தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பரவும் வதந்தியை முறியடிக்கத் தமிழக அரசு, தக்க முறையில் செயலாற்றுகிறதா?

வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப் படுவதாகவும் சிலர் கழுத்தறுத்துக் கொல்லப் படுவதாகவும் வட மாநிலங்களில் பொய் செய்தி பரப்புகிறார்கள்.
பிரபலமான ஹிந்தி பத்திரிகைகளிலும் இந்த பொய்ச் செய்தியை வெளியிட்டு தமிழக மக்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவா¢ 12 பீகாரிய தொழிலாளர்கள் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று விஷம் கக்கியதோடு இதற்கு சற்றும் தொடர்பில்லாத பல்வேறு வீடியோக்களை இணைத்து வெளியிட்டு அவதூறு பரப்பிருக்கிறார்.
இந்தியாவை ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா?
பீகார் சட்டமன்றம் வரையிலும் இந்த அவதூறுச் செய்தி எதிரொலித்திருக்கிறது.
தமிழகத்தில் நமது மாநிலத்தைச் சார்ந்த ஏழைத் தொழிலாளிகள் தலையை வெட்டி கொல்லப்படுகின்ற பொழுது ஒரு சிலரோ அம்மாநில முதல்வருடன் கேக் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவதூறு செய்தியை சட்டசபையிலும் உண்மை போல் கர்ஜித்து இருக்கிறார்கள்.
உபி முதல்வர் யோகி ஆதியத்தியநாத் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே சென்று நடக்காத இந்தச் சம்பவங்களை தான் கண்டிப்பதாகவும் தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர் உபிக்கு வரவும் இங்கே நாம் வேலைவாய்ப்பை தருவோம் என்றும் பத்திரிகைச் செய்திகளுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
20000 புத்தகங்கள் படித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் பம்மாத்துக்காக இந்த சம்பவங்கள் பொய் என்று ஓரிரு வரிகளில் கூறிவிட்டு மற்ற அனைத்தும் பொய்யை உண்மைப்படுத்தும் விதமாகவே செய்தி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வன்மமான போக்கு நிலவுவது போலவும் அவர்கள் கடுமையான முறையில் பாதிக்கப்படுவதாகவும் இந்த பாதிப்புகளுக்கு எல்லாம் திமுகவின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு காரணம் எனவும் கருத்து கூறியுள்ளார்.
அண்ணாமலை கூறுவதைப் போல தமிழகத்தில் பிற மாநில மக்கள் மீது எந்த வன்மமும் வெறுப்புணர்வும் இல்லை.அவர்களையும் சக மனிதர்களாக நடத்தும் நிலை தமிழகத்தில் இருக்கிறது
சம்பளம்,இதர உரிமைகள் என்று வருகின்ற பொழுது தமிழக மக்களில் அடித்தட்டில் இருக்கும் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதைப் போலவே வட மாநில தொழிலாளர்களும் ஏமாற்றப்படுகிறார்கள். அதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு காலத்தில் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டதைப் போல, மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று பேசி தமிழர்களை விரட்டியதைப் போல தற்போது தமிழகத்தில் நிலவுவதாக திட்டமிட்டு பாஜக பொய்த்தோற்றத்தை உருவாக்குகிறது. அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முனைகிறது.
பொய்யான செய்திகளின் அடிப்படையில் இரு சமூகத்திற்கிடையே மோதல் உருவாக்கும் நோக்கத்துடனையே தமிழக பாஜக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது ஆகவே அண்ணாமலை என் மீது தமிழக காவல்துறை 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் எல்லாவற்றிலும் ஆய் துடுக்காக பேசும் அண்ணாமலை இதிலும் அவ்வாறே பேசி உள்ளார் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் சவால் விடுத்துள்ளார் ஒன்றிய அதிகாரத்தில் தாங்கள் இருக்கிறோம் எனும் தைரியத்தில் அண்ணாமலை பேசுகிறார் என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்துள்ளனர் இருப்பினும் இதுபோன்று பொய்யான செய்திகளை வெளியிட்டு இரு சமூகத்திற்கு இடையே பதட்டத்தை உருவாக்கும் விதமாக திட்டமிட்டு செயல்படு வோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழக காவல்துறைக்கு நல்லதல்ல.
பாஜகவை பொருத்தவரை தங்களுக்கு எதிராக உண்மைச் செய்தியை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கூட அவர்கள் தயங்குவதில்லை.
அவர்கள் ஊடகவியலாளராக இருந்தாலும் சரி அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, எவ்வித பாரபட்சமும் இன்றி கைது வழக்கு என்று துரித நடவடிக்கையில் இறங்கி, சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள் .
அண்மையில் கூட ஹிண்டென்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.
அது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா என்பவர் பிஜேபியின் வாஜ்பாய் அத்வானி போன்றவர்கள் தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வருகின்ற பொழுது சுதந்திரமான முறையில் அவற்றை விசாரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு விசாரணை குழுவை நியமித்தார்கள் அதுபோல் பங்கு சந்தையில் அதானியின் மோசடியை வெளிப்படுத்திட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நியமிப்பதில் மோடிக்கு தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அவ்வளவுதான் டெல்லி விமானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விமானத்தில் வைத்தே காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவை இந்த விவாகரத்திற்காக கைது செய்தார்கள்.
நீதிமன்றத்தில் பிணை பெற்று அவர் வெளியே வந்தார்.
இப்படி தங்கள் கட்சிக்கு எதிராக உண்மை செய்தியை வெளியிடக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது சர்வாதிகாரத்தின் அம்புகளை அடுக்கடுக்காய் பாஜக ஏவிவிடுகிறது.
ஆனால் வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் திட்டமிட்டு தமிழக மக்கள் மீதும் தமிழக அரசின் மீதும் வன்மத்தை பரப்பும் விதமாக அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜகவின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்கலை எல்லாம் வளைத்து வளைத்து விசாரணைக்கு உட்படுத்தும் தமிழக காவல்துறை வகுப்புவாத மோதலை உருவாக்கிடத் துடிக்கும் கயவர்கள் மீது வலுவான நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கடந்து விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தின் நற்பெயருக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கை களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்தால் மட்டும் போதாது. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் காவல்துறை அதை நிறைவேற்றுமா