பெகாசஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளதே?

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கட்டுரை ஒன்றில் பெகாசஸ் விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில் பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியுள்ளது என்றும் கடந்த 2017 ல் மோடி இஸ்ரேல் சென்று அப்போதைய அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இதற்கான ஒப்பந்தம் பேசப்பட்டது என்று அக்கட்டுரை விவரிக்கின்றது.
இந்திய அரசு பெகாசஸ் செயலியை விலைக்கு வாங்கியுள்ளது என்பதும் அதை வைத்து இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி மற்றும் கனிணிகளை உளவு பார்க்கிறது என்பதும் முன்பே வெளியான செய்திதான்.
புலனாய்வு பத்திரிக்கைகளால் முன்பே வெளியிடப்பட்ட செய்தியைத்தான் மீண்டும் தூசிதட்டியுள்ளது நியூயார்க் டைம்ஸ்.
உலகின் சிறந்த பிரதமர் என்று அமெரிக்காவின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டால் அதை ஊர் முழுக்க கொண்டு செல்லும் சங்கிகள் இதற்கு கள்ள மவுனம் காப்பதில் அடங்கியிருக்கிறது இவர்களின் நேர்மை.
பெகாசஸ் செயலியை இந்தியா வாங்கியது எனும் குற்றச்சாட்டு கிளம்பிய போது மொத்த தேசமுமே இதற்கு எதிராக அப்போது குரல் எழுப்பியது. ஆனால் மத்திய அரசு பெரிதாக வாய் திறக்கவில்லை.
அசாத்திய மவுனத்துடன் இதை அலட்சியாக கடந்து செல்லவே விரும்பியது.
மக்களவையில் இது குறித்து பகிரங்க விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரிய போது அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயப்பட வேண்டியதில்லையே?
பெகாசஸ் செயலிக்கும் இந்திய அரசுக்குமான உறவை? ஆராய உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்தது. ஆனால் அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் எவ்வித சலனமும் இன்றி அமைதி காக்கின்றது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி உலகளாவிய அளவில் கவனம் பெறுகிறது.
இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனியுரிமையை அவர்களின் அடிப்படை உரிமை என்றாக்கியுள்ளது.
அத்தகைய அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்குகின்றது பெகாசஸ் விவகாரம்.
பண்ணையில் உள்ள விலங்குகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பதை போல நம்மை பெகாசஸ் மூலம் கண்காணிக்க அரசு முயல்கிறது.
தனிநபர் சுதந்திரத்திற்கு மிகவும் சவாலான விஷயம் இது.
தங்களுக்கு வேண்டாதவர்களை தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் அடக்கியாள முயலும் சர்வாதிகார போக்கை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் வகையில் எதிர்க்கட்சிகள் இது குறித்து குரலெழுப்ப வேண்டும்.
கள்ள மவுனம் சாதிக்கும் மோடி அமித்ஷா கும்பலை பெகாசஸ் சம்பந்தமாக வாய் வேண்டும்.
இனியும் அரசு வாய்திறக்க மறுத்தால் அதை இந்திய அரசின் அத்தனை அமைப்புகளும் வேடிக்கை பார்த்தால் ஜனநாயகம் செத்தொழிந்து விட்டது என்ற முடிவிற்கு வர இயலும்.