பிறந்ததும் , வளர்ந்ததும்
குழந்தை பிறந்தது….. அனைவரும் கொண்டாடினர்…பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம்.. பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர்…
முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார்…
அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது..ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா…
குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது…
சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் இறந்துவிட்டார்….
பின் முஹம்மது(ஸல்) அவர்கள் அவரது பெரியப்பா அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்…
சிறுவயதில் இருந்தே உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்கள்…
அற்பமான கூலிக்கு சிறுவயதில் ஆடு மேய்த்திருக்கிறார்கள்…
எழுதவோ படிக்கவோ தெரியாது எனினும் புத்திசாலியாக இருந்தார்…
வளர்ந்ததும் வாணிபம் கற்றார்கள் பெரியப்பாவுடன் இணைந்து சிரியா சென்று வியாபாரம் செய்தார்…
இவரது அபார வியாபார ஆற்றலாலும் நேர்மை நம்பிக்கை நாணயம் வாக்கு மீறாதிருத்தல் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டவற்றை பேணி பாதுகாத்தல் ஆகிய பண்புகளால் அரபு குலம் முழுவதும் பிரபல்யமான நபராக ஆகிவிட்டார் முஹம்மது(ஸல்) அவர்கள்.
ஊர்மக்கள் அல் அமீன்(நம்பிக்கைக்குரியவர்) அஸ்ஸாதிக்(உண்மையாளர்) என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்…
இளமையில் முஹம்மது(ஸல்):
அவருக்கு இருபத்தைந்து வயது ஆகிற்று…
அந்தசமயத்தில்..அவ்வூரிலேயே பெரும் வியாபாரிகளில் ஒருவராகவும் பெரும் செல்வ சீமாட்டியாகவும் உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தகாரராகவும் திகழ்ந்த கதீஜா(ரலி) இவரது பண்புகளால் ஈர்க்கப்பட்டார்…
இளம் வயதில் பெண்களின் பின்னால் அலையும் பித்தர்களுக்கு மத்தியில் இவ்வளவு சிறந்த ஒழுக்க சீலரா??
கண்ணியமான பார்வையும் உயர்ந்த பேச்சும் அந்த பெண்மணியை ஈர்த்தன..
கதீஜா (ரலி) ஒரு விதவைப்பெண் நாற்பது வயதை அடைந்திருந்தார்
நபி (ஸல்) அவர்களிடம் தன் பணிப்பெண் மூலம் தன் திருமண விருப்பத்தை தெரிவித்தார்..
மணம் புரிந்ததும், மரியாதையும்:
கதீஜா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை திருமணம் செய்ய எண்ணி பணிப்பெண் மூலம் சொல்லியனுப்பினார்..
ஊரிலேயே செல்வாக்கு மிக்க ஒழுக்கம் நிறைந்த உயர்நத பண்புகளை உடைய ஒரு பெண் தன்னை திருமணம் செய்ய கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை.. சம்மதித்தார்கள்…
சிலர் எந்த அடிப்படையும் இன்றி நபிகளாரை இதை வைத்துக் கொச்சைப்படுத்துகின்றனர்.. நாற்பது வயது பெண்ணை மணந்ததை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்……
ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் குற்றம் சுமத்துபவர் அதற்கு சான்று காட்ட வேண்டும்..
நபிகளாரை விமர்சிப்பவர்கள் சற்று கவனிக்கவும்..
பெண்ணை பொருள் என்று கருதிய அந்த காலத்தில்…
பெண்ணை போற்றி மரியாதை தந்தவர்களில் முதன்மை நபர் அந்த சமூகத்திலேயே நபி(ஸல்) அவர்களாக தான் இருந்திருப்பார்..
இளமை பொங்கும் வயதிலும் தன் மனதிற்கொத்த துணை தேடினார்களே ஒழிய..
தன் வயதிற்கீடான இணை தேடவில்லை…
இது அவர்களது பற்றற்ற, ஒழுக்கமான, தூய, பெண்மையை போற்றும் பண்பிற்கு சான்று…
கதீஜாவிற்கும் நபியவர்களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக ஏழு குழந்தைகள் பிறக்கின்றன..மூன்று ஆண்பிள்ளைகளும் நான்கு பெண்மக்களும்…
ஆண்குழந்தைகள் சிறு வயதிலேயே மரணித்து விடுகின்றனர்.. பெண் குழந்தைகளுக்கு சிறந்த தகப்பனாக விளங்கினார்கள் நபியவர்கள்..
இளைய மகளான பாத்திமா(ரலி), நடை பாவனை தோற்றம் அனைத்திலும் நபியவர்களின் நகலாகவே இருந்தார்கள்…
பிள்ளை பெறுவது மட்டுமல்ல ஆண்மை…
சக பெண்ணை மரியாதை செய்து ஆணுக்கீடான உரிமைகளையும் வழங்குவதே உண்மையான ஆண்மை….
ஆண்மை மட்டுமல்ல ஆளுமையும் நிரம்ப பெற்றவர்களாகவே பெருமானார் இருந்தார்….
காலம் நகர்ந்தது… நபியவர்கள் அகவை நாற்பதை அடைந்தார்கள்…..
அகவை நாற்பது:
நபி(ஸல்) தமது நாற்பதாவது வயதை அடைந்திருந்தார்கள்….
இவ்வளவு நாட்கள் வியாபாரத்தில் கோலோச்சியதில் நல்ல செல்வ வளம் இருந்தது…பிள்ளைகளும் பெரிதாக வளர்ந்து விட்டன……
இந்த சமயத்தில் தான் வாழ்கின்ற சமூகத்தை குறித்த அக்கறையும் கவலையும் நபியவர்களை ஆக்கிரமிக்கின்றது…
சிறுவயது முதலே சிலை வணக்கத்தையும் இந்த சிலைகளின் பெயரால் அந்த அரபு சமூகம் செய்யும் அட்டகாசங்களையும் அரசியலையும் நபியவர்கள் கவனித்தே வந்தார்கள்…..
கீழ்ஜாதிகளை கொடுமைப்படுத்தி இழிவுபடுத்தும் அந்த சமூகத்தில் நபியவர்கள் தம் வாழ்வில் என்றுமே பிறரை மட்டப்படுத்தியதில்லை…அனைவரிடமும் சமமாக பழகுவார்கள்….
தாய் தகப்பனின்றி வளர்ந்திருந்தாலும் தான்தோன்றிதனமாக அவர் வளரவில்லை…
கெட்டவார்த்தைகள், அசிங்கமான பேச்சுகள், கேலி கிண்டல்கள் இவற்றை எல்லாம் நஞ்சென வெறுத்தார்கள்….
அதனால் தான் அந்த சமூகம் நேர்முரணாக இருந்தது அவருக்கு பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியது…
ஆகவே ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த மலைமேடுகளில் ஹிரா என்றழைக்கப்பட்ட குகையில் தனிமையில் இருக்க விரும்பினார்கள்…
யாருமே வராத அந்த இடத்தில் அமர்ந்து சிந்தித்துகொண்டிருப்பார்கள்..
தன் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற கவலை அவரிடம் மேலோங்கி இருந்தது…
அதையே வழக்கமாக்கினார்கள்…
அவரது மனைவி கதீஜா(ரலி) தன் கணவரின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள்…
உணவை சமைத்து தானே குகைக்கு வந்து தருவார்கள்…
திடீரென ஒரு நாள் யாருமே வராத அந்த குகையில்…
இதுவரை நபி(ஸல்) அவர்கள் பார்க்காத ஒரு நபர் குகையில் நுழைகிறார்…
வந்தவர் திடீரென “இக்ரஃ” அதாவது படி என்று சொல்கிறார்…
நபியவர்கள் குழப்பமடைகிறார்கள்…
வரலாறு தொடரும் இன்ஷாஅல்லாஹ் …..