பத்திரிக்கைத் துறையில் கால் பதிப்பது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பயனளிக்கும்?

பெரும்பான்மை சமுகத்துக்கு அடுத்து சிறுபான்மை சமூகத்தில் பெரும்பான்மை சமுகமாக இஸ்லாமிய சமுதாயம் உள்ளது. சமூக முன்னேற்றத்திற்கு ஊடகம் அவசியம்.
இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பலர் இருந்தும் கூட ஊடகங்களில் ஒன்று கூட இஸ்லாமிய சமுதாயத்தால் நடத்தப்பட வில்லை.
ஆட்சி, அதிகாரம் எப்படி சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கிறதோ அது போல ஊடகமும் ஒன்று.
ஒவ்வோரு சமூகமும் தனது சமூகத்திற்கு என்று செய்தி ஊடகம் வைத்துள்ள நிலையில் வெகுஜன மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் செய்தி சேனல் என்பது கூட இஸ்லாமியர்களிடம் இல்லாதது வேதனையான விசயம் தான்.
நாம் ஊடகத்தின் வலிமையை அறிந்து கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம்.
இஸ்லாமிய தீவிரவாதம் முஸ்லிம் தீவிரவாதி என்று ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றவாளியாக்கும் சில சங்க பரிவார ஊடகங்களில் பொய்யான பிரச்சாரத்தை முறையடிக்க உண்மையை உலகிற்க்கு கொண்டு சொல்ல செய்தி ஊடகம் தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முஸ்லிம்களில் தியாகம், பேரிடர் உதவி, களப்பணி , முஸ்லிம் ஊர்களில் ஏற்படும் பாதிப்பு இவைகளுக்கு ஊடகத்தின் தேவை என்பது அவசியம்.
அது போல் ஊடகங்கள் நம்மிடம் இல்லை. பத்திரிக்கையாளராக பங்காற்றும் இஸ்லாமியரும் இல்லை அல்லது குறைவு எனலாம்.
சில உயர் வகுப்பினர் தன் சத வீதத்தையும் தாண்டி பத்திரிக்கை துறையில் கால் பதித்துள்ளனர். நம் சமூகம் இன்னும் இதை உணரவில்லை.
பத்திரிக்கையின் மூலம் சமுதாயத்தின் பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்.
இஸ்லாமியர்களிடம் பத்திரிக்கை படிக்கும் ஆர்வம் குறைந்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம். பெண்களும் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும்.
பெண்களிடம் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டால் சமூகம் முன்னேற்றத்திற்கு வித்தாக அது அமையும்.
தமிழக முஸ்லிம்களின் பிரச்சனைகளை விவாதிக்கும் பத்திரிக்கை தேவை என்பதோடு நின்று விடாமல் அதற்காக அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இஸ்லாமியர்களின் பாதிப்புகளை வெளிகொண்டுவர ஊடகம் அவசியமானது என்பதால் உணர்வு வார இதழைத் தொடர்ந்து நடுநிலை சமுதாயம் என்ற வார இதழும் வெளி வந்துள்ளது.