ஹிஜாப் அணிவதை திருக்குர்ஆன் வலியுறுத்தவில்லை என்று கேரள ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளாரே?

நாய்க்கு வாக்கப்பட்டால் குரைத்து தான் ஆக வேண்டும் என்று கிராமத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நமது நாட்டின் ஆளுநர் பதவிக்கு மிக பொருத்தம்.
ஆளுநர்களுக்கென்று பெரிய வேலை எதுவும் இல்லை. ஆளும் அரசின் ஊதுகுழலாக இருந்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகளில் கண்ணை மூடிக் கொண்டு ஆளும் அரசிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும். எவரின் ஆட்சியாக இருந்தாலும் தங்களை ஆளுநர் இருக்கையில் அமர வைத்த கட்சிகளுக்கு விசுவாசம் காட்டுவது தான் ஆளுநரின் தலையாயப் பணி. அப்படியிருந்தால் தான் ஆளுநர் பதவியில் நீடிக்க முடியும்.
இது பொதுவான விதி.
கேரள ஆளுநர் ஆரிப்கான் சீக்கியர்களுக்கு தலைப்பாகை அவசியம் என்பதை போல முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அவசியமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
எலும்புத்துண்டை போட்ட எஜமானனுக்கு விசுவாசம் காட்டியே ஆக வேண்டும் எனும் அடிப்படையிலேயே ஹிஜாப் சம்பந்தமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹிஜாப் சர்ச்சையில் கேரள ஆளுநரின் கருத்து அவருக்கு இஸ்லாமிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பதை பறைசாற்றுகின்றது.
அவர் திருக்குர்ஆனை சா¤வர படித்திருக்கவில்லை என்பது உறுதியாகிறது.
திருக்குர்ஆனை அவர் திறந்து படிக்கட்டும்.
தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளட்டும்.
அத்தியாயம் 24.31
நபியே! தலை முக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக!. அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது…
அத்தியாயம் 33.59
திருக்குர்ஆனின் இவ்வசனங்களில் மிகத்தெளிவாக பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் என்பது பெண்களின் ஆடை என்று திருக்குர்ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை என்று அவர் கூறுவது அடிப்படையற்றது. திருக்குர்ஆன் பற்றி அறிவு இல்லாத பேச்சு.
அதுமட்டுமின்றி இவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் இன்னுமொரு முக்தார் அப்பாஸ் நக்வியை போலத்தான். பெயர் தாங்கி முஸ்லிம்.
தனக்கு போடப்படும் எலும்புத்துண்டுகளுக்கு ஏற்ப வாலாட்டுவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ கருப்பு சட்டத்தை ஆதரித்து பேசியவர், பொது சிவில் சட்டம் தேவை என்று பேசி வருபவர். எனவே ஹஜாப் விஷயத்தில் பாஜகவிற்கு ஆதரவான குரலெழுப்பவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
ஆளுநர் ஆரிப்கான் ஒன்றும் இஸ்லாமிய அறிஞரோ பற்றாளரோ அல்ல. எது இஸ்லாத்தில் உள்ளது? எது இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் அறிவை அவர் பெற்றிருக்கவில்லை.
விசுவாசத்தை வெளிப்படுத்துகிறேன் எனும் பெயரில் தனக்கு சம்பந்தமில்லாத துறைகளில் கருத்து சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.