வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளதே?

பத்திரிகைகளைப் புரட்டினாலும் செய்திச் சேனல்களைப் பார்த்தாலும் வாடகைத் தாய் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. திடீரென இது பரபரப்புக்கு உள்ளானதற்கு காரணம் திரைப்படத் துறையில் இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் இரட்டைக் குழந்தைக்கு தாங்கள் பெற்றோர் ஆகி விட்டதாக சமூக ஊடகங்களில் பரப்பிய செய்திதான் இதற்கு காரணம்.
சினிமாத் துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக, இளமையாகக் காட்டிக் கொள்வதற்காக வாடகைத் தாயை அணுகுகிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது
இப்படிப்பட்ட செய்திகள் காட்டுத் தீயாக பரவியதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தான், வாடகை தாய் விஷயத்தில் அரசு சில கடுமையான சட்ட விதிகளை கொண்டு வந்தது. வாடகை தாயின் மூலம் குழந்தையைப் பெற விரும்பக்கூடிய தம்பதிகள் என்னென்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என ஒரு நீண்டதொரு சட்ட விளக்கத்தை இந்தச் சட்ட திருத்தம் கூறுகிறது
அதன் அடிப்படையில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021-ஆனது இந்த ஆண்டு ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வாடகைத் தாய் விதிகளின்படி, வாடகைத் தாய் மூலம் பெற்றோராக விரும்பும் தம்பதிகள் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணுக்கு ஆதரவாக 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்களுக்கு) பொது மருத்துவ காப்பீட்டை (ரீமீஸீமீக்ஷீணீறீ லீமீணீறீtலீ வீஸீsuக்ஷீணீஸீநீமீ நீஷீஸ்மீக்ஷீணீரீமீ) பெற வேண்டும்.
வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆவதற்குத் தகுதி மற்றும் அதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன தம்பதியர், மனைவி 25 முதல் 50 வயது வரையிலும், கணவர் 26 முதல் 55 வயது வரையிலும் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். தம்பதியரில் ஒருவர் அல்லது இருவருமே குழந்தையின்மையை நிரூபித்திருந்தால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பெற்றோரின் மற்றும் வாடகைக் குழந்தையின் பாதுகாப்பை நிறுவும் சான்றிதழைப் பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். 16 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் சிரமங்களுக்கு பெற்றோர்கள் மூலம் சரியான பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கூறுகிறது
வாடகைத் தாய் இரண்டு வகைகளை உள்ளடக்கியது. கர்ப்பகால வாடகைத் தாய் மற்றும் பாரம்பரிய வாடகைத் தாய். வாடகைத் தாய்க்கு செயற்கை முறையில் கருவூட்டுவதற்கு தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்துவது பாரம்பரிய வாடகைத் தாய் முறை ஆகும். இந்தப் பாரம்பரிய வாடகைத் தாய் முறையின்படி குறிப்பிட்ட வாடகைத் தாயின் கருமுட்டையில் கரு உருவாக்கப்பட்டதால், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுகிறார். கர்ப்பகால வாடகைத் தாய்மையில், தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் எடுக்கப்படும். அதாவது இரண்டுமே சட்டப்பூர்வ பெற்றோரிடமிருந்து பெறப்படும். அவ்வாறு பெறப்பட்டவை வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும். இதன் கீழ் வாடகைத் தாய்க்கும், குழந்தைக்கும் உயிரியல் தொடர்பு இருக்காது.
எதிர்காலத்தில் குழந்தையின் சட்டப்பூர்வ உரிமைகளில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதால், அரசால் உத்தரவிடப்பட்ட சட்ட நடைமுறையைப் பின்பற்றி வாடகைத் தாய் முறை கையாளப்பட்டுள்ளது. மேற்கொண்ட நோக்கத்திற்காக தான் வாடகை தாய் முறை என்கின்ற நடைமுறை தற்போதைய மருத்துவ உலகில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
ஆனால் இன்றைக்கு தங்களுடைய இளமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் திருமணம் மூலம் அல்லாமல் நாம் ஒரு வாரிசை பெற்றெடுத்துக் கொள்ளலாம் என்பதற்காகவும் அருவருக்கத்தக்க ஓரினச்சேர்க்கையில் வாரிசுகள் ஒரு பிரச்சனை அல்ல என்பதற்காகவும் இன்றைக்கு இந்த வாடகை தாயும் முறை பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது
பல சினிமா பிரபலங்களும் பண முதலைகளும் தங்களுக்குச் சாதகமாக மருத்துவ உலகை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணத்திற்கு பேராசைக்கும் ஆசைப்பட்ட சில மருத்துவர்கள் இவர்களுடைய இந்த ஆசைகளை நிறைவேற்றித் தரக்கூடிய தரகர்களாக மாறி விடுகின்றனர்
இதில் என்ன கொடுமை என்று சொன்னால் வாடகைத் தாய் மூலம் பெற்றோராக விரும்பக்கூடிய பண முதலைகள் எப்படிப்பட்ட வாடகைத்தாய் தனக்கு நியமிக்கப்பட வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு சில அப்பாவி பெண்கள் குறிவைக்கப்பட்டு நாடு முழுவதும் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்
பிற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கக்கூடிய முறையில் பெரிய அளவிற்கு செலவுகள் குறைவாக இந்தியாவில் உள்ளதால் பல வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய முறை அதிகரித்து வந்திருக்கிறது. தற்போது கொண்டு வந்துள்ள சட்ட விதிமுறைகள் இதை இன்னும் கடுமையாக்கும் என சொல்லப்படுகிறது.
பொதுவாக தம்பதியராக இருப்பவர்களில் கணவனுடைய விந்தணுவையும் மனைவியாக இருப்பவளின் கருமுட்டையையும் எடுத்து டெஸ்ட் டியூப்பில் பக்குவப்படுத்தி வைத்து மீண்டும் அந்தச் சம்பந்தப்பட்ட மனைவியின் வயிற்றில் குழந்தையாக வளர்ப்பது என்பது தவறல்ல. அதை விடுத்து ஒரு தம்பதியரில் ஆணுடைய விந்தணுவை எடுத்து அந்நிய பெண்களின் கருமுட்டையுடன் சேர்ப்பதாக இருந்தாலும், பெண்ணுடைய கருமுட்டையை எடுத்து அந்நிய ஆணுடைய விந்தணுவுடன் இணைத்து கருத்தரிப்பை உருவாக்குவதாக இருந்தாலும் இந்த இரண்டுமே சரியல்ல. இந்த வகையில் வாடகைத் தாய் முறை என்பது கூடாது ஒன்று தான். சரியில்லாத நடைமுறை தான்.
இதுபோன்ற வாடகைத் தாய் முறை மூலம் சமூகத்தில் தாய்மை எனும் பாக்கியம் விலைபேசப்படும் பொருளாக பார்க்கப்படுகிற அவல நிலை ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை.