ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக வகையறாக்கள் நீதிமன்ற தீர்ப்பை தூக்கி பிடிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் நீதிமன்றதை தங்களுக்கு தோதாக வளைத்து விட்டார்கள் என்பதே ஆகும்.
பாஜகவின் கடந்த கால வரலாறு அதை தான் சான்று அளிக்கிறது.
தங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் அளிக்கப்பட்டால் அவற்றை வரவேற்க வேண்டும் என்று கூறுவதும் தங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து குரல் எழுப்புவதும் பாஜகவிற்கு வாடிக்கையாகிவிட்டது.
கேரளா சபரி மலை கோவிலுக்கு அனைத்து வயது பெண் பக்தர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அனைத்து பெண்களும் கோவிலுக்கு நுழையலாம் என்று தீர்ப்பு வந்தது.
அப்போது இதே அமித்ஷா வகையறாக்கள் மத விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்று கூக்குரல் இட்டனர்.
ஆனால் இப்போது ஹிஜாப் விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை அப்படியே எற்க வேண்டும் என்கின்றனர்.
எவ்வளவு தெளிவான இரட்டை வேடம். அவர்களது மத விவகாரம் என்றால் அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாதாம். அதுவே பிறமத விவகாரம் என்றால் நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்க வேண்டுமாம்.
பாஜகவின் பச்சை அயோக்கியதனம். மற்றவொரு சம்பவத்தை பாருங்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஆனால் அந்த ஊர்வலத்திற்கு சென்னை உயர்நிதி மன்றம் சில கட்டுப்பாடுளை விதித்திருந்தது .
அது குறித்து காவல்துறையினர் பி. ராஜாவிடம் எடுத்து சொல்லிய போது காவல்துறையினரிடம் மல்லுகட்டியது மட்டும் அல்லாமல் high court ஆவது மயிராவது என்று கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.
இப்படிப்பட்டவர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று பிற மக்களுக்கு சொல்லலாமா?.
அந்தத் தகுதி பாஜகவிற்கு கொஞ்சமும் இல்லை.
கடந்த காலத்தில் பாபர் மசூதி வழக்கில் பல்வேறு சமயங்களில் பாஜகவிற்கு எதிரான தீர்ப்புகள் வந்தபோதெல்லாம் அதை துச்சமென கருதியவர்கள் இவர்கள். பாபர் மசூதி உள்ளே சிலையை வைத்தது முதல் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது வரை அத்தனையும் நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்திதான் அவற்றை செய்தார்கள்
எனவே இவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதற்கு அறவே அருகதையற்றவர்கள்.
இப்படிப்பட்ட கேடு கெட்ட வரலாறு கொண்ட பாஜக நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று கருதுவதை தவிர வேறு பொருளில்லை.
பாபர் மசூதி குறித்த இறுதி தீர்ப்பு வரும் நேரத்தில் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று.
மசூதியை இடித்தவனுக்கே முழு நிலமும் என்று அதன் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இப்போது அதே குரல் மீண்டும் பாஜகவிடமிருந்து ஒலிக்கின்றது.
இதிலிருந்தே ஹிஜாப் வழக்கை உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் எவ்வாறு கொண்டு செல்லும் என்பதை யூகிக்க முடிகிறது.
எது எப்படி இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் மட்டுமே மக்கள் மனங்களில் மதிக்கத்தக்க இடத்தை பெறும்.
சட்டத்தை புறந்தள்ளி விட்டு மனோ இச்சையின் அடிப்படையில் அளிக்கப்படும் தீர்ப்புகள் வெற்று காகிதங்களே.சட்டத்தை மதிக்கும் எவரிடத்திலும் அது எந்த மதிப்பையும் பெறாது.