சிறுவர்களுக்கான வினாடி வினா – பாகம் 1

நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள்

1. (கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்தவர் யார்?

நபி (ஸல்) அவர்கள்

ஆதாரம்: ( புகாரி 5086)

2. ஹுதைப்பிய்யா உடன்படிக்கை நடந்த காலத்தில் நபிகளாரை பிடிக்க குதிரைப்படையில் வந்தவர் யார்?

காலித் பின் வலீத்

ஆதாரம் :(புகாரி 2731)

3. பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் .. … . . . . நெருங்கியவையாக ஆக்கிவிடும்”

பால்குடி மூலம் ஏற்படும் உறவு

ஆதாரம்: (புகாரி 5099)

4. நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு நபி (ஸல்) அவர்கள் எப்போது தடைசெய்தார்கள்?

கைபர் போர்

ஆதாரம் : (புகாரி 5115)

5. உமர் (ரலி) அவர்கள் தன் மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை முதலில்  யாரிடம்  திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்கள்?

உஸ்மான் (ரலி), அபூபக்ர் (ரலி)

ஆதாரம் : (புகாரி 5122)

6. நபிகளாருடைய மனைவியாக அன்னை ஆயிஷா(ரலி) எவ்வளவு காலம் இருந்தார்கள்?

ஒன்பது வருடங்கள்

ஆதாரம் : (புகாரி 5133)

7. அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என்று நபி (ஸல்) அவர்கள் எந்த கூட்டத்தாரை குறிப்பிட்டார்கள்?

அஷ்அரி கூட்டத்தினர்

ஆதாரம் :(புகாரி 2486)

8. பேச்சியில் என்னவிருப்பதாக நபிகளார் கூறினார்கள்?

கவர்ச்சி

ஆதாரம் : (புகாரி 5146)

9. பத்ருப் போரில் கலந்து கொண்ட முன்னோர்களைப் பற்றி பாடல் பாடிய சிறுமி நபிகளாரைப் பற்றி என்ன கூறினார்?

“எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்”

ஆதாரம் : (புகாரி 5147)

10. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எதை மஹராக கொடுத்தார்கள்?

ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கம்

ஆதாரம் : (புகாரி 5153)

11. நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது எது என்று நபிகளார் எதனைக் கூறினார்கள்?

உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர்(விவாகக் கொடை)தான்.

ஆதாரம் : (புகாரி 5151)

12. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) திருமணம் முடித்த போது அவரிடம் நபிகளார் என்ன செய்ய வேண்டுமென கூறினார்கள்?

“ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்!”

ஆதாரம் : (புகாரி 5155)

13. பயணத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் யாருடைய கழுத்தணியை இரவலாக வாங்கி போட்டுச் சென்றார்கள்?

அஸ்மா (ரலி)

ஆதாரம் : புகாரி 5164

14. தனது சொத்தில் பாதியை தருவதாக எந்த நபித்தோழர் எந்த நபித்தோழரிடம் கூறினார்?

ஸஅத் பின் ரபீவு (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

ஆதாரம் : (புகாரி 2049)

15. நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரில் யாருடைய திருணமத்தில் ஒரு ஆடு வலிமா விருந்து அளித்தார்கள்? 

ஸைனப் (ரலி)

ஆதாரம் : (புகாரி 5168)

16. வாற்கோதுமையில் இரு முத்து அளவு வலீமா கொடுத்தவர் யார்?

நபி (ஸல்) அவர்கள்

ஆதாரம் : புகாரி 5172

17. மணமகளாக இருந்து மக்களுக்கு திருமண நாளில் விருந்து வழங்கும் பணியை செய்தவர் யார்?

அபூ உஸைத்தின் மனைவி (ஸலமா பின்த் வஹப்)

ஆதாரம் : புகாரி 5176

18. ஒரு முஸ்லிமிடம் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் பேசாமல் வெறுத்திருக்கலாம்? 

மூன்று நாட்கள்

ஆதாரம் : (முஸ்லிம் 5003)

19. சண்டையிட்டுக்கொண்ட இருவர்களில் சிறந்தவர் யார்? என நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

முதலில் ஸலாம் சொல்லி சேர்ந்து கொள்பவர்

ஆதாரம் : (முஸ்லிம் 5003)

20. சொர்க்கத்தின் கதவுகள் எந்த கிழமைகளில் திறக்கப்படுகின்றன?

திங்கள், வியாழன்

ஆதாரம் : (முஸ்லிம் 5013)