இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப் படுவதாக மோடி கூறியுள்ளாரே?

ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

47 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எமெர்ஜென்ஸி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலைகளை சுட்டிக் காட்டி பேசி தற்போது அந்த நிலைகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பு பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.

அதைவிட படுமோசமான நிலையை தற்போது இந்தியர்கள் சந்தித்து வருகின்றனர். சமீப காலமாக ஜனநாயகத்திற்கு பதிலாக சர்வாதிகாரம் அரங்கேற்றபட்டு வந்து கொண்டு இருக்கிறது.

உலகின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான இடங்களின் பெயர் பட்டியலிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. 2022-ல் இந்தியா 150-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பத்திரிக்கையாளர்களின் குரல்வளை நசுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன.

சமூக செயற்பாட்டாளர்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தப் போராடினால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

மதத்தின் பெயரால் கொலைகள் நடக்கின்றன.

மாண்வர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது

தற்போது குஜராத் கலவரத்தை மோடி கட்டுபடுத்தவில்லை என்று தொடரப்பட்ட வழக்கின் காரணமாக டீஸ்டா செடல்வாட் கைது செய்யபட்டு இருக்கிறார். இது எமெர்ஜென்ஸி நேரத்தில் கூட இப்படி நடத்தப்படவில்லை,

டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் சிறப்பு அறிக்கையாளரான மேரி லாலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒன்றும் குற்றமல்ல. டீஸ்டா செடல்வாட் வெறுப்பு மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக வலுவான குரல் எழுப்புபவர் என்றும் கூறியுள்ளார்.

மோடி அரசை எதிர்த்து பேசினால் அவர்கள் கைது செய்யபடுவதும், அவர்களுடைய இல்லங்களையும், அலுவலகத்தையும் ரெய்டு என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதும் தான் ஜனநாயகத்தின் தாய் என்று ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமைப் பட வேண்டுமா? என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதினால் அவர்களுக்கு பட்டங்களும், பதவிகளும் வழங்கபட்டு வருவதும். எதிர்ப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப் படுவதும் தொடர் கதையாகி விட்டது.

பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான நாடாக மாறி வருகிற நிலையில் பாசிச மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகத்தை எதிர்ப்பார்க்க முடியாது.