழர் யார்?

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

ஆதாரம் : (புகாரி 5002)

4. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு மனிதர் ஸஹர் நேரத்தில் எழுந்து இந்த அத்தியாயத்தை மட்டுமே ஓதி வந்தார். இதைவிட வேறு எதையும் அதிகமாக்க மாட்டார். அந்த அத்தியாயம் எது?

சூரத்துல் இக்லாஸ்

ஆதாரம் : (புகாரி (5014)

5. “அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம் 9:84,85) என்ற வசனம் யார் தொடர்பாக அருளப்பட்டது?

நயவஞ்சகர்களின் தலைவன்அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்தபோது அருளப்பட்டது

ஆதாரம் : (புகாரி 1366)

6. ஆயிஷா (ரலி) அவர்களிடம் கப்ரு வேதனையைப்பற்றி கூறியவர் யார்?

யூதப்பெண்மணி

ஆதாரம் : (புகாரி 1372)

7. நபிகளாரின் எந்த உரையை கேட்டு முஸ்லிம்கள் கதறினார்கள்?

கப்ரு வேதனையைப் பற்றி உரையாற்றிய போது

ஆதாரம் : (புகாரி 1373)

8.  கப்ரில், சொர்க்கவாதிகளின் இடமும், நரகவாதிகளின் இடமும் அவர்களுக்கு எப்போது காட்டப்படும்?

காலையிலும் மாலையிலும்

ஆதாரம் : (புகாரி 1379)

9. நபி (ஸல்) அவர்கள் எந்த கிழமையில் மரணமடைந்தார்கள்?

திங்கள் கிழமை

10. நபி (ஸல்) அவர்கள் தன் இறுதி கால கட்டத்தில் யூதர்களையும் கிறித்துவர்களையும் எதற்காக சபித்தார்கள்?

நபிகளாரின் அடக்கதலங்களை வணங்குமிடமாக மாற்றியதால்

ஆதாரம் : (புகாரி 1390)

11. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மை எங்கு அடக்கம் செய்யவேண்டும் என்று கூறினார்கள்?

பகீஃ எனும் பொது மையவாடியில்

ஆதாரம் : (புகாரி 1391)

12. உமர் (ரலி) அவர்கள் தாம் எங்கு அடக்கம் செய்யப்படவேண்டுமென ஆசைப்பட்டார்கள்?

 நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருக்கு பக்கத்தில்

ஆதாரம் : (புகாரி 1392)

13. நபிகளார் இறுதி ஹஜ் செய்த போது அவர்களின் ஒட்டகத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் யார்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சகோதரர் ஃபள்ல் (ரலி)

ஆதாரம் : (புகாரி 1513)

14. நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்த போது எந்த இடத்தில் இஹ்ராம் அணிந்தார்கள்?

துல்ஹுலைஃபாவில்

ஆதாரம் : (புகாரி 1514)

15. பெண்களுக்குரிய ஜிஹாத் எது?

பாவம் கலவாத நிலையில் செய்யும் ஹஜ் ஆகும்

ஆதாரம் : (புகாரி 1520)

16. இறைவனிம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறிவிட்டு ஹஜ்ஜின் போது யாசகம் கேட்டவர்கள் யார்?

யமன் நாட்டவர்கள்

ஆதாரம் : (புகாரி 1523)

17. நபிகளார் சிறுவராக இருந்த போது கஅபத்துல்லாஹ்வை கட்ட கற்களை நபிகளாரோடு சுமந்து சென்றவர் யார்?

அப்பாஸ் (ரலி)

ஆதாரம் : (புகாரி 1582)

18.  ரமலான் நோன்புக்கு முன்னால் எந்த நோன்பை மக்கள் நோற்றுவந்தார்கள்?

ஆஷூரா நோன்பை

ஆதாரம் : (புகாரி 1592)

19. ஹஜ்ருல் அஸ்வத் கல்லை பார்த்து நபிகளார் உம்மை முத்தமிட்டிருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறிய நபித்தோழர் யார்?

உமர் (ரலி)

ஆதாரம் : (புகாரி 1597)

20. தவாஃபின்போது கஅபாவில் எத்தனை இடத்தில் முத்தமிட வேண்டும்?

ஹஜ்ருல் அஸ்வத், ருக்னுல் யாமனீ ஆகிய இரண்டு இடங்களில்

ஆதாரம் : (புகாரி 1609)