நமது நாட்டின் சட்டம் அப்படி உள்ளது. முஸ்லிம் பெண்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பல பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அவர்களை ஏலம் விடுவதை போன்ற செயலியை தயாரித்தவன் நீரஜ் பிஷ்னோய். இவனது தலைமையில் தான் இந்த அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் உண்மையில் எந்த ஏலமும் நடப்பதில்லை என்றாலும் அப்புகைப்படங்களில் உள்ள பெண்களை இழிவுபடுத்துவது ஒன்றே இந்தக் கயவனின் நோக்கம்.
ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது புகைப்படமும் அந்த அப்ளிகேஷனில் இருப்பதை கண்டு காவல்துறையில் புகார் கொடுக்க டெல்லி காவல்துறை மூலம் நீரஜ் கைது செய்யப்பட்டான்.
காவல்துறை விசாரணையில் தனது செயலில் எந்த தவறும் இல்லை. நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று திமிர்த்தனமாக பேசியுள்ளான்.
இவன் தனது தாய், சகோதரி, குடும்ப பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி அவர்கள் அனைவருக்கும் ஒரு விலையை நிர்ணயித்து தொடர்புக்கு என்று அவர்களது செல்போன் நம்பரை பதிவிட்டால் இந்தக் கயவன் ஏற்றுக் கொள்வானா?
இவன் இதற்கு முன்பு ட்விட்டரில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து ஸ்லம்பாய் போலீஸ் என்று காவல்துறையை கேவலமாகவும் இழிவாகவும் பதிவிட்டு வந்துள்ளான்.
இப்படி யாரையாவது கேவலமாக எழுதிப் பதிவிடுவது, அல்லது பிறரை கேவலப்படுத்தி அப்ளிகேஷனை தயாரிப்பது இவை தான் இவனது வழக்கமாக இருந்துள்ளது.
இது போன்ற கயவர்களை சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
யாரை வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் கேவலப்படுத்தி பதிவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு அவை படிப்பினையாக இருக்க வேண்டும்.