தன்பாலினத்தவர்கள் தொடுத்த வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க்க இருக்கின்றதே ?

ஆண் – பெண் திருமண முறையே இயற்கையாகும்.
இயற்கைக்கு மாறாக ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது எனும் சீரழிவுச் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இது தன்பாலின திருமணம் என்று வழமையில் சொல்லப்படுகின்றது.
மேலைநாடுகளில் இது பரவலாக நடைபெறுவதைப் பார்த்து தற்போது இந்தியாவிலும் ஆங்காங்கே நடக்கத்துவங்கியுள்ளன.
அண்மையில் கூட கேரளாவில் ஆதிலா நஸ்ரின் – பாத்திமா நூரா எனும் இரு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவன் – மனைவி போல தனிவீட்டில் வசிக்க தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேரளா நீதிமன்றத்தை நாடியது நாட்டையே பரபரப்பாக்கியதை அறிவோம்.
அவர்களின் விருப்பத்திற்கு குறுக்கே யாரும் செல்லக் கூடாது என்பதுடன் அவ்விருவரின் உறவினர்கள் அவர்களுக்கு எந்த இடையூறும் அளிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் அவ்வாறு சொன்னதும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களுடன் அறிவித்தனர்.
பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறிய அவலமும் நடந்தேறியது.
ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை என்பது சமூகத்தில் அருவருப்பாக பார்க்கப்படும் நிலையே இருந்தது. தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று வெளிப்படையாக அறிவித்து கொள்ள தயக்கம் காட்டினர்.
ஆனால் ஓரினச் சேர்க்கை குற்றம் என்று வரையறுக்கப்பட்ட சட்டப்பிரிவு 377 ஐ நீக்கி ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழானது எனலாம்.
2018 ல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு ஓரினச் சேர்க்கையாளர்கள் பலரும் தங்களை எவ்வித கூச்சமும் இன்றி வெளிப்படுத்திக் கொள்ள துவங்கினர்.
இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டு அந்த அசிங்கத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது என எல்லைமீறிச் சென்றனர் எனலாம்.
எனினும் ஒழுக்கத்தை விரும்பும் பொதுச் சமூகத்தில் ஓரினச் சேர்க்கை எனும் ஒழுக்கக் கேட்டிற்கு ஏற்புநிலை ஏற்படவில்லை.
உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கை தவறில்லை என்று சொன்னாலும் மக்கள் அதை நஞ்சாக வெறுக்கின்றனர்.
தற்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர் மென்மேலும் தங்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என்று கருதி நீதிமன்றத்தில் ஆங்காங்கே வழக்கு தொடுத்துள்ளார்கள்.
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும் என்பதுதான் அனைத்து மனுக்களின் சாராம்சமாக உள்ளது.
ஓரினச் சேர்க்கைக்கு நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இதுவரை கிடைக்காத நிலையே உள்ளது.
ஒரு திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் போது விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுத்தல் என பல உள்ளடக்கங்கள் அதன் கீழ் வரும்.
அதுபோல தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தால் மேற்சொன்ன அனைத்தும் சட்டப்பூர்வமாகி விடும்.
அவர்களின் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொள்ள இயலும்.
இவர் தான் என் கணவர் இவரது சொத்தில் எனக்கு பங்கு வேண்டும் என்று ஆணாக உள்ள அவரது மனைவி நீதிமன்றத்தை நாட முடியும்.
இவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. எங்களுக்கு விவாகரத்து தாருங்கள் என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கோரிக்கை வைக்க இயலும்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தால் இன்னும் பலவித கேலிக்கூத்துகளை இந்த நாடும் நாட்டு மக்களும் சந்திக்க வேண்டியது வரும்.
இதுநாள் வரை அவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பல்வேறு நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு உத்தரப்பிரதேசம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது.
இரு பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களுக்கு அங்கீகாரம் தாருங்கள் என்று கேட்டனர்.
ஆனால் அரசு தரப்பு இந்து திருமண சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை என்று வாதம் வைத்த பிறகு அவர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க மறுத்து விட்டனர்.
இப்படி பல நீதிமன்றங்களில் மறுத்தும் இழுத்தடிப்பு செய்தும் வந்த நிலையில் இந்தாண்டின் ஜனவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவெங்கும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கேட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தனது அமர்விற்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“பிற உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எந்த ஒரு மனுதாரரையும் விட்டு விடாமல் மனுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பார்திவாலா ஆகியோர் இடம்பெற்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இவ்வழக்குகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை விரைந்து தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மார்ச் மாதம் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கள்ளக்காதல் குற்றமில்லை , ஓரினச் சேர்க்கை தப்பு இல்லை என்று வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் போல தற்போதும் ஓரினச் சேர்க்கைக்கு திருமண அங்கீகாரம் கொடுக்கப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது இந்திய மக்களின் ஒழுக்கவாழ்வை சிதைத்துச் சீரழித்து விடும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் சமூகத்தைச் சீரழிப்பதை அனுமதிக்க இடம் தரக்கூடாது.
ஒருவர் முழு நிர்வாணமாக திரிவார். கேட்டால் கருத்து சுதந்திரம் என்பார்.
ஆடு, மாடுகளை புணர்வார். கேட்டால் கருத்து சுதந்திரம் என்பார்.
ஓரினச்சேர்க்கை கூடும், அவர்கள் திருமண பந்தத்தில் இணையலாம் என்று கூறுவோர் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் இவ்வாறு திரிந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த முற்படுவார்களா? அல்லது அதையும் கருத்துச் சுதந்திரம் என்பார்களா?
தனது மனைவி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தால் அப்போது தான் விவாகரத்து வழங்கி தனது மனைவியை அவர் விரும்பிய துணையுடன் சேர்த்து வைப்பாரா?
தனது மகன் எனக்கு இன்னொரு ஆண் தான் துணையாக வேண்டும் என்று கூறினால் அப்போது தனது மகனுக்கு மாப்பிள்ளை தேடுவாரா?
கருத்துச் சுதந்திரம் என்று பேசுவதல்லாம் வெறும் வாய் ஜம்பம் தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள இயலும்.