ஆபாசங்கள் நிரம்பி வழியும் சினிமாக்கள் அத்தனையும் எதிர்க்கப்பட வேண்டியது தான். நல்லொழுக்கத்தை விரும்பும் யாருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது ஆனால் சங்க பரிவார அமைப்புகள் தற்போது ஷாருக்கானின் படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஆபாசம் கூடாது என்பதால் அல்ல அதிலும் முஸ்லிம் மத வெறுப்பையே வெளிப்படுத்துகிறார்கள்.
ஷாருக்கானின் படத்தில் காவி நிற ஆடையை சினிமா நடிகை அணிந்துள்ளார் என்று கூறி காவி நிறத்தின் கண்ணியத்தை க்கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று சங்பரிவார அமைப்புகள் கூக்குரல் இடுகின்றன.
உண்மையில் அவர்களின் எதிர்ப்புக்கு இதுதான் காரணம் என்றால் கடந்த காலங்களிலும் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இவர்கள் மௌனிகளாகவே இருந்துள்ளனர்
யோகா குரு பாபா ராம்தேவ் என்பவர் காவி நிறத்திலான ஆடையை கோவணமாக கட்டிக்கொண்டு சிரித்தவாரே பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தார்.
அப்போது எந்தச் சங்பரிவார அமைப்புகளும் அதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை காவி ஆடையை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று இப்போது புலம்புவதைப் போல அப்போது யாரும் புலம்பவில்லை.
பாஜகவை ஆதரிக்கும் நடிகைகள் காவி நிறத்திலான ஆடையை அரைகுறையாக அணிந்து கொண்டு சினிமா படத்தில் நடித்த போது அதற்கு எதிராக சிறு சலனத்தைக் கூட வெளிப்படுத்தவில்லை.
அவ்வளவு ஏன்?
பாராளுமன்றத்தில் பாஜகவின் எம்பிக்கள் ஆபாச படம் பார்த்த நிகழ்வு நாடெங்கும் நாறிப்போன போது இவர்களின் முனகல் சப்தம் கூட கேட்கவில்லை.
தமிழகத்தில் பிஜேபியின் முகமாக அறியப்பட்ட,
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிஜேபியின் கருத்துக்களை பரப்பி வந்த கே டி ராகவனின் அருவருப்பான செயலை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்து மக்களின் புனிதமாக கருதப்படுகிற பூஜை அறையில் இருந்து கொண்டு ஆபாச செயலில் ஈடுபட்ட பாஜகவின் கேடுகெட்ட ராகவனுக்கு எதிராக சங்பரிவார அமைப்புகளில் எவரேனும் கருத்து தெரிவித்தார்களா?
இதற்கெல்லாம் அனைத்தையும் மூடிக்கொண்டு அமைதி காத்தவர்கள் ஷாருக்கானின் திரைப்படம் ஒன்றுக்கு போர்க்கொடி தூக்குகிறார்கள் என்றால் மத துவேசத்தை தவிர வேறொன்றும் இல்லை.
காவி ஆடையை அணிந்து கொண்ட நடிகை இந்து மதத்தை சார்ந்தவர் தான். அந்த சினிமா படத்தை இயக்கி தயாரிப்பவரும் இந்து மதத்தை சார்ந்தவரே.
என்றாலும் ஷாருக்கானின் புகைப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள் என்றால் இதிலிருந்தே இவர்களது சிந்தனையின் தரம் எப்படி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு
இது சினிமா படத்திற்கு ஆதரவான பதிவு அல்ல.
இஸ்லாத்தின் பார்வையில் அசிங்கமான ஆபாசங்கள் நிறைந்த எந்த சினிமாவும் கூடாது.
முஸ்லிம் நடிக்கிறார் என்பதால் ஆபாச சினிமா கூடும் என்று ஆகிவிடாது இப்பதிவு ஷாருக்கானுக்கு ஆதரவான பதிவு அல்ல.
சங்பரிவாரக் கும்பல்களுக்கு மதத்தையும் மாட்டையும் வைத்து அரசியல் செய்வதை தவிர வேறொன்றும் தெரியாது என்பதை புரிய வைப்பதே இதன் நோக்கம்.