நடுநிலை ஒன்று இல்லை எனக் கூறும் நீங்கள் பத்திரிக்கைக்கு மட்டும் நடுநிலைச் சமுதாயம் என்று பெயர் வைத்தது ஏன்?

நம்முடைய பிரச்சாரத்தை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்.
தவறு செய்பவர்கள் நமக்கு விருப்பமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பக்கம் சாய்ந்து விடாமல், உள்ளதை உள்ளபடிக் கூறும் நீதி தவறாத பண்பை நடுநிலை என்கிறோம்.
ஒரு செயல் குறித்து சரியா? தவறா? என்று கேள்வி எழுப்பப் படும் போது சரி, தவறு என இரண்டிலொன்றை தெளிவுபட கூற வேண்டும்.
இத்தகைய நடுநிலை உள்ளது என்பதே நமது நிலைப்பாடு.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம்.
திருக்குர்ஆன் 2 : 143
ஆனால் ஒரு சிலர் நடுநிலை எனும் சொல்லை தவறாக பயன் படுத்துகின்றனர்.
நீங்கள் வரதட்சணையை ஆதரிக் கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினால் நான் நடுநிலை வகிக்கின்றேன் என்பார்கள்.
நீங்கள் வேளாண் திருத்த சட்டங்களை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால் அதற்கும் நடுநிலை வகிப்பதாக சிலர் கூறுவர்.
இப்படி பிரச்சனைக்குரிய விஷயங்கள் எதுவொன்று குறித்து கேள்வி எழுப் பினாலும் நடுநிலை என்று தப்பித்து விடுவர்.
அதுவும் சரி இதுவும் சரி என்று கூறும் வகையறாக்கள் இவர்கள்.
ஒரு செயல் தவறு என்று தெளிவாக தெரிந்தும் அதைக்கூறாமல் நடுநிலை வகிப்பதாக கூறும் இத்தகைய போலி நடுநிலையையைத்தான் தவறு என்கிறோம்.
நீதியை நிலைநாட்டும் நடுநிலை உண்டு.
அநீதியை எதிர்த்து தெளிவாக தனது குரலை பதிவு செய்து, நீதியை பேணும் பத்திரிக்கையாக இது விளங்கும் என்பதால் தான் நடுநிலை சமுதாயம் என்று இப்பத்திரிக்கை கூறப்படுகிறது.