பெண் குழந்தை பெற்றதால் தண்டிக்கப்படும் பெண்கள் – இஸ்லாம் வழங்கும் அழகிய தீர்வு

ஒரு காண்டுமிராண்டிக் கணவன், கைப்பிடித்த தன் மனைவியைக் காட்டுத்தனமாக, அதிலும் மானப்பகுதியில் கம்பைச் செலுத்திக் கொடுமைப்படுத்துகின்றான். அவனது கோர, கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு அவளை மேலும் இரண்டு பெண்கள் வளைத்து வளைத்து நடுத்தெருவில் கால்பந்தைப் போல் எட்டி, எத்தி, புரட்டி எடுக்கின்றார்கள். கொண்டை முடியைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு “விபச்சாரியே! வேசியே!” என்ற அக்கினிக் கங்குகளை அள்ளி வீசியவாறு சரமாரியாகக் குத்துகள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண் “என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சுகின்றாள். கேவிக்கேவி அழுகிறாள். அவளது அழுகையும் கெஞ்சலும் அடிக்கும் இருபெண் மிருகங்களின் காதுகளில் விழவில்லை. அவர்களின் கல் நெஞ்சைக் கரைக்கவுமில்லை. சுற்றியும் சூழவும் நின்றவர்கள் சுருண்டு கிடக்கும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றவோ, அடிக்கும் கோர மிருகங்களைத் தடுக்கவோ முன்வரவில்லை.
இது உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் ராம்நகர் ஜூக்கா பகுதியில் நடந்தது. அந்தப் பெண்ணை இரு பெண்கள் தாக்கும் இந்தக் கொடுமை நிகழ்வு ஒரு வருடத்திற்கு முன்பு வலைத்தளங்களில் வைரலானது.
அவ்விருவரும் யார்? கணவனின் உறவினர்கள். அவர்களின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகும் அந்தப் பெண் செய்த பாவமென்ன? அவள் செய்த குற்றமென்ன? இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கின்றாள். இதுவரை ஆண் குழந்தை பெறவில்லை. இதுதான் அவள் செய்த பாவம்! அதற்காகத் தான் 31 வயது நிரம்பிய அவள் இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாள்.
இதன் பின்னர் என்ன? கணவனின் வீட்டுக்காரர்கள் கைது; சிறையில் அடைப்பு என காவல்துறை வழக்கமாக நடத்தும் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தி விட்டது. கணவன் வீட்டுக்காரர்கள் ஜாமீன் மனு தாக்கல், அதற்குப் பின் விடுதலை என்ற சடங்குகளை நடத்துவார்கள்.
இதற்குத் தீர்வு என்ன? இதற்கு முற்றுப்புள்ளி என்ன? உண்மையில் பெண் குழந்தை பெற்றால் இந்தக் கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவள் மனைவி அல்ல! மாறாகக் கணவன் தான்.

அறிவியல் சொல்லும் அப்பட்டமான உண்மை

மனித உடலில் ஏராளமான செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் முதல் 22 ஜோடி குரோமோசோம்களும், ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். 23-வது ஜோடிதான் பாலினத்தை நிர்ணயிக்கும் பால் குரோமேசோம்கள் ஆகும். இது ஆணின் செல்லிலும் பெண்ணின் செல்லிலும் ஒரே மாதிரி இருக்காது. ஆணின் உடலில் X, Y எனவும், பெண்ணின் உடலில் ஜ், ஜ் எனவும் இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். இதேபோல் பெண்ணின் கருமுட்டையில் X, X குரோமோசோம்களும் ஆணின் விந்தணுவில் ஜ், ஹ் குரோமோசோம்களும் இருக்கும்.
கருவுறுதல் நேரத்தில் பெண்ணுடைய X குரோமோசோமுடன் ஆணுடைய X குரோமோசோம் சேர்ந்தால் பெண் குழந்தை (X,X) உருவாகும்.
பெண்ணுடைய X குரோமோசோமுடன் ஆணுடைய Y குரோமோசோம் சேர்ந்தால் உருவாகும் குழந்தை ஆணாக (X,Y) இருக்கும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஆண் குழந்தையை உருவாக்கும் Y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. அந்த Y குரோமோசோம் பெண்ணிற்கு, தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே சமயம் ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து Y குரோமேசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது என்பது தான் இது அறிவியல் கூறும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
இப்போது சொல்லுங்கள்! பெண் குழந்தை கருவாவதற்கும் அது உருவாவதற்கும் யார் காரணம்? கணவன்தான்! அப்படியானால், அவன்மீது தான் இந்தக் காட்டுத் தாக்குதல் தொடுக்கப்படவேண்டும்.
மனித வடிவில் உள்ள அந்த ஆண் மிருகம் தன் மனைவியின் மானப்பகுதியில் நடத்திய அதே தாக்குதலை இவனுக்கு நடத்த வேண்டும். அப்போது தான் இந்த இழிபிறவிகள், ஈன ஜென்மங்கள் திருந்துவார்கள். இதை விட்டுவிட்டு கைது சிறைச்சாலை நடவடிக்கைகள் இந்த அநியாயங்களை, அக்கிரமங்களை முடிவுக்கு கொண்டு வரப் போவதில்லை.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபகத்தில் இது மாதிரியான அத்துமீறல்கள், அக்கிரமங்கள் பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்பட்டன. ஓர் 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் அதற்கு முடிவுரை எழுதி முற்றுப் புள்ளி வைத்தது. அதற்கு அது செய்த வேர் சிகிச்சை வேறெதுவுமில்லை. ஏகத்துவம் என்ற கொள்கையை வேர் பிடிக்கும் சிகிச்சையைத் தான் செய்தது.
அவ்வளவுதான். அது அரபகத்தில் மட்டுமல்ல! அகில உலகம் அனைத்திலும் அந்தத் தூய கொள்கையின்படி நடக்கின்ற அத்தனை முஸ்லிம்களிடத்திலும் உறுதியாக ஆல் போல் தழைத்து வேர் விட்டு நிலைத்து நிற்கின்றது.அதனால் அவர்கள் இந்த அறிவியல் உண்மை வெளிவராத காலத்திலிருந்து இன்றுவரை பெண்ணினத்தைக் கருவிலும் அளிக்கவில்லை; உருவிலும் அழிக்கவில்லை. காரணம், இந்த அறிவியல் உண்மை வராத காலத்திலேயே அவர்களுக்குத் திருக்குர்ஆன் பாடம் நடத்தி விட்டது.

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியதை அவன் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கி விடுகிறான். அவன் நன்கறிந்தவன்
அல்குர்ஆன் 42:49-50

அவனிலிருந்து ஆண், பெண் எனும் இணையை உருவாக்கினான். 

அல்குர் ஆன் 75:39

முஸ்லிம்களில் ஒருவருக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்து அத்தனையும் பெண் குழந்தைகளாக இருந்தால் கூட அவர் தன் மனைவியிடம் முகம் சுளிப்பதில்லை. அதனால் அவர்கள் இதுபோன்ற வன்முறையில் இறங்குவதில்லை. இதற்குக் காரணம் இஸ்லாம்தான். இதைத் தவிர இந்தப் பிரச்சனைக்கு வேறு தீர்வில்லை என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.