சிறுவர்களுக்கான வினாடி வினா – பாகம் 2

நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள்

1. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது கைபர் பகுதியை எப்போது அடைந்தார்கள்?

இரவில்

ஆதாரம் :(புகாரி 2945)

2. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் இரண்டு முறை நபிகளாரிடம் உறுதிமொழி அளித்தவர் யார்?

ஸலமா பின் அக்வஃ (ரலி)

ஆதாரம் :(புகாரி 2960)

3. கைபர் போரில் இஸ்லாமிய கொடியை எடுத்துச் சென்றவர் யார்?

அலீ (ரலி)

ஆதாரம் :(புகாரி 2975)

4. மக்கா வெற்றியின் போது கஅபாவின் சாவியை கொண்டுவருமாறு யாருக்கு நபிகளார் உத்தரவிட்டார்கள்?

உஸ்மான் பின் தல்ஹா (ரலி)

ஆதாரம் :(புகாரி 2988)

5. நபிகளார் எழுதிய கடிதத்தை பாரசீக மன்னன் என்ன செய்தான்?

கிழித்துவிட்டான்

ஆதாரம் :(புகாரி 2939)

6. ரோமபுரி மன்னருக்கு நபிகளார் எழுதிய கடிதத்தை கொண்டு சென்ற நபித்தோழர் யார்?

திஹ்யத்துல் கல்பீ (ரலி)

ஆதாரம் :(புகாரி 2940)

7. எதை கேட்டால் நபி (ஸல்) அவர்கள் போர் செய்யமாட்டார்கள்?

பாங்கோசையை கேட்டால்

ஆதாரம் :(புகாரி 2943)

8. நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு எந்த கிழமை புறப்பட்டார்கள்?

வியாழன்

ஆதாரம் :(புகாரி 2950)

9. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய எந்த மாதத்தில் புறப்பட்டார்கள்?

 துல்கஅதா பிறை 25 ல்

ஆதாரம் :(புகாரி 2952)

10. முஸ்லிம் படையினர் மக்கா வெற்றி கொள்ள புறப்பட்ட போது எந்த இடத்தில் நோன்பை விட்டார்கள்?

கதீத்

ஆதாரம் :(புகாரி 2953)

11. பாதையில் அமர்ந்திருப்பவர்கள் பாதைக்கு வழங்க வேண்டிய உரிமைகள் என்ன?

பார்வை தாழ்த்திக் கொள்ளுதல்,அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருத்தல், நன்மை ஏவுதல், தீமையை தடுத்தல், ஸலாத்திற்கு பதில் சொல்லுதல்.

ஆதாரம் :(புகாரி 2465)

12. உலகை விட்டுப் பிரியும் வரை யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?

ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)

ஆதாரம் :(புகாரி 2750)

13. தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?

ஸஅத் பின் உபாதா (ரலி)

ஆதாரம் :(புகாரி 2756)

14. தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?

அபூதல்ஹா (ரலி)

ஆதாரம் :(புகாரி 2758)

15. அனஸ் (ரலி) அவர்களை நபிகளாருக்கு பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?

அபூதல்ஹா (ரலி)

ஆதாரம் :(புகாரி 2768)

16. ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி தூர் வாரி மக்களுக்கு உதவி செய்தவர் யார்?

உஸ்மான் (ரலி)

ஆதாரம் :(புகாரி 2778)

17. கடல் வழிபயணத்தில் ஷஹீத் ஆன பெண்மணி யார்?

உம்மு ஹராம் (ரலி)

ஆதாரம் :(புகாரி 2788)

18. பாதி கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் யாருக்கு கட்டளையிட்டார்கள்?

கஅப் (ரலி) அவர்களுக்கு

ஆதாரம் :(புகாரி 2710) 

19. ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள்?

பரீரா (ரலி)

ஆதாரம் :(புகாரி 2726)

20. இப்னு உமர் (ரலி) அவர்களின் கை,கால் மூட்டுகளை பிசகச் செய்தவர்கள் யார்?

கைபர் பகுதியில் இருந்த யூதர்கள்

ஆதாரம் :(புகாரி 2730)