சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியிருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவடையும் என்றும் 29.08.2021 அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார், மோடி.
மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் வழி மட்டுமே. எந்த மொழியும் அறிவை வளர்ப்பதில்லை. அம்மொழி சார்ந்த நூல்களைத் தொடர்ந்து வாசிப்பதின் மூலமே அறிவு வளர்ச்சி பெறும்.
மக்களின் அறிவை வளர்க்க அறிவுரை கூறுவதாக இருந்தால் அவரவர் மொழிகளில் புத்தகங்களை வாசியுங்கள் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். அறிவு வளர்ச்சியில் சமஸ்கிருதம் எங்கே? எப்படி? உள்நுழைந்தது என்று தெரியவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டிற்கும் சமஸ்கிருதத்திற்கும் எள்முனையளவும் சம்பந்தம் இல்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட பெரும் நாட்டில் வெறும் 10 இலட்சம் பேர் கூட சமஸ்கிருதம் அறிந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியாவின் ஆட்சி மொழியாகவோ அலுவல் மொழியாகவோ சமஸ்கிருதம் இல்லை. மொத்தமுள்ள 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்களில் எந்த மாநிலத்தில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர்? இத்தகைய நிலையிலுள்ள ஒரு மொழியைக் கற்றால் இந்திய ஒருமைப்பாடு ஏற்படும் என்பது ஏற்புடையதா?
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்ட உயர்சாதி என்று கருதப்படாத ஒருவரை மனிதனாக மதித்து அவர்களின் வழிபாட்டு தலத்தினுள் அனுமதிப்பார்களா? சமஸ்கிருதம் அல்லாத மற்ற மொழிகளை எல்லாம் நீஷ பாஷை என்று சொல்லிக் கொண்டதன் நவீன வடிவமாகத்தான் பிரதமரின் இப்பேச்சை கருத வேண்டியுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், வருமான இழப்பு, கொரோனா மூன்றாம் அலை குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என இது பற்றியெல்லாம் பிரதமருக்கு கவலையில்லை. வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருதம் வளர்ந்தாக வேண்டும். இது தான் பிரதமரின் கவலை.
தெரிந்து தான் பேசுகிறாரா பிரதமர்? சமஸ்கிருதம் கற்றால் அறிவு எப்படி வளர்கிறது? ஒருமைப்பாடு எப்படி ஏற்படுகிறது என்பதை எல்லாம் விரிவாக பிரதமர் கூறட்டுமே. முடிந்தால் அவர் வலியுறுத்தும் சமஸ்கிருத்திலேயே…