கேள்வி :
இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா?
-எம். கண்ணன், அபுதாபி
பதில்:
ஈஸா நபியின் உருவமாக இன்று அறிமுகமாகியிருக்கும் உருவத்திற்கும், ஈஸா நபிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இயேசு நாதரின் சீடர்கள் யாரும் இயேசு நாதரை வரையவும் இல்லை. இயேசுநாதர் காலத்திற்குப் பின்பு பல நூறு ஆண்டுகள் கழித்துத் தான் இயேசுநாதர் வடிவம் கற்பனையாக உருவாக்கப்பட்டது.
ஒரு காலத்தில் அவர் தாடியில்லாத தோற்றத்தில் வரையப்பட்டார். ஒரு மரியாதை ஏற்படுவதற்காக ஞானியின் தோற்றம் அவருக்கு வழங்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த உருவம் உருவாக்கப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவரின் இன்றைய சிலைக்கும், திருவள்ளுவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இது போல் தான் இயேசுவின் உருவமும்.