பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை பாஜக நிறைவேற்றி இருக்கிறதே ?

சட்டமன்ற – பாராளுமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவை அண்மையில் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
இதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் கட்சியாகக் காட்டிக் கொள்ள பாஜக முயற்சிக்கின்றது.
உண்மையில் பெண்கள் நலனுக்கும் பாஜகவுக்கும் பெரிய இடைவெளி உள்ளது.
பெண்கள் மீது அக்கறை என்பதெல்லாம் பாஜகவைப் பொ£¢த்தவரை வெளிவேஷமும் வெற்று நாடகமும் தான்.
புதிய நாடாளுமன்றத் திறப்பின் போது நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணித்தார்கள்.
நாட்டின் முக்கிய நிகழ்ச்சிக்கு நாட்டின் முக்கிய முதன்மை குடிமகளைப் புறக்கணிக்கும் தேவை என்ன வந்தது?
அவர் பெண் என்பதாலா?
பட்டியலினப் பெண் அதுவும் விதவைப் பெண் என்பதாலா?
புதிய நாடாளுமன்றத் திறப்பின் போது குடியரசுத்தலைவரைப் புறக்கணித்தால் அது விமர்சனத்திற்குள்ளாகும் என்பது கூடவா இவர்களுக்குத் தெரியாது.
கண்டிப்பாகத் தெரியும். ஆனால் அவற்றை அவர்கள் பொருட்படுத்தத் தயாரில்லை என்பது தான் விஷயம்.
இதுதான் இவர்கள் பெண்கள் மீது கொண்டுள்ள அக்கறை.
இதைக்கூட விட்டு விடுவோம்.
மணிப்பூர் மகளுக்கு நேர்ந்த கதியில் இவர்கள் ஆற்றிய எதிர்வினை என்ன?,
ஒரு பட்டியலின பெண்ணை முழு நிர்வாணமாக்கி அவளின் பாலியல் உறுப்புகளைத் தொட்டு விளையாடியது மட்டுமின்றி இறுதியில் மனித உருவிலான சில மிருகங்கள் அவளுடன் வல்லுறவில் ஈடுபட்டார்களே?
மணிப்பூரே பற்றி எரிந்தது? இது போன்ற கதி பல பெண்களுக்கு ஏற்பட்டதாகச் செய்திகள் வந்தன.
நாட்டின் சவ்கிதார் (பாதுகாவலர்) பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்றாரா? பாதிக்கப்பட்டோரைச் சந்தித்தாரா? பட்டியலின மக்களுக்கு ஆறுதல் கூறினாரா?
அதற்கேது அவருக்கு நேரம்.
கங்கணா ரணாவத்தையும் கவுதமியையும் சந்திக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழலாம்.
பாவம் நம் பிரதமர். பற்றி எரியும் மணிப்பூருக்கு சென்று என்ன செய்வார்?
ஹத்ராஸில் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்த காரணத்திற்காகப் பத்திரிக்கையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு போட்டவர்கள்.
குஜராத் பல்கீஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலையானதைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் யாரென்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவை தாம் இவர்கள் பெண்களைக் காக்கும் லட்சணம்.
எனவே இவர்கள் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றவே இந்த மசோதாவைக் கொண்டு வந்தோம் என்று சொல்வதை நம்புவதற்கு நாம் ஒன்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.
அடுத்து பாஜக கொண்டுவந்த இந்த மசோதாவினால் பெண்களின் வாழ்வில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
ஏனெனில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலோ அல்லது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ 33 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்ற பிறகே பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவின் வரைவில் தெளிவாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இறுதியாக 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததோடு சரி. 2021ல் அடுத்த கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். இப்போது வரை நடைபெறவில்லை. இனி எப்போது அந்தப் பணிகள் துவங்கும் என்பதும் தெரியவில்லை.
எனவே முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும்.
அதன் பின் மக்கள் தொகை கணக்கிற்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை சீரமைப்பு நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பணிகள் எப்போது துவங்கி எப்போது முடியும் என்பதற்கு எந்தக் கெடுவும் குறிப்பிடப்படவில்லை.
இவைகள் முடிய எப்படியும் ஒரு பத்தாண்டுக் காலம் பிடிக்கும் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
பத்தாண்டுக் காலத்திற்கு பாஜக ஆட்சி தாக்குப்பிடிக்குமா என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஒரு வாதத்திற்கு அடுத்த மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு பாஜக வந்தால் இந்த மசோதாவைச் செயல்படுத்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தான் இவர்களின் நோக்கம் என்றால் ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாமே?
அல்லது மசோதாவை அறிமுகப்படுத்தும் போதே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் கூறியிருக்கலாம்.
இவற்றைக் கவனித்தாலே பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது இவர்களின் நோக்கம் இல்லை என்பதை அறியலாம்.
தமிழகத்தில் திமுக பெண்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது.
கர்நாடாகவில் இதே போன்ற பெண்களுக்கான உதவித்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
இப்படி வெவ்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் பெறுவதைப் பாஜக துளியும் விரும்பவில்லை.
இவை தவிரப் பெண்களுக்கு பாஜக என்ன செய்தது என்ற கேள்விகள் ஆங்காங்கே எழத்துவங்கி உள்ளன.
ஆகவே தான் ஒப்புக்கு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி அரிய பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டதாக மக்களை ஏமாற்ற நினைக்கின்றது.
மொத்தத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் நேரப் பிரச்சாரத்திற்குப் பயன்பட மட்டுமே இது உதவும்.
மற்றபடி பெண்களுக்கு இதில் உடனடி பலன் எதுவும் இல்லை.
இதை மக்கள் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்