அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா? – பாகம் 4

அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா?
(பாகம் 4)

துரோகம் செய்யும் மனைவியை கணவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் ஸஹாபாக்களை இரவில் சொல்லிக்கொள்ளாமல் வீட்டிற்கு செல்வதை விட்டும் நபிகள் நாயகம் தடுத்தார்கள்” என்ற விஷமக்கருத்தை பிஜே சொன்னார்.

இந்த அவதூறை நிலைநாட்ட அவர் முன்வைத்த ஆதாரங்களின் நிலையை முந்தைய தொடர்களில் விளக்கியுள்ளோம்.

பிஜேவின் பொன்னான இச்சிந்தனைக்கான? மற்றொரு ஆதாரம் அஹ்மதில் இருப்பதாகவும், அதை ஹாஃபிள் இராக்கி அவர்களே வலிமையான அறிவிப்பு எனக் குறிப்பிட்டு இருப்பதாகவும் 09.10.18 நேரலையில் பிஜே ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார்.

தன்னுடைய தவறை நியாயப்படுத்த பிஜே எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு அவர் எடுத்து வைக்கும் இந்த ஆதாரம் மற்றொரு சான்றாகும்.

அஹ்மதில் இடம் பெறும் செய்தியைக் காண்போம்.

مسند أحمد بن حنبل (2/ 104)
5814 – حدثنا عبد الله ثنا أبي ثنا أبو معاوية الغلابي ثنا خالد بن الحرث ثنا محمد بن عجلان عن نافع عن عبد الله بن عمر : أن رسول الله صلى الله عليه و سلم نزل العقيق فنهى عن طروق النساء الليلة التي يأتي فيها فعصاه فتيان فكلاهما رأى ما يكره

நபி (ஸல்) அவர்கள் ”அகீக்” என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள். இரவில் (வெளியூரிலிருந்து) வருபவர் தகவல் தெரிவிக்காமல் மனைவியிடம் செல்வதைத் தடுத்தார்கள். இரண்டு இளைஞர்கள் (கட்டளையை மீறி) நபியவர்களுக்கு மாறுசெய்தார்கள். அந்த இருவருமே தாம் வெறுப்பதைக் கண்டார்கள்.
நூல் : அஹ்மத் (5814)

இந்தச் செய்தியில் ”அந்த இருவருமே தாம் வெறுப்பதைக் கண்டார்கள்.” என்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஒரு சொல்லிற்குள்ளே தனது சிந்தனையில் என்ன பதிவாகியுள்ளதோ அதை அப்படியே சொருகிவிட்டார்.

இதன் பொருள் என்ன? என்பதை மற்றொரு ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (வெளியூரிலிருந்து) இரவு நேரத்தில் வந்தால் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரென அவர் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தம்மை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளும்வரையிலும், தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளும்வரையிலும் (அவர் தாமதிக் கட்டும்!)
நூல் : முஸ்லிம் (3895)

நபி அவர்கள் இரவில் செல்வதை தடுப்பதே மனைவிமார்கள் கணவனுக்காக தங்களை அலங்கரித்து அவன் விரும்பும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை மேற்கண்ட ஹதீஸில் இருந்து நாம் தெளிவாக அறிகிறோம்.

அவர்கள் தகவல் தெரிவிக்காமல் சென்றதால் மனைவிமார்கள் அலங்காரம் செய்யாமல் இருந்திருப்பார்கள். அது அவர்களுக்கு வெறுப்பாக இருந்திருக்கும். என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்படி நபிமொழியுடன் துணையுடன் அழகாக புரிந்து கொள்ள வழியிருந்தும் பிஜே இங்கும் தனது கோணல் புத்தியைச் செலுத்துகின்றார்.

வஹியின் வார்த்தையை வஹியின் வார்த்தையைக் கொண்டே புரிந்து கொள்ள முற்படாமல் நபியின் பெயரில் இவர் புழுகிய பச்சைப் பொய்யை சிந்தனையில் பதிவாக்கி அருவருக்கத்தக்க அச்சிந்தனையுடன் வஹியின் வார்த்தையை முடிச்சு போட முனைகிறார்.
அவர்கள் விரும்பத்தகாததை பார்த்தார்கள் வேறு ஏதோ ஒரு அசம்பாவிதமாகத்தான் இருக்குமாம்” எனக் குறிப்பிடுகிறார்.

https://goo.gl/3YrBJg
https://goo.gl/mfEPqv

இதிலும் அப்பெண்கள் கணவனுக்கு துரோகம் செய்து அந்நிய ஆண்களோடு இருந்தார்கள் என்ற விஷக்கருத்தை திணித்து தன்னுடைய வழிகேட்டை நியாயப்படுத்துவதற்காகத்தான் விரும்பத்தகாத சம்பவம் என பிஜே குறிப்பிடுகிறார்.

எப்படியாவது அடுத்தவன் மனைவியுடன் கள்ளத்தனம் செய்வதையும், அதை கணவன்மார்கள் அறிந்து கொண்டாலும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்கு ஆதாரவான கருத்தை திணிப்பதிலேயே பிஜே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்.

இந்த செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு இது ஸஹீஹ் என்பதற்கு ஹாஃபிழ் இராக்கியையும் சான்றாகக் காட்டிவிட்டு ”இது பலவீனம் என்றே வைத்துக் கொள்வோம். முஸ்லிமில் உள்ள ஹதீஸ் ஸஹீஹா? இல்லையா? என்று முஸ்லிம் ஹதீஸிற்கு தாவுகிறார்.

(முஸ்லிம் ஹதீஸின் நிலையை பற்றி முன்பே விளக்கிவிட்டோம்.)

ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கூறிவிட்டு இதை பலவீனம் என்றே வைத்துக் கொள்வோம் என பிஜே ஏன் குறிப்பிட வேண்டும்.?

அதிலும் சூட்சுமம் உள்ளது. பலவீனமான ஹதீஸை அது பலவீனம் எனத் தெரிந்து கொண்டேதான் பிஜே இமாம்களின் மீது பழிபோட்டு அதை ஸஹீஹாக்க முயல்கிறார் என்பதே பிஜே இவ்வாறு கூறுவதற்கான காரணம். அதற்கான வெளிப்படையான ஆதாரத்தை தருகின்றோம்.

இமாம்கள் ஸஹீஹ் என்று சொன்ன எத்தனையோ ஹதீஸ்களை பிஜே தன்னுடைய சுய ஆய்வினால் ஆதாரங்கள் அடிப்படையில் லயீஃப் என்று கடந்த காலங்களில் நிறுவியுள்ளார்.

ஆனால் இந்தச் செய்திக்கு இமாம்களை மட்டுமே ஆதாரம் காட்டுகிறார்.

ஏனென்றால் இது பலவீனம் என்று பிஜேக்கு நன்றாகத் தெரியும்.

இந்தச் செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.

அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது கூடாது என்று வரும் ஹதீஸில் இவர்தான் இடம் பெற்றுள்ளார்.

நாம் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்க வேண்டும் என்று ஸஹீஹான ஹதீஸ் அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

விரலசைக்க வேண்டும் என்று கூறும் போது மாற்றுக் கருத்துடையவர்கள் ”விரலசைக்கக் கூடாது ”என்ற கருத்தில் வரும் ஹதீஸை முன்வைத்தார்கள்.

அப்போது பிஜே அவர்கள் கூறிய பதிலை தருகின்றோம்

விரல் அசைக்க கூடாது என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
2. ஆமிர் பின் அப்தில்லாஹ்
3. முஹம்மது பின் அஜ்லான்
4. ஸியாத்
5. இப்னு ஜுரைஜ்
6. ஹஜ்ஜாஜ்
7. அய்யூப் பின் முஹம்மது
இதில் மேலிருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.

எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.

http://old.onlinepj.com/aayvukal/viral_asithal_marupuku_marupu/

”விரல் அசைக்கக் கூடாது ” என்று வரும் ஹதீஸில் எந்த முஹம்மத் பின் அஜ்லான் இடம் பெற்றுள்ளாரோ அவர்தான் இந்தச் செய்தியிலும் இடம் பெற்றுள்ளார்.

இதன் காரணத்தினால் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரைப் பற்றிய விமர்சனம் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுக்கு மத்தியில் மிகப்பிரபலமானதாகும்.

இப்படி உள்ளங்கை நெல்லிக்கனி போல் இப்னு அஜ்லான் பற்றிய குறை நன்கு அறியப்பட்டிருந்தும் அவர் இடம்பெறும் அறிவிப்பை ஸஹீஹ் என்று கூறி இமாம்களின் மீது பழிபோட்டு பிஜே தப்பிக்க பார்க்கிறார்.

மேற்கண்ட அஹ்மத் உடைய அறிவிப்பு மற்றொரு வகையிலும் பலவீனமானதாகும்.

மேற்கண்ட அறிவிப்பில் ”நாஃபிவு” என்பாரிடமிருந்து ”முஹம்மது இப்னு அஜ்லான்” என்பார் அறிவிக்கின்றார்.

இந்த நாஃபிவு என்பாரிடமிருந்து முஹம்மது இப்னு அஜ்லான் அறிவிக்கும் அறிவிப்புகள் குளறுபடியானவை என இமாம் யஹ்யா இப்னு கத்தான் குறிப்பிட்டுள்ளார் .
الضعفاء للعقيلي (4/ 118)
1677- محمد بن عجلان المديني. حَدَّثنا عَبد الله بن أحمد حدثني أبو بكر بن خلاد ، قال : سَمِعْتُ يحيى يقول كان بن عجلان مضطرب الحديث في حديث نافع ولم يكن له تلك القيمة عنده.

இப்னு அஜ்லான் நாஃபிவு என்பாரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் குளறுபடியாக அறிவிப்பவர். அந்த அறிவிப்புகளில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை என இமாம் யஹ்யா கூறுகின்றார்.
(அல்லுஅஃபாவு லில் உகைலி)
ميزان الاعتدال (3/ 644)
7938 – محمد بن عجلان [ عو ]……………..
قال يحيى القطان: كان مضطربا في حديث نافع. وقال عبدالرحمن بن القاسم: قيل لمالك: إن ناسا من أهل العلم يحدثون. قال: من هم ؟ فقيل له: ابن عجلان.فقال: لم يكن ابن عجلان يعرف هذه الاشياء، ولم يكن عالما

இப்னு அஜ்லான் நாஃபிவு என்பாருடைய அறிவிப்புகளில் குளறுபடியாக அறிவிப்பவராக இருந்தார்.

அப்துல் ரஹ்மான் இப்னுல் காசிம் கூறுகிறார். சில அறிஞர்கள் ஹதீஸ்களை அறிவிக்கின்றனர்? என இமாம் மாலிக்கிடம் கூறப்பட்டபோது ”அவர்கள் யார்?” என இமாம் மாலிக் கேட்டார். இப்னு அஜ்லான் என்று அவருக்கு கூறப்பட்டது. அதற்கு மாலிக் அவர்கள் ”இப்னு அஜ்லான் இந்த விசயங்களை அறிந்தவராக இல்லை. அவர் அறிஞராகவும் இல்லை.” எனக்குறிப்பிட்டார்கள்.
நூல் : மீஸானுல் இஃதிதால்

இத்தகைய பலவீனமான செய்தியைத்தான் பிஜே அவர்கள் வலிமையான ஹதீஸ் என்று ஆதாரமாக முன்வைக்கின்றார்.

தனக்கு சாதகமாக இருந்தால் நபி தொடர்புடையதாக இல்லாதிருந்தாலும் அதுவும் பலவீனமானதாக இருந்தாலும் ஸஹீஹான ஹதீஸ் என்பதும்

அதுவே பலவீனமான செய்தியாக இருந்தால் பலராலும் குறை சொல்லப்பட்டதில் நன்கு பரிச்சயமாக அறிவிப்பாளர் இடம் பெற்றிருப்பது தெரிந்தாலும் அதையும் வலுவான செய்தி, அந்த இமாம் இதை வலுவான செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதும்

தன் மனோ இச்சைக்கு தோதாக மார்க்கத்தை வளைக்கும் ஆபத்தான போக்காகும்.

இதிலிருந்தே பிஜே தனது பாலியல் குற்றச்சாட்டை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தெளிவாகிறது அல்லவா?