ஏகத்துவம் – மார்ச் 2014

தலையங்கம்

சிலை கலாச்சாரம் சீரழியும் பொருளாதாரம்

இந்தியாவில் 1995லிருந்து 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தியாவில் மிக வளமான மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் மேற்கண்ட காலகட்டத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம்.

இந்திய அளவில் 1995 முதல் 2002 வரை 1,21,157 விவசாயிகளும், 2003 முதல் 2010 வரை 1,35,756 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். இது 1995-2002 காலத்தில் நடந்த தற்கொலை சராசரியை விட அதிகம்.

இந்தப் புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவணத் துறை தருகின்றது.

இதை நாம் ஏன் இங்கு பார்க்கிறோம்?

இதற்கு விடை காண பிப்ரவரி 12, 2014 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான ஙங்ம்ர்ழ்ண்ஹப் ஊஷ்ஸ்ரீங்ள்ள்ங்ள் – நினைவுச் சின்ன விரயங்கள் என்ற தலையங்கத்தின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

மகாராஷ்டிரத்தில் மறைந்த மன்னன் சத்ரபதி சிவாஜிக்காக நரிமன்பாயிண்டிலிருந்து 2.5 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலில் ஒரு பெரிய நினைவுத் தீவை அமைப்பதற்காக நூறு கோடி ரூபாய் அளித்துள்ள அம்மாநில அரசு, 2009ம் ஆண்டு இதற்கான அனுமதி வழங்கி வரைவுத் திட்டத்தையும் கோரியிருந்தது. இதற்காக 350 கோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின் அந்தத் திட்டம் கிடப்பில் கிடந்தது. இப்போது மீண்டும் அத்திட்டத்திற்கு அரசு உயிர் கொடுத்திருக்கின்றது.

இத்திட்டத்திற்கு மகாராஷ்ட்ரா அரசு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு முதல் காரணம் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்றால், பக்கத்து மாநிலமான குஜராத்தின் மோடி அரசு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை செய்ய ஏற்பாடு செய்தது மற்றொரு காரணம் ஆகும்.

உலகத்திலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை மோடி தலைமையிலான பிஜேபி அரசு நிறுவும் போது, மகாராஷ்ட்ரா காங்கிரஸ் அரசு சும்மா இருக்க முடியுமா?

ஏற்கனவே 94 அடி உயரத்தில் சிவாஜி சிலை அமைக்க அந்த அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது அதன் உயரத்தை அதை விட அதிகமாக்க முடிவு செய்துள்ளது.

படேல் சிலைக்கு குஜராத் அரசு 2063 கோடி ரூபாய் செலவு செய்யத் தீர்மானித்துள்ளது. மகாராஷ்ட்ரா அரசு சிவாஜி சிலைக்குத் தொகை எதையும் நிர்ணயிக்காவிட்டாலும் மோடிக்குப் போட்டியாக அதற்கு இணையான தொகையை ஒதுக்கத் தயாராக உள்ளது. எது எப்படியோ? வீணும் விரயமும் ஆகப் போவது பொதுமக்களின் வரிப்பணமும் பொது நிலமும் தான்.

நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் நகரங்களில் கண்மூடித்தனமாக சிலைகளை நிறுவியுள்ளனர். சாலைகளின் சந்திப்புகள், போக்குவரத்துப் பகுதிகள், நடைபாதைகள் அத்தனை இடங்களிலும் மக்களின் பாதுகாப்புக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தச் சிலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

கடந்த ஜனவரி, 2013ல் போக்குவரத்தைப் பாதிக்கின்ற வகையில் இனியும் நினைவுச் சின்னங்களை அமைக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கின்றது.

இவ்வாறு இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம் தெரிவிக்கின்றது.

மேலே துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி விவசாயிகள் தங்கள் கடன்களை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு சாகின்றார்கள். அவர்களுடைய கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் மராட்டிய அரசு கற்சிலைகளிலும் நினைவுச் சின்னங்களிலும் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டவே அந்த மேற்கோளைக் குறிப்பிட்டிருக்கிறோம்.

மராட்டியத்தில் இந்த அவல நிலை என்றால் தமிழகத்தின் நிலை என்ன?

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னி குவிக்கின் செயலைப் பாராட்டி நினைவு கூறும் வகையில், கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தை, தேனி மாவட்டம் லோயர் கேம்பில் 1.25 கோடியில் தமிழக அரசு கட்டியுள்ளது. இதை 2013ம் வருடம் ஜனவரி 15ம் தேதி பென்னி குவிக்கின் பிறந்த நாள் அன்று தமிழக முதல்வர் ஜெயலிலதா திறந்து வைத்தார்.

“அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அணிவித்துள்ளார்.

மார்ஷல் நேசமணிக்கு 49 லட்ச ரூபாய் செலவில் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 27.02.2014 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பென்னி குவிக், நேசமணி, தமிழ்த்தாய் (?) ஆகியோருக்கு அரசாங்கத்தின் பொதுப் பணமும், தேவர் சிலைக்கு தனியார் பணமும் வாரியிறைக்கப்படுகின்றது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இருந்த போது சிலைகள் அமைப்பதற்காக 1400 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் சுருட்டப்பட்டது என்ற விபரத்தை லோக் ஆயுக்தா கடந்த மே, 20, 2013 அன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தன் தலைவர் கன்ஷிராமுக்கும், தனக்கும், தனது கட்சியின் சின்னமான யானைக்கும் சிலை வைத்து பொருளாதாரத்தைச் சீரழித்ததில் மாயாவதிக்குப் பெரும் பங்குண்டு.

இந்தியாவில் அன்றாடம் எத்தனையோ பேர் தங்கள் குடும்பம், குழந்தை குட்டிகளுடன் தற்கொலை செய்து தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக விவசாயிகள் கடன்களுடன் சேர்த்து வட்டியும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களுக்குக் கடனையும் வட்டியையும் தள்ளுபடி செய்யலாம்.

வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏராளமான குடும்பங்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அல்லலுறுகின்றனர். இந்த மக்களுக்கு இந்தப் பொருளாதாரத்தைச் செலவு செய்தால் அவர்களது வறுமை தீரும்; உள்ளங்கள் வாழ்த்தும்.

படிக்க வாய்ப்பிருந்தும் வசதியில்லாமல், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் பலர் இருக்கின்றர். அவர்களுக்கு உதவி செய்து படிக்க வைக்கலாம்.

வீடில்லாமல் வானமே கூரையாய் வீதிகளில் கிடக்கும் ஏழைகளுக்கு வீடு வழங்கலாம்.

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டலாம்.

கணவனை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வுக்காக உதவலாம்.

இப்படி எத்தனையோ வழிகளில் பணத்தைச் செலவு செய்யவேண்டிய தேவை இருக்கும் போது சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைக்கின்றனர்.

இந்தியாவில் ஏராளமான கிராமங்கள் இன்றளவும் நகரங்களுடன் இணைக்கப்படாமல் துண்டிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் அங்கு சாலை வசதி, பாலங்கள் ஏற்படுத்தாதது தான். இதனால் அவர்கள் ஆறுகளில் ஒரு கரையில் இறங்கி, மறு கரைக்கு வந்து, பிறகு நகரத்தை அடையவேண்டிய நிலை. இவ்வாறு கடக்கும் போது திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர்.

இருக்கின்ற சாலைகளும் பழுது பார்க்கப்படாமல் குண்டும் குழியுமாய் கிடக்கின்றன. இதனால் வாகனங்களின் இரும்புப் பாகங்கள் தேய்கின்றனவோ இல்லையோ, மனிதர்களின் எலும்புப் பாகங்கள் தேய்மானம் ஆகின்றன. நாடு இப்படி ஒரு கேடுகெட்ட நிலையில் இருக்கும் போது தான் சிலைகளுக்குச் செலவு செய்யும் அநியாயம் நடக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு எந்த நெறியும் இந்த சிலை கலாச்சாரத்தைக் கண்டிக்கவில்லை.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா? நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா? நீங்கள் பிடிக்கும் போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! (என்று ஹூத் நபி கூறினார்)

அல்குர்ஆன் 26:128-131

அனாச்சாரமாக, அநியாயமாக, ஆடம்பரமாக எழுப்புகின்ற இந்த நினைவுச் சின்னங்களை திருக்குர்ஆன் மட்டுமே வன்மையாகக் கண்டிக்கிறது.

பொருளாதாரத்தை உரிய வழியில் செலவு செய்வதன் மூலம் மக்களை தற்கொலைச் சாவிலிருந்து காப்பதுடன், வறுமையிலிருந்தும் அவர்களைக் காக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இஸ்லாம் மட்டும் தான்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                  தொடர்: 8

பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலா என்ற நூலில் எழுதியிருந்ததைக் கடந்த இதழில் கண்டோம்.

ஹாபிழ் தஹபீ அவர்களின் பிரம்மாண்டமான, பிரமாதமான இந்தக் குறிப்பு, முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான இப்னு தாஷிபீன் அவர்கள் சென்ற நேரிய பாதையை மிகத் தெளிவாக விளக்குகின்ற வரலாற்றுப் பதிவாகும்.

இறையியல், தத்துவவியல் மற்றும் சாபத்திற்கும் கோபத்திற்கும் இலக்கான சூபிஸக் கோட்பாடு போன்றவை எங்கிருந்து வந்தாலும் அந்த பித்அத் நூற்களை ஒழித்துக் கட்டுவதை அந்தத் தலைவர் தனது உயர்ந்த லட்சியமாகக் கொண்டிருந்தார்.

அந்த லட்சியவாதிக்கு எதிராக பித்அத்வாதிகள் ஓர் அவதூறைப் பரப்பினர்.

“எரிக்கப்பட்ட இஹ்யா உலூமித்தீன், இன்னும் இதுபோன்ற நூற்கள் அவரது ஆட்சிக்கு சங்குகளாகவும் சாவுமணிகளாகவும் இருந்தன. அந்நூல்களின் பக்கங்களைப் புரட்டுவோர் அவரது ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்யப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமும் அபாயமும் தான் அவரை அந்நூல்களை எண்ணை ஊற்றி எரிக்கத் தூண்டியது”

இதுதான் இப்னு தாஷிபீன் அவர்களுக்கு எதிராக சூபிஸ ஆதரவாளர்கள் பரப்பும் அவதூறும் அபத்தமும் ஆகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இது அறவே உண்மை கிடையாது. உண்மையில், எந்த வழியிலாவது தங்கள் ஆட்சியை, அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியவர்கள் இந்த அபாயகரமான நூற்களைத் தான் தங்கள் ஆட்சியின் ஆதாரத் தளங்களாகக் கொண்டிருந்தனர். கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.

அசத்தியவாதிகளின் ஆதாரத் தளங்கள்

“ஆட்சியைத் தக்க வைக்க விரும்பிய ஆட்சியாளர்கள் இந்த அசத்தியப் பாதைகளையும் அவை அடங்கிய நூற்களையும் தக்க வைக்க வேண்டும் என்று விரும்பினர். காரணம் இஹ்யா போன்ற இந்த நூற்களில் இடம்பெற்றுள்ள பித்அத்கள், குடிமக்களின் கவனத்தைத் திருப்பி, ஆட்சியாளர்களின் அநியாயங்கள், அராஜகங்களின் பக்கம் அவர்களது கவனம் வந்து விடாமல் தடுத்துவிட்டன” என்று எகிப்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் அல் மக்ரஸீ என்பவர் தெரிவிக்கின்றார்.

இந்த பித்அத்துகளை ஆதாரத்தளங்களாகக் கொண்டு ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் தான் ராபிளிய்யா, ஃபாதிமிய்யா, பஹாவிய்யா போன்ற வழிகெட்ட கூட்டத்தினர்.

அதுபோன்ற ஒரு கடுகளவு அவசியமோ நிர்ப்பந்தமோ அமீருல் முஃமினீன் இப்னு தாஷிபீன் அவர்களுக்கு இருந்ததில்லை. அரவது ஒரேயொரு குறிக்கோள், பித்அத்தைத் தாங்கி நிற்கின்ற இந்த ஏடுகளை, குறிப்பாக இந்த இஹ்யாவைக் கொளுத்துவது தான். இந்தத் தூய நோக்கத்தைக் களங்கப்படுத்துவதற்கும் கறைப்படுத்துவதற்கும் தான் இதற்கு அரசியல் சாயம் பூசுகின்றனர். இது அப்பட்டமான தில்லுமுல்லாகும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் இந்த எதிரிகள் இறக்கை கட்டிப் பறக்கவிட்ட மற்றொரு பொய், “இப்னு தாஷிபீனை ஆட்சியாளராகக் கொண்ட முராபிதீன்களுக்கு எதிராக கஸ்ஸாலி கையேந்தி துஆச் செய்தார். அதனால் தான் அவரது ஆட்சி கவிழ்ந்து போனது” என்ற செய்தி.

இது பித்அத்வாதிகள் பரப்புகின்ற பித்தலாட்டமான செய்தியாகும். இதுபோன்ற கட்டங்களில் ஏகத்துவவாதிகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் இடுகின்ற கட்டளை இதுதான்.

நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (அல்குர்ஆன் 16:90)

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 7:28)

கஸ்ஸாலியின் இஹ்யாவில் கட்டுக்கட்டாகக் கொட்டிக் கிடப்பது என்ன? வெட்கக்கேடான, வெறுக்கத்தக்க தீமைகள். நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் இட்டுக்கட்டிக் கூறியிருக்கும் பொய்கள்.

இந்தப் பொய்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக ஓர் இறை நம்பிக்கையாளன் நீதியை நிலைநாட்டும் வகையில் பொங்கி எழவேண்டும். போர்க்குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்த இப்னு தாஷிபீன் மீது அவிழ்த்து விடப்படும் அவதூறுகளைக் களைய வேண்டும்.

ஸ்பெயினில் எரிக்கப்பட்ட இஹ்யா பிரதிகள்

அல் ஃபிக்ருஸ் ஸாமி என்ற நூலில் இடம்பெறும் ஒரு செய்தியின் அடிக்குறிப்பு இதோ:

இப்னு தாஷிபீன் அவர்கள் தமது தந்தையாரைப் போன்று முழுக்க முழுக்க மார்க்க அறிஞர்களின் ஆலோசனையின்படியும் அறிவுரைப்படியும் நடந்தார். சட்டப் பிரச்சனை அனைத்தையும் இந்த ஆலிம்களிடமே அனுப்பி வைத்தார். அந்த ஆலிம்கள் இஹ்யா உலூமித்தீனைக் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்த மாத்திரத்தில் தனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஹ்யாவின் ஒரு பிரதி கூட எஞ்சிவிடாமல் எரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

கண்ணில் பட்ட அத்தனை பிரதிகளையும் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் பரவிக்கிடந்த அத்தனை பிரதிகளும் குர்துபா பள்ளியின் பெருவளாகத்தில் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அதன் பின்னர் அம்பாரமாய் குவிந்து கிடந்த அந்தப் புத்தகக் குவியலின் மீது எண்ணெய் ஊற்றப்பட்டு, எரியூட்டப்பட்டது.

இதுபோன்று மொராக்காவில் உள்ள மராகிஷ் நகரத்தில் திரட்டப்பட்ட இஹ்யா பிரதிகளும் கொளுத்தப்பட்டன. குர்துபா பள்ளிவாசலில் தொடங்கிய கொளுத்தும் படலம் ஒன்றன்பின் ஒன்றாக அவரது ஆட்சிக்குக் கீழிருந்த அனைத்துப் பட்டணங்கள் முதல் பட்டிதொட்டி வரை தொற்றித் தொடர்ந்தது. இஹ்யாவின் பிரதிகள் பற்றி எரிந்தது.

இவ்வாறு அல்ஃபிக்ருஸ் ஸாமி என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

காழி (நீதிபதி) இயாழ் அவர்கள் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி வினோதமான, வித்தியாசமான கருத்தோட்டங்களையும் கண்ணோட்டங்களையும் கொண்டவர். நிறைய நூற்களை எழுதியவர். சூபிஸ வழியில் வரம்பு கடந்து சென்றவர்.

சூபிஸ சிந்தனைக்கு வரிந்து கட்டிக் கொண்டு, காட்டுத்தனமாக வக்காலத்து வாங்குபவர். இந்த அசத்தியக் கொள்கையை நிலைநாட்ட முழுநேர அழைப்பாளராகச் செயல்பட்டவர். இந்தக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக பிரபலமான ஆக்கங்களை இயற்றியிருக்கின்றார். அந்த ஆக்கங்களில் வழிகேடுகளை வாரியிறைத்திருக்கின்றார். இதனால் சமுதாய மக்களின் சிந்தனைகள் பாழாகி விட்டன. அவரது அந்தரங்கத்தை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மார்க்க அறிஞர்கள் அவரது நூல்களை எரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். அந்தத் தீர்ப்பை இப்னு தாஷிபீன் அப்படியே செயல்படுத்தினார். இஹ்யாவின் பக்கம் நெருங்கக்கூடாது என்று மக்களுக்குக் கட்டளையிட்டார். மக்கள் அக்கட்டளையை ஏற்று அப்படியே செயல்பட்டனர்.

இவ்வாறு அபூ அலீ அஸ்ஸதஃபீ தமது முஃஜமில் தெரிவிப்பதாக ஹாபிழ் தஹபீ அவர்கள், ஸியரு அஃலாமின் நுபலா நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

மாணவர்களின் விழிப்புணர்வு

மார்க்கத்தைத் தூய வடிவில் கற்கின்ற மாணவக் கண்மணிகள் இஹ்யாவைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று மிகக் கடுமையாக அதை விமர்சனம் செய்தனர்.

கஸ்ஸாலியின் அந்த நூல் – இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிர்ப்பித்தல்) அல்ல. மாறாக அது, இமாதத்து உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை மரணிக்கச் செய்தல்) ஆகும் என்று அந்த மாணர்வக்ள வர்ணித்தனர். கஸ்ஸாலிக்கு வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருந்த அக்கால அறிஞர் கபாப் போன்றோரிடம் மாணவர்களின் இந்த எதிர்ப்பலைகள் ஏவுகணைகளாகப் பாய்ந்து கொண்டிருந்தன.

இந்த வகையில் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாமிய மார்க்கத்தின் உயிர்மூச்சான ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கக் கிளம்பிய கோணல் கொள்கையையும் சமுதாயத்தைச் சூழ்ந்து முற்றுகையிட வந்த குருட்டுக் கூட்டத்தையும் அடையாளம் கண்டு அதன் கழுத்தைப் பிடித்து நெறிக்கின்ற கலையைத் தெரிந்த அந்த மாணவர்கள் போராளிகளாகப் புறப்பட்டு வந்தமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மாணவர்களின் இந்த ஏக்கம் இறையருளால் இனிதாகவே நிறைவேறியது. அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

எத்தனையோ முஸ்லிம்கள் தனியாகவும் அணியாகவும் இந்த வழுக்கல் பாறையான இஹ்யாவின் மூலம் வழுகி பாதாளத்தில் வீழ்ந்துவிட்டனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆப்பிரிக்கா, ஸ்பெயின், மொராக்கோ அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகள் அடங்கிய அல்மிஃயாருல் முஅர்ரப் என்ற நூல் குறிப்பிடுகின்றது.

மார்க்க மேதையின் மதிப்பீடு

அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் அல்வலீத் அத் தர்தூஷி என்ற மாலிக்கி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர், அப்துல்லாஹ் பின் அபுல் முளஃப்பர் என்பாருக்கு, கஸ்ஸாலியைப் பற்றி ஒரு பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் கஸ்ஸாலியைப் பற்றிய தனது மதிப்பீட்டைத் தெரிவித்திருந்தார். அந்த மதிப்பீட்டை இப்போது பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் முளஃப்பரே! நீங்கள் கஸ்ஸாலியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரையும் அவரது வார்த்தையையும் வைத்து அவரைக் கல்விமான்களில் ஒருவராக எண்ணினேன். அவரது சிறப்புகள் அவரைச் சீர்தூக்கி நிறுத்தின. அறிவு, விளக்கம், பயிற்சி ஆகியவை நீண்ட நாட்களாக அவரிடம் குடிகொண்டிருந்தன. அவரது ஆயுட்காலத்தின் பெரும்பங்கு இப்படியே கழிந்தது. பிறகு அகமிய ஞானம், அதன் உதயம் என்ற தடுமாற்றப் பாதையை நோக்கி அவர் பயணமானார். உள்ளத்து உதிப்புகள், மறைமுக ஞானங்கள் என்ற பெயரில் ஷைத்தானின் ஊசலாட்டத்திற்குள் அவர் நுழைந்தார். அந்த ஊசலாட்டங்களுக்கு தத்துவ சாயம் பூசினார்.

கஸ்ஸாலியின் தடுமாற்றம்

ஃபிக்ஹ் வல்லுனர்கள், கடவுள் கோட்பாட்டாளர்கள் பக்கமும் அவர் தாவிச் சென்றார். இப்படி தடுக்கி, தடுமாறி மார்க்கத்தை விட்டு முற்றிலும் விலகி வெளியே செல்ல முனைந்தார். பிறகு இஹ்யா என்ற நூலை எழுதத் துவங்கி அதில் பல்வேறு துறைகளையும் நிலைகளையும் பற்றிப் பேசினார். சூபிஸ சிந்தனைகளையும் அடையாளங்களையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார். அவருக்கு அந்தத் துறை பற்றி ஞானம் இல்லை. அதைப் பற்றிய விளக்கமும் இல்லை. இதனால் வீணாகப் போய்விட்டார். முஸ்லிம்களின் ஆலிம்கள் வழியிலும் அவர் சென்றபாடில்லை. துறவிகளின் துறையிலும் நின்றபாடில்லை.

பொய்களின் கருவூலம்

இஹ்யா என்ற அந்த நூலை நபி (ஸல்) அவர்கள் மீது புனைந்து சொல்கின்ற பொய்ச் செய்திகளின் கிட்டங்கியாகவும் கிடங்காகவும் ஆக்கினார். பூமியில் வெளிவந்த நூல்களில் பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமான பொய்களை அவிழ்த்து, அள்ளி விட்ட புத்தகம் ஒன்று இருக்குமானால் அது இஹ்யாவைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. அந்த அளவுக்குப் போலி ஹதீஸ்களின் புதைகுழியாக அந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

தத்துவக் கருத்துக்களின் பெயரில் அமைந்த கழிவுகளின் தளமாக, மன்சூர் ஹல்லாஜ் போன்ற அத்வைத அஞ்ஞானிகள் கக்கிய கருப்புச் சிந்தனைகளின் விஷக் கருவூலமாக அவரது இஹ்யா மாறியது.

பஸராவில் இக்வானுஸ் ஸஃபா – தூய்மை சகோதரர்கள் என்ற சூபிஸ சித்தாந்தப் பேர்வழிகள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் முளைத்திருந்தனர். அந்த மூடர்களின் முட்டாள்தனமான சிந்தனைகளைப் பயிரிடுகின்ற விளைநிலமாக இஹ்யா அமைந்திருந்தது.

இறைத்தூதரை இழிவுபடுத்துதல்

மூளை குழம்பிய இந்தக் கூட்டம், “நபித்துவம் என்பது அல்லாஹ் தன் அடியார்களில் யாரையேனும் தேர்வு செய்து தூதராக்குவதில்லை. மாறாக, அடியார்கள் நபித்துவத்தை, தூதுத்துவத்தைத் தேடிப் போவதன் மூலம் கிடைக்கும் பதவி’ என்ற குருட்டுக் கொள்கையைக் கொண்டவர்கள்.

இந்தக் குருட்டுக் கூட்டத்தின் கொள்கைப்படி, இறைத்தூதர்கள் எனப்படுவோர் சதாரண, சாமானிய மனிதனை விட எந்தவிதத்திலும் சிறந்தவர் அல்லர். அந்த சாமானிய மனிதன் என்றால் யார்?

அவர் நற்குணங்களைத் தன்னகத்தில் கொண்டவர். மனமென்னும் வாகனத்தின் மட்டரகமான சிந்தனைகளை அடக்கி ஆண்டவர். காட்டுத்தனமான ஆன்மாவின் ஆசையைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர். இப்படி இத்தனை குணங்கள் ஒருசேரப் பெற்ற, தன் ஆத்மாவை தன்வயப்படுத்திய இவர் தான் மக்களை அந்த நற்குணங்கள் மூலம் வழிநடத்துகின்றார். இவரை விட நபி ஒன்றும் பெரிய சிறப்பிற்குரியவர் இல்லை.

இவ்வாறு இந்த விஷமிகள் வாதிடுகின்றனர். இத்துடன் இவர்கள் நிற்கவில்லை. அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இறைத்தூதரை அனுப்பியதையும் மறுக்கின்றனர். அற்புதங்கள் எல்லாம் வெறும் தந்திரங்கள், தகிடுதத்தங்கள் என்றும் கூறுகின்றனர். இத்தகைய விஷமிகளின் சிந்தனையைத் தான் கஸ்ஸாலி தனது இஹ்யாவில் பிரதிபலிக்கின்றார்.

கழிவு நீரில் கழுவுபவர்

அல்லாஹ் இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தி விட்டான். தன்னுடைய ஆதாரங்களைத் தெளிவுபடுத்திவிட்டான். தக்க ஆதாரங்களைக் கொண்டு சாக்குப் போக்குகளைக் களைந்து விட்டான்.

ஏகத்துவ வழிகளைக் கொண்டும், தர்க்க வாதங்களைக் கொண்டு மார்க்கத்தைக் காப்பாற்ற முனைவோர், தூய ஆடைகளை சிறுநீர் கொண்டு துவைப்பவரைப் போல் ஆவர். கஸ்ஸாலியின் போக்கு இதுபோன்று தான் அமைந்துள்ளது.

கஸ்ஸாலி தனது இஹ்யாவில் ஒருவிதமான உத்தியைக் கையாளுகின்றார். இஹ்யாவை வாசிக்கின்ற தனது வாசகனுக்கு, தனது எழுத்து நடையின் இடையில் திடுக்கிட வைக்கும் இடி முழக்கத்தையும் பரவசப்படுத்தும் மின்னல் வெளிச்சத்தையும் கொடுத்து அவனை சூபிஸப் பாதைக்கு ஆசை காட்டி, ஆர்வமூட்டி லாவகமாக அழைத்துச் செல்கின்றார்.

இல்முல் முஆமலா – இல்முல் முகாஷஃபா

இஹ்யாவைப் படிப்பவர்கள் அவரது வசன நடையில், வார்த்தை ஜாலத்தில் வசமானதும், “இதுவரை நீ கண்டது இல்முல் முஆமலா – அதாவது குண நலன்கள், கொடுக்கல் வாங்கல் பற்றி வெளிப்படையான ஞானம் ஆகும். இதற்கப்பால் தான் நீ பார்க்கப் போவது இல்முல் முகாஷஃபா – அதாவது அகமிய, அந்தரங்க ஞானம் ஆகும்.

அதை ஏடுகளின் வரிகளில் எழுத முடியாது. இதயங்களிலிருந்து பெறுகின்ற ரகசிய ஞானம் ஆகும். அந்த ஞானத்தைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகப் பயிற்சி, பக்குவத்தில் கிடைக்கின்ற ஞானமாகும்.

இதற்கு எதிரான மாற்றுச் சிந்தனையும் மார்க்கச் சிந்தனையும் கொண்டவர்கள், இருப்பதை விட்டும் விலகி, இல்லாத கற்பனையில் தங்கள் உள்ளங்களை மாட்டியவர்கள் ஆவர். இம்மாதிரியான கல்வி ஞானம் உள்ளங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இப்படியெல்லாம் கஸ்ஸாலி கதையளக்கின்றார்.

இஹ்யா –  ஆட்கொல்லி நூல்

அபுல் முளஃப்பரே! இஹ்யாவை தீயிட்டுக் கொளுத்துவது பற்றி உங்களது ஆதங்கத்தை கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

இந்நூலின் விபரீதத்தை இதோ நான் உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் மக்களுக்கு மத்தியில் இது பரவிவிடும்.

இந்த நூல் மக்களை ஆட்கொண்டு, அவர்களைக் கொல்லக்கூடிய ஆலகால விஷமாகும். இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாது. இந்நூலில் கஸ்ஸாலி சொல்லியிருக்கின்ற செய்திகளை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்றும், வழிதவறி விடுவார்கள் என்றும் தூய கொள்கைவாதிகள் அத்தனை பேருக்கும் அச்சம் உள்ளது.

கொளுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள்

நபித்தோழர்கள் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டும் பணி நடைபெற்றது. அப்போது சரியான குர்ஆன் பிரதியை வைத்துக் கொண்டு, கூடுதல் குறைவு உள்ள குர்ஆன் பிரதிகளைக் கொளுத்திவிட்டனர்.

அவ்வாறு கொளுத்தவில்லை என்றால் அதன் விபரீதம் என்னவாகியிருக்கும்? மக்களிடத்தில் அந்தப் பிரதிகள் பரவி, அவற்றில் உள்ளவாறு மக்கள் மனனம் செய்திருப்பார்கள். இதனால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் முட்டி மோதி அழியும் அபாயமும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கும். இதை முன்மாதிரியாகக் கொண்டு தான் இஹ்யாவின் பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நானே இஹ்யாவுக்கு எதிராக தனித்துக் களமிறங்க முடிவு செய்து, அவர் செய்திருக்கின்ற பிசகுகளையும் பித்தலாட்டங்களையும் வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு எழுத்தாக அடையாளம் காட்ட உள்ளேன்.

இஹ்யாவுக்கு மாற்று நூல்கள்

இஹ்யா என்ற நூல் அல்லாமல் எத்தனையோ சரியான கொள்கையுடைய நூல்கள் இருக்கின்றன. அவை நம்முடைய கொள்கைச் சகோதரர்களுக்கும் நல்லவர்களுக்கும் போதுமானவையாகும். அவர்களுக்குத் தேவைப்படுகின்ற தேவைகளை அவை தீர்த்து வைத்துவிடும்.

இந்த நூலின் மீதுள்ள ஆசையில் விழுபவர்கள் அப்பாவியான நல்ல மனிதர்கள் ஆவர். அவர்கள் அறிவுப்பூர்வமாகவும் மார்க்க ஆதாரப்பூர்வமாகவும் இந்நூலைச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அல்லாஹ் பற்றிய கடவுள் கொள்கையையும் அவனது தூய பண்புகளின் தன்மைகள் பற்றியும் அவர்கள் அறியாதவர்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தைக் குத்திக் குதறுவதற்கும், அதன் அடிப்படைகளைப் பலவீனப்படுத்துவதற்கும், படைத்தவனுக்குரிய பண்புகளை மறுப்பதற்கும், அற்புதங்களைக் கொச்சைப்படுத்துவதற்கும் புறப்பட்ட மனித ஷைத்தான்கள் பற்றி இவர்கள் கொஞ்சம் கூட அனுபவப்பட்டிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நோக்கி வருகின்ற ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தி, அவனது மார்க்கத்தைக் காத்து நிற்கின்ற கலைகள் தொடர்பான சரியான ஞானமில்லாதவர்கள், தனக்கு விளக்கமில்லாத ஒன்றைப் பின்பற்றுவது ஒருபோதும் அவருக்குத் தகுமானதல்ல! அறவே அதைப் பின்பற்றுவதற்கு அனுமதியுமில்லை. விளக்கமில்லாமல் தனக்கு ஆதரவானதைப் பின்பற்றுவதும் எதிரானதை இகழ்வதும் சரியல்ல என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் அல்வலீத் அத் தர்தூஷி அவர்கள் எழுதிய பதில் கடிதம் அல்மிஃயாருல் முஅர்ரப் என்ற நூலில் இடம்பெறுகின்றது.

அல்லாஹ் இந்த இமாம் அவர்களுக்கு அருள்புரிவானாக! கஸ்ஸாலியைப் பற்றியும் அவரது இஹ்யாவைப் பற்றியும் ஓர் அருமையான தோற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

இஹ்யா என்ற நூலின் மூலத்தையும், அது முளைக்கும் இடத்தையும் விலாவாரியாக எடுத்துக்காட்டி விளாசித் தள்ளியிருக்கின்றார்கள். இஹ்யாவுக்கு மாற்று நூலைக் காண்பதற்கும் அறிவுறுத்துகின்றார்கள்.

இஹ்யாவைப் புகழ்வதோ அல்லது அதற்கு முட்டுக் கொடுக்கவோ முனைபவர், சரியான இஸ்லாமிய கோட்பாட்டைப் புரியாதவர். ஹதீஸ் நூற்களுடன் தொடர்பு இல்லாதவர் அல்லது இஹ்யாவின் புகழை மட்டும் செவியுற்றுவிட்டு, அதில் உள்ளடங்கியிருக்கும் சோதனைகளைக் கொஞ்சம் கூடப் படிக்காமல் அதை ஒரு பூதாகரமான ஆதாரமாக நம்புபவர்கள் என்பது தான் அதன் அர்த்தம்.

தன்னுடைய காலத்திலும், தனக்குப் பின்னாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இஹ்யாவினால் ஒரு பேராபத்து இருக்கின்றது. அதனால் அதை எரிக்க வேண்டும் என்பதில் இமாம் தர்தூஷி அவர்கள் தெளிவாக இருந்திருக்கின்றார்கள்.

தர்தூஷியின் இந்த மதிப்பீட்டை விளக்க வேண்டும் என்றால் அதற்குப் பல பாகங்கள் தேவைப்படும். அல்லாஹ்வின் உதவி கொண்டு நாம் உடனடியாக இங்கு பின்னால் கொண்டு வரவிருக்கும் ஒருசில உதாரணங்கள் வாயிலாக இது நன்கு புலப்படும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில் அவர்கள் சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்…

அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.

நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.

மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது

என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது. தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.

உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால்  வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை  நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

இமாம் அவ்ஸாயீ

“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக்கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள். முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகம் இல்லாதவர்களிடமிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

இமாம் கதீபுல் பஃதாதீ

அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத ஒரு செய்தியை நேர்மை மிகுந்த நம்பகமானவர் அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்ஃபகீஹ் வல்முதஃபக்கிஹ் (பாகம் 1, பக்கம் 354)

அறிஞர் அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

ஒரு ஹதீஸ் எந்த விளக்கமும் தரமுடியாத வகையில் குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அது நிராகரிக்கப்படும். இவ்வாறு ஈசா பின் அப்பான் கூறியுள்ளார். எந்தக் குறைகளால் ஹதீஸ் நிராகரிக்கப்படுமோ அவற்றில் இதுவும் ஒன்று என்பதே நமது அறிஞர்களின் கருத்தாகும்.

நூல்: அல்ஃபுசூலு ஃபில் உசூல், (பாகம் 3, பக்கம் 113)

இமாம் இப்னு ஜமாஆ

சில செய்திகள் சரியானது என்று உறுதியாக அறிந்துகொள்ளப்படும். அல்லாஹ்வின் செய்தியும் அவனுடைய தூதரின் செய்தியும் இதற்கு உதாரணமாகும். சில செய்திகள் பொய்யானது என்று உறுதியாக அறியப்படும். அல்லாஹ்வின் செய்திக்கு முரணாக இருக்கின்ற செய்தி இதற்கு உதாரணமாகும்.

நூல்: அல்மன்ஹலுர் ரவீ, (பாகம் 1 பக்கம் 31)

இமாம் அபூ இஸ்ஹாக் ஷீராஸி

ஒரு ஹதீஸ் எந்தக் காரணங்களால் நிராகரிக்கப்படும் என்பதைப் பற்றிய பாடம்.

ஒரு நம்பகமானவர் ஒரு ஹதீஸை அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்லம்உ ஃபீ உசூலில் பிக்ஹ், (பாகம் 1, பக்கம் 82)

அறிஞர் ஸர்கஸீ

ஹதீஸ் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக ஆகாது. செயல்படுத்துவதற்கும் அது ஆதாரமாக அமையாது.

நூல்: உசூலுஸ் ஸர்கஸீ, (பாகம் 1, பக்கம் 364)

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள அறிஞர்கள் சுன்னத் வல்ஜமாத்தினராலும் அறிவிப்பாளர்களை எடைபோடும் இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ போன்றவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இஸ்லாமியப் பணியை செய்து சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள். இவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் இவர்களின் மதிப்பை உணருவார்கள்.

இவர்கள் தான், ஒரு ஹதீஸ் குர்ஆனுடன் முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று நாம் கூறும் விதியை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இங்கு நாம் குறிப்பிட்ட அறிஞர்கள் அல்லாமல் இன்னும் பல அறிஞர்களும் இவ்விதியைக் கூறியுள்ளனர். இவ்விதியின் அடிப்படையில் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்த சில ஹதீஸ்களையும் மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இஸ்மாயீலீ

புகாரியில் 3350வது எண்ணில் பதிவாகியுள்ள செய்தியை அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதால் இந்த அறிஞர் குறை கண்டுள்ளார்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8 பக்கம் 500

அபூபக்ர் இப்னுல் அரபி

புகாரி 4670வது செய்தியாகப் பதிவாகியுள்ள ஹதீஸை அதன் கருத்து தவறாக இருக்கின்றது என்ற காரணத்தால்

இமாம் அபூபக்ர் இப்னுல் அரபி

இமாம் அபூபக்ர் அல்பாகில்லானி

இமாமுல் ஹரமைன் அல்ஜ‚வைனி

இமாம் அபூ ஜஃபர் தாவுதீ

கஸ்ஸாலி

ஆகியோர் மறுத்துள்ளனர்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8, பக்கம் 338

ஸஹாபாக்களில் உமர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூ அய்யூப் அல்அன்சாரீ ஆகியோர் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இப்னுல் அரபி

அபூபக்ர் இஸ்மாயீலீ

அபூபக்ர் பாகிலானீ

புகாரி நூலுக்கு விரிரை எழுதிய தாவூதீ

கஸ்ஸாலி

இமாமுல் ஹரமைன்

யஹ்யா பின் மயீன்

இப்னு அப்தில் பர்

அவ்ஸாயீ

அபூ இஸ்ஹாக் ஷீராஸி

கதீபுல் பஃதாதீ

இப்னு ஜமாஆ

சர்ஹஸீ

அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

குர்துபி

மற்றும் இன்னும் பல அறிஞர்கள் இந்த விதியின் அடிப்படையில் குர்ஆனுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் யாரும் செல்லாத தனி பாதையில் சென்று நபிமொழிகளை மறுக்கின்றது என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில உதாரணங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். உண்மையை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இவை போதிய சான்றுகளாகும்.

இத்தனை அறிஞர்களையும் நமது நிலைபாட்டிற்கு ஆதாரமாக நாம் குறிப்பிடவில்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். அறிஞர்களின் கூற்றுக்கள் ஒருக்காலும் மார்க்க ஆதாரமாக இருக்க முடியாது. குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகும்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் மார்க்க விஷங்களில் தவறே செய்யாதவர்கள் என்பதும் நம்முடைய வாதமில்லை. இவர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான வழிகேடான கருத்துக்களைக் கூட கூறியிருக்கலாம். இதையும் நாம் மறுக்கமாட்டோம்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று நமது ஜமாஅத் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் பலரும் கூறியுள்ளார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அறிஞர்களை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

—————————————————————————————————————————————————————-

பைத்தியத்திற்கு வைத்தியமில்லை

ஹதீஸ் கலையில், இயற்கைக்கு மாற்றமாக ஒரு ஹதீஸ் அமைந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. காரணம் நபி (ஸல்) அவர்கள் இயற்கைக்கு மாற்றமாக எதையும் பேச மாட்டார்கள். உதாரணத்திற்கு, சூரியன் மேற்கே உதிக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் இயற்கைக்கு மாற்றமாகப் பேச மாட்டார்கள். எனவே இதுபோன்ற கருத்தில் அமைந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

அதே போன்று குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் முரணாக அமைந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும். (இதைப்பற்றி கூடுதல் விளக்கங்களை முந்தைய கட்டுரையில் காண்க!)

இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாட்டை அமைத்துள்ளது.

இப்ராஹீம் நபியின் நெருப்புக் குண்டத்தை பல்லி ஊதியது என்ற கருத்தில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முதலாவது குர்ஆனுடன் மோதுகின்றது. இரண்டாவது, இயற்கைக்கு மாறானது என்பதைப் பல்வேறு சொற் பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் நமது ஜமாஅத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் மறுக்கின்ற ஜாக் அமைப்பு பல்லியை பகுத்தறிவாளர் இடத்தில் நிறுத்தி, பல்லி ஹதீஸைச் சரியென்று வாதிக்கின்றது. அவ்வாறு நிலைநிறுத்துவதற்காக முன்னுக்குப் பின் முரணாக உளறித் தள்ளியது. அதை அடையாளம் காட்டி, அம்பலப்படுத்தும் வகையில் ஏகத்துவம் இதழில், “பல்லிக்குப் பகுத்தறிவு; பைத்தியத்தில் ஜாக்” என்ற தலைப்பில் விளக்கியிருந்தோம்.

இதற்கு மறுப்பாக, “பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள்” என்ற தலைப்பில் ஒரு மழுப்பலை வெளியிட்டது. இந்த மழுப்பல் ஜாக்கின் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் பறைசாற்றியது. பைத்தியப் பட்டத்தை நம்மீது திருப்பிவிடும் நோக்கத்திலும், பதிலடி என்ற பெயரிலும் “பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள்’ என்று அவர்கள் அளித்திருக்கும் தலைப்பின் மூலம் தங்கள் பைத்தியத்தைப் பக்காவாக உறுதி செய்து கொண்டார்கள்.

ஒரு பெண் மீது காதல் கொண்டுவிட்டால் அவனுக்கு அதை விட்டால் வேறெதுவும் தெரியாது. அது மட்டும் தான் உலகம் என்று ஆகிவிடுவான். சதாவும் அவளை மட்டும் நினைத்துக் கொண்டு அலைவான். அதனால் அவனைக் காதல் பைத்தியம் என்பார்கள். லைலா மீது காதல் கொண்டவன் பெயர் கூட மறைந்து போய் மஜ்னூன் – பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் மட்டுமே நிலைத்து, நீடித்துவிட்டது.

பெண் மீது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட பொருள் மீது தணியாத விருப்பம் கொண்டவருக்கும் இதே பெயர்கள் சூட்டப்படுவதுண்டு. கார் பைத்தியம், பைக் பைத்தியம், கிரிக்கெட் பைத்தியம், டி.வி. பைத்தியம் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு சொல்வதற்குக் காரணம் அந்தப் பொருட்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் தீவிரமான பிரியம்.

பல்லி ஹதீஸ் குர்ஆனுக்கு எதிராக இருக்கின்றது என்ற காரணத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த ஹதீஸை ஒதுக்கி வைக்கின்றது. வேண்டாம் என்று நிறுத்தி வைக்கின்ற இந்த முடிவை யாராவது பைத்தியம் என்று சொல்வார்களா?

ஒருவன் தன் மனைவியை வேண்டாம் என்று கூறி விவாகரத்துச் செய்கிறான் என்றால் இவனைப் போய் யாராவது மனைவி பைத்தியம் என்று சொல்வார்களா? பைத்தியக்காரன் கூட அப்படிச் சொல்ல மாட்டான்.

குர்ஆனுக்கு எதிராக இருந்தாலும் சரி! இயற்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! பல்லி ஹதீஸை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் ஜாக்கினர் தான். அதனால் பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள் இவர்கள் தான் என்று அடித்துச் சொல்லலாம்.

“பல்லிக்குப் பகுத்தறிவு, பைத்தியத்தில் ஜாக் என்று தலைப்பிட்டவருக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதற்கு இவர்கள் எழுதிய முதல் பாராவே காட்டிக் கொடுத்துவிடுகின்றது’

என்று அல்ஜன்னத்தின் கட்டுரையாளர் பெருமைப்பட்டுக் கொள்கின்றார். ஆனால் அல்ஜன்னத் கட்டுரையாளரோ, பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற தலைப்பிலேயே தங்களைப் பைத்தியம் என்று நிரூபித்துவிடுகின்றார்.

குர்ஆன், ஹதீஸ் நிராகரிப்பாளர்கள்

அல்ஜன்னத் கட்டுரையாளர் இந்தக் கட்டுரையைத் துவங்கும் போதே, “ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஹதீஸ் நிராகரிப்பாளர்’ என்று தனது முதல் வாதத்தைத் துவக்குகின்றார். அதாவது, நம்மை ஹதீஸ் நிராகரிப்பாளர் என்று சாடுகின்றார்.

இஸ்லாத்தில் உள்ள அத்தனை பிரிவினரும் ஏதாவது ஒரு ஹதீஸை மறுத்துக் கொண்டு தான் உள்ளனர். ஹதீஸை நிராகரிக்காதவர் எவரும் இல்லை என்னும் அளவுக்கு ஹதீஸ் நிராகரிப்பு நடந்துள்ளது. நேர்வழி பெற்றவர்கள் என்ற பட்டியலிலும் படித்தரத்திலும் உள்ளவர்கள் “ஷாத்’ என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இந்த வகை ஹதீஸின் அறிவிப்பாளர், இவரை விட வலுவான அறிவிப்புக்கு மாற்றமாக அறிவிக்கின்றார். அதனால் இந்த ஹதீஸை நிராகரித்துத் தான் ஆக வேண்டும். குர்ஆன், ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்று இவர்கள் குத்துகின்ற முத்திரை மேற்கண்ட நல்லோர்களையும் சேர்த்துத் தான் எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு நாம் சொல்லும் போது, இதுவெல்லாம் ஹதீஸ் நிராகரிப்பு ஆகாது என்று இவர்கள் வாதிடுவார்கள். இரண்டு செய்திகளில் ஒன்றை விட மற்றொன்று வலுவாக இருக்கும் போது, வலுவானதை ஏற்று வலுவில் குறைந்ததை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது எப்படி நிராகரிப்பாகும்? என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள்.

குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றுடன் மோதும்போது, ஹதீஸை விட வலிமையான குர்ஆனைத் தான் எடுக்க வேண்டும்; குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோம். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தனிப்பட்ட நிலைப்பாடல்ல. நேர்வழிபெற்ற நல்லோர் அனைவரின் நிலைப்பாடாகும். இதை நாம் செய்யும் போது, கசப்பும் காழ்ப்பும் உள்ள இவர்கள் நிராகரிப்பு என்று வசைபாடுகின்றனர்.

ஒரு ஹதீஸைக் காப்பாற்றப் போகின்றோம் என்று கிளம்பிய இவர்கள், ஒட்டுமொத்த சமுதாயமும் நம்பியிருக்கின்ற குர்ஆனையே நிராகரிக்கின்றார்கள். பல்லியால் பைத்தியம் பிடித்த இவர்கள், பல்லியைக் கொல்கிறோம் என்ற பெயரில் குர்ஆன் வசனங்களை அடித்து, நொறுக்கி குர்ஆன் நிராகரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். பல்லி ஹதீஸை நியாயப்படுத்துவதற்காக எந்தெந்த வசனங்களுக்கு இவர்கள் எதிராகக் கிளம்பினார்கள் என்பதற்கான விரிவான விளக்கத்தை ஏகத்துவம் – ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2013 இதழ்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கொள்கைக் கோட்டை

இப்போது பல்லி பற்றிய ஹதீஸ் விஷயத்தில் மூத்த பிரச்சாரகர் இறக்கிவிடப் பட்டுள்ளார். இதற்கு காரணம் என்ன? ஹதீஸ் நிராகாரிப்பாளர் இந்த நிராகாரிப்புக் கொள்கையை நீங்களும் பிரச்சாரம் செய்தாக வேண்டும் என தனது மூத்த சகாக்களுக்குக் கொடுக்கும் நிர்பந்தமா? அல்லது உண்மையிலேயே மேலாண்மைத் தலைவருக்கும் ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறதா? அல்லாஹ்வே நன்கறிந்தவன். (அல்ஜன்னத்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது கொள்கைக் கோட்டையாகும். இந்தக் கோட்டையில் குடியிருப்பவர்களும் கூடியிருப்பவர்களும் ஒரு கொள்கையில் தான் இருக்கின்றார்கள். மூத்த தாயீக்களாக இருந்தாலும் இளைய தாயீக்களாக இருந்தாலும் ஒரு கொள்கையின்படி, ஒரே குடையின் கீழ் தான் உள்ளார்கள்.

நம் மீது எதிர்ப்புணர்வு இருந்தால் போதும்; இந்த ஒரு தகுதி உள்ளவர்கள் ஜாக்கில் அங்கம் வகிக்கலாம். அல்ஜன்னத்தில் எதையும் கிறுக்கலாம் என்று கொள்கையற்ற அமைப்பல்ல தவ்ஹீத் ஜமாஅத். அப்படிப்பட்ட இதழ் அல்ல ஏகத்துவம் இதழ்.

தவ்ஹீத் ஜமாஅத், தாயீக்களின் கொள்கையை மட்டும் பார்ப்பதில்லை. கூடவே தனிநபர் ஒழுக்கத்தையும், யோக்கியதையையும் சுண்டிப் பார்க்கின்ற இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

பிறன்மனை அபகரிப்பாளர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும், ஒழுக்கத்தில் வீழ்ச்சி கண்ட ஓட்டாண்டிகளுக்கும், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் ஒதுங்குமிடமாக இருக்காது. ஆனால் ஜாக்கிற்கு இத்தகையவர்களுடன் சர்வ சாதாரணமான சகவாசம் உண்டு. இதற்கு இணைப்புப் பாலமாக இருப்பது நம் மீதான வெறுப்பு.

ஒழுக்கத்தில் வீழ்ச்சி கண்ட ஓர் ஆசாமி, நம்மை விமர்சிக்கும் நோக்கில் பல்லி ராகம் பாடினார். அந்த ராகத்தில் ஜாக் சொக்கி, சுகம் கண்டது. அந்த ஆசாமி முன்னுக்குப் பின் முரணாக உளறியதற்கும் ஜாக் முட்டுக் கொடுத்து வந்தது. இதுமாதிரியான சந்தர்ப்பவாதக் கொள்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. இங்கு மூத்த தாயீ ஒரு கருத்திலும், இளைய தாயீ வேறொரு கருத்திலும் இல்லை. எல்லோரும் அல்லாஹ்வின் அருளால் ஒரே கருத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அதனால் இதுபோன்று சிண்டுமுடிகின்ற வேலையெல்லாம் இங்கு ஒருபோதும் எடுபடாது.

இந்த ஜமாஅத்தில் பிறை விஷயத்திலிருந்து பிற விஷயங்கள் வரை அனைவரும் ஒத்த கருத்தில் தான் இருக்கிறார்கள். பிறை விஷயத்தில் கமாலுத்தீன் மதனிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லும் ஆட்களெல்லாம் ஜாக்கில் பொறுப்பில் இருப்பது போன்ற ஒரு நிலை இங்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தான் லட்சணம்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்றைக் கூட நிராகரிக்கக்கூடாது என்று கூறும் தவ்ஹீத் கூட்டத்தைப் பார்த்து குர்ஆனையும் மறுக்கும் கூட்டம் என்று எழுதியிருப்பது இவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு போதுமானதாகும். ஸஹர் பாங்கை மறுப்பதாகவும் ஜாக் சகோதரர்கள் மீது பொய்யை புனைந்துள்ளார். ஆனால் ஜாக் மர்கஸ்கள் பலவற்றில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகிறது. அதுபோல் வசதி வாய்ப்புள்ள இடங்களில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுது கொண்டிருக்கின்றனர். (அல்ஜன்னத்)

இது கடைந்தெடுத்த பொய். இப்படி ஒரு பொய்யை பூதாகரமாக்கிக் காட்டுவதால் பொய் உண்மையாகிவிடாது.

கெட்டதும், நல்லதும் சமமாகாதுஎன்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)

நல்லதும் கெட்டதும் ஒருபோதும் சமமாகாது. அதுபோன்று பொய் எத்தனை தோற்றமெடுத்தாலும் அது பொய் தான். மெய்யாகி விடாது.

“தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகையை திடலில் தொழுகின்றார்களாம்; கடலில் போய் தொழச் சொல்லுங்கள்” என்று ஜாக் அமீர் கிண்டல் அடித்தது இன்னும் கேட்டவர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது. இதைப் பற்றி அல்ஜன்னத்தில் வெளியான கேள்வி பதிலைப் பாருங்கள்.

கேள்வி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளங்கடை பகுதியில் த.த.ஜமாஅத்தினர் திருநபி வழியில் திடல் தொழுகை என்று ஒரு விளம்பரம் செய்திருந்தனர். பெருநாள் அன்று திடல் தொழுகை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா? இது புதுமையான பெயராக உள்ளதே? விளக்கம் தரவும்.

பாத்திமா, பர்வின், ஆயிஷா (இளங்கடை)

ஆஷாத், முஸ்தபா, தாவூது (கோட்டார்)

பதில்: இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது. பர்ளு தொழுகை, சுன்னத் தொழுகை, ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுகின்ற பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள், ஜூம்ஆ தொழுகை, பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழைத் தொழுகை, வித்ருத் தொழுகை, லுஹாத் தொழுகை இப்படி பெயர்களில் தொழுகை உள்ளது. ஆனால் திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லை. இந்த பெயரில் ஒரு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்ப்படுத்தவும் இல்லை. இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர். இதுபோன்ற புதுமைப் பெயர்களை கூறி மக்களிடம் பிரபலமாக நினைத்து அப்படி செய்திருக்கலாம்.

பெருநாளன்று காலை நிறைவேற்றப்படும் பெருநாள் தொழுகையை அந்தந்த பகுதியிலுள்ள ஆண் பெண் எல்லோரும் ஒன்று கூடித் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ளதால் பள்ளிவாயில்களில் எல்லோரும் ஒன்று கூடி தொழுவது சாத்தியமற்றது என்ற காரணத்தினால் விசாலமான இடத்தில் பெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள். அதைப் பின்பற்றித்தான் இன்றும் முஸ்லிம்கள் விசாலமான இடங்களில் ஒன்று கூடி பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.

மக்கள் அதிகமாகக் கூடும்போது தொழும் எந்தத் தொழுகையாக இருந்தாலும் அதைத் திறந்த வெளியில் தொழலாம். இடம் சுத்தமாக இருந்தால் போதும்.

இது இவர்களது அல்ஜன்னத்தில் வந்த செய்தி. இதேபோன்று ஸஹர் பாங்கு தொடர்பாக இவர்கள் உதிர்த்த முத்துக்கள் (?) இதோ:

“தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப் படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்”

இவர்கள் ஹதீஸை எந்த அளவு மதிக்கின்றார்கள் என்ற லட்சணம் இப்போது புரிகின்றதா? ஜாக் மர்கஸ்களில் ஸஹர் பாங்கு நடைமுறையில் உள்ளதாக இந்தக் கட்டுரையாளர் ஜம்பம் பேசுகின்றார். ஒரு சில இடங்களில் அப்படி நடைமுறையில் இருந்தாலும் அதில் இவர்களது தலைமையின் பங்கு இருக்காது. அந்தக் கிளைகள் சுயமாக இதைச் செயல்படுத்தியதாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் ஸஹர் பாங்கு பற்றியும், பெருநாள் திடல் தொழுகை பற்றியும் தான் இவர்கள் இந்த வாங்கு வாங்குகின்றார்களே! இப்படி எள்ளி நகையாடுகின்றார்கள் என்றால் இவர்கள் எப்படி நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்?

ஹதீஸை மதிக்கின்றோம் என்று மார்தட்டுகின்ற இவர்களிடம் இன்னொரு கேள்வியும் கேட்கின்றோம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஸாலிமுடைய ஹதீஸை செயல்படுத்திக் காட்டுங்கள். வயதில் பெரியவர்களை தங்கள் மனைவிமார்களிடம் பால் குடிப்பதற்கு அனுமதியுங்கள். மானமாக இருந்தால் கறந்தாவது கொடுத்து ஹதீஸைச் செயல்படுத்துங்கள். அவ்வாறு இவர்கள் செய்வதில்லை. ஆனாலும் அந்த ஹதீஸை மறுக்கக்கூடாது என்று கூறுவார்கள். இதற்குக் காரணம் இதை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் கருத்தை என்ன விலை கொடுத்தாலும், எந்த நிலைக்குச் சென்றாலும் மறுக்க வேண்டும். இதைத் தவிர இவர்களிடம் வேறு நோக்கம் இல்லை.

ஸிஹ்ரும் ஒரு ஷிர்க் தான்

அடுத்து, ஹதீஸ் நிராகரிப்பாளர் என்று குறிப்பிடுவதின் மூலம் ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று இவர்களை சாடிவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார் கட்டுரையாளர். இவர் எத்தனை பெரிய அநியாயக்காரர் பாருங்கள். குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளபடி சூனியத்தை நம்புகிறோம். ஹதீஸ்களை தொகுத்த இமாம்களும் நமது நம்பிக்கையை கொண்டவர்கள்  என்பதும் இவர்களுக்கு தெரியும். மட்டுமின்றி ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களும் சூனியம் பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் சொல்வது போல்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நம்மைப் பார்த்து இவர்களின் தலைவர் முஷ்ரிக்குகள் என்று தீர்ப்பு வழங்குகிறார். அதை ஏற்றுக் கொண்ட இவர்களின் கூட்டத்தினர் பலர் ஜாக் சகோதரர்களை முஷ்ரிக்குகள் என்று கூறி ஜாக் பள்ளிவாசல் இமாம்களை பின்பற்றித் தொழுவதில்லை. இது உங்களின் இமாம், தவ்ஹீதுவாதிகளின் மீது சுமத்தும் படுபயங்கரமான அவதூறு இல்லையா? (அல்ஜன்னத்)

இஸ்லாத்தில் உள்ள எந்தவொரு சாராரும் ஏதாவது ஒரு ஹதீஸை மறுக்காமல் இருக்க முடியாது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தக் கண்ணோட்டத்தில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்ற இவர்களது வர்ணனையைச் சாடியிருந்தோம். இதைத் தான் ஒப்பாரி வைப்பதாக ஊளையிட்டிருக்கின்றார்.

நாம் சொல்வது போல் தான் இவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று வேறு குறிப்பிடுகின்றார். கமாலுத்தீன் மதனியும் நாமும் ஸிஹ்ர் விஷயத்தில் ஒத்தக் கருத்தில் தான் ஆரம்பத்தில் இருந்தோம். ஆனால் அது தவறு என்று தெரிந்ததும் மாறிக் கொண்டோம். எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 5:54)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன் 35:28)

இந்த வசனங்களின் அடிப்படையில் பழிப்பவர்களின் பழிச் சொல்லுக்கு அஞ்சாமல், படைப்பினங்களுக்கு அஞ்சாமல் அல்லாஹ்வை மட்டும் அஞ்சியவர்களாக, பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறிக் கொண்டோம். உங்களைப் போன்று பிடிவாதமாக, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற முரட்டு வாதம் செய்ய மாட்டோம். வறட்டுக் கவுரவம் பார்க்க மாட்டோம்.

நம்மைப் பார்த்து ஒப்பாரி வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், “ஸிஹ்ர் ஒரு ஷிர்க்; அதை நம்பும் ஜாக்கினரை இவர்கள் பின்பற்றித் தொழுவதில்லை’ என்று நம்மிடம் ஒப்பாரி வைக்கின்றார் அல்ஜன்னத்தின் இந்தக் கட்டுரையாளர்.

எவ்வித சாதனங்களும் இன்றி, கருவிகளும் இன்றி ஒருவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. வேறு யாருக்கும் கிடையாது என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நம்புகிறோம்.

அப்படி ஒரு விளைவை உண்டாக்க முடியும் என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிரூபியுங்கள். உங்கள் கொள்கைக்கு நாங்கள் வந்துவிடுகிறோம். இதுதான் அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் வைக்கின்ற அழுத்தம் திருத்தமான வாதமாகும்.

இப்போது நாம் கேட்கிறோம். சூனியம் பற்றிய அவர்களின் வழிகேட்டுக் கருத்துக்களுக்கு மறுப்பளித்து பல தொடர்களில் எழுதப்பட்டு மாதங்கள் பல ஓடிய பின் மறுப்பே எழுதவில்லை என்று கூறுகின்றீர்களே. எப்படி பதில் எழுதுவது என்று நீங்கள் ரூம் போட்டு யோசித்தும் ஒன்றும் எழுத இயலாததால் இப்படி பொய்யை எழுதியிருப்போம் என்று முடிவு செய்தீர்களா? (அல்ஜன்னத்)

ஸிஹ்ர் பற்றிப் பதில் எழுதுவதற்கு ரூம் போட்டு யோசித்தீர்களா? என்று நாம் கேட்டது போன்று இவர்களும் கேட்கிறார்களாம்.

பல்லி விஷயத்தில் இவ்வாறு நாம் கேட்பதற்குக் காரணம் 2004ல் ரமளான் மாதத்தில், “நபிமார்கள் வரலாறு’ என்ற தலைப்பில் இப்ராஹீம் நபியவர்களின் வரலாற்றைச் சொல்லும் போது இந்த ஆய்வைத் தெரிவிக்கின்றோம். 2004ல் சொன்ன விஷயத்திற்காக 2013ல் பதில் எழுதியிருந்தார்கள். இதைத் தான் நாம் கேட்டிருக்கின்றோம். இதை நம்மிடமே திருப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டு இப்படி எழுதியிருக்கின்றார் கட்டுரையாளர்.

அத்துடன் சூனியம் தொடர்பாக நாம் பதில் தரவில்லை என்றும் இவர் கூறுகின்றார். ஆனால் சூனியம் தொடர்பாக இவர்களும் இவர்களது சகாக்களும் வைக்கின்ற வாதங்களுக்கெல்லாம் சேர்த்து   இணைய தளத்தில் தெளிவான பதில் அளிக்கப்பட்டிருக்கின்றது.

ஏகத்துவம் மாத இதழில் இவர்களுக்காக மட்டுமே எல்லா பக்கங்களையும் ஒதுக்க முடியாது. பரேலவிகளுக்கும் மத்ஹபுவாதிகளுக்கும் பதில் அளிக்கும் கடமையும் பொறுப்பும் இவர்களுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு இருக்கின்றது. அவர்களுக்குப் பதிலளிப்பதற்காகவும் நாம் பல பக்கங்களை ஒதுக்கவேண்டியுள்ளது.

பொதுவாகச் சொல்ல வேண்டிய விஷயங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகள் என பலப்பல விஷயங்கள் ஏராளமாகத் தேங்கிக் கிடக்கின்றன. எழுதுவதற்கு இடமும் வேண்டும்; எழுத்தாளர்களுக்கு நேரமும் வேண்டும். இவர்களது பைத்திய வாதத்திற்குப் பதில் அளிப்பதற்கு இதனால் தான் தாமதமானது.

“இறைத்தூதர் இறக்கவில்லை’ என்று ஒரு பரேலவி எழுதிய கட்டுரைக்குக் கடந்த ஏகத்துவம் இதழில் மறுப்பு வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் வெளியிடுவதற்கு இடப்பற்றாக்குறை. காரணம், இந்தப் பைத்திய வாதங்களுக்குப் பதில் அளிப்பது தான்.

மேலும் இவர்கள், ஏகத்துவத்திற்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டோம் என்று கற்பனை வானில் மிதக்கட்டும்; அதன் பிறகு மொத்தமாக இவர்களுக்குப் பதில் கொடுப்போம் என்பதற்காகவும் தாமதம் செய்யப்பட்டது.

இவர்களின் பைத்திய வாதத்திற்கு இந்த இதழில் சிலவற்றுக்குப் பதிலளித்துள்ளோம். வரும் இதழில் இன்ஷா அல்லாஹ் எஞ்சியவற்றிற்குப் பதில் அளிக்கப்படும். வரிக்கு வரி, சரிக்கு சரியாகப் பதிலளிக்க ஏகத்துவம் காத்திருக்கின்றது. ஆனால் அவை அனைத்திற்கும் இடம் தருவதற்கு ஏகத்துவம் இதழால் இயலாது. அதனால் இதற்கு ஒரு தீர்வை வரும் இதழில் தெரிவிக்க உள்ளோம். அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாதா?

சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் நடத்தும் பத்திரிகைகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு சட்ட நூற்களின் அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றன. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு நேர்முரணாக அமைகின்றன.

நபி (ஸல்) அவர்கள் தடுக்காததை, அவர்கள் ஆர்வமூட்டிய நன்மைகளைத் தடுக்கும் விதத்தில் இந்தப் பதில்கள் அமைகின்றன. மத்ஹபுகள் எவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பதில்களே போதுமான ஆதாரமாக இருப்பதால் இவற்றை நாம் தக்க ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் மனாருல் ஹுதா, ஜனவரி 2014 இதழில் மவ்லானா பதில்கள் என்ற பகுதியில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளித்துள்ள பதிலைப் பார்ப்போம்.

கேள்வி: தீனுடைய வேலை சம்பந்தமாக ஜமாஅத்தாக வெளியூர் செல்லும் போது மஸ்ஜிதில் ஜமாஅத் முடிந்த நிலையில் நாம் ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்ததா? அல்லது தனித்தனியே தொழுவது சிறந்ததா?

பதில்: பொதுவாக ஒரு மஹல்லாவின் மஸ்ஜிதில் முதல் முறை ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு மஸ்ஜிதிற்கு உள்பகுதியில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவது மக்ரூஹ் தஹ்ரீமாகும். எனவே மஸ்ஜிதுக்கு வெளிப்பகுதியில் இரண்டாவது ஜமாஅத் வைத்துக் கொள்ளலாம். அல்லது தனித்தனியாக தொழுது கொள்ளலாம். (பதாயிவுஸ் ஸனாயிஃ 1/379)

இது தான் மவ்லானா அளித்துள்ள பதில். இதற்கு ஆதாரமாக மனாரின் மவ்லானா குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ காட்டவில்லை. மத்ஹபுச் சட்ட நூலையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் பள்ளிவாசலில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு அனுமதியுள்ளது என்பது மட்டுமின்றி, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: திர்மிதி (204), அபூதாவூத் 487

மேற்கண்ட ஹதீஸ், ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதராமாகும்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருநாள் நபியவர்கள் எங்களுக்கு சுபுஹை தொழவைத்தார்கள். “பிறகு இன்னார் வந்துள்ளாரா?” எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். இன்னார் வந்துள்ளாரா? என்று வேறொருவரைக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள், “(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெருவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை (இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதைப்) போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதைவிட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகபரிசுத்தமானதாகும். (தொழுகையாளிகளின்) எண்ணிக்கை அதிகரிப்பதுதான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் (467)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1147)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1151)

மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும்.

பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (647)

பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்பதால் தான் நபியவர்கள் வீட்டில், கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் மத்ஹபுவாதிகள், பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது என நபியவர்கள் கூறிய வார்த்தையை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கடை, அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள். எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக் கூறவில்லை. ஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவது என்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயே நபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லை. பள்ளிவாசல் என்றாலே அங்கு வரக்கூடியவர்கள் ஃபர்ளான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லை. எனவே தான் நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹப்வாதிகள் கூறுவதால் அவர்களுக்காகப் பின் வரும் தகவல்களையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 505

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்

நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர், பாகம் : 6, பக்கம் : 318)

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். (நூல்: திர்மிதி)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 39

இமாம் அபூயூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லி தொழுதால் எந்தத் தவறுமில்லை இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும்’ என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1 பக்கம்: 399)

ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது: மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகிய மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய கருத்தாகிறது ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின் மீது அமைக்கப்பட்டதாகும்

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார், பாகம்: 3

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவது விரும்பத்தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி) அதாவு, ஹஸன், மற்றும இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்.

நூல்: ஹன்பலி மத்ஹபின் அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா, பாகம்: 2, பக்கம்: 7

மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களைத் தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்

ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதைவிட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்தபோது நபியவர்கள், “இந்த இருவரும் ஜமாஅத்’ ஆகும் என்று கூறினார்கள.

ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 7

இரண்டாம் ஜமாஅத் கூடாது என்று எழுதியுள்ள மவ்லானா, மத்ஹபு சட்ட நூற்களை ஆதாரம் காட்டுகின்றார். ஆனால் மத்ஹபு இமாம்களோ இரண்டாம் ஜமாஅத் நடத்துவதை அனுமதித்துள்ளனர். எனவே இவர்கள் ஆதாரம் காட்டும் மத்ஹபுச் சட்ட நூற்களுக்கும் இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பள்ளியில் தாமதமாக வந்து, இரண்டாவது ஜமாஅத் நடத்துவதைத் தடைசெய்யும் மத்ஹபுவாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டுமல்ல மத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————————————-

அழகாக்கப்பட்ட அமல்கள்

கடந்த ஜனவரி இதழில் “அழகாக்கப்பட்ட அமல்கள்’ என்ற தலைப்பின்கீழ், ஒவ்வொருவரும் தங்கள் செயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்தைக் கூட அவர்கள் இவ்வாறு நியாயப்படுத்துவதற்குக் காரணம் ஷைத்தான் அவர்களுடைய அமல்களை அலங்கரித்துக் காட்டுவது தான் என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.

அண்மையில் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி இந்தத் தலைப்புக்கு மிகப் பொருத்தம் என்பதால் அதை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

கொடும்பாவி கட்டி மக்கள் இழுத்ததால் பெய்த மழை?

மூன்று புயல்கள் கரையைக் கடந்தும், மூன்று புயல்கள் வலுவிழந்தும் போய்விட்ட நிலையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை போதிய மழையைத் தரவில்லை.

அக்டோபர் 20-ம் தேதி தொடங்கிய பருவமழை டிசம்பர் 31 வரையிலுமான காலத்தில் வெறும் 3 நாட்கள் மட்டுமே வேதாரண்யத்தில் பெய்தது. மழை இல்லாததால் அப்பகுதியில் மழையை நம்பி செய்யப்பட்டிருந்த சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் தென்னடார் கிராம மக்கள் கடந்த நவம்பரிலும், சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த டிசம்பரிலும் மழை வேண்டி தங்கள் கிராமங்களில் கொடும்பாவி கட்டி அனைத்து ஊர்களுக்கும் அதனை இழுத்துச் சென்றனர். அப்போதும் மழை பெய்யவில்லை.

வேதாரண்யத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 4 செ.மீ அளவு மழை பொழிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். சரியோ தவறோ, அதனை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் தங்களுக்கு அதில் இருக்கும் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கையின் விளைவாக மக்கள் காலம் காலமாக அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அப்படி ஒரு நம்பிக்கைதான் மழை வேண்டி கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கம். காவிரி டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் கொடும்பாவி கட்டி இழுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதென்ன கொடும்பாவி?

களிமண்ணால் மிகப்பெரிய மனித உருவம் செய்து அதற்கு ஆடைகள் அணிவித்து அதை கொடிய பாவியாக சித்தரிப்பார்கள். யாரோ ஒரு கொடிய பாவி ஊரில் இருப்பதால்தான் மழை பெய்யவில்லை என்று கருதும் மக்கள், அந்தக் கொடிய பாவியை அவமானப்படுத்தி அடித்து இழுத்துச் சென்று ஊரைவிட்டு அப்புறப்படுத்தி விட்டால் மழை பெய்துவிடும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பெண்கள் ஒப்பாரி

அந்தக் கொடிய பாவியாக இந்த மண் உருவம் பாவிக்கப்படும். ஊர் மக்கள் எல்லோரும் கொடும்பாவியைச் சுற்றிக் கூடுவார்கள். பெண்கள் அந்தக் கொடிய பாவி இறந்து போனதாகக் கருதி ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஆண்கள் கொடிய பாவியை தரையில் போட்டு இழுத்தவாறு ஊரில் வலம் வருவார்கள். “கெட்ட கொடும்பாவி, கேடுகெட்ட சக்களத்தி’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் அந்தக் கொடும்பாவியை கேவலமாக விமர்சிக்கும். சாவு ஊர்வலத்துக்கு அடிக்கும் பறை மேளம் ஒலிக்க ஊரை விட்டு அந்தக் கொடும்பாவியை அப்புறப்படுத்துவார்கள். அதற்குப் பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று மக்கள் மனநிறைவோடு ஊர் திரும்புவார்கள்.

இதுவும் ஒரு வழக்கம்தான்.

இந்த பழக்கம் குறித்து தமிழறிஞரும் பிரபல இலக்கியச் சொற்பொழிவாளருமான பேராசிரியர் அகரமுதல்வன் கூறியது:

“மரபின் வழியில் இப்படி செய்யப்படுவது வழக்கம் தான். பன்னெடுங்காலமாக தஞ்சை மண்ணில் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வருகிறது. ஆனால், அதைப் பற்றிய பதிவுகள் எதுவும் இலக்கியத்தில் இல்லை. ஆன்மிக ரீதியாக நந்தியைச் சுற்றிலும் தண்ணீரை தேக்குவது, மகாகாளன் மீது பானை நீரை சொட்டச் செய்வது போன்ற பழக்கம் இருப்பது போல கிராமப்புற மக்களிடம் இப்படிப்பட்ட வழக்கம் இருந்து வருகிறது.

கொடும்பாவிக்காக பெய்கிறதோ இல்லையோ மக்கள் ஓரிடத்தில் கூடி மழைக்காக இறைஞ்சுவதை முன்னிட்டாவது மழை பெய்யும். கோயில்களில் விழா என்றாலும் இப்படி உருவம் செய்து ஊரின் எல்லா வீதிகளிலும் இழுத்து வருவதைப் போல இதுவும் ஒரு வழக்கம்தான்” என்றார்.

இவ்வாறு தி இந்து தமிழ் நாளிதழில், மூட நம்பிக்கை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

மழை எவ்வாறு பொழிகின்றது என்பதை இன்று அறிவியல் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. அப்படியிருந்தும் இப்படி ஒரு கூட்டம் இதுபோன்ற மடமையான நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றது.

மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:24

எல்லாம் வல்ல இறைவன் மழையை, தானே இறக்குவதாகத் திருக்குர்ஆனில் கூறுகின்றான். இந்தக் கருத்தில் திருக்குர்ஆனில் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வசனங்கள் யாவும் மழை பொழிவது இறைவனின் கைவசம் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

மழை இல்லாது போனால் அதற்காக வேண்டி தன்னிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், தன்னிடம் பாவ மன்னிப்பு தேட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான்.

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.

அல்குர்ஆன் 71:10,11

மழைப்பொழிவை, கொடும்பாவி எரிப்பதன் மூலம் பெற்றுவிடலாம் என்ற மாயையை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கி, அலங்கரித்துக் காட்டுகின்றான் என்பதை விளக்கவே இந்த எடுத்துக்காட்டு.

அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 27:24

இந்த வசனத்தை இங்கு பொருத்தமாக நினைவு கூர்வோமாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்     தொடர்: 20

மறைவான ஞானம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஒரு மனிதனால் ஒன்றைச் செய்வதற்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். ஒரு மனிதருடைய அறிவு என்ன? மகானுக்கெல்லாம் மிகப்பெரிய மகானாக இருக்கட்டும். அவருடைய அறியும் திறன் என்ன?

நான் ஒரு அறையில் இருந்து என்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்தச் சமயத்தில் என்னால் எதையெல்லாம் பார்க்க முடியும்? நண்பர்கள் எனக்கு முன்னால் இருப்பதால் நான் அவர்களைப் பார்ப்பேன். நான் அவர்களுக்கு முன்னால் இருப்பதால் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். இவ்வளவு தான்.

இது அல்லாமல் அந்த அறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்? அறைக்கு வெளியே யார் இருக்கிறார் என்பதை அறைக்குள் இருந்து கொண்டே என்னால் பார்க்க முடியுமா? முடியாது. இதுபோன்ற மறைவானவற்றை அறிந்து கொள்வதற்கான ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்று அல்லாஹ் மறுக்கிறான்.

அவ்லியா என்று நாம் யாரைச் சொல்கிறோமோ அவர் இறந்து போய் விட்டார். அவருக்கு முன்னால் நாம் நின்றால் அவருக்குத் தெரியுமா? அவரால் நம்மைப் பார்க்க முடியுமா?

நாம் அவரிடம் கேட்டு அவர் தருவார் என்பது இரண்டாவது விஷயம். நாம் ஒரு பிரார்த்தனை செய்தால் முதலில் அது அவருக்குத் தெரியுமா? நாம் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருப்பது தெரியுமா? இந்த மறைவான ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இந்த ஆற்றலை அல்லாஹ் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. மறைவானதை தனக்கு மட்டும் உரியதாக அல்லாஹ் ஆக்கிக் கொண்டான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆறு வகை அறிவுகள்

முதலில் நாம் மறைவான ஞானம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அல்லாஹ் நமக்கு ஐந்து புலன்களைத் தந்திருக்கிறான். ஆறாவதாக அறிவை தந்திருக்கிறான். இந்த ஆறு வகைகளில் தான் நாம் ஒன்றை அறிந்து கொள்ள முடியும்.

பார்த்தல்

ஒரு பொருளை கண்ணால் பார்த்து அறிந்து கொள்கிறோம். பிறக்கும் போதே நமக்குப் பார்வை இல்லையென்றால் நம்மால் நிறத்தை பார்த்து இது சிகப்பு, இது பச்சை என்று அறிந்து கொள்ள முடியுமா? அவனுக்கு அழகு தெரியுமா? அல்லது அசிங்கம் தெரியுமா? எதுவும் தெரியாது. எனவே கண் இருப்பதால் ஒருவரைப் பார்த்து இவர் உயரமானவர், இவர் குள்ளமானவர், இவர் குண்டானவர், இவர் ஒல்லியானவர், இது அழகாக இருக்கிறது, இது அசிங்கமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். பல விஷயங்களை நாம் கண் மூலமாக அறிகிறோம். இது முதல் வகை.

கேட்டல்

இன்னும் சில விஷயங்களைக் காதால் அறிகிறோம். ஒருவர் பேசுவதை நாம் காதால் கேட்கிறோம். இவர் திட்டுகிறார், இவர் பாட்டுப் பாடுகிறார், இவர் நல்லதைப் பேசுகிறார், இவர் உளறுகிறார் என்று நாம் சப்தங்களை வைத்து அறிந்து கொள்கிறோம்.

இவர் ஆங்கிலத்தில் பேசுகிறார், இவர் மலையாளத்தில் பேசுகிறார், இவர் ஹிந்தியில் பேசுகிறார் என்று வேறுபடுத்தி அறிந்து கொள்கிறோம். கண் பார்வை இல்லையென்றால் கூட ஒருவர் சொல்வதைக் காதால் கேட்டு அறிந்து கொள்கிறோம். இது இரண்டாவது வகை.

நுகர்தல்

இன்னும் சில பொருட்களை மூக்கினால் நுகர்ந்து அறிந்து கொள்கிறோம். இது நல்ல வாடை, இது கெட்ட வாடை, இது பிரியாணி, இது சாம்பார் சாதம், இது மல்லிகைப்பூ வாடை, இது சாக்கடை வாடை என்று நாம் நம்முடைய கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டால் கூட நம்முடைய மூக்கு இதை அறிந்து கொள்கிறது. இது மூன்றாவது வகையான அறிவு.

சுவைத்தல்

நாவின் மூலமாக சில பொருட்களை அறிகின்றோம். இது இனிப்பு, இது புளிப்பு, இது கசப்பு, இது கெட்டுப் போன உணவு, இது புளித்துப் போன பொருள் என்று நாம் நம்முடைய காது, கண், மூக்கு இவைகளை பொத்திக் கொண்டாலும் நாவின் மூலமாக இவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது. இது நான்காவது அறிவு.

உணர்தல்

அடுத்ததாக, நம்முடைய உடம்பு முழுவதும் இருக்கின்ற தொடுதல் என்கிற தொட்டு உணரக்கூடிய அறிவு. நம்மை யாரேனும் தொட்டால் அறிந்து கொள்கிறோம். எறும்பு கடித்தால், ஊரல் எடுத்தால் அதை அறிந்து கொள்கிறோம். கொசு நம்முடைய உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் கடித்தது என்றால் அந்த இடத்திற்குக் கையைக் கொண்டுபோய் அடிக்கிறோம். வெயில் நேரத்தில் உடல் வெப்பத்தை உணருகின்றது. குளிர் நேரத்தில் குளிரை நம்முடைய தோல் உணருகின்றது. இது ஐந்தாவது வகை.

சிந்தனை அறிவு – பகுத்தறிவு

நமக்கு ஆறாவதாக, சிந்திக்கின்ற மூளையை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கிறான். அது பகுத்தறிவு என்று சொல்லப்படக்கூடிய சிந்தனை அறிவாகும்.

கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட மற்ற எல்லா படைப்பினங்களை விட மேலதிகமாக மனிதனுக்கு இந்த ஆறாவது அறிவை வழங்கியிருக்கிறான். ஏதேனும் ஒன்றைப் பார்க்காமலேயே இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை நாம் சிந்தித்துச் சொல்லிவிடலாம்.

இது ஏன் இப்படி வந்தது? எங்கே இருந்து வருகின்றது என்று நாம் சிந்திக்கின்றோம் அல்லவா? இது தான் இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மிகப்பெரிய அருட்கொடையாகும்.

இந்த ஆறு வகையான அறிவுக்கு வெளியே உள்ள விஷயங்கள் தான் மறைவானவையாகும். இந்த ஆறுக்கு வெளியே உள்ளதை ஒருவனால் அறிய முடியுமா? என்றால் எவராலும் அறிய முடியாது. நம் கண்ணுக்குக் தெரிவதை அறிய முடியும். கண்ணுக்குத் தெரியாததை நான் அறிகின்றேன் என்று யாராவது சொன்னால் அவன் பொய் சொல்கின்றான் என்று அர்த்தம்.

சொர்க்கத்தை நம்மால் பார்த்து அறிய இயலுமா? அறிய முடியாது. பிற மாநிலங்களில், பிற நாடுகளில் எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் அறிய முடியுமா?

நமக்கு முன்னால் என்ன நடக்கிறது? யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள் என்று நம்மால் அறிய முடியும். நமக்குப் பின்னால் என்ன நடக்கிறது? யார் யாரெல்லாம் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நம்மால் அறிய முடியுமா? முடியவே முடியாது.

அதே போன்று காதால் நாம் எவ்வளவு கேட்டு அறிய முடியுமோ அதைக் கேட்டேன் என்று ஒருவர் சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம். அதல்லாமல் நான் எவ்வளவு தூரத்தில் யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அதை நான் அறிகிறேன் என்று ஒருவன் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இன்றைக்குத் தொழில் நுட்பங்கள் பல்வேறு வகையில் வந்துவிட்டன. இன்றைக்கு உலகத்தில் எந்த மூளையில் யார் இருந்தாலும் அவருடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளலாம். இண்டர்நெட் (ஸ்கைப், வாய்ஸ் சாட்) போன்ற சாதனங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

ஆனால் எந்த ஒரு சாதனமும் இல்லாமல் நான் இங்கிருந்து கொண்டே யாருடனும் பேச முடியும்; யார் பேசுவதையும் இங்கிருந்து கொண்டே கேட்க முடியும் என்று ஒருவர் சொன்னால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு யாராலும் செய்யவும் முடியாது.

அமெரிக்க அதிபர் தற்போது வெள்ளை மாளிகையில் இப்போது உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அது எந்த ஒரு சாதனமும் இல்லாமல் எனக்குக் கேட்கிறது என்று ஒருவன் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த மனிதனாக இருந்தாலும் காதால் கேட்பதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அந்த அளவுகோலைத் தாண்டி யாராலும் கேட்க முடியாது. ஆக இந்த ஆறு புலன்களுக்கும் அப்பாற்பட்டதுதான் மறைவானவை என்று பொருள்.

அடுத்த அரை மணி நேரத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும் என்பது மறைவான விஷயம். ஏனென்றால் பின்னால் நடக்கவிருப்பதை நாம் கண்ணால் பார்க்க முடியாது. காதால் கேட்க முடியாது. நாக்கால் சுவைத்துப் பார்க்க இயலாது. மூக்கினால் முகர்ந்து பார்க்க இயலாது. உடல் உறுப்புகளால் தொட்டுப் பார்க்க இயலாது. அறிவால் சிந்திக்கவும் முடியாது. அப்படியிருந்தால் அது மறைவான விஷயமாகும். நாளை என்ன நடக்கும் என்பதை இன்று எவனாலும் கூற முடியாது.

வழக்கமான நிகழ்வுகளை வேண்டுமானால் சிந்திக்கின்ற அறிவின் மூலம் கணித்து ஒருவன் சொல்லலாம். ஆனால் அது நடந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உதாரணமாக, ஆறு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்திற்கு வரும் என்று ஒருவன் சொல்கின்றான். இது வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கணித்து அவன் சொல்கின்ற விஷயம். இதை அவன் ஆறாவது அறிவான பகுத்தறிவின் மூலம் சிந்தித்துச் சொல்கின்றான். அது நடக்கவும் செய்யலாம்; நடக்காமலும் போகலாம். ஆறு மணிக்கு வர வேண்டிய ரயில் ஏழு மணிக்கு வரலாம்; அல்லது வராமலே போய்விடலாம். ஏதேனும் விபத்து ஏற்பட்டு வராமல் ஆகிவிடலாம். இதற்குப் பெயர் மறைவான ஞானம் அல்ல.

ஆக, காலத்தால் பிந்திய அனைத்தும், இடத்தால் பிந்திய அனைத்தும் மறைவானவையாகும். இந்த மாதிரி மறைவாக இருக்கக்கூடிய விஷயங்களையெல்லாம் அறியக்கூடியவராக எந்த மனிதரையும் அல்லாஹ் படைக்கவேயில்லை.

நபிமார்களாக இருந்தாலும் சரி! மகான்களாக இருந்தாலும் சரி! பார்வையின் மூலம் நாம் எப்படி அறிந்து கொள்வோமோ அதே போன்று தான் அவர்களுடைய பார்வையும்.

இறைவன் மூலமாகப் பெற்ற அற்புதங்களைத் தவிர்த்து எல்லா நபிமார்களும் மறைவான ஞானத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அந்த நபிமார்களுடைய செய்திகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

சுலைமான் நபியின் ஆற்றலும் அறிவும்

நபிமார்களிலேயே அதிகமான பாக்கியங்கள், சிறப்புகள் வழங்கப்பட்டவர் சுலைமான் நபி தான். அவருக்கு வழங்கப்பட்ட பாக்கியங்களைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆட்சியதிகாரத்தை மட்டும் கொடுக்காமல் ஷைத்தான்கள், ஜின்கள் ஆகியவற்றை வசப்படுத்தும் அதிகாரத்தையும் சேர்த்தே கொடுத்தான். அவர் கட்டளையிட்டால் ஜின்கள் அவருக்குச் சேவை செய்யும்.

அது மட்டுமல்லாமல் காற்றை வசப்படுத்தும் அதிகாரத்தையும் அவருக்கு அல்லாஹ் கொடுத்தான். இப்படிப்பட்ட சிறப்புகள் வேறு யாருக்குமே வழங்கப்படவில்லை. அதுபோன்று பறவைகள் பேசுவதை அவர் அறிந்து கொள்வார். எறும்புகள் பேசுவதை அறிந்து கொள்வார். நாம் மனித இனத்திற்கு மட்டும் தான் ஆட்சி செய்கிறோம்; கட்டளை இடுகிறோம். அவர்கள் பேசுவதை அறிந்து கொள்கிறோம். இது தான் ஒரு மனிதருக்குரிய தன்மைகள். ஆனால் சுலைமான் நபிக்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற இனத்துக்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய, அவர்களுடன் உரையாடக் கூடிய ஆற்றலை இறைவன் வழங்கினான்.

தனக்கு வழங்கப்பட்ட சிறப்புகளைப் பார்த்து விட்டு சுலைமான் நபியவர்கள், “இந்தச் சிறப்புகள் நமக்கு வழங்கப்பட்டதால் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தச் சிறப்பு வேறு எந்த மனிதருக்காவது வழங்கப்பட்டிருந்தால் அவன் தன்னைக் கடவுள் என சொல்லிக் கொண்டு திரிவானே’ என நினைக்கிறார்.

பிர்அவ்ன் இவ்வாறு தான் சொல்லிக் கொண்டு திரிந்தான். சுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட சிறப்புகளில் ஒரு சதவீதம் கூட அவனுக்கு வழங்கப்படவில்லை. மிஸ்ர் என்ற பகுதியை ஆட்சி செய்யக்கூடிய ஒரு அதிகாரத்தை மட்டும் தான் அவனுக்கு அல்லாஹ் வழங்கினான். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவன், நானே மிகப் பெரிய இறைவன் என்று சொல்லிக் கொண்டான்.

ஆனால் சுலைமான் நபிக்கு எவ்வளவோ சிறப்புகளை அதிகாரத்தை அல்லாஹ் வழங்கினான். அப்படியானால் அவர்கள் தன்னை பிர்அவ்னை விட மிகப்பெரிய இறைவன் என்று சொல்லியிருக்கலாமல்லவா! அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. மாறாக இது என்னுடைய இறைவனின் அருட்கொடை என்று தான் சொன்னார். இது என்னுடைய உழைப்பினால் கிடைத்தது அல்ல என்று தான் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட இந்த அருட்கொடைகளைப் பார்த்து விட்டு, “இறைவா! எனக்குப் பின்னால் இது போன்ற அருட்கொடைகளை யாருக்கும் நீ வழங்கிவிடாதே!” என்று பிரார்த்தனை செய்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட நல்லவற்றைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். ஆனால் சுலைமான் நபி பயந்து போய், இப்படி யாருக்கும் கொடுத்து விடாதே என்று கூறுகிறார்கள். இவ்வளவு அருட்கொடைகளையும் வேறு யாருக்கேனும் கொடுத்தால் அவனால் தாங்க முடியாது. கண்டிப்பாக அவன் தடம்புரண்டு விடுவான்.

இந்த உலகத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்குத் திடீரென்று கார் கிடைத்தால், அல்லது அவன் கோடீஸ்வரனாக மாறிவிட்டால் அவன் எப்படி எல்லாம் மாறிவிடுகிறான். அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறான்.

அவனுடைய குணம், பண்பாடு, பழக்க வழக்கம், நடைமுறைகள் எல்லாமே மாறிவிடுவதைப் பார்க்கிறோம். அதை அவனால் தாங்க முடியவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் சுலைமான் நபிக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கு வழங்கப்பட்டிருந்தால் நாம் என்ன கதிக்கு ஆளாவோம்?

எனக்கு வழங்கப்பட்டது போன்று யாருக்கும் கொடுத்துவிடாதே என்று சுலைமான் நபி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அதையும் அல்லாஹ் ஏற்றும் கொண்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அத்தகைய சிறப்புகளைப் பெற்ற சுலைமான் நபியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்…

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது. “நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது”

“அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்” (என்றும் கூறியது.)

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது.

நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:20-26

“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார்.

உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.

தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?’ என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்.

அல்குர்ஆன் 27:38-40

இத்தனை ஆற்றல், சக்தி, அதிகாரத்தை அல்லாஹ் சுலைமான் நபிக்கு வழங்கியிருக்கிறான். அவர்களால் அவருடைய சக்திக்கு உட்பட்டவற்றைத் தான் பார்க்க முடிந்ததே தவிர அவர்களால் ஸபாவைப் பார்க்க முடிந்ததா? அப்படிப்பட்ட ஓர் ஊர் இருப்பதையே அவர்கள் அறிய முடியவில்லை.

பறவைக்குத் தெரிந்த அந்த ஊர் சுலைமான் நபிக்குத் தெரியாமல் போனது. அந்த நாட்டில் உள்ள ராணியைப் பற்றியும் அறிய முடியாமல் போனது. அங்கு அந்த ராணி என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியும் அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களால் அறிய முடியவில்லை.

ஆக, நம்மால் இங்கிருந்து கொண்டே அடுத்த தெருவில், அடுத்த ஊரில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது. பிறர் வந்து சொன்னால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும். இத்தனை சிறப்புகள், அதிகாரங்கள் பெற்ற சுலைமான் நபிக்கு இந்த மறைவான ஞானம் இருக்கவில்லை என்பதை மேற்கண்ட சம்பவம் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அவர் சொல்வதை ஜின்களும் ஷைத்தான்களும் கேட்டன. அவர் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டன என்பது தனி விஷயம். ஆனால் அவருக்கு என்ன தெரிந்தது? கண்ணைக் கொண்டு அவரால் எதைப் பார்க்க முடிந்தது? காதைக் கொண்டு அவரால் எதைக் கேட்க முடிந்தது? அனைவரும் எந்த அளவுகோலைக் கொண்டு எவ்வளவு கேட்க முடியுமோ அந்த அளவு தான் அவரால் கேட்க முடிந்தது; பார்க்க முடிந்தது. இறைவனுக்கு இருக்கக்கூடிய எல்லையற்ற பார்வைப் புலன், கேட்கும் திறன் அவருக்கு இருந்ததா? இல்லவே இல்லை.

அதுபோன்று இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட பல நபிமார்களுடைய வாழ்க்கையிலெல்லாம் மறைவான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியவே இல்லை; அனைத்து மறைவான ஞானமும் இறைவன் ஒருவனுக்குத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.  அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது. மொழி என்பது மனிதர்களை வகைப்படுத்தும் காரணிகளுள் முக்கியமானதாக இருக்கிறது.

உலக அளவில் ஏறத்தாழ 6800 மொழிகள் இருக்கின்றன. 2001ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேச்சுவழக்கில் இருக்கின்றன. அதிகப்பட்சமாக 10 இலட்சம் மக்களால் பேசப்படுவதாக 29 மொழிகளும், 10,000 மக்களால் பேசப்படுவதாக 122 மொழிகளும் இருக்கின்றன.

சில மொழிகள் அழிந்துவிட்டன. சில மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி அழிந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில மொழிகள் மாறும் உலகத்திற்குத் தோதுவாக பல மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பல மொழிகள் எழுத்து வழக்கில் இல்லாமல் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றன. இத்தகைய, மொழியைப் பற்றிச் சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது. இன்னும், குர்ஆன் ஹதீஸ்களில் ஆராயும்போது இது தொடர்பான பல்வேறு போதனைகள் கிடைக்கின்றன. அவற்றை அறிந்திடவே இக்கட்டுரை.

படைத்தவன் இருப்பதற்கான சான்று

நமது உடலில் ஒரு ஐம்பது கிராம் எடை கூட இல்லாத சிறிய சதைப் பகுதியே நாக்கு. ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்ட சின்னஞ்சிறிய நாக்கை அசைப்பதால், அதிலிருந்து விதவிதமான மொழிகள் வெளிப்படுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

மனிதர்கள் பலவகையில் இருப்பது போன்று மொழிகளும் வேறுபட்டதாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி மனிதர்களுக்கு மத்தியில் ஏராளமான மொழிகள் இருப்பது சாதாரண விஷயமல்ல. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்துப் படைப்பினங்களையும் நுணுக்கமாகப் படைத்திருக்கிறான் என்பதற்கும் இது மிகப்பெரும் சான்று என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகüல் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:22

மொழிபேசும் உயிரினங்கள்

மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களும் தங்களுக்குள் செய்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றன. இன்பம், துன்பம் என்ற அனைத்து நேரங்களிலும் பரஸ்பரம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கின்றன. அனைத்து ஜீவராசிகளும் தங்களது இனத்திற்கு இடையே வெவ்வேறான வித்தியாசமான ஒலிகளை வெளிப்படுத்தித் தொடர்பு கொள்கின்றன. இதன்மூலம், பிற ஜீவராசிகளும் தங்களுக்குத் தோதுவான மொழியைக் கையாளுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம்மால் அவைகளின் மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக அவைகளுக்கு மத்தியிலும் மொழி என்ற தொடர்பு அறவே இல்லை என்று வாதிட முடியாது. ஏனெனில், இறைவன் நாடினால் அவைகளின் மொழியையும் மனிதர்களுக்குப் புரிய வைக்க முடியும் என்பதே உண்மை. இந்தப் பேருண்மையைப் பிரதிபலிக்கும் வேதவரிகளைக் காண்போம்.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாதுஎன்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!என்றார்.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத் ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது.

உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்என்று கூறியது. “நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.)

அல்குர்ஆன் 27:16-24

அனைத்து மொழிகளையும் அறிந்தவன்

உலகில் பல மொழிகள் இருக்கின்றன. ஒருவருக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில்தான் அவருடன் பேச இயலும். அப்போதுதான் அவர் அதைப் புரிந்து கொள்வார். வெவ்வேறு இரு மொழியைப் பேசும் இருவர், தங்களுக்கு மத்தியிலே இரு மொழியையும் தெரிந்த ஒருவரின் உதவியால்தான் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள முடியும்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்திருந்தாலும் உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் அறிந்தவர் யாருமில்லை. ஆனால், அல்லாஹ் அனைத்து மொழிகளையும் அறிந்தவன். அடியார்கள் அவனிடம் எந்த மொழியிலும் பிரார்த்தனை செய்யலாம், அவன் நம்மிடம் உரையாடுவதற்கு எந்தவிதத்திலும் எந்தவொரு மொழிப்பெயர்ப்பாளரும் தேவையில்லை. எனவே, நாம் அறிந்திருக்கும் மொழி மூலம் மறுமை நாளில் நம்முடன் நேரடியாக அவன் உரையாடுவான்.

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களில் ஒருவர், அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்க அவர்  “ஆம்‘  என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?”  எனக் கேட்டதும் அவர் “ஆம்என்று கூறிவிட்டுத் தமது வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும். பின்னர் இடப்பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம்பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),

நூல்: புஹாரி (1413), (3595), (6539)

மொழியை அறிந்திருப்பதில் படைத்தவனுக்கும், படைப்பினங் களுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தை நாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்து மொழிகளையும் அறிந்தவன். ஆனால் ஒரு மனிதனுக்கு அவனுக்குத் தெரிந்த மொழியில் சொன்னால் மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி சிந்தித்தால், இறந்துபோனவர்களிடம் உதவிதேடும் தர்கா வழிபாடு எந்தளவிற்கு மாபெரும் வழிகேடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இறந்துபோன ஒரு மனிதனிடம் அனைத்து மொழி பேசும் மக்களும் கோரிக்கை வைத்து மன்றாடுவதும், அவர் அந்தப் பிராôத்தனைகளை விளங்கிக் கொள்வார் என்று நம்புவதன் மூலம் இது, படைத்தவனுக்கு ஒப்பாக படைப்பினத்தை வைக்கும் படுமோசமான இணைவைப்புக் காரியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உயிரோடு இருக்கும்போதே ஒரு மனிதனால் அனைத்து மொழிகளையும் அறிந்திருக்க முடியாது எனும் போது இறந்துபோனவருக்கு எப்படி அனைத்து மொழிகளும் புரியும். இதை விளங்கிய பிறகாவது, நம்பிக்கையாளர்கள் தர்ஹாக்களை விட்டும் தூரவிலக வேண்டும்.

மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம்

மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் பல்வேறு காரணங்களை வைத்துக் கொண்டு பெருமையடிக்கிறார்கள். எங்களது மொழிதான் உயர்ந்தது; மற்ற மொழிகள் தாழ்ந்தது என்று மொழிப்பெருமை பேசுபவர்கள் இன்றைய காலத்தில் இருப்பதுபோன்று நபிகளாரின் காலத்திலும் இருந்தார்கள். அரபி மொழியே சிறந்தது என்றும் மற்ற மொழிகளை பேசுபவர்கள் கால்நடைகள் என்றும் அன்றைய அரபிகள் கருதினர்.

மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை விதைக்கும் சித்தாந்தங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கம், மொழிரீதியாக இருந்த இந்தப் பெருமையையும் பகட்டையும் களைந்தெறிந்தது. அனைத்து மொழிகளும் சமமானவை என்றும் அவற்றைப் பேசும் மக்களும் சமமானவர்களே என்றும் மனித ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக அரபி மொழி சிறந்தது என்பதால் குர்ஆன் அந்த மொழியில் அருளப்படவில்லை. மாறாக, அது தூதரின் தாய்மொழியாக இருப்பதால் அதிலே அருளப்பட்டது. இவ்வாறுதான் அனைத்து தூதர்களுக்கும் அவரது மொழியிலேயே வேதம் வழங்கப்பட்டது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. மொழிப்பெருமையை ஒரேயடியாக மண்ணுக்குள் புதைத்தது,

அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழிபேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: அஹ்மத் (22391)

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 14:4

இதை விளங்காமல் சில முஸ்லிம்கள் அரபிமொழியை வரம்பு மீறிக் புகழ்வதைப் பார்க்கிறோம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் அரபி மொழியைத்தான் பேசினார்கள் என்றும், மறுமைநாளில் அல்லாஹ் அரபி மொழியில்தான் மனிதர்களுடன் பேசுவான் என்றும், அரபி மொழிதான் சொர்க்கத்தின் மொழி என்றும் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். அரபி மொழி அறிந்து கொண்டதால் பொதுமக்களைவிட தங்களை உயர்வாகக் கருதிக் கொள்ளும் அறிஞர்கள், ஆலிம்கள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதற்குப் பிறகாவது திருந்துவார்களா?

மொழியறிவை வளர்த்துக் கொள்வோம்

ஒரு மொழியறிந்தவர் ஒரு ஆளுக்குச் சமமானவர்; இரு மொழியறிந்தவர் இரண்டு ஆட்களுக்குச் சமமானவர் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். எனவே நமக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வதிலும், அதல்லாத பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். காரணம், நடைமுறை வாழ்வில் மொழியறிவின் மூலம் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதற்கான வழிகாட்டுதல் மார்க்கத்திலும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகüன் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,)  இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி 3219

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், யூதர்கüன் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.

நூல்: புஹாரி 7195

பிற மொழிகளைத் தெரிந்து கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல என்பதற்கும் மேலாக, அது ஆர்வமூட்டப்பட்ட காரியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறமொழிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஆங்கில மொழியைத் தெரிந்தவரும், தெரியாத மற்றொருவரும் வேலையைத் தேடி நேர்முகத் தேர்விற்கு (இன்டர்வியூ) செல்லும் போது, இருவரும் சமமான படிப்பு படித்தவர்களாக இருப்பினும், ஆங்கில மொழி அறிந்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.

கடல் கடந்து பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் தொழில்துறைகளில், நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மொழியியல் எனும் பாடப்பிரிவு மூலம் பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.

மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள்

சத்தியத்தை எதிர்ப்பவர்கள், தங்களது அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும் சத்தியக் கருத்துக்களை தடுப்பதற்கும் மொழியைப் பெரும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தங்களது குருட்டுத்தனமாக நம்பிக்கைகளை, கருத்துக்களை பெருமளவில் மொழியாக்கம் செய்து பரப்புகிறார்கள்.

பெரும்பாலும், சத்தியத்தை நம்பும் பாமர மக்களைக் குறிவைத்து வேத வரிகளுக்குத் தவறான மொழியாக்கம், விளக்கங்கள் கொடுத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து குழப்புகிறார்கள். இவ்வாறு, கள்ளத்தனங்களை, தந்திரங்களைச் செய்யும் அசத்தியவாதிகள் காலங்காலமாக இருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்தகையவர்கள் காலத்திலும் இருந்துள்ளார்கள். அப்போது, பிரச்சாரம் செய்ய வந்த அன்றைய அசத்தியவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் முறையை நபிகளார்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரூ (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்-ம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூசாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்கüன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகின்றோம். (அல்குர்ஆன் 2:136)

நூல்: புஹாரி 7542, 4485, 7362

இன்றைய காலகட்டத்தில் இதற்கு முக்கிய உதாரணமாக கிறிஸ்தவர்களைக் குறிப்பிடலாம். கிறிஸ்தவ போதகர்கள், தங்களது பைபிளில் இருக்கும் கர்த்தர் என்ற வார்த்தைளுக்கு அல்லாஹ் என்று மொழியாக்கம் செய்து பாமர முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களது அசத்தியக் கருத்துக்களை பல திட்டங்கள் தீட்டி பிற மொழி பேசும் மக்களிடம் பரப்பும் வேலையை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு சத்தியவாதிகள் புறப்படவேண்டும்.

பிறமொழி பேசும் மக்களும் இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்புகளை வசதிகளை ஏற்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறமொழி மக்களும் அசத்தியக் கருத்துக்களை அடையாளம் கண்டு கொள்வதற்குரிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழ் மொழி பேசும் மக்களிடம் எடுத்துச்சொல்வதைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே மாற்று மொழி மக்களிடம் சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் காரியத்தை நம் மக்கள் செய்கிறார்கள் என்பதே உண்மை.

மொழியைப் பற்றிய மேலும் பல தகவல்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்     தொடர்: 11

கொலையில் முடியும் கள்ள உறவுகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஆண்களோ, பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும்,

நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறிதவழச் செய்கின்ற காரியங்களை விட்டு விலகியிருக்க வாழவேண்டும் என இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகின்றது.

அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்ற கட்டளையாகும். இதுபோன்ற தனிமை சந்திப்புகள் தான் தவறுக்குத் தூண்டுகின்றன என்பது பற்றிக் கடந்த இதழில் கண்டோம்.

இதில் அடங்கியிருக்கின்ற மற்றொரு விபரீதத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனிமை சந்திப்புகள் மூலம் ஆண், பெண் இரு தரப்பினருமே தவறில் ஈடுபட்டிருந்தாலும் இதைச் சாக்காக வைத்து, ஒருவர் மற்றவரை பிளாக்மெயில் செய்வதையோ, அல்லது மாட்டி விடுவதையோ பார்க்கிறோம்.

இன்ன நபர் என்னை நான்கு ஆண்டுகளாக வன்புணர்ச்சி செய்தார் என்று ஒரு பெண் காவல் துறையில் புகார் செய்வதைப் பார்க்க முடிகிறது. இது உண்மையாக இருக்க முடியாது. இது ஒரு பெண் செய்யும் சூட்சுமம்.

ஏனெனில் ஒரு ஆண் தன்னை வன்புணர்ச்சி செய்கின்றான் எனில் 4 ஆண்டுகள் வரை அதைப் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லமாட்டாள். முதல் தடவை செய்த உடனேயே புகார் கொடுத்திருப்பார்.

ஏழு ஆண்டுகளாக என்னை ஏமாற்றி என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார் என்று பெண்கள் புகார் செய்வதையும் நடைமுறையில் காண்கிறோம். இவை புகார் செய்கிறவர்களும் சேர்ந்து செய்யும் தவறுகளாகும்.

இதுபோன்று தவறான முறையில் உறவில் ஈடுபடக் கூடியவர்கள் இத்துடன் இன்னும் கூடுதலாகப் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள்.

ஒருவன், ஒரு பெண்ணின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்கத்தில் அவளுடன் தகாத உறவு வைத்திருப்பான். அது போல் பெண்ணும் இது போன்ற நோக்கத்துடன் தகாத உறவு வைத்திருப்பாள். அந்த  நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் போதுதான் காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்படுகின்றன.

காவல்துறையும் இதுபோன்ற வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். இரண்டு பேரும் உடன்பட்டுத்தான் இந்தத் தவறைச் செய்திருக்கிறீர்கள் என்று காவல்துறை சொல்வதில்லை. அதுவும் பெண்கள் தரும் புகார் எனில் உடனேயே காவல் துறையினர் பதிவு செய்வதைப் பார்க்கிறோம்.

இன்றைய காலத்தில் ஆணோ, பெண்ணோ தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் செய்கின்ற இந்தத் தவறினால் அதிகாரத்தின் மூலம் வேண்டுமானால் ஆண்கள் மிரட்டப்படலாமே தவிர, அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதுவும் தவறு செய்வதை செல்போனில் நேரடிக் காட்சிகளாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை மற்றவர்களுக்கு வெளியிடுவேன் என்று மிரட்டி பெண்களிடமிருந்து பணம் பறிக்கிற நிகழ்வுகளெல்லாம் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கிறோம்.

மிகவும் நெருங்கிப் பழகுபவர்களால் தான் இந்தக் கேடுகெட்ட அக்கிரமங்கள் நடப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே அந்நிய ஆண், பெண் இருவர் தனிமையில் இருப்பதால் நமது கற்பொழுக்கத்தையும் இழந்துவிடுகிறோம். அத்துடன் காலமெல்லாம் நாம் நிம்மதியிழந்து இருக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

கணவன் மனைவி என்ற ஆகுமான உறவாக இருப்பின் கணவனுக்கு ஏற்படும் கேவலத்தை  ஈடுசெய்வதற்காக மனைவி பாடுபடுவாள். மனைவிக்கு ஏற்படுகிற இழப்பை ஈடுசெய்வதற்காகக் கணவன் பாடுபடுவான். அவள் இவனுக்கு ஆடையாகவும் இவன் அவளுக்கு ஆடையாகவும் இருப்பார்கள் என திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (அல்குர்ஆன் 2:187)

இப்படி நகமும் சதையாக ஒட்டியுறவாடக் கூடிய உறவில் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் கள்ளத்தனமான உறவில் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும். இது போன்ற தவறான உறவில் ஈடுபடுவர்களில் ஒவ்வொருவரும் பிறருக்கு எதிராக ஆவணங்களையும் ஆதாரங்களையும் தவறான முறையில் பயன்படுத்த முயற்சிப்பார்கள். இப்படியிருப்பவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏதேனும் கசப்புணர்வுகள் ஏற்பட்டால் உடனேயே தாங்கள் திரட்டி வைத்தவற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டும், தான் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களை அதன் மூலம் அனுபவித்துக் கொண்டும் இருப்பார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்தவர்கள் கூட திருந்திக் கொள்வதற்கு முடியாமலும் வெளியில் சொல்ல முடியாமலும் தத்தளித்து மீண்டும் மீண்டும் சித்ரவதைக்குள்ளாவதைப் பார்க்கிறோம். இவ்வளவு பெரிய விபரீதத்தையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் நபியவர்கள் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் பேசுவதை, பார்ப்பதை முதல் சந்திப்பிலேயே தடுத்து விடுகிறார்கள்.

பெண்கள் கொடுக்கின்ற அதிகமான புகார்களில், பெண்களும் சேர்ந்து தான் அந்தத் தவறுகளைச் செய்திருப்பார்கள். பிரச்சனை வருகிற போது பழியை ஆண்கள் மீது பெண்கள் போட்டுவிடுகிறார்கள்.

அவர் ஏமாற்றிவிட்டார், இவர் ஏமாற்றிவிட்டார் என்று பெண்கள் கொடுக்கிற புகார்களில் பாதி தான் உண்மை. ஏனெனில் இவர்களும் சேர்ந்துதான் பாதித் தவறைச் செய்திருப்பார்கள்.

பெண்கள் மட்டுமல்ல! ஆண்களாக இருந்தாலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை தான் கள்ளத்தனமான உறவு கொள்பவர்களிடம் இருக்கும். அவரவர் கௌரவம் தான் அவரவருக்கு முக்கியமாக இருக்கும்.

ஆனால் கணவன் மனைவி என்ற குடும்ப உறவு அப்படிப்பட்ட இழிவான பண்பைக் கொண்டிருக்காது. எனவே குடும்பங்கள் நாசமாகப் போவதற்கும் சிக்கி சின்னாபின்னமாவதற்கும் அடிப்படையான காரணம், தனிமையில் அந்நியர்களுடன் இருப்பதும், பழகுவதும், பேசுவதும், கொஞ்சிக் குலாவுவதும் தான் என்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.

ஒருவரின் கள்ளத்தொடர்புகள் மற்றவருக்குத் தெரியும் போது ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கும் தகாத உறவு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் தான் கள்ளக் காதலர்கள் மனைவியையும் கணவனையும் கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தான் பெற்றெடுத்த பிள்ளையைக் கூட, தனது கள்ளக் காதலுக்குத் தொல்லை எனக் கருதி தன் கையாலேயே கொலை செய்யும் நிகழ்வுகளெல்லாம் அரங்கேறி வருகின்றது. பிள்ளையைக் கொலை செய்து பெட்டியில் வைத்து பேருந்து நிலையத்தில் வீசும் ஈவு இரக்கமற்ற சம்பவங்களையும் நாம் செய்தி ஊடகங்களில் பார்க்கிறோம்.

இவை அனைத்திற்கும் அடிப்படை என்னவென்று பார்க்க வேண்டும். எடுத்த உடனேயே எந்த ஆணும் எந்தப் பெண்ணும் தவறு செய்துவிட மாட்டார்கள். முதலில் பேசுவார்கள், அதன் பிறகு தனிமையில் பழகுவார்கள், இப்படியே பழகிப் பழகி, கள்ளத் தொடர்பு வரை சென்றுவிடுகிறது.

அடிப்படைக் காரணம் தனிமையில் இருப்பதுதான் என்பதை எந்த அறிவு ஜீவியும் விளங்க மறுப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எந்தத் தவறும் நடக்காவிட்டாலும் கூட தவறு நடந்ததைப் போன்ற தோற்றம் வருவதற்கும் காரணம், ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பது தான்.

சமீபத்தில் தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, அவர் அசிங்கப்பட்டதை செய்திகளில் நாம் பார்த்தோம். இதற்கு அடிப்படைக் காரணமே இந்தத் தனிமை தான். எனவே இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற பேராபத்துக்களை நாமும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், “இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப் போவதில்லைஎன்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4386

இதுபோன்றே புகாரியிலும் பதிவு செய்யப்பட்ட இன்னொரு சம்பவமும் இருக்கிறது.

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!எனக் கூறினார்கள். அவ்விருவரும் “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) -அல்லாஹ்வின் தூதரே!என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல்: புகாரி 2038, 3281

இரத்தம் ஓடாத ஒரு இடம் கூட மனித உடலில் கிடையாது. எனவே இரத்தம் ஓடுவதைப் போன்று மனிதனின் உடல் முழுவதிலும் ஷைத்தான் வியாபித்திருக்கிறான். அவன் எங்கிருந்தாவது இலேசான ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுவான் என்பதால் தான் இவ்வாறு தெளிவுபடுத்தியதாகச் சொன்னார்கள் நபியவர்கள்.

மனைவியுடன் கணவன் இருக்கும் போதும் கூட இருட்டின் காரணத்தினால் பிறர் சந்தேகப்படுவார்கள் எனில், அந்நிய ஆண்களுடனோ பெண்களுடனோ இருந்தால் சந்தேகப்படமாட்டார்களா? அவ்வாறு சந்தேகப்படுவதைக் குறைகூற முடியுமா?

மேலும் அல்லாஹ்வின் தூதரின் மீதே ஷைத்தான் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான் எனில் நாம் எம்மாத்திரம்? நபியவர்களை உயிரினும் மேலாக மதித்தவர்களில் முதலாம் தரத்தில் இருப்பவர்கள் ஸஹாபாக்கள். அவர்களிடமே ஷைத்தான் நபியவர்களைப் பற்றிய ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுவான் எனும் போது நமது நிலை என்ன?

எனவே நாம் நமது வாழ்வில் எந்தக் கட்டத்திலும் ஒரு பெண் அந்நிய ஆண்களுடனோ, ஆண் அந்நியப் பெண்களுடனோ தனிமையில் இருப்பதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடவே கூடாது. இதை நாம் உணர வேண்டும் என்பதற்காக நபியவர்களின் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி நமக்கு இறைவன் உணர்த்திக் காட்டுகின்றான்.

ஒரு ஆண், ஒரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண், ஒரு ஆணுடனோ இருக்க வேண்டுமாயின் அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு மஹ்ரமான உறவுகள் உடனிருக்கும் நிலையில் தான் இருக்க முடியும். மஹ்ரம் என்றால் ஏற்கனவே சொன்னதைப் போன்று திருமணத்திற்குத் தடை செய்யப்பட்டவர்கள் என்று பொருள்.

அதாவது ஒரு பெண்ணின் தகப்பனுடன், அண்ணன் தம்பியுடன், தாயுடன், கணவனுடன், மாமனாருடன் இருக்கின்ற போது இன்னொரு அந்நிய ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதைத் தவறெனக் கூறமுடியாது. இந்த நிபந்தனையில் தான் ஒரு பெண்ணுடன் ஒரு அந்நிய ஆண் பேசமுடியும். இப்படித் தான் பெண்ணும் பேசமுடியும்.

ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(போருக்குச் செல்வதி-ருந்து பெயரை) திரும்பப் பெற்றுக் கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5233

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்கüன் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது.  அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்)தான்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5102

வளரும் இன்ஷா அல்லாஹ்