ஏகத்துவம் – ஜனவரி 2011

தலையங்கம்

எஸ்.யூ. கானின் இந்து மத அழைப்பு

உலகத்தில் ஏகத்துவக் கருத்தை இறைத் தூதர்கள் மக்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு இறை மறுப்பாளர்கள் அளித்த பதில், “எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள்; இல்லையேல் நாங்கள் உங்களை ஊரை விட்டு வெளியேற்றுவோம்” என்பது தான்.

உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.

அல்குர்ஆன் 14:13

அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்த மத்யன் நகர மக்களை நோக்கி இறைத் தூதர் ஷுஐப் அவர்கள் இறை வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்த போது அம்மக்கள் அளித்த பதில்:

ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.

அல்குர்ஆன் 7:88

ஓரினச் சேர்க்கையில் ஊறித் திளைத்த தன் சமுதாயத்தை நோக்கி நபி லூத் (அலை) அவர்கள் எச்சரிக்கை விடுத்த போது அவரை நோக்கி அவரது சமுதாயம் அளித்த பதில்:

தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறிய போது “லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

அல்குர்ஆன் 27:56

மூஸா (அலை) அவர்கள் தூதுச் செய்தியை ஃபிர்அவ்னிடம் எடுத்துக் கூறிய போது, மூஸாவையும் அவரது கொள்கையை ஏற்ற சமுதாயத்தையும் ஊரை விட்டு விரட்டவும் வெளியேற்றவும் ஃபிர்அவ்ன் திட்டமிட்டான்.

அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான்.

அல்குர்ஆன் 17:103

நம்முடைய இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் மக்கத்துக் காஃபிர்கள் ஊரை விட்டு வெளியேற்ற, விரட்டியடிக்கத் திட்டம் தீட்டினர்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள்.

அல்குர்ஆன் 17:76

இறைத் தூதர்களுக்கு எதிரான இந்தச் சதிகளுக்கு இறைவன் சுடச் சுட பதிலளிக்கின்றான்.

இறைத் தூதர்களை நோக்கி இறை மறுப்பாளர்கள், “இது எங்களுடைய பூமி, எங்கள் ஊர்” என்று திமிரான வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

அதற்கு அல்லாஹ் அளிக்கும் பதில்:

உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.

அல்குர்ஆன் 14:13, 14

அல்லாஹ் கூறியதைப் போன்று லூத், ஷுஐப் ஆகிய நபிமார்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் காப்பாற்றி, ஏகத்துவத்தின் எதிரிகளை அழித்து விடுகின்றான். எந்தப் பூமியிலிருந்து அவர்கள் விரட்டப்பட்டார்களோ அதே பூமியில் மீண்டும் குடியமர்த்தியதை நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கிறோம். தன்னுடைய வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றியதைத் திருக்குர்ஆனில் பார்க்கிறோம்.

நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

அல்குர்ஆன் 7:137

மக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் மக்காவை திரும்பக் கொடுத்து விடுகின்றான். இந்த முன்னறிவிப்பை மேற்கண்ட 17:76 வசனத்திலும் பின்வரும் வசனத்திலும் தெரிவிக்கிறான்.

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். “நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 28:85

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஏகத்துவத்தை, தூதுச் செய்தியை ஏற்றவர்களுக்கு இது போன்ற மிரட்டல்கள் வந்தே தீரும்.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இன்று முஸ்லிம்களுக்கு இந்த எச்சரிக்கை தான் செய்யப்படுகின்றது. பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற லக்னோ கிளையின் நீதிபதியும் முஸ்லிம்களின் அவமானச் சின்னமுமான எஸ்.யூ. கான் இந்த எச்சரிக்கையைத் தான் தனது தீர்ப்பில் எதிரொலிக்கின்றார்.

Only those species survived which collaborated and improvised

பிற இனத்துடன் இரண்டறக் கலந்து முன் யோசனைக்கு இடம் கொடாமல் முனைந்து வேகமாகச் செயல்படுகின்ற இனமே உயிர் வாழ முடியும்.

என்ன சொல்கிறார் தெரியுமா?

பெரும்பான்மைக்கு முன் சிறுபான்மை சரணடைய வேண்டும்.

இஸ்லாம் என்ற அடையாளத்தை இழந்து விட வேண்டும்.

ஏகத்துவத்தை மறந்து விட வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இந்து மதத்திற்கு நம்மை அழைக்கிறார்.

இறைத் தூதர்களை நோக்கிச் சொல்லப்பட்ட வார்த்தைகளை, இந்துத்துவா சக்திகள் கூறுகின்ற அதே கருத்தை, இவர் தனது தீர்ப்பின் மூலம் வாந்தியெடுக்கின்றார்.

பாபரி மஸ்ஜித் எனும் ஒரு பள்ளிவாசல் இடிக்கப்பட்டது என்ற பார்வையில் நாம் இதைப் பார்க்கக் கூடாது. நம்முடைய ஈமானைப் பறிப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு பரீட்சை என்ற அடிப்படையில் இதை நாம் பார்க்க வேண்டும். இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, குகைவாசிகளைப் போன்று நாம் சீறி, சிலிர்த்து எழ வேண்டும்.

அவர்கள் எழுந்து “நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

அல்குர்ஆன் 18:14

பாபரி மஸ்ஜித் விஷயத்தில் எல்லா இயக்கங்களும் படுத்து விட்டன. தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இந்தத் தீமையை எதிர்த்து எழுந்து நிற்கின்றது. காரணம் அதனுடைய பெயருடன் மட்டுமல்ல, இதயத்திலும் ஏகத்துவம் ஒட்டியிருப்பதால்!

எனவே இதயத் தூய்மையுடன் ஏகத்துவத்தைக் காப்பதற்காக, இந்த நாட்டில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தியும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களின் முன்பு ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்தில் கொள்கைச் சகோதர, சகோதரிகளே! அலை அலையாய் குவிந்திடுவீர். இறையருளைப் பெற்றிடுவீர், இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————————–

கொள்கை இல்லாக் கூட்டம்

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும் அவர்களுக்கென்று ஒரு கொள்கை, கோட்பாடு, இலட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர் மூச்சைப் போன்று அவசியமானதாகும். கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைப் போன்றது.

அந்தக் கொள்கை சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருந்தாலும் நிலையான கொள்கை இல்லையென்றால் எவராலும் முறையாக இயக்கம் நடத்த முடியாது. இத்தகையவர்கள் இயக்கம், இயக்கம் என்று எவ்வளவு கத்தினாலும் இயக்கத்தின் பெயரால் ஆதாயம் தேட நினைக்கும் கொள்கையற்ற கோமாளிகள் என்றே இவர்களைக் கூற முடியும்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறி வருகின்றது. ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது. கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்கு முன்பே இவர்கள் பல்வேறு பெயர்களில் பல இயக்கங்களாக இயங்கி வருகின்றனர்.

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தான் முதலில் இயக்கத்தைத் துவங்கினார்கள். ஜனநாயகம் என்பது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும். கொடி பிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தேர்தலில் ஓட்டுப் போடுவதும் கூடாது. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்வது மார்க்கத்திற்கு விரோதமானது என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்துவந்தனர். இந்தக் கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர்.

குஜராத் கலவரம் போன்ற, நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறி மக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர். தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்கு இந்தக் கலவரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

ஆனால் இவர்களின் இக்கொள்கை முட்டாள்தனமானது என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டனர். இவர்களின் வழிகெட்ட இக்கொள்கைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் இயக்கம் வளரவில்லை.

எனவே தனது கொள்கையை அப்படியே மாற்றி விட்டனர். இப்போது ஜனநாயகம் கூடும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கொடி தூக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள். ஓட்டுப் போடுவது கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்து விட்டனர்.

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலை ஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம். சரியான கொள்கைக்காக மாற்றம் செய்வது தவறல்ல. இந்த மாற்றம் அவசியமானது.

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதை முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தங்களது பழைய நிலைபாடு தவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்க வேண்டும்.

இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும் செய்யவில்லை. மாறாக, கள்ளத்தனமாகக் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.

இன்றைக்கு மார்க்க விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சட்ட விஷயங்கள் மட்டுமல்லாமல் அடிப்படைக் கொள்கை விஷயத்திலும் கூட இந்த வேறுபாடு இருக்கின்றது.

உதாரணமாக மரணித்தவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் கருதும் பரேலேவிகள் இருக்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டும் உரிய பின்பற்றுதல் என்ற அந்தஸ்தை, இமாம்களுக்கும் முன்னோர்களுக்கும் பெரியார்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் இருக்கின்றனர். இதே போன்று குர்ஆன் ஹதீஸ் மட்டுமின்றி நபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுவோரும் இருக்கின்றனர். குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் இஸ்லலாத்தின் அடிப்படை என்று நம்பும் ஏகத்துவவாதிகளும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இயக்கமானாலும் மேற்கண்ட விஷயங்களில் இது தான் தனது நிலைபாடு என்று தெளிவாகக் கூறி விடுகின்றனர். ஆனால் பாப்புலர் பிரண்ட் இயக்கத்தினர் மட்டும் இதிலிருந்து வேறுபடுகின்றனர்.

மேற்கண்ட மாறுபட்ட கொள்கையில் இது தான் தனது கொள்கை என்று எந்த ஒரு கொள்கையையும் இவர்கள் குறிப்பிடுவதில்லை. இவற்றில் எதையாவது ஒன்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரச்சாரம் செய்வதில்லை.

கப்ரு வழிபாடு, சந்தனக்கூடு, கந்தூரி, மவ்லூது போன்ற இணை வைப்புகளை இவர்கள் சரி காண்பவர்களா? அல்லது எதிர்ப்பவர்களா? மத்ஹபுகளையும் பித்அத்களையும் ஏற்பார்களா? மறுப்பார்களா? இது போன்ற கேள்விகளுக்கு யாராலும் ஆதாரத்துடன் பதில் கூற முடியாது. ஏனென்றால் இவர்கள் எந்தக் கொள்கையும் இல்லாத கொள்கையற்ற கூட்டமாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் மறுமை வாழ்வும் இந்த உலகத்தில் வாழும் போது அவன் கொண்டிருந்த கொள்கை அடிப்படையில் அது வெற்றியை அல்லது தோல்வியைப் பெற்றுத் தரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இவர்கள் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தங்களுடைய இயக்கம் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் இயக்கம் என்று கூற இவர்களுக்கு அருகதை இல்லை. இஸ்லாமிய சமுதாய மக்களின் மறுமை வாழ்வை அழித்து நாசமாக்கக் கூடிய இணை வைப்புக் காரியங்களும் பித்அத்களும் இன்னும் பல தீமைகளும் மக்களிடையே பரவியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். இவையெல்லாம் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என்பதை இவர்களும் புரிந்து வைத்துள்ளனர்.

இந்தத் தவறுகளை எச்சரித்து மக்களை இவற்றிலிருந்து காக்கும் கடமை ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்துக்கும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. இத்தகையவர்கள் சமுதாய நலனுக்காகப் போராடக் கூடியவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்?

இத்தீமைகளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்யும் வேளையில் நமது பிரச்சாரத்தை முடக்கும் வகையில் நமக்கெதிராகவும் இவர்கள் செயல்படுகின்றனர். “மென்மை வேண்டும்; நளினம் வேண்டும்’ என்று கூறி நமது வேகத்தைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

நபிவழி அடிப்படையில் வாழ வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்து மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றோம். இவர்கள் சத்தியவான்கள் என்றால் இவ்விஷயத்தில் நம்மைப் போன்று இவர்களும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மௌனமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆனால் இவர்கள் நபிவழிக்கு எதிராக முட்டாள்தனமான வாதங்களை எழுப்பி மக்கள் காலா காலத்துக்கும் வழிகேட்டில் நீடித்திருக்கக் காரணமாக இருக்கின்றனர்.

“சுன்னத் என்பது கடமையல்ல. ஒற்றுமை என்பது ஃபர்ழ். எனவே சுன்னத்தை விட்டால் பரவாயில்லை. தொழுகையை நபியவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் தொழுவது அவசியமில்லை. அவரவர் இஷ்டப்படி குருட்டாம் போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இதைத் தவறு என்று விமர்சனம் செய்யக் கூடாது’ என்று வாதிடுகின்றனர்.

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்கு இது போன்ற கேடு கெட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவு கூசுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மை செய்பவர்களாக இருக்க முடியாது.

நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

வீதி வீதியாக இறங்கி, பல்வேறு நலப்பணிகள் செய்வதாகக் கூறி மக்களிடம் வசூல் செய்கின்றனர். மக்களிடம் கணக்கில்லாமல் வசூல் செய்யும் இவர்கள் இதற்கான கணக்கு வழக்குகளை மக்களிடம் தெரிவிப்பதில்லை.

வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களில் ஒருவர் கையாடல் செய்தால் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைப்பதற்கு இது வழிகோலும். மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் பணம் தனி நபர்களின் சுயலாபத்திற்காக சூறையாடப்படும். எனவே இவர்களைப் போன்று மக்களிடம் வசூலித்துவிட்டுக் கணக்கு காட்டாதவர்களை மக்கள் நம்பக் கூடாது.

வசூல் வேட்டையில் இறங்கும் இவர்கள் மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் காசு பணத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

நோன்புப் பெருநாளுக்கு முன் ஏழை எளியவர்களின் நலனுக்காக ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்தத் தர்மம் இரண்டரை கிலோ தானியம் அல்லது அதன் மதிப்புக்கு நிகரான கிரயமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால் ஃபித்ராவை நாங்களும் வசூலிக்கிறோம் என்று கூறி களத்தில் இறங்கும் இவர்கள் இஸ்லாம் நிர்ணயித்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல் கைக்குக் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் நோன்புப் பெருநாள் தர்மமாக 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால் இது ஃபித்ரா கிடையாது என்று அவருக்கு விளக்கிக் கூறி அவர் முறையாக கொடுக்க வேண்டிய தொகையை வாங்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த 5 ரூபாயையும் 10 ரூபாயையும் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த அற்பத்தொகையைக் கொடுத்தவன் தான் ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றிவிட்டதாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி காசு பணத்துக்காக மக்களின் மார்க்கத்துடன் விளையாடுகிறார்கள்.

குர்பானித் தோல்களை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் குர்பானித் தோல்களைத் திரட்டி கல்வி நிறுவனங்களுக்காகவும் மற்ற மற்ற பணிகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு மக்களுடைய குர்பானி வணக்கத்தில் விளையாடும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

குர்பானி மட்டுமின்றி ஸகாத்தாக, தர்மமாக வழங்கப்படும் பொருட்களையும் குறிப்பிட்ட சிலருக்கே வழங்க வேண்டும் என்று மார்க்கம் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்க்க சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பேணக்கூடியவர்கள் தான் மக்களிடம் வசூலிக்கும் பொருட்களை அதற்குரியவர்களிடம் முறையாக ஒப்படைப்பார்கள். இவர்களுக்கு கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள் மக்களிடம் வாங்கும் பொருட்களை அதற்குரிய பணிகளுக்கு எப்படி முறையாகச் செலவிடுவார்கள்? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயக்கத் தலைவர் ஒரு ஊருக்கு வந்தால் அவரை வரவேற்பதற்காக போஸ்டர்கள் அடித்து தனிமனித வழிபாட்டை அரங்கேற்றுகின்றனர். பல்வேறு வண்ணங்களில் தினம் தினம் ஏதேனும் ஒரு சுவரொட்டியை தமிழகம் முழுவதும் ஒட்டுகின்றனர். சுதந்திர தினக் கொண்டாட்டம், அணி வகுப்பு என்று லட்சக்கணக்கில் செலவு செய்து சுவர் விளம்பரங்கள் செய்கின்றனர். மாதம் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இதற்காகச் செலவு செய்கின்றனர். இதற்கெல்லாம் வருமானம் என்ன? அதற்கான கணக்கு வழக்குகள் என்ன? யாருக்கும் தெரியாது. அந்த இயக்கத்தின் அடிமட்டத் தொண்டனுக்கோ அல்லது அடிமட்ட நிர்வாகிகளுக்கோ கூடத் தெரியாது.

மேலும் இவர்களின் இயக்க நிர்வாகிகள் ஜனநாயக முறையில்  தேர்வு செய்யப்படுவதில்லை. இயக்கத் தொண்டர்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு கதம்பமான முறையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்கும் உரிமையோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்கும் உரிமையோ இயக்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.  தனி மனிதருடைய சொத்தைப் போன்றே இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.

பதவிக்காகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தனக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றனர். இதனால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. குறிப்பிட்ட சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத் தங்கள் இயக்கத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசியல் சாக்கடையில் இறங்கிய இவர்கள் மார்க்க நெறிமுறைகளை மீறத் தொடங்கியுள்ளனர். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தங்களது தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடவிடுகின்றனர். பெரும் பெரும் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களைக் கொண்டு வந்து இசைக்கின்றனர்.

அனைத்து தரப்பு மக்களின் ஓட்டைப் பொறுக்குவதற்காக விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் போன்ற மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவற்றை ஆதரிக்கும் கேவலமான நிலைக்குச் சென்றுள்ளனர்.

கொடி வணக்கம் என்ற இணைவைப்பு

கொடிக்கு சல்யூட் அடிக்கும் மாற்று மதக்கலாச்சாரத்தை இவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ளனர். கொடிக்கு சல்யூட் அடிப்பது கொடி வணக்கம் என்று நடைமுறையில் கூறப்படுகின்றது. வணக்கமாகக் கருதப்படும் இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் எப்படி செய்ய முடியும்?

கொடி என்பது சாதாரண துணி. அதை மனிதன் தான் தயாரித்தான். தன் இயக்கத்துக்கு அடையாளமாக அதைப் பயன்படுத்தினால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அதை இவர்கள் மனிதனை விட உயர்ந்த, மதிக்கத் தக்க பொருளாகப் பார்க்கின்றார்கள். எனவே தான் அதற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

கொடியை அதற்குரிய அந்தஸ்தில் வைக்காமல் மனிதனை விட உயர்ந்த நிலையில் வைக்கின்றனர். மனிதர்களை விட சிறப்பு பெறுவதற்கு அந்தக் கொடியில் அப்படி என்ன இருக்கின்றது? என்று பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்.

கல்லை, கல்லாகப் பார்க்காமல் தன்னை விட மேம்பட்டதாகப் பார்த்த காரணத்தால் தான் சிலை வழிபாடு வந்தது. இணை வைப்பும் மூட நம்பிக்கையும் பெருகுவதற்கு இதுவே காரணம். இஸ்லாம் எதை அழித்து ஒழிப்பதற்காக வந்ததோ அந்த அனாச்சாரங்களை முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றுகிறார்கள். முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜிஹாத் கோஷம்

சரியான இஸ்லாமிய கொள்கையைக் கூறி இயக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. மாறாக எந்த வழியில் சென்றால் இலகுவாக மக்களை இயக்கத்தில் சேர்க்க முடியுமோ அந்த வழி மார்க்கம் தடை செய்த வழியாக இருந்தாலும் அறிவார்ந்த வழியாக இல்லாவிட்டாலும் அதில் செல்லத் தயங்கமாட்டார்கள்.

ஒரு இஸ்லாமிய அரசாங்கம் நீதிக்காக நடத்தும் அறப்போருக்கு ஜிஹாத் என்று இஸ்லாம் கூறுகிறது. போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்பவர்கள் பின்வாங்காமல் போரில் கலந்துகொண்டு இஸ்லாமிய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. குர்ஆனும் ஹதீஸ்களும் இதைத் தான் ஜிஹாத் என்று கூறுகின்றன.

ஆனால் இவர்கள் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக ஜிஹாதிற்குப் புதுமையான விளக்கத்தைக் கொடுத்து மார்க்கத்துடன் விளையாடுகின்றனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை தற்போது இந்தியாவில் கொண்டுவர வேண்டும். இதற்காக இவர்களுடைய இயக்கத்தில் சேர்வது தான் ஜிஹாத். இந்த ஜிஹாதைத் தான் குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன என்று இறைவனுடைய பயம் இல்லாமல் கூறிவருகின்றனர்.

பொதுவாகப் போராடுவது, எதிர்ப்பது போன்ற குணங்கள் இயற்கையாகவே இளைஞர்களிடம் மிகைத்திருக்கும். இந்தப் பருவம் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட உணர்வுப்பூர்வமாகவே சிந்திக்கத் தூண்டும். இளைஞர்களிடம் உள்ள இந்த பலவீனத்தையும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இளைஞர்களிடையே இன வெறியை ஏற்படுத்துகின்றனர். தாங்கள் மட்டுமே வீரமாக மிகப்பெரிய இலட்சியத்திற்காகப் பாடுவதைப் போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த போலித் தோற்றத்தின் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனர்.

இவர்கள் பல வருடங்களாக ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றனர். ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இவர்கள் எப்போது எங்கே யாருடன் ஜிஹாத் செய்தார்கள்? தாங்கள் செய்த ஜிஹாதுடைய பட்டியலைத் தர வேண்டும் என்று நாம் இவர்களை நோக்கி கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

தங்களுடைய திட்டங்கள், லட்சியங்கள், நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிரங்கமாக இவர்கள் மேடை போட்டு மக்களுக்கு விவரிக்கத் தைரியமற்றவர்கள். எனவே இரகசியமாகக் கூடிக் கூடி பேசிக் கொள்வார்கள். ஆனால் இந்த இரகசியப் பேச்சின் மூலம் இளைஞர்களை ஏமாற்றியதைத் தவிர இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை.

நாட்டில் நடந்த குஜராத் போன்ற கலவரங்களைப் பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் அந்தக் கலவரங்களை அடுத்து இவர்கள் செய்த சாதனைப் பட்டியலை இவர்களால் வெளியிட முடியுமா? கலவரத்தைத் தடுப்பதற்கு, முஸ்லிம்களைக் காப்பதற்கு இவர்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன? என்று கூற முடியுமா? இயக்கத்தை வளர்ப்பதை மட்டுமே முழு நோக்காகக் கொண்டு, பொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியது தான் இவர்கள் செய்த சாதனை.

தீவிரவாதச் செயலைத் தான் ஜிஹாத் என இஸ்லாம் குறிப்பிடுவதாக ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தவறாகச் சித்தரித்து வருகின்றன. மாற்று மதக் கொள்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜிஹாத் என்றால் தீவிரவாதச் செயல் என்றே புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களின் ஜிஹாத் கோஷம் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற வணக்கங்களைப் புரிவதும் பாவங்களைப் புரியாமல் ஒழுக்கமாக வாழ்வதும் அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. எனவே இந்த ஆன்மீக விஷயங்களில் ஒருவர், “நான் முறையாக நடப்பேன்’ என அல்லாஹ்விடம் மட்டுமே உறுதிமொழி அளிக்க முடியும். இதற்கு பைஅத் என்று இஸ்லாம் கூறுகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஒரே காரணத்துக்காக அல்லாஹ்விடம் செய்ய வேண்டிய இந்த உடன்படிக்கையை அவர்களிடம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிக்கிறான். காரணம் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது தன்னிடம் உறுதிமொழி அளிப்பதற்குச் சமமானது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அல்லாஹ் வழங்கிய இந்த அதிகாரத்தை இந்த இயக்கத்தினர் தங்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆன்மீக விஷயங்களில் முறையாக நடக்க வேண்டும் என அப்பாவி இளைஞர்களிடம் வாக்குறுதி வாங்குகின்றனர். இவ்வாறு வாக்குறுதி வாங்குவதற்கு இவர்கள் என்ன நம்மைப் படைத்த இறைவனா? அல்லது அந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களா?

தங்களிடம் பைஅத் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுவதற்குக் காரணம் தங்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தங்களை விட்டும் விலகிச் சென்று விடக் கூடாது என்பதற்காகத் தான். அதாவது நீ வாக்குறுதி தந்திருக்கின்றாய். இந்த வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்தால் இறைவனிடம் நீ பாவியாகிவிடுவாய் என்று அப்பாவிகளைப் பயமுறுத்தி தங்கள் இயக்கத்திலேயே காலகாலத்துக்கும் நீடிப்பதற்காக இந்த மாபாதகச் செயலை செய்கின்றனர்.

இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்துடன் விளையாடுவதற்கும் இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

ஒற்றுமை கோஷம்

நன்மையான விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். பாவமான காரியங்களில் ஒன்றுபடக்கூடாது என்று இஸ்லாம் ஒற்றுமையை வேறுபடுத்துகின்றது.

சமுதாயத் தீமைகளை நாம் கண்டிக்கும் போது அத்தீமைகளை ஆதரிப்பவர்கள் நம்மை எதிர்ப்பார்கள். தீமைகளை ஆதரிப்பவர்களும் அதை எதிர்பவர்களும் தனித்தனியே பிரிவார்கள். இந்தப் பிரிவை இஸ்லாம் வரவேற்கின்றது. இதற்கு மாற்றமாக தீமையில் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதைத் தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆனால் இவர்கள் ஒற்றுமை விஷயத்தில் இஸ்லாம் கூறும் இந்த வித்தியாசத்தைக் கண்டு கொள்ளாமல் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். இந்த வாதத்தின் மூலம் சமூகத் தீமைகள் அழியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இந்த கோஷத்தின் மூலம் மார்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதைத் தவிர எந்த நன்மையையும் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை.

ஒற்றுமை கோஷம் கேட்பதற்கு நன்றாகவும் பாமர மக்களை விரைவாகக் கவரக் கூடியதாகவும் இருப்பதால் இதையும் தங்களுடைய இயக்க வளர்ச்சிக்கு சாதமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

வாயளவில் தான் இவர்கள் ஒற்றுமையைப் பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒற்றுமை கோஷத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மற்ற இயக்கத்தினர் ஒரு விஷயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது அதில் தான் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமே தவிர இவர்கள் தனியாக தன் இயக்கத்தின் பெயரில் போராட்டம் நடத்துவது கூடாது.

தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது? என்ற பிரச்சனை வரும்போது இவர்கள் தனியொரு முடிவை எடுப்பது கூடாது. மாறாக மற்ற அமைப்பினர் எந்த முடிவை எடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடக்க வேண்டும்.

மொத்தத்தில் இவர்கள் தனியே இயக்கம் நடத்துவது கூடாது. தன் இயக்கத்தைக் களைத்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டும்.

ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து சாதனை படைத்து வருகின்றனர்.

அனைத்து விஷயங்களில் நமது ஜமாஅத் மற்ற இயக்கங்களை விட்டு வேறுபட்டு தனக்குரிய தூய்மையுடன் தனியே நிற்கின்றது. பிற இயக்கங்கள் செய்யக்கூடிய தவறுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயவு தாட்சணையின்றி மக்களிடம் அம்பலப்படுத்தி வருகின்றது.

எனவே இவர்களுக்கு நாம் தான் சிம்ம சொப்பனமாக, பெரும் தலைவலியாக இருக்கின்றோம். நம்மை ஒழித்துவிட்டால் இவர்களின் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்று நினைக்கின்றனர்.

சமீபத்தில் திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை. இதை மக்களும் அரசாங்கமும் தெளிவாக உணர்ந்துள்ளது. இது தான் உண்மை என்பதை இவர்களும் அறிந்தே வைத்துள்ளனர்.

ஆனால் எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் அன்னியப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த இவர்கள் இந்தப் பிரச்சனையை பெரிய ஆயுதமாகக் கருதினர். தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்துவிடும். இதன் பிறகு நாம் மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தனர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் 19 அமைப்புகள் சேர்ந்து திருவிடைச்சேரி சம்பவத்தில் நமக்கு சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி நீண்ட போஸ்டர்களை ஒட்டினர்.

இந்த 19 அமைப்புகளில் ஓரிரு அமைப்புகளைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் இதுநாள் வரை மக்களுக்கு அறிமுகமில்லாத லட்டர் பேடு அமைப்புகளாகும்.

இந்தக் காரியத்தை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் தான் முன் நின்று முழு முயற்சியுடன் செய்தனர். ஆனால் இறைவன் இவர்களுக்கு இந்த முயற்சியில் படு தோல்வியையும் கேவலத்தையும் வழங்கினான். இந்த போஸ்டர்கள் மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒற்றுமை கோஷம் போடும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் மட்டும் தான் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள்

விபச்சாரம், திருட்டு, கொலை போன்ற குற்றங்களுக்குத் தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் தான் இந்த குற்றவியல் தண்டனைகளை செயல்படுத்த முடியும். தனி நபர்களோ தனி குழுக்களோ இதைச் செயல்படுத்த முடியாது.

அதிகாரம் இல்லாதவர்கள் குற்றவாளிகளிடம் அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கலாம். அல்லது காவல் துறையிடம் அவர்களை ஒப்படைக்கலாம். இதைத் தவிர அவர்களை அடிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

ஆனால் இவர்கள் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு தவறு செய்பவர்களைத் தண்டித்து வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகள் என்று கருதும் நபர்கள் உண்மையில் குற்றம் செய்தவர்களா? என்பது ஒருபுறம் இருக்க, தவறு செய்யும் அனைவரையும் இவர்கள் தண்டிப்பதில்லை. ஏன் இவர்களின் இயக்கத்தில் இருந்து கொண்டே மார்க்கத்திற்கு மாற்றமான எத்தனையோ காரியங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ இல்லை.

இந்த விஷயத்திலும் நேர்மையான போக்கை இவர்களிடம் காண முடியவில்லை. இவ்வாறு தண்டிப்பதற்கு விதிமுறைகளையோ ஒழுங்கு முறைகளையோ இவர்கள் கடைபிடிப்பதில்லை. திடீரென ஒருவனைத் தாக்க வேண்டும் என்று நாடினால் தாக்கி விடுவார்கள்.

இந்தக் காரியத்தில் ஈடுபடும் இவர்கள் இதன் பிறகு வரும் விளைவுகைள எதிர்கொள்ளும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ பிரச்சனை வரும் போது ஓடி ஒளியும் கோழைகளாக உள்ளனர்.

ஒருவனை அடிக்க வேண்டியது. அவன் காவல் துறையிடம் சென்று புகார் கொடுத்து காவல் துறை வந்தால் ஊரை விட்டும் ஓடிவிடுவது. காவல் துறையினர் பிரச்சனையில் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களை இழுத்துச் செல்வார்கள்; தரக்குறைவாகப் பேசுவார்கள்; தண்டனை கொடுப்பார்கள். இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர்.

இவர்கள் தான் சமுதாயப் பாதுகாவலர்களாம். இந்தக் கோழைகள் தங்களுக்கு ஜிஹாதிகள் என்று வேறு வெட்கமில்லாமல் கூறிக் கொள்கின்றனர்.

ஒரு பிரச்சனை ஏற்படும் போது சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பின் விளைவுகளை யோசித்து ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரச்சனைகளை அணுகுகின்றனர்.

இவர்களின் அவசர புத்தியால் ஒரு சிறிய பிரச்சனை பூதாகரமாகி பெரும் கலவரமாக உருவெடுக்கின்றது. இதன் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர்.

சத்தியவாதிகள் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை வரவேற்று அவற்றுக்குச் சரியான விளக்கத்தை அளிப்பார்கள். கருத்தை கருத்தால் வெல்வார்கள். அசத்தியவாதிகள் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். இவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்யும் போது அதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் அடிதடியில் இறங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. எனவே அடிதடியில் இறங்குவார்கள். தோல்வியைத் தழுவார்கள்.

நமது மார்க்க அழைப்பாளர்கள் இவர்களின் சறுகல்களையும் வழிகேடுகளையும் மக்களுக்கு விளக்கும் போது இவர்கள் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதை விட்டுவிட்டு நமது அழைப்பாளர்களைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தத் தாக்குதலில் கூட இவர்கள் கோழைகள் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பதாக நமது அழைப்பாளரை அழைத்துச் சென்று கூட்டாகப் பலர் சேர்ந்து கொண்டு தனி நபரை ஆயுதங்களால் தாக்குகிறார்கள் என்றால் இவர்களின் கோழைத் தனத்தை எப்படி வர்ணிப்பது என்று நமக்குத் தெரியவில்லை.

இவர்களின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொண்டு இவர்களின் இயக்கத்திலிருந்து பலர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களை இவர்கள் விட்டுவிடுவதில்லை. மீண்டும் தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதற்குக் கட்டுப்பட மறுப்பவரை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்வதற்குக் கூட இவர்கள் தயங்குவதில்லை.

ஜிஹாத் செய்ய வேண்டும் என்று பேசும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம்களைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதைப் புரிய முடிகின்றது. தங்களுக்கு எதிராகச் செயல்படுவர் முஸ்லிமாக இருந்தாலும் பராவாயில்லை, அவரை அழிக்க யோசிக்க மாட்டார்கள்.

இவர்களின் இதே சிந்தனையில் ஊறிப் போனவர்கள் இன்றைக்கு பாகிஸ்தானிலும் இன்னும் பிற நாடுகளிலும் தாங்கள் ஜிஹாத் செய்வதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம்களையே கொன்று குவித்து வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு மார்க்கத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். “மார்க்கம் அவ்வாறு கூறவில்லை; இது பற்றி உண்மையை மக்களுக்கு விளக்க விவாதத்திற்கு வாருங்கள்’ என நாம் இவர்களுக்கு அழைப்பு விட்டால் அதிலும் தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

விவாதம் செய்யக்கூடாது என இஸ்லாம் கூறுவதாகப் பொய் கூறி விவாதத்துக்கு வர மறுக்கின்றனர்.

மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டைக் கொள்கையாகக் கொண்டவர்கள் மட்டுமே ஈருலகத்திலும் வெற்றி பெற முடியும்.

ஆனாôல் இவர்களோ இவ்விரண்டிலுள்ளவற்றில் எந்த அம்சம் இயக்கத்தை வளர்க்க உதவுமோ அவற்றை மட்டும் பேசுவார்கள். உதாரணமாக ஜிஹாத், பைஅத், ஒற்றுமை கோஷங்கள். இந்த ஓரிரு விஷயங்களைக் கூட இவர்கள் முறையாக சமுதாயத்துக்குக் கூறவில்லை. மாறாக இவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்து இஸ்லாத்தை களங்கப்டுத்த முயற்சிக்கின்றனர்.

குர்ஆன்  ஹதீஸ் ஆகிய இரண்டும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய ஏராளமான கடமைகளை கற்றுத் தருகின்றன. இவற்றில் எந்தக் கடமையை ஆற்றினால் மக்களிடம் எதிர்ப்பு வருமோ, ஆதரவு கிடைக்காதோ அது மாதிரியான விஷயங்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள்.

எனவே அறிவுச் சிந்தனை உள்ள யாரும் இந்த சந்தர்ப்பவாதிகளின் இயக்கத்தில் அங்கம் வகிக்க மாட்டார்கள். பலர் சிந்திக்கத் தொடங்கி இவர்களை விட்டு வெளியேறி தங்களை காத்துக் கொண்டுள்ளனர். சமுதாயத்துக்குப் பலனில்லாத, சமூகத்திற்குத் தீங்கிழைக்கக்கூடிய இந்த இயக்கத்தினரை இஸ்லாமிய சமூதாயம் முற்றிலுமாகப் புறக்கணிப்பது அவசியம்.

————————————————————————————————————————————————————–

இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள்

மனிதன், மனிதனை அடிமைப்படுத்தும் அநியாயத்திற்கு எதிராகப் பூத்த மார்க்கம் தான் இஸ்லாம். மனிதன், தன்னைப் போன்ற இன்னொரு மனிதனைக் கடவுளாக நினைக்கும் அறியாமையை ஒழிக்கப் புறப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி தான் இஸ்லாம்.

உலகில் ஒரு மனிதன், சக மனிதனை அடிமைப்படுத்துவதற்கான பல்வேறு காரணங்களை நாம் காணலாம்.

  1. ஆட்சி அதிகாரம்

தலைமுறை தலைமுறையாகவோ அல்லது தேர்தல் முறை மூலமாகவோ ஒருவனுக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கின்றது. அவ்வாறு அவன் ஆளத் துவங்குகின்ற போது மக்கள் போற்றவும் புகழவும் ஆரம்பிக்கின்றனர். அவனுடைய தயவை நாடுபவர்கள் அவனுடைய காலில் விழுந்து வணங்குகின்றனர். மக்களின் இந்த அறியாமை அல்லது நயவஞ்சகப் போக்கு, அதுவரையில் சாதாரணப் பிறவியாக, சாமானிய மனிதனாக இருந்த அவனை, “தான் ஒரு சக்தி’ என்று எண்ண வைக்கின்றது. இதன் காரணமாகத் தன்னை ஒரு கடவுள் என்று எண்ணத் தலைப்படுகின்றான்.

  1. அபார ஆற்றல்

பிற மனிதர்களை விட ஏதாவது ஒரு வகையில் ஒரு திறமை அல்லது ஓர் ஆற்றலை உண்மையிலேயே ஒருவன் பெற்றிருப்பான். அல்லது அத்தகைய ஆற்றல் இருப்பதாக நடிப்பான். அவ்வளவு தான். அவன் கடவுளாக்கப்பட்டு விடுவான். உதாரணத்திற்குச் சொல்வதென்றால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆந்திரத்தில் என்.டி.ஆர். போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

  1. அற்புதங்கள்

உலகத்தில் ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். தாங்கள் உண்மையான இறைத் தூதர்கள் என்று நிரூபிப்பதற்காகவும், நிறுவுவதற்காகவும் அல்லாஹ் அவர்களுக்குச் சில அற்புதங்களை வழங்குகின்றான். அவ்வாறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அந்தத் தூதர்களை மக்கள் கடவுளாக்கி விடுவர். இதற்கு உதாரணமாக ஈஸா (அலை) அவர்களைக் குறிப்பிடலாம்.

  1. குலம்

மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொண்ட குல உயர்ச்சி ஒரு குறிப்பிட்ட சாராரைக் கடவுளாகவும் மற்றவர்களை அடிமையாகவும் ஆக்கி விடுகின்றது. இதற்கு இந்தியாவில் பிராமணர் குலத்தை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

  1. மதப் பிரச்சாரம்

இறைத் தூதர்கள் இறந்த பிறகு வேதத்தை விளக்குகின்ற பொறுப்பை வகிப்பவர்கள் வேதத்தை விளங்கிய ஆலிம்கள் ஆவர். அவர்கள் மத போதகர்கள், மத குருமார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இரு வகையினர்.

ஒரு வகையினர் வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்களிடம் விளக்கி அவர்களை நேரிய, சீரிய பாதையில் அழைத்துச் செல்பவர்கள். மற்றவர்கள் வேதத்தில் உள்ளதை மறைத்து இல்லாதது பொல்லாததைச் சேர்த்து தங்கள் மனோ இச்சைக்குத் தக்க மக்களை அழைத்துச் செல்வார்கள். இவர்களுடைய வார்த்தைகளை மக்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். இறைக் கட்டளைக்கு மாற்றமாக அவர்கள் கூறினாலும் மக்கள் அதை ஏற்று அவர்களை அப்படியே கடவுளாக்கினர். மக்கள் அவர்களுக்கு அடிமையாயினர். அவர்களும் மக்களை அடிமையாக்கினர்.

மனிதனை மனிதன் கடவுளாக்குகின்ற இந்த ஐந்து வகைகளானாலும் சரி, இதல்லாத வேறு வகையானாலும் சரி. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள ஐந்தாவது வகை தான் மிக அபாயமானதும் ஆபத்தானதுமாகும்.

ஏனையவற்றை விட்டும் மக்களை மீட்பதை விட மத குருமார்களிடமிருந்து மக்களை மீட்பது தான் மிகக் கடுமையானதாகும். அதாவது, மத குருமார்கள் என்ற போலிக் கடவுளர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது மிகவும் சிரமமான ஒன்று. காரணம், இவர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மீகம் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கின்றனர். இதில் மக்கள் ஏமாந்து போகின்றனர்.

இந்த ஏமாற்று வேலையில் முதல் இடத்தை வகிப்பவர்கள் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, அதாவது யூத, கிறித்தவ மத குருமார்கள் ஆவர். எனவே இவர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

யூத, கிறித்தவ மத குருமார்கள்

மந்திரவாதிகளை மிஞ்சிய இந்த மத குருமார்களின் மாய வலையில் மக்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் அவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது.

இவர்கள் இறைவனுக்கு எப்படி மாறு செய்தார்கள்? இறைக் கட்டளையை எப்படி மீறி நடந்தார்கள்? என்பதைத் திருக்குர்ஆன் வரிசையாகப் பட்டியலிடுகின்றது.

அடுத்தவருக்கு அறிவுரை

இந்த மத குருமார்கள் பிறருக்கு நன்மையை ஏவி, அவர்களைத் தீமையை விட்டும் தடுப்பார்கள். ஆனால் அந்த நன்மையைத் தாங்கள் செய்ய மாட்டார்கள். மக்களை விட்டும் தடுத்த தீமையை இந்த மத குருமார்கள் செய்து கொண்டிருப்பார்கள். இதைத் தான் திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் இறைவன் கண்டிக்கிறான்.

வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் 2:44

தீமையைத் தடுக்காமலிருத்தல்

தீமை நடக்கும் போது, அந்தத் தீமையைக் கண்டு கொள்ளாமல், அதைத் தடுக்காமல் வாய் பொத்தி மவுனமாயிருந்தனர். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

அவர்களின் பாவமான கூற்றை விட்டும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 5:63

இவ்வாறு தடுக்காததுடன் மட்டுமல்லாமல் அந்தத் தீமைகளை விட்டு விலகியும் இருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் இறைத் தூதர்களுடைய சாபத்திற்கும் உள்ளானார்கள்.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாங்களும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!என்று கூறுவீராக!

தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், அவர்கள் வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.

அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 5:77-79

சத்தியத்தை மறைத்தல்

இறைவன் இவர்களுக்கு வேதத்தில் அருளிய உண்மையை அப்படியே மறைத்தனர். இதையும் நாம் திருக்குர்ஆனில் பார்க்கலாம்.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

(அல்குர்ஆன் 2:146)

இறைவனின் வேத வசனங்களை அற்ப விலைக்கு விற்றனர்.

அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப் பகரமாக வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த அற்பமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக் கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் உறுதி மொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

அல்குர்ஆன் 7:169

இப்படி விற்று அவர்கள் சாப்பிடுவது நரக நெருப்பைத் தான் என்று இறைவன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!

அல்குர்ஆன் 2:174, 175

முக்கடவுள் கொள்கை

இறைவனால் அளிக்கப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரே ஒரு இறைவனை மட்டுமே வணங்கச் சொல்கின்றன. ஆனால் இந்தப் பாதிரிமார்களோ அந்த ஏகத்துவக் கொள்கையை மறைத்து, மாற்றி முக்கடவுள் கொள்கையை தங்கள் கைகளால் எழுதித் திணித்தனர். வேதத்தில் திருத்தங்களையும் செய்தனர். இதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

அல்குர்ஆன் 2:79

இவர்கள் செய்த இந்தத் திருத்தங்கள், தில்லுமுல்லுகளால் ஏற்பட்ட விளைவு என்ன?

உலகெங்கும் வாழ்கின்ற 1000 மில்லியன் அதாவது நூறு கோடிக்கு மேற்பட்ட கிறித்தவர்கள்  தவறான கடவுள் கொள்கையில் வீழ்ந்து தடம் புரண்டு விட்டனர். இது தற்போது உலகில் இருப்பவர்களின் எண்ணிக்கை தான். ஈஸா நபி காலம் முதல் இன்று வரை வாழ்ந்த கிறித்தவர்கள் அனைவரையும் சேர்த்தால் இது பல நூறு கோடிகளைத் தாண்டும். இப்படிப்பட்ட கடைந்தெடுத்த வழிகேட்டிற்கு யார் காரணம்? இந்த மத குருமார்கள் தான். இன்று உலகில் கடவுள் மறுப்புக் கொள்கையான நாத்திகம் வளருவதற்கும், பொதுவுடைமைக் கொள்கை என்ற புதிய கொள்கை தோன்றுவதற்கும் இந்த மத குருமார்கள் தான் காரணம்.

பணம் படைத்த பாதிரி உலகம்

அல்லாஹ் திருக்குர்ஆனில் இவர்களின் பொருளாதாரச் சுரண்டலைப் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக!

அல்குர்ஆன் 9:34

இது திருக்குர்ஆன் அருளப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மத குருமார்களைக் குறிக்கின்றது. குர்ஆன் அருளப்பட்ட காலத்திற்குப் பின் போப் எனப்படுபவர்கள் நடத்திய பொருளாதாரச் சுரண்டல் பல்வேறு புரட்சிகளை உருவாக்கியது.

தேவாலயம் தான் ஆட்சியாளர்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்ட அதிகார மையமாகத் திகழ்ந்தது. திருச்சபை தான் ஆளும் வர்க்கத்தைத் தீர்மானிக்கின்ற சர்வாதிகார சாம்ராஜ்யமாகச் செயல்பட்டது. கிறித்தவ உலகத்தின் மொத்தச் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்கு போப்பாண்டவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தனர்.

முதலாளிகள், தொழிலாளிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்தனர். அவர்களை மொட்டையடித்தனர்.

பணக்கார போப்புகளும் பணக்கார முதலாளிகளும் தொழிலாளி வர்க்கத்தின் மீது அரங்கேற்றிய அரக்கத்தனமான சுரண்டலை எதிர்த்து நடந்த புரட்சியில் தோன்றியது தான் பொதுவுடைமைக் கொள்கை.

எங்களை அடிமைப்படுத்திக் காசு பறிக்கும் மாசு நிறைந்த கடவுள் எங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் நாத்திகம் என்ற நச்சுக் கருத்துக்குத் தாவினர்.

மத உலகம், மடாலய உலகம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்க ஆரம்பித்ததால் மக்கள், மதம் மற்றும் வேதத்தை விட்டு வெளியேறினர்; வெருண்டோடினர்.

ஆன்மீகமா? அரசியலா?

தேவாலயத்தின் அதிகார மையம் ஆட்சியாளர்களைத் தனக்கு முன்னால் முழு அளவில் மண்டியிட்டு நிற்கச் செய்தது. சர்வாதிகாரம் படைத்த மத சாம்ராஜ்ய மன்னர்களைத் தனக்கு முன்னால் சரணாகதியாக்கி, சக்தியற்ற கைதியாக்கி, சாஷ்டாங்கமாகக் கிடக்க வைத்தது. ஏன் என்று கேட்பவர்களை எதிர்த்துப் பேசி, கிளர்ச்சி செய்த ஆட்சியாளர்களை மத விலக்கு செய்தது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு கூறலாம்.

பதினோறாம் நூற்றாண்டில் போப்பாகப் பதவி வகித்த ஹெல்டிபிராண்ட், தேவாலயத்தின் ஏகாதிபத்தியத்தைக் குறியாகக் கொண்டவர். போப் உலகில் ஈடு இணையற்றவர். “உலகில் உள்ள மதத் தலைவர்களுக்கும், மன்னர்களுக்கும் போப் தான் தலைவர்; மன்னர்களைப் பதவியில் அமர்த்தவும், அகற்றவும் செய்கின்ற அதிகாரம் படைத்தவர்” என்ற நம்பிக்கையில் உறுதியானவர்.

கி.பி. 1075ல் அவருக்கும் இத்தாலியின் ஆட்சியாளர் நான்காம் ஹென்றிக்கும் மோதல் ஏற்பட்டது. அவ்வளவு தான். அவரை போப்பாண்டவர் ஊஷ்-ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் – மத விலக்கம் செய்கின்றார். இதன் மூலம் நான்காம் ஹென்றி, கிறித்தவர் என்ற தகுதியை இழந்து விடுகின்றார். நில மானிய பிரபுக்கள், ராணுவ வீரர்கள் யாரும் இனி மன்னருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்று அறிவித்து விடுகின்றார். மன்னர் நான்காம் ஹென்றி, போப்பிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு ஆளானார்.

கி.பி. 1077ல் ஜனவரி மாதத்தில் கடுமையான குளிரில் ஆல்ப்ஸ் மலையைத் தாண்டி போப் தங்கியிருந்த கனோஸா மாளிகைக்கு முன்பாக, கொட்டும் பணியில் சொட்டும் கண்ணீருடன் காலில் காலணியின்றி கடுந்தவம் மேற்கொண்டார்; காத்திருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு தான் போப் மனமிறங்கி, மண்டியிட்டிருந்த நான்காம் ஹென்றியை மன்னித்தார். நான்காம் ஹென்றியின் இந்தத் தவம், “ஹென்றியின் கனோஸா கடுந்தவம்’ என்று அழைக்கப்படுகின்றது.

போப்பின் அதிகாரக் குவிப்புக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு!

ஆன்மீகத்தை அரசியலை விட்டும் பிரிப்பதற்காக நடைபெற்ற ஓர் அடிக்கல் நாட்டு!

இதுவும், இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகளும் ஆன்மீகத்தை விட்டு அரசியலை நிரந்தரமாகப் பிரிக்கக் காரணமானது. இதன் பின்னர் தான் செக்யூலரிஸம் எனும் மதச் சார்பின்மை சிந்தனை தோன்றியது. திருச்சபை என்பது தேவாலயத்துடன் நிற்க வேண்டும்; தெருச் சபைக்கு வரக் கூடாது என்று ஆன்மீகத்தின் கதவுக்குத் தாழிட்டனர்; தடை போட்டனர்.

ஆய்வுக்குத் தடை! அறிஞருக்குத் தண்டனை!

மகுடம் பூண்ட மடாலய சன்னியாச சாம்ராஜ்யம் இத்துடன் நிற்கவில்லை. அதன் ஆதிக்கம் அறிஞர்களின் ஆய்வுக்கும் தடை விதித்தது. அறிஞர்களுக்குக் கொடும் தண்டனைகளை விதித்தது. அந்த விபரத்தைப் பார்ப்போம்.

14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் கொடிகட்டிப் பறக்கத் துவங்கின. கப்பலுக்குத் திசை காட்டும் கருவியைக் கண்டுபிடித்தனர். இது ஐரோப்பியர்களின் தணியாத கடற்பயண தாகத்திற்குத் தண்ணீர் ஊட்டியது. அவர்களின் கடற்பயணம் புதுப் புது தீவுகளை, அமெரிக்கா போன்ற நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. அச்சடிக்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் தான் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டு பிடித்தார். படுவா என்பவரின் உதவியுடன் வில்லியம் ஹார்வி, உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றிய ஆய்வை வெளியிட்டார். கோபர் நிகஸ் விண்வெளியின் கோள்களை ஆராய்ந்து பூமி உருண்டை வடிவம் என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

இந்தக் கருவாக்கத்திற்கு கலீலியோ ஓர் உண்மை உருவாக்கத்தைக் கொடுத்தார். அவ்வளவு தான்! பாதிரி உலகம் அவர் மீது படையெடுத்தது. காரணம் அது பைபிளின் கூற்றுக்கு நேர் முரணானது.

உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.

1 குறிப்பேடு 16:30

நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.

திருப்பாடல்கள் 104:5

சூரியன் தோன்றுகின்றது; சூரியன் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.

சபை உரையாளர் 1:5

Geo-Centric – பூமியை சுற்றித் தான் சூரியன் வலம் வருகின்றது என்ற சித்தாந்தத்தை கிறித்தவ உலகம் முழுமையாக நம்பியிருந்தது.

ஆனால் கலீலியோ Heleo-Centric சூரியனைச் சுற்றியே பூமி மற்றும் இதர கோள்கள் வலம் வருகின்றன என்ற அறிவியல் உண்மையை வெளியிட்டார்.

பாதிரி உலகம் இதனைத் தனக்கு எதிரான புரட்சி என்றும், போப் உலகம் இதைத் தங்களுக்கு எதிரான போர்க் கொடி என்றும் கருதியது.

போப் சூரியனைப் போன்றவர்; அரசர் சந்திரனைப் போன்றவர்; போப்பிடமிருந்து ஒளியைப் பெற்றுத் தான் அரசர் பிரகாசிக்க முடியும் என்ற அதிகார போதையிலிருந்த போப் உலகம், கலீலியோவின் கண்டுபிடிப்பை தங்களின் சாம்ராஜ்யத்தைத் தகர்ப்பதற்கு வைக்கப்பட்ட வேட்டாக, வெடிகுண்டாக நினைத்தது. அதனால் கலீலியோவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டித்தது.

இதுபோன்று பல விஞ்ஞானிகளை Heresy (கிறித்தவத்திற்கு எதிரான சிந்தனை) என்ற குற்றச்சாட்டின்படி மரண தண்டனை விதித்துக் கொன்றது.

தன்னிடத்தில் குவிந்து கிடந்த அதிகார மையத்தின் காரணமாக அறிவுக்கும் ஆய்வுக்கும் அறிவியலுக்கும் திரையிட்டது. அரசியல்வாதிகளை வேதத்தை விட்டு விரட்டியது போன்று அறிவு ஜீவிகளையும், அறிவியலாளர்களையும் விரட்டியது.

போப்புக்கு எதிரான புரட்சிப் போர்

பூனைக்கு மணி கட்டுவது யார்? போப்புலகத்திற்கு எதிராகப் புரட்சி செய்வது யார்? அராஜக வெறிக்கு எதிராக ஆர்த்தெழுபவர் யார்? வேதத்தை வைத்து வயிறு கழுவி மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்ட மடாதிபதிகளை அடையாளம் காட்டுவது யார்?

இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்தவர் தான் மார்ட்டின் லூதர்! ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர் பதினைந்தாம் நூற்றாண்டில் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார்.

அதுவரை பைபிள் மூல மொழியிலேயே முடங்கிக் கிடந்தது. மத குருமார்கள் சொல்வது தான் வேத வரிகளாக, வேத வசனங்களாக இருந்தன.

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் 2:78

அல்லாஹ் கூறுவது போன்று பைபிளின் உண்மையான வேத வடிவம் இல்லாமல் கிறித்தவர்கள் வெறும் யூகங்களையே வேதமாக நம்பியிருந்தனர்.

இப்போது தான் மார்ட்டின் லூதர், போப்பாண்டவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் புனிதப் பணியை மேற்கொண்டார். மதுவின் மயக்கத்திலும் மாதுவின் சுகத்திலும், சூதாட்டத்திலும் திளைத்து, சொர்க்கபுரிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போப்புகளின் அந்தரங்க வாழக்கையை அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.

கர்த்தரின் பாவ மன்னிப்புக்களை, பாவ மன்னிப்புச் சீட்டுகளை பாதிரிகள் விற்று வந்தனர்.

As soon as the coin in the coffer rings, the soul from purgatory springs

“கல்லாப் பெட்டியில் வெள்ளிக் காசு தர்மமாகத் துள்ளி விழும் போது பாவக் கிடங்கில் தண்டனை பெற்றுக் கொண்டிருக்கும் ஆத்மா சொர்க்கத்திற்குத் துள்ளிக் குதித்துப் பறந்தோடி விடும்” என்று பொய் சொல்லி பாதிரிகள் பாவ மன்னிப்புச் சீட்டுக்களை விற்றுப் பணம் திரட்டினர்.

மார்ட்டின் லூதர் இதையும் தோலுரித்துக் காட்டி, ஜெர்மனி எதற்காக இத்தாலிய தேவாலயத்திற்குப் பணம் கட்ட வேண்டும் என்ற தேசிய வாதத்தைக் கிளப்பினார். இதைத் தாங்க முடியாமல் ஆன, தூங்க முடியாமல் தவித்த போப் வர்க்கம் Ex-communication – மத விலக்கு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தியது.

மத விலக்கு என்ற இரும்புச் சக்கரத்தையும் மார்ட்டின் லூதர் தகர்த்தெறிந்தார். புராட்டஸ்டன்ட் பிரிவு தோன்ற இவர் காரணமானார். இவரைப் போன்று பல எதிர்ப்பாளர்கள் படை படையாகக் கிளம்பினர். ஆதிகக்கப் பாதிரிகள், அதிகார வர்க்கங்கள் அவர்களைத் தண்டிப்பதற்காக சமய நீதிமன்றங்களை (Inquisition)தனியாக நிறுவி தண்டனை வழங்கியது. கத்தோலிக்கத்திற்கு எதிரானவற்றைப் பட்டியலிட்டுத் தடை செய்தார்கள். ஆனால் அத்தனையையும் தாண்டி மத குருமார்கள் எதிர்ப்பு உச்சத்தை அடைந்தது. இறுதியில் போப்புலகம் தலைகீழாகப் புரண்டது. அரசியல் உலகம் ஆட்சியைக் கையில் எடுத்தது. போப் தலைமை பொம்மைத் தலைமையானது. தேவாலயத்திற்குள்ளும், தெய்வீகத்திற்குள்ளும் போப்புலகம் சிறை வைக்கப்பட்டது. மதச் சார்புடைமை மண்ணைக் கவ்வியது. மதச் சார்பின்மை மகுடம் சூடியது.

மத குருமார்கள் தங்கள் கைகளால் வேதத்தில் விளையாடிய விளையாட்டுக்களால், கைச்சரக்குகளால், கற்பனைக் கலவைகளால் மானுட சமுதாயம் அந்த வேதத்தை விட்டும் விலகிச் சென்றது.

மத குருமார்கள் வேதத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லியிருந்தால் உண்மையான வேதமான குர்ஆனின் பக்கம் மக்கள் வந்திருப்பார்கள். ஒரு பெரும் சமுதாயத்தை ஓரிறைக் கொள்கையில் ஒண்ட விடாமல், அழகிய கொள்கையில் மக்களை அண்ட விடாமல் கிறித்தவ மத குருமார்கள் தடுத்து நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல், உலகில் நாத்திகம், மதச் சார்பின்மை, பொதுவுடைமை போன்ற தீய கொள்கைகள் தோன்றுவதற்கும் காரணமாயினர்.

துறவறம்

இந்த மத குருமார்கள் ஏற்படுத்திய மற்றொரு தீய விளைவு தான் துறவு! இந்தத் துறவு நிலையை இறைவன் இவர்கள் மீது விதிக்கவே இல்லை.

தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. 

(அல்குர்ஆன் 57:27)

துறவு என்பது மனிதனின் இயற்கை நிலைக்கு மாற்றமானதாகும். அதை இந்தப் பாதிரிமார்கள் தாங்களாகத் தேர்வு செய்து விட்டு இன்று கன்னியாஸ்திரிகளிடம் காம விளையாட்டுக்களில் திளைத்துக் கிடக்கின்றனர். கடுகளவு குற்ற உணர்வு கூட இல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். தற்போதைய போப் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

ஏனைய மத குருமார்கள்

இதுவரை கிறித்தவ மத குருமார்களைப் பற்றி மட்டும் நாம் கூறியிருப்பதால் யூத மத குருமார்கள் யோக்கியர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் இரு மதங்களின் குருமார்களையும் சேர்த்துத் தான் குறிப்பிடுகின்றன. கிறித்தவ மதத்தினரின் ஆட்சிக் குடை உலகெங்கிலும் விரிந்ததால் அவர்கள் செய்த அட்டூழியங்களின் பரிமாணம் நமக்கு அதிகமாகக் கிடைக்கின்றது. யூதர்களுடைய ஆட்சி இவர்களுடைய ஆட்சியைப் போல் விரியவில்லை. அவ்வாறு விரிந்திருந்தால் கிறித்தவப் பாதிரிகளின் அட்டூழியங்களை விட யூதப் பாதிரிகளின் அட்டூழியம் மிகப் பயங்கர அளவில் தாண்டியிருக்கும். யூதப் பாதிரிகளின் அக்கிரமங்கள் வெளியில் தெரியவில்லை. அவ்வளவு தான். மற்றபடி இவ்விரு மத குருமார்களின் தன்மைகள் ஒன்றுக்கொன்று அப்படியே நூறு சதவிகிதம் ஒத்தவை தான்.

இவை தவிர இந்து மத குருமார்களைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். யூத, கிறித்தவ மதங்கள் மற்றும் அவற்றின் வேதங்கள் உண்மையான ஓர் இறைவனிடமிருந்து வந்தவை. ஆனால் பின்னால் மத குருமார்களால் இம்மதங்கள் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இந்து மதத்தினர் வைத்திருக்கும் வேதத்தை இறை வேதம் என்று சொல்வதற்கு எந்த ஓர் அடிப்படையோ முகாந்திரமோ இல்லை.

 யூத, கிறித்தவ மதத்தினர் தங்களுடைய வேதத்தை இறை வேதம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு நூலிழை அளவுக்குத் தொடர்பு உள்ளது என்று கூறலாம். ஆனால் இந்து மதத்தின் வேதத்திற்கு அந்தத் தொடர்பு கூடக் கிடையாது.

நூலிழை தொடர்புள்ள அந்த மத குருமார்களே இவ்வளவு ஆட்டம் போட்டிருக்கும் போது அந்தத் தொடர்பு கூட இல்லாத இந்து மத குருமார்கள் போடும் ஆட்டத்தைச் சொல்லவா வேண்டும்?

இந்து மத குருமார்கள் தான் இந்தியாவில் மனு தர்மத்தின் மூலம் மனித சமுதாயத்தை, பிறப்பின் அடிப்படையில்  நான்கு வர்ணங்களாகப் பிரித்து, உட்பிரிவாக நான்காயிரம் ஜாதிகளைத் தோற்றுவித்தவர்கள்.

இவர்கள் தான் மதம், வேதம் என்ற பெயரில் நடத்திய காம லீலைகள் ஒளி அலைகளில் வெள்ளமாய் வெளியானதை அண்மையில் நாம் பார்த்தோம். அனுராதா ரமணன் என்ற பெண்ணிடம் காஞ்சி சங்கராச்சாரி நடத்திய காம, சரச லீலைகள், நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நடத்திய சல்லாபங்கள் எல்லாம் நாம் நன்கறிந்தவை. புலன் விசாரணைக்கு வராமலேயே புதைக்கப்பட்ட புட்டபர்த்தி சாய்பாபாவின் கொலை விவகாரங்கள் போன்றவை தொடர்வதற்குக் காரணம் மக்களுடைய அறியாமை தான். இந்த மத குருமார்கள் மனித பலவீனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுவது தான். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி தனக்கு இருப்பதாக யார் கூறினாலும் அவன் அயோக்கியன், அகில உலகப் பொய்யன்.

ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் தனக்கு இருப்பதாகச் சொல்பவன் பித்தலாட்டக்காரன் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மக்கள் இவர்களை நம்பி ஏமாறுகின்றனர்.

ஏமாற்றுபவர்களைக் கண்டிப்பது போலவே ஏமாறுபவர்களையும் திருக்குர்ஆன் கண்டிக்கின்றது.

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் 2:78

மத குருமார்கள் தவறாகக் கூறினாலும் அவர்களைப் பின்பற்றுவோர் ஆய்வு செய்தே பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வசனம் வலியுறுத்துகின்றது.

மனிதச் சட்டத்தில் கூட அறியாமைக்கு மன்னிப்பு இல்லை. வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவன், போதைப் பொருள் வைத்திருந்து சுங்கச் சோதûனையின் போது மாட்டிக் கொண்டால், “அது இருந்ததே எனக்குத் தெரியாது; யாரோ என்னுடைய பையில் வைத்து விட்டார்கள்; நான் தெரியாமல் கொண்டு வந்து விட்டேன்’ என்று வாதிப்பது எடுபடாது. உண்மையிலேயே தெரியாமல் இருந்தாலும் கிடைக்கின்ற தண்டனையை விட்டு அவர் ஒரு போதும் தப்ப முடியாது.

உலகில் மக்களை வழி கெடுத்த இந்த மத குருமார்களும், வழிகெட்ட அந்த மக்களும் மறுமையில் நரகில் வீழ்வார்கள். அப்போது அவர்கள் பேசிக் கொள்ளும் உரையாடலை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் “எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். “ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்என்று (அவன்) கூறுவான்.

அல்குர்ஆன் 7:38

ஏமாறுபவர்களுக்கும் சேர்த்தே இரு மடங்கு தண்டனையை இறைவன் அளிக்கின்றான்.

இஸ்லாமிய மத குருமார்கள்

இதுபோன்ற வசனங்களின் காரணமாக முஸ்லிம்களிடம் இஸ்லாமிய மத குருமார்களின் வேலை பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் மத குருமார்களின் சேட்டை அறவே இல்லை என்று சொல்வதற்கில்லை. பிற மத குருமார்களைப் போன்று இங்கும் அவர்களின் ஆதிக்கம் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் இம்மார்க்கத்தின் இறை வேதமான அல்குர்ஆன் கறை படாமல், இவர்களின் கை படாமல், கலப்படமில்லாமல் கடவுளின் காப்புறுதியைப் பெற்றுத் திகழ்வதால் மத குருமார்கள் இங்கு எதையும் சட்டமாக்க முடியாது; சாசனமாக்க முடியாது.

இதற்கு உதாரணமாக தமிழக வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் சமாதி வழிபாடு, கல்லறை வழிபாடு அல்லது தர்ஹா வழிபாடு கிடையாது. ஆனால் மத குருமார்கள் தமிழகத்தில் அந்த வழிபாட்டை நடத்தி வந்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் 1980களிலிருந்து இதற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, படை வீரர்களாகச் செயல்பட்டு அக்னி ஆற்றைக் கடந்து அந்தத் தீமையை ஒழித்துக் கொண்டிருக்கிறது.

வரதட்சணை என்பது இஸ்லாத்தில் இல்லை. அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத்தினர் கிளம்பி ஒரு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டு வாழ்க்கைப் படகில் ஏற்றி கரை சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போல் ஒரே மூச்சில், ஒரே அமர்வில் முத்தலாக் என்ற பெயரில் பெண்களை விவாகரத்துச் செய்து அவர்களின் வாழ்க்கையைப் பறிப்பது அல்குர்ஆனில் இல்லை. ஆனால் அதை இந்த மத குருமார்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்த்தெழுந்து அந்தத் தீமையைத் தடுத்து நிறுத்தி, குடும்பப் பெண்களை முத்தலாக் எனும் கோரத் தீமையிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது.

ஆன்மீகம் என்ற பெயரில் அந்தரங்க வாழ்க்கை நடத்துவோரின், நயவஞ்சக வேடம் போடும் மத குருமார்களின் முகத் திரையைக் கிழிக்க முஸ்லிம்கள் ஒருபோதும் தயங்கியது இல்லை.

ஏனைய மதங்களில் நிலை கிடையாது. சாமியார்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களைக் காப்பாற்றவே பக்தர்கள் முயற்சிக்கின்றனர். சங்கராச்சாரியிலிருந்து சாய்பாபா வரை இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். காரணம் அவர்களிடம் உண்மையான வேதம் இல்லை.

ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு ஆகாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்களிடம் உள்ள இந்த உண்மையான அல்குர்ஆன் எனும் பாதுகாக்கப்பட்ட வேதம் தான்.

இஸ்லாமும் புரோகிதமும்

இஸ்லாத்தில் புரோகிதம் என்பது இல்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத் தரகர் அறவே தேவையில்லை என்று இஸ்லாம் அடித்துச் சொல்கின்றது.

இதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான தோற்றுவாய் என்ற அத்தியாயமே அழகிய சான்றாகும். அல்குர்ஆன் என்ற இந்த வேதத்தின் தோரண வாயிலாக இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. அதை இங்கே தருகிறோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

தீர்ப்பு நாளின் அதிபதி.

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

அல்குர்ஆன் 1:1-7

இந்த அத்தியாயத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதுகின்றனர். ஒவ்வொருவரும் அதைக் கண்டிப்பாக ஓதியே ஆக வேண்டும். இந்த அத்தியாயத்தில் இடம் பெறும், “உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடத்திலேயே நாங்கள் உதவி தேடுகிறோம்” என்ற வாக்குமூலத்தை இறைவனிடம் நேரடியாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் இறைவனிடம் பேசும் போது அவருக்கும் இறைவனுக்கும் இடையில் இடைவெளி எதுவுமில்லாமல் ஆகி விடுகின்றது. இந்த நேரடி இறை உறவுக்கு இடையே ஏதேனும் இடைத் தரகு தேவையா? நிச்சயமாகத் தேவையில்லை என்றாகி விடுகின்றது,

அண்மையைத் தரும் ஐவேளைத் தொழுகை

அதிலும் குறிப்பாக தொழுகை இறைவனிடம் மிக மிக அண்மையையும் நெருக்கத்தையும் தருகின்றது. இந்தத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருக்கிறார். (அதேபோல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 416

தொழுகையில் ஒரு முஸ்லிம் தூய இறைவனிடம் உரையாடுகின்றார். ஒருவருக்கு ஒரு முதலமைச்சரை அன்றாடம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் அந்த முதலமைச்சரைக் காண்பதற்கு ஒரு பரிந்துரையாளரைத் தேடுவாரா? ஓர் இடைத் தரகரை நாடுவாரா? நிச்சயமாகத் தேட மாட்டார் என்று அடித்துச் சொல்வோம்.

அது போன்று தான் ஐவேளைத் தொழுகையின் மூலம் ஒரு முஸ்லிம் இறைவனிடம் உரையாடுவதால் அவருக்கும் இறைவனுக்கும் இடையில் ஓர் இடைத் தரகர், மதகுரு தேவையில்லை என்றாகி விடுகின்றது.

இதன் அடிப்படையில் இஸ்லாத்தில் மதகுரு என்ற போஸ்ட் –  பதவி இல்லை. வாடிகனில் போப்புக்கு ஒரு நாற்காலி இருப்பது போல் இங்கு இல்லை. எல்லோரும் இறைவனின் அடிமைகளே! எல்லோருக்கும் இறைவனே எஜமானன். அவன் ஒரே ஒரு ஏக எஜமானன். அதனால் பிற மதத்தில் உள்ள அளவுக்கு மத குருமார்களின் பாதிப்பு இஸ்லாத்தில் இல்லை.

அப்படியே பாதிப்பு இருந்தாலும் அது ஒரு கட்டுக்குள் வந்து விடுகின்றது. காரணம் மத குருமார்கள் வேதத்தை வைத்துத் தான் ஏமாற்ற வேண்டும். திருக்குர்ஆன் எனும் இந்த வேதம் பாதுகாக்கப்பட்ட வேதம். அது ஒரு திறந்த புத்தகம் என்பதால் அதை வைத்து மத குருமார்கள் ஏமாற்ற முடியாது. யாரையும் ஏய்க்க முடியாது.

இப்படி ஒரு துய்மையான வழியை, உண்மையான ஆன்மீகப் பாதையை நோக்கி பகுத்தறிவுள்ள பக்தர்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இறந்த பிறகு உள்ள இறுதியான வாழ்க்கைக்காகத் தங்களை பக்குவப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

————————————————————————————————————————————————————–

பொருளியல்      தொடர்: 10

அருள் வளம்

பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்

இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் மறைமுக அருளான பரக்கத்தை அடைவதற்கான வழிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருடைய உணவு இருவருக்கு போதுமானது. இன்னும் இருவருடைய உணவு நான்கு நபர்களுக்கு போதுமானது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 3837. 3836

பரக்கத் என்பது நம்முடைய லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. அதாவது ஒருவருக்குத் தேவையான உணவைப் போட்டு அதிலேயே இரண்டு பேர் உண்ணலாம் என்று சென்னால் இது சாதாரணமாக நடக்காத காரியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விரலை சூப்பி, பாத்திரத்தை நன்கு வழித்து தட்டில் மீதம் வைக்காமல் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். “உணவில் எதில் பரக்கத் இருக்கிறது என்று நீங்கள் அறியமாட்டீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 3792, 3796

தேவைக்கேற்றவாறு உணவை வாங்கி உண்ண வேண்டும். இதுவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஓரத்திலிருந்து உண்ண வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரக்கத் நாம் உண்ணும் உணவின் நடுவில் தான் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி 1727

இதையும் நாம் நம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் லாஜிக் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் இந்த பரக்கத் என்பதே லாஜிக்கிற்கு அப்பாற்பட்டுத் தான் நடக்கிறது. இதை  எந்த அறிவாளியும் புரிந்து கொள்ள முடியாது. விடை சொல்லவும் முடியாது. எனவே இதையும் நாம் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் காரணத்தினால் நம்ப வேண்டும்.

உண்ணும் உணவை அளந்து போட வேண்டும்

உங்களுடைய உணவை அளந்து போடுங்கள். நீங்கள் பரக்கத் செய்யப்படுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி 2128

உணவை அளக்காமல் போட்டால் அதிலிருக்கும் பரக்கத்தை நாம் சரியான முறையில் அறிய முடியாது. பல வீடுகளில் அளந்து போடாமல் அதிகமான உணவை வீண் விரையம் செய்யக் கூடியவர்களைக் காணலாம். உதாரணத்திற்கு, காலை உணவை வீட்டில் எத்தனை நபர் சாப்பிடுகிறார்கள்? அவர்களுக்குத் தேவை எத்தனை கிராம் கறி? எவ்வளவு அரிசி? என்று கணக்கிட வேண்டும். இதில் தான் அதிகக் குடும்பங்கள் தவறு செய்கின்றன.

பரக்கத்திற்க்கு உதாரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ட உணவும் அவர்களுடைய உடல் பலமும் தான். இரண்டு பேரீத்தம் பழம் மற்றும் தண்ணீர் தான் சாப்பிட்டார்கள். என்றாவது காய்ந்த ரொட்டி கிடைக்கும். ஆனால் அவர்களுடைய உடலமைப்பு பலம் மிக்கதாக இருந்தது. உதாரணத்திற்கு அகழ் யுத்தத்தில் பலர் சேர்ந்து ஒரு பாறையை உடைக்க முற்பட்டனர். ஆனால் இயலவில்லை. இறுதியில் நபிகளார் வந்து ஒரே அடி அடித்ததில் பாறை துண்டு துண்டாகப் பிளந்தது.

அதேபோல் மதீனாவில் ஒரு தருணத்தில் மக்களுக்கு மத்தியில் மிரட்டும் சத்தமொன்று கேட்கிறது. அப்போது பெரும் சலனம் ஏற்படுகிறது. அதைப் பற்றி மக்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற பொழுது நபி (ஸல்) அவர்கள் அபு தல்ஹாவின் குதிரையை எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் முன்பாக அங்கே சென்று விட்டு திரும்பி வந்து, “பயப்படாதீர்கள், ஒன்றுமில்லை” என்கிறார்கள்.

அரபுக் குதிரையெல்லாம் நம் நாட்டுக் கடற்கரையில் இருக்கும் குதிரையைப் போலல்ல. மிகுந்த வலிமையானவை. இப்படிப்பட்ட காரியங்களை சாதாரணமாக யாரும் செய்துவிட முடியாது. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த உடல்வாகைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட உடலுக்கு அவர்களுடைய உணவு காரணமில்லை. மாறாக அதில் அல்லாஹ் செய்த பரக்கத் தான் காரணமாக இருந்தது.

ஸஹர் நேர உணவில் பரக்கத்

பல விதத்தில் அல்லாஹ் பரக்கத்தைத் தருகிறான்.  அதிலொன்று சஹர் நேரத்தில் உண்ணும் உணவாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சஹர் உண்ணுங்கள். உங்களுடைய உணவில் பரக்கத்திருக்கிறது.      

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1923

சஹரைப் பொறுத்த வரை நாம் காலையில் குறைவாகத் தான் உணவு உண்ண முடியும். அந்த உணவிலே ஒரு நாள் முழுவதும் இருக்க முடிகிறதென்றால் அதைப் பார்த்து மாற்றார்கள் ஆச்சரியப்படுகிறார்கள். எப்படி தண்ணீரைக் கூட குடிக்காமல் இருக்க முடிகிறது என்று எண்ணுகிறார்கள். இது தான் அற்புதம்.

அல்லது சிலருக்கு உடல் ஆரோக்கியத்தைத் தந்து அதில் இறைவன் பரக்கத் செய்திருப்பான். உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வருமானத்தைத் தந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் நோயைத் தந்தால் அதில் பரக்கத் இல்லை.

அப்படியானால் செல்வம் மட்டும் பரக்கத்தில்லை. மாறாக நல்ல உடல் ஆரோக்கியம் இருப்பதும் பரக்கத்தாகும். இதை ஒரு முஸ்லிம் நம்பினால் அவன் பேராசை கொள்ள மாட்டான். நபி (ஸல்) அவர்கள் “அதிகமான செல்வத்தைத் தருவாயாக’ என்று கேட்டதை விட, “எதை நீ தந்தாயோ அதில் பரக்கத்தைத் தருவாயாக’ என்று தான் கேட்டிருக்கிறார்கள்.

பெருநாளன்று பரக்கத்

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.  (நூல்: புகாரி 971)

அந்த நாளில், மற்ற நாட்களை விட அதிகம் உணவும் மற்ற பொருட்களும் மிஞ்சிக் கிடப்பதையும் மகிழ்ச்சி பரக்கத்தாக இருப்பதையும் பார்க்கிறோம். அதற்காக அனைவரும் திடலுக்குச் செல்ல வேண்டும்.

பரக்கத்திற்காக பிரார்த்தனை செய்தல்

நபியவர்கள் இந்த பரக்கத்திற்காகப் பிரார்த்தனையும் செய்துள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களில் காணலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.

நூல்: புகாரி 2395

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன்என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பாரக்கல்லாஹ்லி – அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!என்று பிரார்த்தித்து விட்டு, “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்!என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5155

ஒரு மனிதனுக்கு அதிகம் செல்வம் இருப்பதை விட, கொடுக்கப்பட்ட செல்வத்திலேயே அவனது தேவை அனைத்தும் நிறைவேறுவதென்பது அதை விடச் சிறந்தது. இந்த ஒரு பிரர்த்தனையைத் தான் எல்லா திருமணங்களிலும் சொல்லும்படி கட்டளையிட்டார்கள். இதைத் தான் நாமும் இன்று மணமக்களை வாழ்த்துவதற்காகக் கூறுகிறோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் (பரகத்) வளம் சேர்ப்பாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி 6344

குறைந்த செல்வமாக இருந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத் செய்து விட்டால் அதுவே போதுமானதாகும். ஒருவன் இதைச் சிந்தித்தால் அவன் பேராசை கொள்ள மாட்டான்.

எனவே மேற்கூறப்பட்ட அனைத்துச் சட்டங்களும், சம்பவங்களும் நாம் பொருளாதாரத்தில் பேராசை கொள்ளாமலும் மற்றவர்களை மோசடி செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பரக்கத்தைத் தந்திருக்கிறான் என்பதை விளக்குகின்றன.

————————————————————————————————————————————————————–

இப்படியும் சில தஃப்ஸீர்கள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அருளினான். அப்பழுக்கற்ற இறைவேதத்தின் விளக்கத்தை மனித சமுதாயத்திற்கு விளக்கிட முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக நியமித்தான்.

திருக்குர்ஆன் என்பது கருத்து மோதல்களற்ற, முரண்பாடுகளில்லாத ஒரு பரிசுத்த வேதம். தூய இறைவனின் தூது வார்த்தைகள். இறைவனே இதற்கு ஆசிரியர் என்பதால் திருக்குர்ஆனில் தவறு என்றே பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் தவறே இல்லாத ஒரு புத்தகம், வேதம் இருக்கும் எனில் அது திருக்குர்ஆன் என்ற ஒன்று மட்டுமே.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்

(அல்குர்ஆன் 4:82)

இப்படிப்பட்ட இறைவேதத்தை மக்கள் குருட்டுத்தனமாக நம்பக்கூடாது என்றும். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் இறைவன் உத்தரவிடுகிறான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழமாட்டார்கள்.

அல்குர்ஆன் 25:73

சிறிதளவும் தவறில்லாத திருக்குர்ஆனையே குருட்டு பக்தியோடு கையாளக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று இறைவன் கூறுகிறான் எனில், திருக்குர்ஆன் அல்லாத ஏனைய வேதங்களையும், புத்தகங்களையும் அணுகும் முறையைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் முஸ்லிம்கள், இமாம்களின் தஃப்ஸீர்களை (திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் விளக்கங்கள்) தவறுகளுக்கு அப்பாற்பட்டது, பரிசுத்தமானது என்று குருட்டுத்தனமாக நம்புகின்றனர். அதாவது இதன் மூலம் தங்கள் இமாம்களுக்குத் தவறே ஏற்படாது என்ற ஒரு அபத்தமான கருத்தை விதைத்து, அவர்களை தூய இறைவனுடன் சமமாக்குகின்றனர்.

இமாம்களின் மீதுள்ள குருட்டு பக்தி அவர்களின் கண்ணை மறைப்பதே இதன் காரணம்.

குர்ஆனுடைய வசனங்களை இன்னபிற வசனங்களுக்கும், நபிகளாரின் நடைமுறைக்கும் முரணாகப் புரியக்கூடாது என்ற அடிப்படையில் நின்று அறிஞர் பி.ஜே உட்பட தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறும்போது கருத்தால் எதிர்க்க வலுவற்றவர்கள் இது தவறான விளக்கம் என கூப்பாடு போடுகின்றனர். அவ்விளக்கம் குர்ஆனுக்கு எதிராக இருக்கிறது என்பதால் அல்ல.  தங்கள் இமாம்களின் தஃப்ஸீருக்கு மாற்றமாக இருப்பதாலேயே இந்தக் கூப்பாடு.

தங்கள் இமாம்கள் விளக்கம் என்ற பெயரில் எதை உளறிக் கொட்டினாலும் “ஆஹா… என்னே ஒரு அற்புதமான விளக்கம்’ என்று துதி பாடுகின்றனர்.

ஒரு முஸ்லிம், எந்த ஒரு மனிதரின் கருத்தை ஆமோதிப்பதாக, சரி காண்பதாக இருந்தாலும், அது குர்ஆனுடனும் ஆதாரப்பூர்வமான ஹதீசுடனும் ஒத்துப் போகின்றதா என்பதையே அளவுகோலாக முன்னிறுத்த வேண்டும்.

குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றுடன் சம்பந்தமில்லாத, கேலிக்கூத்தான, முரண்பாடான விளக்கங்களை எந்த இமாம் கூறினாலும் அது தவறு என்று அறிந்து நிராகரித்து விட வேண்டும். அதை விடுத்து அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் வேலையை செய்யக் கூடாது.

மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் தலைசிறந்த இமாம்களாக இருந்தாலும் அவர்களும் தவறு செய்பவர்கள் என்பதை இஸ்லாமியர்கள் நன்கு உணர வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகவே குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் இமாம்கள் அளித்த தவறான, அர்த்தமற்ற, கேலிக்கூத்தான, குர்ஆனுக்கு எதிரான விளக்கங்களை இங்கே தொகுத்தளிக்கின்றோம்.

இதன் நோக்கம் அறிஞர்களை குற்றப்படுத்துவதோ, குறை காண்பதோ அல்ல. மார்க்கத்தின் போதனைகள் மக்களைச் சென்றடைய உழைத்த உழைப்பாளிகள் அவர்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும் அவர்கள் கூறியிருக்கின்ற குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான ஏராளமான விளக்கங்களை மக்கள் போற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்க, மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட காரியம் என்பதை இஸ்லாமிய சமுதாயத்திற்கு உணர்த்திடவும், எச்சரித்திடவும், இமாம்களின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள குருட்டு பக்தியை வேரறுப்பதுவுமே இதன் நோக்கம் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாய்க்கு விளக்கம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல்: புகாரி 3225

ஒருவரது வீட்டில் நாய் இருந்தால் மலக்குமார்கள் அவ்வீட்டில் நுழைய மாட்டார்கள் என்பது இந்த ஹதீஸ் சொல்லும் சேதி. (இதில் விதிவிலக்குகளும் உண்டு. அதை ஏனைய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.)

 இந்த ஹதீஸை ஒரு முறை படித்தாலே இக்கருத்து நன்கு விளங்கி விடுகின்றது. இதன் பொருளை புரிவதற்காக சிந்திப்பதற்கோ, மூளையை கசக்குவதற்கோ கடுகளவும் வேலை என்பது தெளிவு. இதோ! கல்விக்கடல் என்று போற்றப்படுகின்ற இமாம் கஸ்ஸாலி அவர்கள் மிகத் தெளிவான இச்செய்திக்கு விளக்கம் (?) அளிப்பதைப் பாருங்கள்.

1

மனிதர்களின் உள்ளம் தான் மலக்குமார்களின் வீடு, அவர்களின் தங்குமிடமாகும். கோபம், தவறான இச்சை, பொறாமை, பெருமை, கர்வம் இது போன்ற தீய குணங்கள் குரைக்கின்ற நாய்களுக்கு சமமானவை. கல்வி எனும் ஒளியை மனிதர்களின் உள்ளத்தில் மலக்குகளின் மூலமே இறைவன் வழங்குவான் எனும் போது (தீய குணங்கள் என்ற) நாய்களால் சூழப்பட்டிருக்கும் இவர்களிடத்தில் மலக்குமார்கள் எவ்வாறு வருவார்கள்?

நூல்: இஹ்யாவு உலூமித்தீன் வ மஅஹூ தக்ரீஜூல் ஹாஃபிழில் இராக்கி

பாகம் 1,  பக்கம் 95

மேற்கண்ட ஹதீஸில் நாய் என்பது தீய பண்புகளையும் வீடு என்பது மனிதர்களின் உள்ளத்தையும் குறிக்குமாம். எனவே எந்த மனிதனுடைய உள்ளத்தில் தீய பண்புகள் உள்ளனவோ மலக்குமார்கள் அவனிடத்தில் இறைக் கல்வியைக் கொண்டு வர மாட்டார்கள் என்பதே இந்த ஹதீஸின் பொருள் என்று இமாம் கஸ்ஸாலி விளக்கமளிக்கின்றார்.

பாமரர்களுக்கும் புரிகின்ற ஒரு ஹதீஸின் பொருளை விளக்கம் என்ற பெயரில் அதற்கு இது அர்த்தம், இதற்கு அது அர்த்தம் என்று ஹதீஸின் கருத்தையே அனர்த்தமாக்குகின்றார் இமாம் கஸ்ஸாலி. இது தவறு என்று அறிந்தும் வக்காலத்து வாங்கும் மேதாவிகளை என்னவென்று சொல்வது?

ரூஹ் என்றால் என்ன?

(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:85

இவ்வசனம் இறக்கப்பட்டதன் பின்னணி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி  (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்-விடக் கூடாதுஎன்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், “அவர்களுக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 7297

யூதர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ரூஹைப் பற்றி கேட்கின்றனர். ரூஹ் என்ற அரபுச் சொல்லுக்கு உயிர் எனப் பொருளாகும். உயிர் என்பதன் அடிப்படை, அதன் செயலாக்கம், அதன் இயக்கம் போன்றவற்றை உள்ளடக்கி உயிர் என்றால் என்னவென்று நபிகளாரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கண்ட வசனத்தை நபிகளார் கூறுகின்றார்கள்.

ரூஹ் என்பது இறைவனின் கட்டளைப்படி இயங்கக்கூடியது. அதை முழுமையாய் விளங்கும் அளவுக்கு மனிதர்கள் கல்வியறிவை பெறவில்லை. இது தான்  மேற்கண்ட வசனம் கூறும் கருத்து என்பதை நபிகளார் பதிலாகக் கூறும் வசனத்திலிருந்தே எளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தஃப்ஸீர் என்ற பெயரால் ரூஹ் தொடர்பாக இமாம்கள் கூறும் விளக்கத்தைக் கேட்டால் நமது தலை கிறுகிறுவென சுற்ற ஆரம்பித்து விடுகின்றது. இது ஒன்றும் மிகையான வர்ணணையல்ல. பின்வரும் விளக்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

2

ரூஹ் என்றால் வானவர்களில் ஒருவர் ஆவார். அவருக்கு எழுபதாயிரம் முகம் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் எழுபதாயிரம் நாவுகள் உண்டு. ஒவ்வொரு நாவிற்கும் எழுபதாயிரம் மொழிகள் உண்டு. அனைத்து மொழிகளிலும் அவர் இறைவனை தஸ்பீஹ் செய்வார். ஒவ்வொரு தஸ்பீஹின் மூலம் ஓர் வானவரை படைத்து மறுமை நாள் வரை ஏனைய வானவர்களுடன் இறைவன் பரவச் செய்வான்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 115

3

ரூஹ் என்பது ஆயிரம் தலைகள் உள்ள வானவர் ஆவார் என்றும் ஆதம் (அலை) அவர்களின் தோற்றம் கொண்ட வானவர்களில் ஒரு பிரிவினர் என்றும் இமாம்கள்  விளக்கமளிக்கின்றனர்.

(பார்க்க: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 116)

இவைகள் தாம் அற்புத விளக்கமா? இந்த விளக்கங்கள் குர்ஆனுடைய வசனத்தைச் சரியாக புரிய வழிவகுக்குமா? அல்லது தலைவலியை ஏற்படுத்துமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற விளக்கங்களுக்கு சால்ஜாப்புகள் கூறும் உலமா சபையினர் இனியாவது இமாம்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதிலிருந்து விலகிக் கொள்வார்களா?

அதிசய உயிரினம்

 அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும். (அல்குர்ஆன் 27:82)

உலகம் அழிக்கப்படுவதற்கு முன் மனிதர்களிடத்தில் உரையாடும் ஒரு உயிரினத்தை வெளிப்படுத்துவதாக இறைவன் தெரிவிக்கின்றான். நபிகளாரும் மறுமை நாள் நெருங்கி வருவதன் ஒரு அடையாளமாக இந்த உயிரினத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். அது என்ன உயிரினம்? அதன் தன்மைகள் யாவை? என்பதையெல்லாம் இறைவனே நன்கறிவான். எந்த ஒரு முஸ்லிமும் நமக்குப் புலப்படாத, அறிவில்லாத விஷயத்தைப் பற்றிப் பேசலாகாது. மறுமை நாள் நிகழ்வதற்கு முன் பேசும் உயிரினத்தை இறைவன் வெளிப்படுத்துவான் என்று நம்பிக்கை கொள்வதே ஒரு முஃமினுக்கு போதுமானதாகும்.

இறைவன் சொல்லித் தராததை நாமாகக் கற்பனை செய்து நம்பிக்கை கொண்டால் அதைப் பற்றி இறைவனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டு குறிப்பிட்ட உயிரினம் தொடர்பான இமாம்களின் விளக்கங்களைப் பார்வையிடுவோம்.

4

அதனுடைய தலை குள்ளநரியின் தலையை போன்றிருக்கும். அதனுடைய கண் பன்றியின் கண் போன்றிருக்கும், அதனுடைய காது யானையின் காது போன்றிருக்கும், அதனுடைய கொம்பு மானின் கொம்பு போன்றிருக்கும், அதனுடைய கழுத்து நெருப்புக் கோழியின் கழுத்து போன்றிருக்கும். அதன் நெஞ்சு சிங்கத்தின் நெஞ்சாகும். அதன் நிறம் புலியின் நிறமாகும். அதன் இடுப்பு பூனையின் இடுப்பாகும். அதனுடைய வால் ஆட்டின் வால் போன்றிருக்கும் அதனுடைய கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போன்றிருக்கும். ஒவ்வொறு மூட்டுக்கும் இடையில் பன்னிரெண்டு 12 முழம் இடைவெளி இருக்கும்.

நூல்: தஃப்ஸீருல் குர்துபீ, பாகம் 13 பக்கம் 236

5

தஃப்ஸீர் இப்னு கஸீரில் இவ்வசனத்திற்கு விளக்கம் கூறுகையில் மேற்கூறியவைகளைக் குறிப்பிட்டு விட்டு அந்த உயிரினத்திடம் மூஸா (அலை) அவர்களின் கைத்தடியும் சுலைமான் (அலை) அவர்களின் மோதிரமும் (?) வெளிப்படும். மூஸா  (அலை) அவர்களின் கைத்தடியின் மூலம் ஒவ்வொரு முஸ்லிமுடைய முகத்திலும் அது வெண்புள்ளியை ஏற்படுத்தும். அந்த வெண்புள்ளி பரவி முகம் முழுவதும் வெண்மையாகிவிடும். சுலைமான் (அலை) அவர்களின் மோதிரத்தின் மூலம் காபிருடைய முகத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தும். அது பரவி முகம் முழுவதும் கருத்துவிடும் என்று விளக்கம் கூறி அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

(பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 6, பக்கம் 214)

இறைவன் கூறாத, இறைத்தூதர் அளிக்காத விளக்கத்தை இவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கூறுகிறார்கள்? தங்களுடைய கற்பனைத் திறனை, புலமையை திருக்குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் கூறி நிருபிக்க முனைகிறார்களோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு இவர்களின் விளக்கம் அமைந்திருக்கின்றது.

இறைவன் விளக்கித் தராத ஒன்றை, தன் மனம் போன போக்கில் விளக்கம் அளிப்பது இறைவன் மீதே இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலல்லவா? இதை எவ்வாறு இவர்கள் செய்யத் துணிந்தார்கள்?

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

அல்குர்ஆன் 18 : 15

இமாம்கள் கூறிய இது போன்ற விளக்கங்களை, தவறை நியாயப்படுத்தவும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள் எனும் போது நம்மை ஆச்சரியம் தொற்றிக் கொள்ளவே செய்கின்றது.

இனியும் சில தஃப்ஸீர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில்…

————————————————————————————————————————————————————–

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

கே.எம். அப்துந்நாசிர்

ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.

வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.

இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.

அல் குர்ஆன் 16:80

வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும்.

யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.

அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

 அல்குர்ஆன் 59:2-4

வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா?

ஆம்! நம்முடைய வீடு இறைத்தூதர் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்திருக்குமென்றால் அது நமக்கு சொர்க்க வீட்டைப் பெற்றுத் தரும்.

நம்முடைய வீட்டில் இறைத்தூதர் தடுத்த அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றால் அது நமக்கு நரக வீட்டைப் பெற்றுத் தரும்.

ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

இறை நினைவில் இனிய இல்லம்

ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமான வனாகவும்நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:34

இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)

நூல்: முஸ்லிம் 1429

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.

நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால், அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும், கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்.

இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதா? அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா? நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோ, வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றன, ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும், மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமா? நம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?

இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.

நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்க என்ன செய்யலாம்?

இதோ இறைத்தூதரின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

வீட்டில் குர்ஆன் ஓதுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1430

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள். எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: ஹாகிம் 2063

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதி 2807

மேற்கண்ட ஹதீஸ்கள் வீட்டில் குர்ஆன் ஓதுவதன் மூலம் நம்முடைய வீடுகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குர்ஆன் ஓதப்படாத வீடுகள் சவக்குழிகளுக்குச் சமம் என்று நபி (ஸல்) எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் நம்முடைய வீடுகளில் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஷைத்தானுடைய வழிகேடுகளை விட்டும் நம்முடைய வீடுகளுக்கு இறைவன் பாதுகாப்பைத் தருகின்றான். நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்கும்.

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 432

நபி (ஸல்) அவர்கள் “மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 731

பெண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் சிறந்ததாகும் என நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தான் தொழ வேண்டும். ஆனால் சுன்னத்தான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் மிகச் சிறந்ததாகும்.

மேலும் நம்முடைய வீட்டில் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும் தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும், தொழுகையின் பால் நாட்டம் கொள்தவற்கும் தோதுவானதாக அமையும். இதன் மூலம் நம்முடைய இல்லம் இறை நினைவு நிறைந்த வீடாக மாறும்.

வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லைஎன்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டதுஎன்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்என்று சொல்கிறான்.

அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4106

வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது வீட்டிலிருந்து வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகின்றேன். அவனையே நான் சார்ந்திருக்கின்றேன். தீமையை விட்டு விலகுவதும், நன்மையைச் செய்ய ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை) என்று கூறினால் அவனுக்கு “நீ போதுமாக்கப்பட்டு விட்டாய், பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டாய்என்று (இறைவன் புறத்திலிருந்து) கூறப்படும். அவனை விட்டும் ஷைத்தான் விலகி விடுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3348

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.

அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 5623

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா, தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும், நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.

வீட்டில் இசைக்கருவிகள் மற்றும் இசைப்பாடல்கள்

இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் இசைக்கருவிகளில் இசைப்பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இதில் இஸ்லாமியப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்ற வித்தியாசமில்லை. இசையுடன் கூடிய அனைத்துப் பாடல்களும் இசைப்பாடல்கள் தான். இவை மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவையாகும்.

இந்த இசைக்கருவிகள் நம்முடைய வீடுகளில் இருந்தால் இசைப்பாடல்கள் நம்முடைய வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தால் அங்கு இறைவனின் அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வர மாட்டார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4294

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4295

இசைக்கருவி பயணக்கூட்டத்தாரிடம் இருக்கின்ற காரணத்தினால் தான் மலக்குமார்கள் அவர்களுடன் வருதில்லை. அதே இசைக்கருவி நம்முடைய வீடுகளில் இருந்தாலும் அங்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் உருவப்படங்கள் மற்றும் நாய்கள்

இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் உருவப்படங்களை மாட்டி வைத்துள்ளனர். இறந்து விட்ட தாய், தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் உருவப்படங்களை மாட்டி வைப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். அல்லது பரக்கத்திற்காக ஏதேனும் பெரியாரின் படத்தை வைத்துள்ளனர். மேலும் வீட்டின் அழகிற்கென விலங்கினங்களின் படங்களையும் மாட்டி வைத்துள்ளனர்.

மேலும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ஒருவர் முத்தமிடுவது போன்ற படங்களும் “புராக்’ வாகனம் என்ற பெயரில் பெண் முகவடிவத்தைக் கொண்ட இறக்கைகளை உடைய குதிரை உருவங்களையும் சில வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.

நம்முடைய வீடுகளில் இந்த உருவப்படங்கள் மற்றும் நாய்கள் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு இறைவனுடைய அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள். மேலும் இதற்காக மறுமையில் மிகப் பெரும் தண்டனைகளும் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல்: புகாரி 3225

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டு வாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.

நூல்: முஸ்லிம் 4281

வீட்டில் உருவப்படங்களும் நாய்களும் இருப்பது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

உடனே “ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லைஎன்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4272

அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.

அப்போது “எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகி விட்டவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்என்றார்கள்

நூல்: முஸ்லிம் 4292

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டு வாசலை) உருவப் படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.

பிறகு “மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4282

வீட்டில் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகளைத் தொங்க விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வகையில் அந்த உருவங்கள் வீட்டில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.

நம்முடைய வீடுகளில் செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அவற்றில் உருவப்படங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அதிலுள்ள செய்திகளைப் படித்தவுடன் அதிலுள்ள உருவப்படங்களை மாட்டி வைப்பதோ கண்ணியப்படுத்துவதோ கிடையாது. அந்த செய்தித்தாள்களை மதிப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகின்றோம். நாம் சாப்பிடும் போது அவற்றை விரிப்பாக பயன்படுத்துகின்றோம். பல்வேறு விஷயங்களுக்காக அந்த செய்தி பேப்பர்களை கிழித்து விடுகின்றோம். ஒரு செய்திப் பேப்பரை பத்திரப்படுத்தினால் கூட அந்தச் செய்திக்காகத் தானே தவிர அதிலுள்ள உருவப்படத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்ல. இது போன்று மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வண்ணம் உருவங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்து விட்டார்கள்.  ஆகவே, அதி-ருந்து நான் இரு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன்.  அவை வீட்டில் இருந்தன.  அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள்.

நூல்: புகாரி 2479

அந்த மெத்தை இருக்கைகளில் அந்த உருவப்படங்கள் இருந்ததாக பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினார்கள். நான் உருவப்படமுள்ள ஒரு திரைச் சீலையை விலைக்கு வாங்கி எனது வீட்டிலுள்ள அலமாரி ஒன்றின் மீது திரையாக தொங்கவிட்டிருந்தேன். நபியவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது நான் செய்திருந்ததை வெறுத்தார்கள். “ஆயிஷாவே, சுவர்களை நீ மறைக்கின்றாயா?” என்று கேட்டார்கள். உடனே நான் அதைக் கழற்றி விட்டேன். அதனைக் கிழித்து நபியவர்கள் கைவைத்து சாய்ந்திருப்பதற்குரிய இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவங்கள் இருக்கும் நிலையிலேயே அந்த இரண்டு தலையணைகளில் ஒன்றிலே நபியவர்கள் சாய்ந்து இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

நூல்: அஹ்மத் 24908

மேலும் வீடுகளில் தொங்க விடப்படும் திரைச்சீலைகளில் மிகச் சிறிய அளவில் உருவப்படங்கள் இருந்தாலும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களுடைய வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப் பட்டு) இருந்தன. ஆகவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், “இவர்கள் (ஸைத் (ரலி) அவர்கள்) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆனால், ஸைத் (ரலி) அவர்கள் (அதை அறிவிக்கும் போது)  துணியில் பொறிக்கப் பட்டதைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “கேட்கவில்லைஎன்றேன். அதற்கு அவர்கள், “ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3226

துணியில் பொறிக்கப்பட்டது என்ற வார்த்தை, துணியில் வரையப்பட்ட மிகச் சிறிய அளவிலான உருவப்படங்களைக் குறிப்பதாகும்.

மேலும் குழந்தைகள் விளையாடுவதற்குரிய பொம்மை உருவங்களை வீடுகளில் வைத்திருப்பதும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், “ஆயிஷாவே இது என்ன?” என்று கேட்டார்கள். என்னுடைய பெண் குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், “அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனே, அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர், குதிரை என்று கூறினார். “அதன் மீது என்ன?” என்று நபியவர்கள் கேட்டார்கள். “இரண்டு இறக்கைகள்என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 4284

நபியவர்களின் வீட்டிலேயே அலமாரியில் குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் இருந்துள்ளன. நபியவர்கள் அதனைக் கண்டிக்கவில்லை. எனவே நம்முடைய வீடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருப்பதில் தவறு கிடையாது.

மேற்கண்ட மார்க்க நெறிமுறைகளைத் தெரிந்து நம்முடைய இல்லங்களை முன்மாதிரி முஸ்லிம் இல்லங்களாக மாற்றி மறுமையில் சுவன வீட்டை அடைவோமாக.

————————————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார். அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்டவை என இலகுவாக ஒதுக்கி விட முடியும்.

அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று இருந்தால் நமது இரண்டு மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்கள் இவ்வளவு சிக்கலுடனா நமக்குக் கிடைத்துள்ளன?

நியாஸ் திஹாரி, இலங்கை

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம். விரிவான விளக்கங்களுக்கு “ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுமா?’ என்ற பெயரில் நமது நூலைப் பார்வையிடுக!

பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே சேர்க்கப்படுகின்றது. ஏனென்றால் மோசமான நினைவாற்றல், அறிவிப்பாளர் தொடர்பு முறிவு போன்ற காரணங்களால் பலவீனமடையும் ஹதீஸ்கள், அவற்றில் தவறு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் மறுக்கப்படுகின்றது.

ஆனால் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பொறுத்த வரை அவை வலுவான ஆதாரமாக இருக்கின்ற குர்ஆனுடன் முரண்படுவதால் அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான செய்தி அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.

இட்டுக்கட்டப்பட்ட செய்தி எவ்வளவு மோசமான தரத்தைப் பெற்றதோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் செய்தியும் மிக மோசமான தரத்தைப் பெற்ற பலவீனமான செய்தி என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்த்தோம்.

அறிவிப்பாளர் பொய் சொல்லியிருந்தால் தான் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. ஒரு நம்பகமான அறிவிப்பாளர் ஹதீஸின் ஒரு வாசகத்தை நேர் எதிராக, தவறுதலாகப் புரிந்ததன் விளைவாலும் இத்தகைய நிலை ஏற்படலாம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஒரு செய்தியில் நம்பகமானவர்கள் என உறுதி செய்யப்பட்ட அறிவிப்பாளர்கள் வந்தால் இவர்களில் யாரோ பொய் கூறியிருக்கின்றார் என்று முடிவு செய்வதை விட, இவர்களில் யாரோ தவறிழைத்துள்ளார் என்று முடிவு செய்வதே நியாயமானது. ஏனென்றால் நம்பகமானவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் வைக்க வேண்டும்.

ஒரு மிக நம்பகமானவரின் அறிவிப்புக்கு இன்னொரு நம்பகமானவரின் அறிவிப்பு முரண்பட்டால் அந்த அறிவிப்பில் அவர் பொய் சொல்லி விட்டார் என்று ஹதீஸ் கலையில் கருதப்படாது. மாறாக இவர் இதில் அறியாமல் தவறு செய்துள்ளார் என்றே கருதப்படும்.

இதே அடிப்படையில் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களில் வரும் நம்பகமானவர்களின் விஷயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும்.

மேலும் இந்த ஹதீஸ்களில் பல அறிவிப்பாளர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இவர்களில் இன்னார் தான் தவறு செய்தார் என்று குறிப்பிட முடியாது.

ஒரு பேச்சுக்கு அவ்வாறு கண்டுபிடுத்து விட்டால் கூட குர்ஆனுக்கு முரண்பாடாக அவர் அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நிராகரிக்கப்படும். அவர் அறிவித்த மற்ற அறிவிப்புகள் நிராகரிக்கப்படாது.

ஏனென்றால் இவருடைய அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதே இதில் இவர் தவறு செய்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகின்றது. இவர் நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் எந்த முரண்பாடும் வராத இவரது மற்ற அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு நிராகரிக்க முடியும்?

இவற்றிலும் இவர் தவறு செய்திருப்பார் என்று யூகிப்பது அடிப்படையற்ற யூகமாகும். ஏனென்றால் ஒரு நம்பகமானவர் சரியாக அறிவிப்பார் என்றே கருத வேண்டும்.

எனவே ஒரு நம்பகமானவர் குர்ஆனுக்கு முரணாக செய்தியை அறிவிப்பதால் இதை வைத்துக் கொண்டு அவரைப் பொய்யர் என்று கூறக்கூடாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.

இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் நாம் சேர்த்ததற்குக் காரணம் இவற்றில் உள்ள நம்பகமானவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்ல. இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் புறக்கணிக்கப்படுவதைப் போன்று இந்தச் செய்திகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே காரணம்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் ஹதீஸ்கள் சிக்கலுடன் இருக்கின்றது என்ற தோற்றம் ஏற்படுகிறது என்ற வாதம் பல காரணங்களால் தவறானது. ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது.

ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும், பலவீனமானது என்றும் ஆய்வு செய்து தரம் பிரிக்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்வதால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்பவர்கள், “ஹதீஸ்களில் சிக்கல் இருக்கின்றது’ எனக் கூறுவதில்லை.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணாக ஒரு நம்பகனமானவர் அறிவிப்பதுண்டு. மிக வலுவான ஒருவரின் அறிவிப்புக்கு மாற்றமாக அவரை விட மனன சக்தியில் சற்றுத் தரம் குறைந்த நம்பகமானவர் அறிவிப்பதும் உண்டு. ஒருவரை விட மற்றவர் மனன சக்தியில் உயர்ந்து விடாத வகையில் அனைவரும் சம நிலையில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு அறிவிப்பதும் உண்டு.

இது போன்ற நிலைகளில் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் உள்ளது என்று கூறி ஒட்டு மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதில்லை. அனைத்து செய்திகளிலும் சந்தேகம் கொள்வதில்லை.

நம்பகமானவர்களுக்கிடையே முரண்பாடு தோன்றினாலும் யார் மிக வலுமையானவர்? அதிகமானோர் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? என்று பார்த்து அந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்பே சரியானது என்றும் அதற்கு முரணாக உள்ள அறிவிப்புகள் அவற்றை அறிவித்தவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் தவறானது என்றும் முடிவு செய்கின்றனர்.

ஒருவரை விட ஒருவரை முற்படுத்துவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரின் அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குர்ஆன் என்பது ஹதீஸ்களை விட பன்மடங்கு வலுவான ஆதாரம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க வலுவான ஆதாரமாகத் திகழும் குர்ஆனுடன் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனை எடுத்துக் கொண்டு முரண்படும் அந்த ஹதீஸை விட்டுவிடுவது தானே சரி. இந்த முடிவில் ஒரு சிக்கலும் இல்லை.

நடைமுறை வாழ்க்கையிலும் கூட நாம் இவ்வாறு தான் முடிவு எடுக்கின்றோம். எனவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் குர்ஆன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.