கருக்கலைப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் அந்நிய ஆண் ஒருவருடன் தகாத உறவு வைத்த அதன் மூலம் கருவுற்று, அதனை கலைப்பதற்காக மருத்துவமனையை அணுகியுள்ளார்.
அவருக்கு கருகலைப்பு செய்வதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.
உடனடியாக அந்த பெண்மணி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து தனக்கு கருகலைப்பு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமணம் ஆனவர்கள் கருகலைப்பு செய்வதற்கே அனுமதி எனவும், இவருக்கு கருகலைப்பு செய்ய அனுமதி தரமுடியாது எனவும் தீர்ப்பளித்துவிட்டது.
அடுத்தபடியாக அப்பெண்மணி டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதில் டெல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் வேடிக்கையாகவும் கவலையாகவும் உள்ளது.
அதாவது அப்பெண்மணி கருகலைப்பு செய்வதற்கு உடல்ரீதியாக தகுதியானவராக இருந்தால் கருகலைப்பு செய்து விட வேண்டுமாம்.
அவ்வாறு செய்யமுடியாவிட்டால் அவரைப் பத்திரமாக பாதுகாத்து குழந்தையை பெற்றெடுக்க வைத்து, அந்தக் குழந்தையை காப்பகத்தில் சேர்த்துவிட்டு இந்தப் பெண்மனி தான் விரும்பிய வாழ்க்கையை வாழலாம் என தீர்ப்பளித்துள்ளது.
கருகலைப்பு முறைகள் இன்றைய சூழலில் மருத்துவமனைகளில் முறையாக பேணப்படுவதில்லை; இளைய தலைமுறைகள் தறிக்கெட்டு போவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளன.
இந்தத் தருணத்தில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முறைகேடான ஒரு செயலை முறை என்று ஆக்கும் விதமாக உள்ளது.
கருவை கலைக்க அந்தப் பெண்ணிற்கு உரிமை இருக்கிறது என்றால் அந்தக் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளார்களே!
அப்படியானால் அந்த குழந்தைக்கான உரிமையில்லையா? தன் பெற்றோருடன் வாழ வேண்டும் என்று அக்குழந்தை விரும்பினால் இவர்கள் என்ன சொல்வார்கள்?
உச்சநீதிமன்றம் என்பது மக்களால் பெரிதும் மதிக்கப்படக் கூடிய அதிகாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஒரு துறை ஆகும்.
அப்படிப்பட்ட இடத்திலிருந்து வர கூடிய தீர்ப்புகள் மக்களைப் பண்படுத்த கூடியதாக, நாகரீகத்தை மேன்மை படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.
மாறாக இந்த தீர்ப்பு இளைய சமூகத்தை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
ஒழுக்கதை விரும்பும் மக்கள் யாரும் இதுபோன்ற தீர்ப்புகளை ஏற்று கொள்ள மாட்டார்கள்.