மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

2201QA006

மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?

பதில்

மென்பொருள் தயாரிப்பு என்பது தற்போதைய நவீன காலத்தில் உள்ள ஒரு தொழில் முறையாகும்.

இது தொடர்பான தடையோ அனுமதியோ மார்க்கத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அடிப்படையை வைத்து அதில் தடுக்கப்பட்ட அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதை விட்டு விலக வேண்டும்.

இன்சூரன்ஸ் என்பது பொதுவாகவே தடைசெய்யப்பட்ட வகையில் வரக்கூடிய விஷயம் அல்ல.

அதில் மார்க்கம் தடுத்த அம்சம் உள்ளவையும் இருக்கின்றன. மார்க்கம் தடை செய்த அம்சம் இல்லாதவையும் உள்ளன.

அது பற்றிய முழு தகவல் அறிய…

<https://onlinetntj.com/kelvipathil/insurance-kooduma>

இதில் மோட்டார் இன்சூரன்ஸ் என்பது வட்டியுடன் தொடர்பு இல்லாத காப்பீட்டுத் திட்டம் தான்.

வட்டியுடன் தொடர்பில் இருக்க கூடிய காப்பீட்டுத் திட்டம் என்றால் அதற்கு மென்பொருள் செய்யும் போது அந்த வட்டியை கணக்கிடுவதற்கும் அதை பதிவு செய்வதற்கும் நாம் ப்ரோகிராம் எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு செய்வது வட்டி தொழிலுக்கு உதவது போல் அமைந்துவிடும்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

இவ்வாறு ஹராமான காரியத்தில் உதவும் வகையில் வட்டியிலோ அல்லது மார்க்கம் தடை செய்த பிற அம்சங்களிலோ உதவும் வகையில் நாம் ப்ரோகிராம் எழுதி மென்பொருள் தயார் செய்யப்படும் எனில் அது மார்க்கத்தில் கூடாது.

இவ்வாறு மார்க்கம் தடை செய்த அம்சம் இல்லாத போது அதற்காக மென்பொருள் தயார் செய்வது குற்றமாகாது.