இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது, உணவு தட்டுப்பாடு, கடும் விலைவாசி உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்களை கட்டுப்படுத்த அவரச நிலை பிரகடனம் படுத்தப்பட்டும் மக்கள் அதைக் கண்டு கொள்ள வில்லை.
இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் அன்னிய செலவானியும். கொரோனா கட்டுப்பாட்டல் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.
பொருளாதாரத்தில் மீண்டு வர வேண்டும் எனில் ஐந்தாண்டுகள் முன்னேற்றதிற்கான திட்டமிடலோடு இலங்கை அரசு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு இருப்பதால் இலங்கை தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகம் வரத் துவங்கி இருக்கின்றனர்.
இத்தகைய நிலைக்கு காரணம் ராஜபக்ஷேவின் தவறான நடவடிக்கையே ஆகும்.
பௌத்த இனவாதிகளுக்கு ஆதவான செயல்பாட்டால் அரசின் நடவடிக்கையை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற ராஜபக்ஷேவின் திட்டம் இன்று தகர்ந்து போயிருக்கிறது.
பௌத்த மக்களிடம் தனது செல்வாக்கை நிலை நிறுத்த பௌத்த பேரிவனவாத குழுக்கள் முஸ்லிம், இந்து, கிருத்தவர்களுக்கு எதிராக வெளிப்படையாக விடும் மிரட்டல்களை ஆதரித்த ராஜபக்ஷே அரசுக்கு எதிராக பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இலங்கை அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து இருக்கின்றனர்.
இனவாதம் ஒரு போதும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது என்பதை இலங்கை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.
அது போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடியில் இருப்பது பலருக்கும் தெரியாது. மத்திய அரசின் தவறான நடவடிக்கையே இந்த பொருளாதார இழப்புக்கு காரணம்.
பௌத்த போரினவாத குழுக்கள் பேசியது போலவே இந்தியாவில் இன்றும் சங்பரிவாரங்கள் மூலம் வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்படுகின்றன.
நாட்டின் வளர்ச்சி குறித்து மக்கள் சிந்தித்து கேள்வி கேட்காமல் இருக்க இப்படி பேசி திரிகின்றனர்.
இந்தியாவின் வலங்கள் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிக்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது. அரசு உடமைகள் தனியார் மயமாக்கப்படுகின்றன. பொட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதானி சொத்து மதிப்பு 1830 மடங்கு உயர்ந்து இருக்கிறது, 2021 ம் ஆண்டு மட்டும் 4100 கோடி அமெரிக்க டாலர் சம்பாதித்திருக்கிறார் அதாவது, உலகில் முன்னணி பணக்காரர்களின் சம்பாத்தியத்தை விட அதிகமாம். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்திருக்கிறது. நாட்டில் ஏழைகள் அதிகரித்திருக்கிறார்கள். உலக பட்டினி நாடுகளின் வரிசையில் 111 வது இடத்தை பெற்று இருக்கிறது. வரிச்சுமையால் மக்கள் பணம் உரிஞ்சப்படுகிறது. ஆனால் வைரத்திற்கு வரி சலுகையுடன் பட்ஜட் தாக்கல் செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கான அரசாக ஒன்றிய அரசு செயல்பட வில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் 3,399 மத கலவரங்கள் நடை பெற்று இருக்கின்றன. இவை நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ஒருபோதும் உதவ போவதில்லை,
நாட்டின் வளர்ச்சி குறித்து சிந்திக்காமல் மத வெறுப்பு பேச்சுக்களால் நாடு முன்னேற்றம் அடைய போவதில்லை என்பதை இலங்கை மக்கள் புரிந்து கொண்டது போல இந்தியர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.