சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள்
لاَ يَرْحَمُ اللّٰهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
ஆதாரம் : புகாரி – 7376
لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.
ஆதாரம் : புகாரி – 5984
اِتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
ஆதாரம் : புகாரி – 6023
اَلْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ
நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும்.
ஆதாரம் : புகாரி – 2989
يُمِيْطُ الأَذٰى عَنِ الطَّرِيْقِ صَدَقَةٌ
தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
ஆதாரம் : புகாரி – 2989