முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியோரை இதர பிற்படுத்தப்பட்டோராக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அக்பர் அலி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
அதில் தானும் தனது குடும்பமும் 2008ம் ஆண்டு எங்களது சுய விருப்பத்தின் பேரில் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறினோம்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத பிசி பிரிவில் விண்ணப்பித்தேன்.
எழுத்துத் தேர்வு முடிந்த நிலையில் இறுதிப்பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. என்னை பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக கணக்கில் கொள்ளாமல் பொதுப்பிரிவில் கணக்கில் கொண்டதே இதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டேன். எனவே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்று கருதி தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியோரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பினால் வழக்கு தொடுத்த (சத்தியமூர்த்தி என்ற) அக்பர் அலி அவர்கள் இட ஒதுக்கீடு பலனை அனுபவிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை அக்பர் அலிக்கு மட்டும் அல்ல. இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறும் அனைவருக்கும் இதுதான் கதி. இது மிகப்பெரும் அநீதியாகும்.
சட்டத்தில் உள்ள கோளாறு காரணமாகவே இத்தகைய சமத்துவமற்ற தன்மை ஏற்படுகிறது.
ஒருவர் இந்து மதத்தில் இருக்கும் போது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இட ஒதுக்கீடு பலனை அடைகிறார். ஆனால் அதுவே அவராக மனம் விரும்பி முஸ்லிமாக மதம் மாறும் போது அவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கருத முடியாது என்கிறார்கள். அப்படி என்றால் முஸ்லிம்களில் உள்ள இட ஒதுக்கீடு வழங்கப்படும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்க வேண்டும் அல்லவா? 
தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகளும் சந்தேகங்களும் இருக்கின்றது என்றாலும் சட்டப்படி 3.5 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. ஓரளவு தமிழக முஸ்லிம்கள் இந்த இட ஒதுக்கீட்டில் பலன் அடைந்து வருகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று நாம் சொன்னாலும் சட்டப்படி அனைத்து முஸ்லிம்களுக்கும் அது உரியதல்ல. அரசு வகைப்படுத்தி வைத்துள்ள லைப்பை, மரைக்காயர், ராவுத்தர் போன்ற குறிப்பிட்ட 7 வகை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் பொருந்தும்.  
 இந்து மதத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து முஸ்லிமாக மதம் மாறி வருபவர்களை முஸ்லிம்களில் இட ஒதுக்கீடு பொருந்தும் வகையிலான ஏதேனும் பிரிவின் படி கணக்கிட்டு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
முஸ்லிமாக மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடைக்காது என்று கூறி
ஒரு நபர் தான் விரும்பிய மதத்தை தழுவுவதை தடுக்கும் வகையில் அரசின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
ஒருவர் விரும்பிய மதத்தை தழுவுவதை தடுப்பதால் இது இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 25 க்கு நேர் எதிரானதாகும்.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க தமிழக அரசு இஸ்லாமிய மதத்தை தழுவுபவர்கள் ஙிசி(வி) பிரிவில் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறும் வகையில் உரிய அரசாணையை ஜிழிறிஷிசி உள்ளிட்ட அமைப்புகளுக்கு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். 
அப்போது தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மதம் மாறினாலும் அவர்களது கல்வி, சமூக ரீதியிலான நிலை தொடர்ந்து முன்னேற்றமடையும்.
இதே போன்று கடந்த 2014 ஒரு சம்பவம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த விசாலாட்சி என்பவர் 2006 ல் முஸ்லிமாக மதம் மாறுகிறார். அரசு கெஜட்டிலும் முறைப்படி தன்னை முஸ்லிமாக பதிவு செய்து கொள்கிறார். 
அதன் பிறகு 2010 ல் வி.ஏ.ஓ பணியிடத்துக்கு பிசி பிரிவில் விண்ணப்பித்த போது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. முஸ்லிமாக மதம் மாறியதால் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியாது என்று கூறி அவரது விண்ணப்பத்தை டிஎன்பிஎஸ்சி நிராகரித்து விட்டது.
தீயணைப்பு நிலையை அதிகாரி பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்த போதும் இதே காரணம் கூறி நிராகரிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் விசாலாட்சி என்ற ஆரிபா. 
அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது 
பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான அரசாணையில் லைப்பை ராவுத்தர் மரைக்காயர் தக்னி முஸ்லிம்கள் உள்ளிட்ட 7 முஸ்லிம் பிரிவுகள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சார்ந்தவர்கள் குறிப்பிட்ட 7 முஸ்லிம் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பி£¤வினருக்கு மதம் மாறியுள்ளார்களா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.  இந்து சமூகத்தை சார்ந்த ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு அவர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாகவே கருத வேண்டும் என்று நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பளித்துள்ளார்.
எனவே இதற்கு நீதிமன்ற தீர்ப்புகளில் முன்னுதாரணம் உள்ளது.
தமிழக அரசு விரைவாகவும் சட்டப்பூர்வமாகவும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.