குரைஷ் – குரைஷிக் குலம்

அத்தியாயம் : 106

வசனங்களின் எண்ணிக்கை: 4

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. குரைஷிகளுக்கு(ப் பயணங்களில்) விருப்பம் ஏற்படுத்தியதற்காக,
2, 3, 4. குளிர்கால, கோடைகாலப் பயணங்களில் அவர்களுக்கு விருப்பம் ஏற்படுத்தியதற்காக அவர்கள் (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இறைவனை வணங்கட்டும். அவனே அவர்களின் பசிக்கு உணவளித்து, அச்சத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தான்.