ஏகத்துவம் – டிசம்பர் 2019

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு:

நீதிக்குப் பின் வருவதே நிலையான அமைதி!

எழுபது ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றம்  கடந்த நவம்பர் 9-ந்தேதி அன்று ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பே அது அவசர கதியில் பிறந்த ஒரு குறைப் பிரசவமாகத்தான் இருக்கும் என்பதை அனைவரும் ஊகிக்க முடிந்தது.

இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு  இந்த வழக்கை ஒரு நாற்பது நாட்களில்  அவசர அவசரமாக விசாரித்து முடித்தது தான். எழுபது ஆண்டு கால வழக்கில் ஏன் இத்தனை அவசரம் காட்டவேண்டும்?  நிதானம் காட்டினால் என்ன? என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது.

நவம்பர் 17 அன்று, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னால் ஒரு நூற்றாண்டு காலங்கடந்த வழக்கில்  தனது பதவி காலத்திலேயே  தீர்ப்பு வழங்கியதாக வரலாற்றில் பதிவாக வேண்டும்  என்று தலைமை நீதிபதி நினைத்திருப்பாரோ! அதனால் தான் இத்தனை அவசரம் காட்டினாரோ  என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே, இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பதையே உணர்த்துகின்றது.

இந்தத் தீர்ப்பு வருதற்கு முன்னால் அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் அனைத்தும் இந்தத் தீர்ப்பை விமர்சனம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனவா? அச்சுறுத்தப்பட்டனவா என்று யாருக்கும் தெரியாது.

இந்தத் தீர்ப்பை விமர்சிக்க மாட்டோம் என்று தமிழகத்தில் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளிடமும் காவல் துறையினர் வாக்குறுதி வாங்கிக் கொண்டனர். என்ன தீர்ப்பு வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத் தலைவர்களே அறிக்கை விடும் நிலைக்குச் சென்று விட்டனர்.

1992 டிசம்பர் 6 அன்று, பாபர் மஸ்ஜித் உடைக்கப்பட்ட பிறகு நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. பல்லாயிரக்காண உயிர்கள் பலியாயின; பல கோடி சொத்துக்கள் பாழாயின; நாடெங்கும் பதட்டம், பயம்.

இதுபோன்ற ஒரு நிலை ஏற்படக்கூடாது; அமைதி நிலவ வேண்டும் என்று அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்தது பாராட்டத்தக்க அம்சம் தான். நாடெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்களும் அதே கவலையில் தான் இருந்தார்கள். அந்த அடிப்படையில் மக்களிடம் அமைதி காக்க வேண்டும் என்று தவ்ஹீது ஜமாஅத் கேட்டுக் கொண்டது. ஆனாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடம் அறிவுறுத்தவில்லை.

இந்நிலையில் நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பு வந்தது. முஸ்லிம்களிடமிருந்து பள்ளியை மட்டுமல்ல! பள்ளியைச் சுற்றி அமைந்திருந்த 63.7 ஏக்கர் நிலத்தை அப்படியே அநியாயக்கார்களிடம் தூக்கிக் கொடுத்திருக்கின்றது.

யார் அந்த அநியாயக்காரர்கள்?

1949 டிசம்பர் 22-23 தேதிகளில்  பள்ளிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து சிலைகளை வைத்து, பள்ளியை பூட்டுவதற்கு ஏற்பாடு செய்து, முஸ்லிம்களைத் தொழவிடாமல் தடுத்த அநியாயக்காரர்கள். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. 1992 டிசம்பர் 6 அன்று பள்ளியை உடைத்த அநியாயக்காரர்கள்.  இவர்களிடத்தில் உச்சநீதிமன்றம் பள்ளியை அநியாயமாகத் தூக்கிக் கொடுத்திருக்கின்றது.

பள்ளியை இடித்தது சட்டத்திற்கு எதிரான குற்றத்திற்குரிய செயல் என்று உச்சநீதிமன்றம்  தனது தீர்ப்பில் கண்டிக்கவும் செய்கின்றது. பின்னர் அவர்களிடமே தூக்கிக் கொடுக்கின்றது என்றால் இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் எப்படி ஏற்க முடியும்? இந்தத் தீர்ப்பை விமர்சிக்காமல் அதை வாய்ப் பொத்தி, கைகட்டி எப்படி வரவேற்க முடியும்?

இதே தீர்ப்பு எதிர் அணியினருக்குப் பாதகமாக வந்திருந்தால் நாடே என்ன கதியாக ஆகியிருக்கும்? முஸ்லிம்களுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்ததால் நாடு அமைதியாக இருக்கின்றது என்று முஸ்லிம் அல்லாத சகோதரர்களே மனமாரப் பாராட்டுகின்ற வகையில் முஸ்லிம் என்றால் அமைதியானவன் என்பதற்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் நடந்து கொண்டார்கள்.

அதே சமயம் இவ்வளவு பெரிய அநீதி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம்கள் ஒருமனதாக இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்படுகின்றது. அது வரலாற்றில் தவறாகப் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகத்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  இந்தியாவிற்கே முன்னோடியாக 18.11.2019 அன்று பகல் 2 மணியளவில்  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை என்று காவல்துறை அறிவித்திருந்தும், தடையை மீறிக் கலந்து கொண்டால் கைது செய்யப்படுவோம்; தங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும்  என்று தெரிந்திருந்தும் பல்லாயிரக்கணக்கான  ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு அநீதிக்கு எதிரான தங்கள் கண்டனத்தைப் பதிய வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் சமுதாயம் ஏற்கவில்லை தங்கள் எதிர்ப்புகளை கோஷங்கள் மூலம் விண்ணதிர எடுத்துரைத்தனர்.

இந்தத் தீர்ப்பை அமைதிக்கான வழியாகப் பார்ப்பவர்கள், முஸ்லிம்களில் கூட சில கசங்காத வெள்ளைச் சட்டைக்காரர்கள் ‘உச்சநீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு தான் சரி! அதாவது அநியாயத் தீர்ப்பு தான் சரி! இல்லையென்றால் அமைதி கெட்டு விடும். எனவே முதலில் அமைதி! அதன் பின் நீதி!’ என்ற வாதத்தை வைக்கின்றார்கள்.

மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர்.

அவ்வாறே உஸாமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்” என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு, “உங்களுக்கு முன்னிருந்தவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடிவிட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 3485

இந்த ஹதீஸ் அடிப்படையில் முதலில் நீதியை நிலை நிறுத்த வேண்டும். வலியவனாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதனால் தான் சமுதாயத்தில் அமைதி நிலவும்.

இல்லையென்றால் வலியவன், எளியவனை அடித்துச் சாப்பிட ஆரம்பித்து அமைதி குலைந்து போய்விடும். அதாவது முதலில் நீதி! அதன் பின் அமைதி தானாக வந்து விடும். இதுதான் நீதியின் இலக்கணமே!

ஆனால் மெத்தப் படித்த இந்த மேதாவிகளோ முதலில் அமைதி! அதாவது, எளியவனின் சொத்தைப் பறித்தாலும் வலிமை மிக்கவனை அவன் வழியில் விட்டு விட வேண்டும். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமானால் பள்ளியை இடித்த குற்றவாளிகளை அவர்கள் வழியில் விட்டு விட வேண்டும். இல்லையென்றால் அமைதி கெட்டு விடும் என்று நீதிக்குத் தலைகீழான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள்.

இதை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்தினார். பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன், இன்னொரு மாணவனுடைய சாப்பாட்டை அபகரித்து விடுகின்றான். பாதிக்கப்பட்ட மாணவன் ஆசிரியையிடம் சென்று புகார் செய்கின்றான். ஆசிரியை உன் உணவை அபகரித்த அவனே அதைச் சாப்பிட்டுக் கொள்ளட்டும். நான் உனக்கு ஒரு ரொட்டித் துண்டைத் தருகின்றேன் என்று கொடுத்தால் அது எப்படி அநீதியோ அதுபோலத் தான் முஸ்லிம்களிடம் பள்ளியையும் அதன் நிலத்தையும் பறித்து, இடித்த கயவர்களிடம் கொடுத்துவிட்டு, 5 ஏக்கர் நிலத்தை அவர்களுக்குக் கொடுப்பதும் அநீதியாகும் என்று அழகாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓர் அநியாயத் தீர்ப்பாகும்.

நீதியை நிலைநாட்டும் போது கண்டிப்பாக சில பாதகங்கள் வரத்தான் செய்யும். அதில் முஸ்லிம்களே பாதிக்கப்படலாம். ஆனால் அதைக் காரணம் காட்டி இந்த அநீதியை  முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம்களிடமிருந்து இது போன்று வழிபாட்டுத் தலங்களைத் தட்டிப் பறித்த நிகழ்வுகள் வரலாற்று வழிநெடுகில் நடந்திருக்கின்றது. ஆனால் வரலாறு திரும்பும் என்பது போல் அந்த வழிபாட்டுத் தலங்கள் முஸ்லிம்களிடமே திரும்ப வந்திருக்கின்றன.

ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு நிறுவப்பட்ட பள்ளியை இவர்கள் அடித்து நொறுக்கி, பாழாக்கி, அந்த நிலத்தையும் அபகரித்திருக்கின்றனர். இந்தக் கயவர்களுக்கு, காவிகளுக்கு அல்லாஹ் கூறும் பின்வரும் எச்சரிக்கையைக் காணிக்கையாக்கிக் கொள்கிறோம். முஸ்லிம்களுக்கு அதை ஆறுதலாகவும் அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியாகவும் ஆக்கிக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழையும் உரிமை இத்தகையோருக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உள்ளது.

அல்குர்ஆன் 2:114

அல்லாஹ் நாடினால் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் நமது தலைமுறையிலோ அல்லது அடுத்த தலைமுறையிலோ இது நிச்சயம் நடைபெறும். அந்நாளுக்காகக் கண்விழித்துக்  காத்திருப்போம்!

—————————————————————————————————————————————————————————————————————

மார்க்கத்தின் பார்வையில் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம்

கே.எம். அப்துந்நாஸர்

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதில் ஓர் அம்சம்தான் 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்க்கப்பட்ட ஒரு தீர்ப்பாகும்.

அந்தத் தீர்ப்பின் முக்கிய சாரம்சம் “இஸ்லாமிய மார்க்கத்தில் பள்ளிவாசல்கள் அவசியமான ஒன்றல்ல” என்பதாகும்.

1993ஆம் ஆண்டு மத்திய அரசு பாபரி மஸ்ஜித் மற்றும் அதைச் சுற்றியுள்ள 63.7 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

பாபர் மசூதி இருந்த இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி 1994ஆம் ஆண்டு டாக்டர் எம். இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, “வழிபாட்டுக்கு மசூதிகள் முக்கியமல்ல. முஸ்லிம்கள் தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம்” என்று தீர்ப்பளித்திருந்தது.

“பள்ளிவாசல்கள் மாற்றத்தக்கதல்ல!” என வக்ஃப் சட்டத்தின் 104-கி, 51(1) பிரிவு கூறுவதை இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்தத்  தீர்ப்பை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, 27.09.2018 அன்று  3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற  அமர்வு தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் “அனைத்து மசூதிகளும், அனைத்து தேவாலயங்களும், கோயில்களும் சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். 1994ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டது.

பள்ளிவாசல்கள் முக்கியமல்ல என்று முதலில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது தவறு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. என்றாலும் 1994ஆம் ஆண்டு  காலத்திலிருந்து சங்பரிவார சக்திகள் பள்ளிவாசல்களை இடிப்பதற்குச் சாதகமான தீர்ப்பாக இதைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் பள்ளிவாசல்கள் முக்கியமில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என ஆர்.எஸ்.எஸ், பிஜேபி உட்பட உள்ள சங்பரிவார அமைப்புகள் இன்றுவரை தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கூறி வருகின்றன.

இஸ்லாமிய மார்க்கத்தில் பள்ளிவாசல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களில் இருந்துதான் எடுத்துரைக்க வேண்டும். பள்ளிவாசல்கள் தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு போதும் ஆதாரமாக முடியாது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுந்நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது.

அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். இவ்வுலகில் படைக்கப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் “கஅபா” எனும் ஆலயத்தையும், அதன்பிறகு நாற்பது ஆண்டுகள் கழித்து “பைத்துல் முகத்தஸ்” எனும் ஆலயத்தையும் கட்டியெழுப்பினார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களுடைய காலத்தில், அவர் தமது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் இணைந்து சிதிலமடைந்திருந்த கஅபாவின் அடித்தளத்தை உயர்த்தி அதைப் புணர் நிர்மாணம் செய்தார்கள்.

இவை அனைத்தும் பள்ளிவாசல்கள் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையான அம்சம் என்பதற்கு மிக உறுதியான சான்றுகளாகும்.

மாதவிடாய் பெண்கள் மற்றும் குளிப்புக் கடமையானவர்கள் தூய்மையாகும் வரை பள்ளிவாசலில் தங்கியிருக்கக் கூடாது; பச்சை வெங்காயம், பூண்டு போன்ற துர்வாடை ஏற்படுத்தும் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகைக்கு வரக் கூடாது; பள்ளிவாசலில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது; அமைதியைப் பேண வேண்டும். வியாபாரம் செய்யக் கூடாது; அசுத்தம் செய்யக் கூடாது; தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை மார்க்கம் விதித்துள்ளது. இவை பள்ளிவாசலின் புனிதத் தன்மைகளுக்குச் சான்றாக உள்ளன.

‘முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குப் பள்ளிவாசல் அவசியமல்ல’ என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான ஒரு வாதமாகும்.

பள்ளிவாசலை இறையடியார்களிடமிருந்து கையகப்படுத்துவதும், அங்கு தொழுகை நடத்தவிடாமல் தடுப்பதும், பள்ளிவாசலை இடித்துப் பாழாக்குவதும் இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரும் குற்றம். இவ்வாறு செய்பவர்கள் மிகப்பெரும் அநியாயக்காரர்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழையும் உரிமை இத்தகையோருக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உள்ளது.

அல்குர்ஆன் 2:114

மேற்கண்ட இறைவசனத்தின் பிரகாரம் அல்லாஹ்வுக்குச் சொந்தமான பாபர் பள்ளிவாசல் நிலத்தைக் கையகப்படுத்தியதும், அங்கு தொழுகை நடத்தவிடாமல் தடை செய்ததும், பள்ளிவாசலை இடித்ததும் மிகப் பெரும் அநியாயமே! இதை ஒருபோதும் இஸ்லாமிய சமுதாயம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

பாபரி மஸ்ஜித், 1528ஆம் ஆண்டு மன்னர் பாபரின் தளபதி மீர்பாஹி என்பவரால் கட்டப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது. மேலும் 1949ஆம் ஆண்டு வரை அங்கு தொழுகை நடைபெற்று வந்ததையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் வாசகங்களே அந்த பாபரி மஸ்ஜிதிற்குச் சொந்தமானது தான் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இந்தத் தீர்ப்பில் சொல்லப்படும் வாதங்களின் அடிப்படையிலும், புறச்சான்றுகள், உரிமையியல் சட்டங்கள் அடிப்படையிலும் இதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அல்லாஹ்வின் ஆலயத்திற்குரிய ஓர் இடத்தில் கோயில் கட்டுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முழுக்க முழுக்க பள்ளிவாசல்கள் தொடர்பான குர்ஆனின் கட்டளைக்கு எதிரானதாகும்.

மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியவை. எனவே, அல்லாஹ்வுடன் வேறு யாரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

இஸ்லாத்தின் அடிப்படையில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். அது இஸ்லாத்தின் ஒரு அங்கமல்ல என்றோ, அவசியமற்றது என்றோ கூறுவது அறியாமையின் உச்சகட்டமாகும்.

பள்ளிவாசல்களைக் கட்டியெழுப்பி, அங்கு அல்லாஹ்வை வணங்கி வழிபட வேண்டுமென அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்.

இறையில்லங்கள் உயர்த்தப்பட வேண்டுமென்றும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (இறைநம்பிக்கையாளர்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 24:36

இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் பள்ளிவாசல் கட்டுவதன் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவனுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு அது போன்று ஒரு வீட்டை அல்லாஹ் சொர்க்கத்தில் கட்டுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: புகாரி (450)

பள்ளிவாசலைக் கட்டுமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பதிலிருந்தும், அதன் சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தும் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு மிக மிக அவசியமானவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆண்கள் ஐங்காலத் தொழுகைகளைக் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் தான் நிறைவேற்றியாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தொழுகைக்கான அழைப்பைச் செவியுற்று, காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: இப்னு மாஜா (785)

நோயாளியாக இருந்தாலோ அல்லது நிர்ப்பந்தமான சூழல்களிலோ அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்று இருந்தாலும் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

பள்ளிவாசலை யார் நிர்வகிக்க வேண்டும், யார் நிர்வகிக்கக் கூடாது என்பதையும் திருமறைக் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்தும் பள்ளிவாசலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இணைவைப்போர் தமக்குத் தாமே இறைமறுப்புக்கு சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் ஆலயங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களது நல்லறங்கள் அழிந்து விட்டன.  நரகில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாதவர்களே அல்லாஹ்வின் ஆலயங்களை நிர்வகிக்க வேண்டும்.  அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும்.  

அல்குர்ஆன் 9:17, 18

இஸ்லாத்தின் அடிப்படையில் நரகத்தை விட்டுத் தப்பிப்பதற்கும், மறுமையில் வெற்றி பெறுவதற்கும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், எண்ணற்ற நன்மைகளையும் அடைவதற்கும் பள்ளிவாசல்கள் மிக முக்கிய காரணியாக உள்ளன. இதிலிருந்தே இஸ்லாம் பள்ளிவாசல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பள்ளிவாசலின் முக்கியத்துவம்  தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய எண்ணற்ற செய்திகளில் ஒரு சில சான்றுகளைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:

  1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மைத் தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (660)

இதே செய்தி முஸ்லிம் என்ற நூலில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளமுடையவர்’’

நூல்: முஸ்லிம் (1869)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (421)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1187)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் உளூச் செய்து விட்டுப் பிறகு தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவரது இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் (2045)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது வீட்டிலேயே உளூச் செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லத்தை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1184)

வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப் படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர்  (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் (8332)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தனது வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து, பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின்  விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)

நூல்: அல்முஃஜமுல் கபீர் (6016)

பள்ளிவாசல்கள் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையான அங்கம். பள்ளிவாசல்களையும், இஸ்லாத்தையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க இயலாது. பள்ளிவாசலுக்கு எதிராக நீதிமன்றங்களும், பாசிசவாதிகளும் எத்தகைய பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தாலும் அது ஒருபோதும் முஸ்லிம்களிடம் எடுபடாது என்பதே உண்மையாகும்.

—————————————————————————————————————————————————————————————————————

விதைக்கப்பட்ட வெறுப்பு அரசியல்! வீழ்த்தப்பட்ட  பள்ளிவாசல்!

Joad analysed this so beautifully in the following passage:

Now the emotions which most men have in common and which are, therefore, the most easily aroused, are those of hatred and fear. It is by such emotions and not by compassion, charity, generosity, or love that great masses of men are most easily moved… those who wish to rule the nation for whatever purpose, will do well to find something to hate, somebody to fear. If I really wanted to unite the nations of the modern world. I should invent for them an enemy in some other planet, or possibly on the moon

வெறுப்பு, அச்சம் ஆகியவை பெரும்பாலான மக்களிடம் இருக்கும் பொதுவான உணர்வுகள் ஆகும். எனவே, பெரும் திரளான மக்களிடம் வெறுப்பை எளிதில் வளர்த்துவிடலாம்; அச்சத்தை எளிதில் விதைத்துவிடலாம்.

கருணை, அறம், தொண்டு மனப்பான்மை, பெருந்தன்மை ஆகிய  உணர்வுகளைக் காட்டிலும் இந்த வெறுப்பு, அச்சம் ஆகிய உணர்வுகளுக்கே மக்களை வயப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளது.

மக்களை ஆளுகின்ற  ஆட்சியாளர்கள், அவர்களது நோக்கம்  என்னவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாகத் தங்கள் மக்களை எதையாவது  காட்டி வெறுக்க வைப்பதற்கு அல்லது யாரையாவது பயமுறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். நவீன உலகத்தில், உண்மையில், மக்களை அல்லது  ஒரு நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் ஓர் எதிரியை (அந்த எதிரி  இந்தப் பூமியில் இல்லாவிட்டாலும்) வேறு கிரகத்திலோ அல்லது சந்திரனிலோ கண்டுபிடித்தாக வேண்டும்.

இன்றைய தேசியவாதத்தின் மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கின்ற  வெறுப்புணர்வு, அச்ச உணர்வைப் பற்றி விவரிக்கும் போது ‘ஜோட்’ என்ற அறிஞர்  கூறிய கருத்தைத் தான் மேலே நாம் பார்த்தோம்.

இன்று இந்தியாவில் பாஜகவும் நரேந்திர மோடியும் இந்த யுக்தியைத் தான் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

அதாவது, முஸ்லிம்களையும் அவர்களின் இஸ்லாமிய சட்டங்களையும் பூதாகரமாகக் காட்டி, அவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்து,  தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டதும் இந்த வித்தையைக் கற்றுக் கொடுத்ததும்  காங்கிரஸ் கட்சி தான் என்பதையும், அதில் வீழ்ந்தது தான் பாபரி மஸ்ஜித் என்ற உண்மையையும் உங்களுக்குப் படம் படித்துக் காட்டவே இந்தக் கட்டுரை.

கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கில் ஓர் அநியாயத் தீர்ப்பை எழுதி, தனது வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தைப் பதிவு செய்திருக்கின்றது.

பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதில் நீதித்துறையும் நிர்வாகத்துறையும் போட்டி போட்டுக் கொண்டு காய் நகர்த்தின என்பதை 22.12.1949 முதல் 09.11.2019 வரையிலான எழுபது ஆண்டு கால வரலாற்றைப் பார்க்கும் போது யாரும் எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.

நிர்வாகத் துறையை இரு சாரார் நிர்வகிக்கின்றனர்.

ஒரு சாரார் தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்கின்ற அரசியல்வாதிகள். இன்னொரு சாரார் அதிகாரிகள். இவர்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குத் தக்க தங்களின் விருப்பத்தையும் விசுவாசத்தையும் அமைத்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், தங்கள் கட்சி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைக்கும் விதமாகச் செயல்படுவார்கள். பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கும் நலனுக்கும் எதிராக ஒருபோதும் செயல்படமாட்டார்கள்.

பெரும்பான்மை மக்களின் விருப்பம் நாட்டு நலனுக்கு எதிராக இருந்தாலும் சரி தான். சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராக இருந்தாலும் சரி தான். அதை ஒருபோதும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தங்களை ஆட்சிக் கட்டிலில் தக்க வைப்பதற்காக  எந்த எதிர்முனைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி, அதை  விசிறி விட்டுத் தான் ஆட்சியைப்  பிடிக்க முடியும் என்றால் அதற்காக என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விடுவார்கள்.

அப்படிக் கொடுக்கப்பட்ட விலை தான் பாபரி மஸ்ஜித்!

இப்படிப்பட்ட துரோகத்தை முதன் முதலில்  செய்த கட்சி காங்கிரஸ் தான். அதனால் தான் பாபரி மஸ்ஜித் பறிபோனது. அதை விரிவாகப் பார்ப்போம்:

1949ஆம் ஆண்டு, அதாவது நாடு விடுதலை பெற்று 2 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 22, 23ஆம் தேதி நள்ளிரவு அபய் ராம் தாஸ், ராம் ஷுகுல் தாஸ், ஷியோ தர்ஷன் தாஸ் ஆகியோர் மற்றும் 50 அல்லது 60 பேர் பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து குழந்தை ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய சிலைகளை கொண்டு வந்து வைத்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஏற்பட்ட ஒரு சொத்து  விவகாரத்தில் நீதியை, நிர்வாகத்தை, சட்டத்தை, சாட்சியத்தை நம்பிய  முஸ்லிம்கள் அயோத்தியா காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். அடையாளம் தெரியாத 50-60 நபர்கள் பாபரி மஸ்ஜித் பள்ளிக்குள் நுழைந்து அதன் கண்ணியத்தைச் சீர்குலைத்து விட்டனர் என்று மாதா பிரசாத் என்ற  காவலர் அந்தப் புகாரைப் பதிவு செய்கின்றார்.

நய்யாரின் நயவஞ்சம்

விவகாரம் பூதாகரமாக உருவெடுக்கின்றது. உ.பி.யின்  முதலமைச்சர், ஆளுநர், இந்தியப் பிரதம அமைச்சர், உள்துறை அமைச்சர் என்று செய்தி மேலிட மட்டத்திற்குப் பறக்கின்றது. உத்தரப்பிரதேச தலைமைச் செயலர் பகவான் சஹாய், மாநில காவல்துறை தலைவர் (IGP) ஆகியோர் ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி K.K.K.. நய்யாருக்கு சிலைகளை அகற்றும்படி உத்தரவிடுகின்றனர்.

ஆனால் அவரோ கச்சிதமாகக் காலங்கடத்தி காரியமாற்றுகின்றார். அவரது  உள்ளத்திற்குள் குடி கொண்டிருக்கும் இந்துத்துவாவின் வெறிக்குத் தக்க அவர் ஆட்டம் போட்டாரே தவிர இந்திய இறையாண்மை, மதசார்பின்மைக்குத் தக்க ஆட்டம் போடவில்லை. இம்மியளவும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அவர் அந்த உத்தரவுக்குக் கட்டுபட மறுக்கின்றார்.  அது மட்டுமல்லாமல், பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலை அரசு அட்டாச் செய்ய வேண்டும் (மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும்) என்று பரிந்துரைக்கின்றார். அதுபோன்று கூடுதல் மாஜிஸ்ட்ரேட் பாபர் பள்ளிவாசலை இணைத்து உத்தரவிடுகின்றார்.

பாபரி பள்ளிவாசல் உடைப்பிற்கான முதல் அத்தியாயத்தை ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம் தான் முதன் முதலில் துவக்கி வைக்கின்றது.

அதன்படி, பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டு பூட்டும் போடப்படுகின்றது. அன்று மூடப்பட்ட பள்ளிவாசல் 1986 வரைக்கும் திறக்கப்படவே இல்லை. ஆனால் அதன் பூட்டு ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு  சிலைகளைத் தரிசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. K.K.K. நய்யார் மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் அவர் தான் துணை கமிஷனராகவும் இருந்தார். அந்த வகையில் மூடப்பட்ட பள்ளிவாசல் முடங்கிக் கிடக்கவேண்டும், அது திறக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நயவஞ்சக நய்யார் கவனமாக இருந்தார்.  அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தும் வைக்கப்பட்ட சிலைகள் ஓரடி கூட நகரவில்லை. இதற்குக் காரணம் நய்யாருக்கு அப்போதைய உ.பி.யின் முதல்வர் கோவிந்த வல்ல பந்தின் முழு ஆசீர்வாதமும் அரவணைப்பும் இருந்தது.

உள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ். உதட்டில் காங்கிரஸ்

கண்ணுக்குத் தெரியாமல் காங்கிரஸில் எத்தனையோ காவிகள் இருந்தனர். உள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ்., உதட்டில் காங்கிரஸ் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் ஊடுறுவி இருந்தனர். இதை பண்டிட் ஜவஹர் லால் நேரு, உ.பி. முதல்வர் பந்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் பகிரங்கப்படுத்துகின்றார்.

He (Nehru) wrote, “All that occurred in Ayodhya was bad enough but the worst feature of it was that such things should take place and be approved by some of our own people and that they should continue. I find that communalism has invaded the minds and hearts of those who were the pillars of the Congress in the past. It is a creeping paralysis and the patient does not even realise it.”

அயோத்தியாவில் நடந்த அனைத்தும் ஒரு கெட்ட நிகழ்வாகும். இப்படிப்பட்ட வகுப்புவாத சம்பவங்கள் நடந்தேறுவதும் அதை நமது கட்சிக்காரர்களே அங்கீகரிப்பதும் அது மேலும் தொடர்கதையாவதும் மிகவும் கேடு கெட்ட நிகழ்வுகள். கடந்த காலத்தில் காங்கிரஸின் தூண்களாக இருந்தவர்களின் உள்ளங்களில் வகுப்புவாத சிந்தனை ஊடுறுவி விட்டது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.   இது வளர்ந்து கொண்டிருக்கின்ற பக்கவாத நோயாகும்.  பக்கவாத நோய் பாதித்த நோயாளி அதை அறவே உணர  முடியாது.

(இது பிரதம அமைச்சர் நேரு உ.பி.யின் முதலமைச்சர் G.B. பந்துக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்).

நேரு கூறியபடி, அந்தப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் அப்போதைய உ.பி. முதலமைச்சர் G.B. என்றழைக்கப்பட்ட கோவிந்த பல்லப (வல்லப) பந்து. மாநிலத்தின் நிர்வாகத்தைத் தன் கைவசம் வைத்திருந்த பந்து, இந்தச் சிலைகளை அப்போதே அப்புறப்படுத்தியிருந்தால் நாட்டில் ஒரு பள்ளி இடிக்கப்பட்டிருக்காது. இந்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்காது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி இருக்காது. பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்காது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சிறைச்சாலைகளில் ஆயுட்கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்காது.

பிரதம அமைச்சர், உள்துறை அமைச்சர் வலியுறுத்தியும் வற்புறுத்தியும் G.B. பந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கு அவரிடம் குடி கொண்டிருந்த இந்துத்துவா ஒரு மூல காரணம் என்றாலும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்து விடக் கூடாது என்ற அரசியல் ஆதாயக் கணக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும்.

வெறுப்பு அரசியல் – பாகம்: 1

பற்றிய எரிய விட்ட ஃபைஸாபாத் தேர்தல்

ஃபைஸாபாத்தில் 1948ல் ஓர் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக பாபா ராகவ் தாஸ் என்பவரை நிறுத்துகின்றது.  இவருக்கு எதிராக சோஷியலிஸ காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உள்ளூர்  வேட்பாளர் ஆச்சார்யா நரேந்திர தேவ் போட்டியிட்டார். இவர் இந்து  மதத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர். அதே வேளையில்  மார்க்ஸிய சிந்தனையாளராகவும் இருந்தார்.

தேர்தல் களத்தில் பாபரி மஸ்ஜித் விவாதப் பொருளானது.  பாபரி மஸ்ஜித் தொடர்பான மதவெறி பிரச்சாரம் இந்த இடைத் தேர்தலில்  தீயாகப் பற்றி எரிந்தது. பாபா ராகவ தாஸ் வெளியூர்காரர் என்ற பார்வை அங்கு எடுபடவில்லை. அந்த அளவுக்கு மதவெறி அவர்களது கண்களை மறைத்தது. முஸ்லிம்கள்  பாபர் பள்ளிவாசலில் போய் தொழக்கூடாது என்று சாதுக்களாலும் சன்னியாசிகளாலும் மிரட்டப்பட்டனர்.

உ.பி.யின் முதலமைச்சராக இருந்த G.B. பந்து எரிகின்ற வகுப்பவாதத் தீயை அணைப்பதற்கு பதிலாக அதில் எண்ணையை ஊற்றினார். காரணம், அவர் தனது கட்சியான காங்கிரஸுக்குள் தனது மேலாதிக்கத்தை நிறுவும் நிலையிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கட்டாயத்திலும் இருந்தார். அதனால் மதவெறியர்களின் விருப்பத்திற்கு இரை போடுகின்ற வகையில் தனது தேர்தல் பரப்புரையைக் கட்டமைத்துக் கொண்டார். முஸ்லிம்கள் எழுப்பிய அச்சத்தையும் அபாயத்தையும் கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றார்.

இந்துத் தீவிரவாதிகளுக்கு பந்து அளித்த பகிரங்க ஆதரவு முஸ்லிம்களை எதிர்முனைக்குத் தள்ளியது.  எதிர்பார்த்தது போலவே நரேந்திர தேவ் ஆச்சார்யாவுக்கு முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாகத் தங்கள் வாக்குகளை அளித்தனர். ஆனால் அந்தத் தேர்தலில் ராகவ தாஸ் 5392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆச்சார்யா 4080 வாக்குகள் பெற்று  1312 என்று வாக்கு வித்தியாசத்தில் தோற்று விடுகின்றார்.

ராகவ தாஸின் வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த இந்துத்துவ வாதிகளுக்கு ஒரு தெம்பையும் தைரியத்தையும் கொடுத்தது. இது இந்துத்துவத் தீவிரவாதிகள் பாபரி மஸ்ஜிதில் நுழைவதற்கு அடித்தளமாக அமைந்தது.

காங்கிரஸின் இந்த வாக்கு வங்கி அரசியல் தான் முஸ்லிம்களின் பள்ளியை இழப்பதற்கு முக்கியக் காரணமானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ராமர் சிலையும் ராகவ தாஸின் மிரட்டலும்

நாட்டின் பிரதம அமைச்சர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்,  ஆளுநர் ராஜகோபாலாச்சார்யா ஆகிய அத்தனை பேரும் மாறி, மாறி  கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அத்தனை பேர்களுக்கும் முதலமைச்சர் G.B. பந்து தகுந்த காரணங்களைக் கூறி தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார்.

சிலைகளை அப்புறப்படுத்தினால் வகுப்புக் கலவரம் வெடித்து விடும் என்று மத்திய அரசுக்குப் பூச்சாண்டிக் காட்டினார். அப்படி ஒரு நெருக்கடியும் அவருக்கு இருந்தது.  சிலைகளை அப்புறப்படுத்தினால் நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று ராகவதாஸ்  மிரட்டினார். இந்த மிரட்டலுக்கு பந்து  பணிந்து விட்டார். அவர் பதவி விலகினால் மீண்டும் ஃபைஸாபாத்துக்குத் தேர்தல் நடக்கும். அது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று அரசியல் ஆதாயக் கணக்கைப் போட்டார். அதன் எதிர்விளைவு தான் பள்ளிக்குள் இந்து தீவிரவாதிகளின் நுழைவு!

சிலைகளை அப்புறப்படுத்துவதில் கட்டுப்பட மறுத்த மாவட்ட நீதிபதி, மற்றும் துணை கமிஷனர் K.K.K. நய்யாரையும் களைந்தெடுக்கத் தவறியது அன்றைய காங்கிரஸ் அரசாங்கம். நய்யாரைப் பதவியிலிருந்து தூக்குவதும் சிலைகளை அப்புறப்படுத்துவதும் மாநில அரசுக்கு ஒரு நொடிப் பொழுது வேலை தான்.

மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான். அதனால் அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதை வாக்கு வங்கி அரசியல் காரணமாக செய்யத் தவறியது என்று சொல்வதை விட, திட்டமிட்டு மறுத்தது என்று சொல்லலாம்.

ஒரு நொடிப் பொழுதில் ஆற்ற வேண்டிய ஒரு காரியத்தை காங்கிரஸ் கட்சி ஒரு நூற்றாண்டு காலம் கடத்தியது கொடுமையிலும் கொடுமையாகும். இந்த பெருமை காங்கிரஸ் கட்சியைத் தான் சாரும். கயவன், காவி வெறியன் K.K.K. நய்யாரை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பிந்திய கால கட்டத்தில் தான் பதவியை விட்டுத் துரத்தி அடித்தார்கள். அது ஒரு காலங்கடந்த நடவடிக்கையாகத் தான், இன்னும் சொல்லப் போனால் கையாலாகாத ஒரு நடவடிக்கையாகத் தான் ஆனது.

K.K.K. நய்யாரின் காவி நிறம் காலங்கடந்து தான் வெளி வந்தது. பாஜக உருவாவதற்கு முன்னால் செயல்பட்டு வந்த அதன் தாய் அமைப்பான பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினராக அவர் இருந்தார். பிந்தைய நாட்களில் 1967 தேர்தலில் ஜனசங்கத்தின்  சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரைக் தொகுதியில்  போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமரின் சிலைகளைப் பள்ளிவாசலில் கொண்டு போய் குடும்பத்துடன் குடியமர்த்திய அபய் ராம் தாஸ் மற்றும் இதர தாஸ்கள் எல்லாம் இந்து மஹாசபையைச் சார்ந்தவர்கள். இந்து மகாசபையினர் யார்?  காந்தியைக் கொன்ற பேர்வழிகள் தான். இவர்களுக்குத் தான் G.B. பந்து ஆதரவளித்து வந்தார். நாட்டு நலன், சிறுமைபான்மை மக்களின் நலன் என்று வருகின்ற போது இவர்கள் பெரும்பான்மை நலனுக்குத் தான், அது நாட்டுக்கு நாசம் விளைவிப்பதாக இருந்தாலும் அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

படேலை மயக்கிய பந்து விளையாட்டு

ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதிகள் இன்று வரை காங்கிரஸ் கட்சியில் தொடர்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமீபத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு, காங்கிரஸில் ஊடுறுவிருந்த காவிப்படை தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரும்பு மனிதன் என்றழைக்கப்பட்ட உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் சிலைகளை அப்புறப்படுத்துமாறு  பல தடவை பந்திடம் நேரில் பேசியும் தொலைபேசி, கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்தும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. ஒரு வகையில் படேலே தளர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இரும்பு மனிதர் இவரிடம் துரும்பாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். காவி நாயகன் K.K.K. நய்யாரைக் களைந்தது போன்று காவி முதல்வர் G.B. பந்தையும் காங்கிரஸ் களைந்திருக்க வேண்டும்; கைகழுவியிருக்க வேண்டும்.

அவ்வாறு களையாமல், கைகழுவாமல் அவரின் காவித்தனத்திற்கும் கருங்காலித் தனத்திற்கும்  காங்கிரஸ் கட்சி அளித்த பரிசு என்ன தெரியுமா? பாரத ரத்னா விருது! இது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? உரைக்கும் உண்மை என்ன?  ஒன்றே ஒன்று தான்.

வாக்குவங்கி அரசியல் முதன்முதலில் உ.பி.யில்  ஃபைசாபாத்திலிருந்து துவங்குகின்றது. அங்கு தான் அதற்கு காங்கிரஸால் அடிக்கல் நாட்டப்படுகின்றது. அது தான் முஸ்லிம்களுக்கு வினையாக அமைகின்றது. இதற்கு நீதித்துறையும் பக்காவாக ஒத்துழைக்கின்றது.  அதன் நீட்சி தான் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பாகும்.

ஜனவரி 1950: பாபர் பள்ளிவாசலின் பூட்டுகள் திறக்கப்படவேண்டும் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை முதன் முதலில் கோபால் விஷாரத் என்பவர் தொடுக்கின்றார்.

டிசம்பர்  1950: பரமான்ஸ் ராம் சந்திர தாஸ் என்ற துறவி உள்ளே வைக்கப்பட்டிருக்கும் சிலைகளைத் தங்கு தடையின்றி வணங்குவதற்கு அனுமதி கேட்டு ஒரு வழக்குத் தொடுக்கின்றார்.

பிப்ரவரி 1961: இந்துக்களின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிராக உ.பி. சன்னி வக்ஃப் வாரியம் பள்ளியின் உரிமை கோரி வழக்கு தொடுக்கின்றது.

ஜனவரி 1986: ஃபைசாபாத் நீதிமன்றத்தில்  பாபர் மஸ்ஜித் வாசல்களை திறந்து விடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. அதுவரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பூசாரி மட்டும் உள்ளே சென்று பூஜை நடத்திக் கொண்டிருந்தார்.

வெறுப்பு அரசியல் – பாகம்: 2

பள்ளிவாசலைப் பூட்டியது பாட்டன்!

கோவிலாக்கித் திறந்தது பேரன்!

ஜனவரி 1986: உச்ச நீதிமன்றம் ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்து, தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதன் விளைவாக முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இழந்து விடக்கூடாது என்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி முஸ்லிம் பெண்கள் தலாக் பாதுகாப்புச் சட்டம் (1986) கொண்டு வந்தார். இதன்படி கணவன் ஜீவனாம்சம் கொடுக்க முடியாத பட்சத்தில் கணவனின் வாரிசுதாரர்கள் ஜீவனாம்சம் கொடுக்கலாம். அதற்கும் முடியாமல் போனால் வக்ஃப் வாரியம் கொடுக்கலாம் என்று சட்டமானது.

இது இன்னொரு பக்கத்தில் இந்துக்களிடம்  காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை ஈடுகட்டுவதற்காகவும், தனது வாக்கு வங்கி சரிந்து விடக்கூடாது என்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்ற குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காகவும் பாபரி மஸ்ஜித் நிலத்தை வழிப்பாட்டிற்காக இந்துக்களுக்குத் திறந்து விட ராஜீவ் காந்தி  காய் நகர்த்த ஆரம்பிக்கின்றார். தனது பாட்டனார் ஜவஹர்லால் நேரு  காலத்தில் பூட்டப்பட்ட பள்ளிவாசலை, பேரனான பிரதமர் ராஜீவ் காந்தி  இந்துக்களுக்குத் திறந்து விடுகின்றார்.

காந்தியின் குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையினர் நாட்டின் பிரதமர்களாக இருந்திருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான  துரோக வேலைகளைச் செய்வதில் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்ற அடிப்படையில் செய்திருக்கின்றார்கள்.

முதல் பிரதம அமைச்சர் நேரு, நாட்டின் மதச் சார்பின்மையின் சிற்பியாக இருந்திருக்கலாம். ஆனால் தனக்குக் கீழ் உள்ள உ.பி.யின் அப்போதைய முதலமைச்சர் G.B.பந்தின் ஆட்டத்தை அடக்கத் தவறியதன் மூலம் நாட்டில் ஒரு தவறான செயல் நடைபெறுவதற்கு அடித்தளமிட்டவர் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னர் வந்த அவரது திருமகளார் இந்திரா காந்தி மதச்சார்பின்மையின் மறுவடிவமாக இருப்பார் என்று நினைத்தால், ஆனால் அவரும் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் பெரும்பான்மை இந்து சமுதாயத்தின் வாக்குகளை வாங்குவதற்கு இஸ்லாமிய சமுதாயத்தை விலையாகக் கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டார். இதை நீரஜா சவுத்ரி அவர்கள் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்கின்றார்.

இழுத்து மூடப்பட்ட பள்ளிவாசலின் வளாகத்தைத் திறந்து விட வேண்டும் என்று 1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் V.H.P.  பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள் கோரியபடி பள்ளி வளாகத்தைத் திறந்து விட ஒப்பந்தமும் நடந்து முடிந்தது. 1984 ஏப்ரல் 8ந்தேதி பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படும் என்று V.H.P. பகிரங்கமாக அறிவிப்பும் செய்தது. அதே ஆண்டு செப்டம்பர் 25ந்தேதி அன்று V.H.P. ஒரு ரத யாத்திரையை  இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடத்தியது. ஆனால் அக்டோபர்  31ந்தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி தற்காலிமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்திராகாந்தி மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பிரதமர்  ராஜீவ் காந்தியிடம் அந்த ஓப்பந்தம் மீண்டும் உயிரூட்டப்படுகின்றது. அந்த ஒப்பந்தத்தின் படி, வளாகத்தின் கதவுகள் சிவராத்திரி தினமான மார்ச் 8, 1986க்கு முன்பு திறக்கப்படவேண்டும். அது போல் ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவின் படி பிப்ரவரி 1, 1986 அன்று  பாபர் மஸ்ஜிதின் வாசல்கள் திறந்து விடப்பட்டன.  முஸ்லிம்களுக்கு எந்த வித நோட்டீஸும் அனுப்பாமலேயே கோர்ட் கள்ளத்தனமாக, அதே சமயம் ராஜீவ் காந்தி ஆசீர்வாதத்துடன்  பள்ளியின் வாசல்களை, சிலைகளை வணங்குவதற்காகத் திறந்து விட்டது. இந்தக் கட்டத்தில் தான் பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு உருவாக்கப்படுகின்றது.

வெறுப்பு அரசியல் – பாகம்: 3

தொலைக்காட்சியில் தொடர்ந்த ராமாயணம்

அரசு நடத்துகின்ற தொலைக்காட்சி நிறுவனம் பொதுவாக மத ரீதியிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை.  ஆனால் 1987ல் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் இந்த  நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி, ராமாயணம் தொடர் நிகழ்ச்சியை நடத்தியது. ராஜீவ்காந்தி இந்துக்களைக் கவர்வதற்காக இந்த யுக்தியைக் கையாண்டார்.

தொலைக்காட்சியில் வெளியான  ராமாயணத்  தொடர் இந்துக்களிடம் ராமர் பக்தியை உசுப்பிவிடும் விதமாக அமைந்தது. விஷ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், ராமர் கோயில் கட்டும் பணிக்கு மக்கள் சக்தியைத்  திரட்டுவதற்கு இது பெரிய ஈர்ப்பு சக்தியாக இருந்தது என்று குறிப்பிட்டார். இதிலிருந்து ராமாயணத் தொடரின் தாக்கம் மக்களிடம் எப்படியிருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியைக் கவர்வதற்கு, காங்கிரஸ் கட்சி  கையாண்ட யுக்திகள் அனைத்தும் பாபர் மஸ்ஜிதின் அபகரிப்புக்கு அஸ்திவாரங்களாக அமைந்தன என்பதையே இது பறைசாற்றுகின்றது.

வெறுப்பு அரசியல் – பாகம்: 4

பிரணாப் முகர்ஜியின் பிரதானக் குறிப்புகள்

1989ல் ராஜீவ் காந்தி பாபர் மஸ்ஜித் நிலத்தில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டலை அனுமதிக்கின்றார். அதன் பின்னணியைத் தெளிவாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது Memoir  நினைவுக் குறிப்பு என்ற நூலில் The Turbulent Years 1980-1996  ‘கொந்தளிக்கும் ஆண்டுகள்’ என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார்.

1984ல் தனது தாயார் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் ராஜீவ் காந்தி ஆட்சியைப் பிடிக்கின்றார். அவர் பிரதம அமைச்சராக இருக்கும் போது அயோத்தியாவில் ராம ஜென்ம பூமி கோயிலைத் திறந்தது பக்கா நயவஞ்சகத்தனமாகும். ராஜீவ்காந்தியின் அரசியல் வியூகம் வடிவமைக்கும் பொறுப்பாளராக இருந்தவர் அருண் நேரு. அவ்விருவரும் செய்த வரலாற்று பிழைகள் இதோ:

  1. ஷாபானு வழக்குக்குப் பின் சரிந்து விடுமோ என்று அஞ்சிய இந்து வாக்கு வங்கியை நிலை நிறுத்துவதற்காக அப்போதைய (1986) உ.பி. முதல்வர் வீர் பகதூர் சிங்கை வற்புறுத்தி  சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் நிலத்தை பூஜைகள்  செய்யத் திறந்து விடச் செய்தனர்.
  2. இது விஷவ ஹிந்து பரிஷத் வீரியமாக செயல்படுவதற்கும் வகுப்பாதத் தீயை விசிறி விடுவதற்கும் காரணமாக அமைந்தது. பாபரி மஸ்ஜித் வளாகத்தில் சிறையில் இருக்கும் ராமரையும் சீதாவையும் விடுவிக்க வேண்டும் என்ற அவர்களின் விஷமப்  பிரச்சாரம் வீறுகொண்டு எழுவதற்கு இது வழிவகுத்தது.
  3. புனிதக் கற்கள் என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து செங்கற்கள் அயோத்தியாவை நோக்கிக் கொண்டு வரப்பட்டன. இது வருகின்ற வழி நெடுகிலும் குறிப்பாக உ.பி. பீஹாரில் வகுப்புக் கலவரத்தை வெடிக்கச் செய்தது.
  4. ராஜீவ் காந்தி ஆட்சியில் இருக்கும் போது போஃபர்ஸ் ஊழல் பெரிய அளவில் வெடிக்கின்றது. இந்தக் கட்டத்தில் அதைக் காரணம் காட்டி ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த V.P. சிங் தனது பதவியை ராஜினாமா செய்கின்றார். அதை மய்யமாக வைத்துத் தேர்தலில் களமிறங்குகின்றார். 1989 தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால், இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால் தேர்தல் ஆயுதமாக ராமர் கோயிலைக் கையில் எடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்  தள்ளப்பட்டார்.

பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு முதல் காரணம் காங்கிரஸ் தான் என்பதற்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவுக்குறிப்புகளை மீண்டும் புரட்டுவோம்.

நினைவுக்குறிப்புகள் தெரிவிக்கின்ற செய்திகள் இதோ:

ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ராஜீவ் காந்தி கோர்காபூருக்கு அருகில் வசிக்கும் தேவ்ராஹ்வ பாபா என்ற மதகுருவை சந்திக்கின்றார். இதற்கு இடைத்தரகராக இருந்தவர் மத்திய உள்துறை அமைச்சரான பூடாசிங் ஆவார்.  உ.பி.மாநிலத்தில்  ஓர் ஐபிஸ் அதிகாரி இந்த பாபாவின் சீடர். அவர் மூலமாக இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடானது.

தேவ்ராஹ்வ பாபாவுக்கு  இந்தி பேசும் மக்களிடம் கணிசமான மரியாதை இருந்தது. அவரைச் சந்திக்கும் போது பக்த கோடிகள் அவரது பாதம் தொட்டு வணங்கி பரவசப்படுவார்கள். கூரை வேய்ந்த குடிலில் குடி கொண்டிருக்கும் பாபாவின் ஆசிரமக் கூடாரத்தில் பல்வேறு கோமாளித்தனங்கள் அரங்கேறும்.

மகிமைக்குரிய (?) இந்த பாபாவைத் தான் மாண்புமிகு பிரத அமைச்சர் ராஜீவ் காந்தி சந்திக்க… இல்லை, தரிசிக்க வருகின்றார். அவரிடம் ராமர் கோயில் தொடர்பான ஆலோசனையைக் கேட்க வருகின்றார். மகனே! நவம்பர் 9ந்தேதி  இந்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி நடக்கட்டும் என்று ஆசீர்வாதத்துடன்  ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் அதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் உ.பி. மாநிலத்தில் தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் அலுவலகம் விஷ்வஹிந்து பரிஷத்தின் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு தகவல் தொடர்பு அலுவலகமாக மாறிவிட்டிருந்தது.  இந்தப் பேச்சுவார்த்தைப் பணியில் முழுமையாக ஈடுபட்டவர் அதே உள்துறை அமைச்சர் பூடாசிங் தான். இந்த உண்மைகள் அப்போதைய உ.பி.யின் முதலமைச்சர். N.D. திவாரிக்கும் பிரதம அமைச்சர் நரசிம்மராவுக்கும் மத்தியில் நடந்த  மோதலின் போது வெளியாயின.

பாபரி மஸ்ஜித் வழக்கு பல துரோகங்கள்  நிறைந்த வரலாறாகும். மத்தியில் மட்டுமல்ல! மாநிலத்திலும் மாறி மாறி வந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தாங்கள் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளைத் தட்டிக் கழித்தன.

டிசம்பர் 1949, 22ந்தேதி கள்ளத்தனமாக வைத்த சிலைகளை அகற்ற வேண்டும் என்று  பிரதமர் நேரு வலியுறுத்தியும் மாநில முதல்வர்  G.B. பந்து அதை முறியடித்து விட்டார். தனது பாட்டனார் நேருவின் கொள்கைக்கு நேர் எதிராக ராஜீவ் காந்தி பாபரி மஸ்ஜித் வளாகத்தை ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவதற்குத் திறந்து விடுகின்றார். இதன் மூலம் பாபர் மஸ்ஜித் நிலம் சர்ச்சைக்குரிய இடமாக இருந்தும் அதில் கள்ளத்தனமாக அடிக்கல் நாட்டுவதற்கு ராஜீவ் காந்தி வழிவகுத்து விட்டார். V.P. சிங்கை எதிர் கொள்வதற்கு ராமரைத் துணைக்கு அழைத்தார்.  அந்த அஸ்திரம் காங்கிரஸுக்குக் கைகொடுக்காமல் கடைசியில் அது காங்கிரஸின் அஸ்திவாரத்தை நாடு முழுவதும் ஆட்டம் காண வைத்து விட்டது.

இவை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது நினைவுக் குறிப்புகளில் தெரிவிக்கும் பகிரங்கமான உண்மைகளாகும்.

நவம்பர் 9, 1989 – நவம்பர் 9, 2019

வாக்கு வங்கி அரசியலுக்காக, ஆசிரம பாபாவின் ஆலோசனையைக் கேட்டு, நவம்பர் 1989,  9ந்தேதி  விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பாஜக ஆகிய அமைப்புகள் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ராஜீவ் காந்தி அனுமதி கொடுத்து முஸ்லிம்களின் முதுகில் குத்தினார்.

இதன் மூலம் நவம்பர் 9, 1989-ம் தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கும் நவம்பர் 9, 2019-ம் எப்படி பொருந்திப் போகின்றது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

இராஜீவ் காந்தியின் இராம ராஜ்ய அறிவிப்பு!

1989 நவம்பர் 9 அன்று ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி கொடுத்தது எதற்கு?  அம்மாதம் 22 மற்றும் 26 தேதிகளில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை  அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான்.

அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக  ‘ராம்ராஜ்யம் அமைப்போம்’ என்று கூறி அயோத்தியிலிருந்து தான் 1989ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார்.  ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ராமர் அவருக்குக் கைகொடுக்கவில்லை.  வெறும் 197 இடங்கள் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.   தேசிய முன்னணி சார்பில் V.P. சிங் பிரதம அமைச்சரானார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் சிலைகள் பாபரி மஸ்ஜிதில் வைக்கப்பட்டன. அப்போது காங்கிரஸ் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலைகளை அப்புறப்படுத்த மறுத்தது.  பள்ளிவாசலைப் பூட்டி மாநில அரசாங்கம் கையில் வைத்துக் கொண்டது.  அதிலிருந்து ஒரு நாற்பது ஆண்டுகள் கழித்து இந்துக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அதே காங்கிரஸ் கட்சி  பள்ளிவாசலைத் திறந்து விடுகின்றது. எதற்காக? அதில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை இந்துக்கள் வழிபட வேண்டும் என்பதற்காக!

வெறுப்பு அரசியல் – பாகம்: 5

மண்டலும் மந்திரும்

1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதம அமைச்சராக இருக்கும் போது, சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரைகளை அளிப்பதற்காக  பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.   ‘பிற்படுத்தப்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற தனது பரிந்துரையை மண்டல் கமிஷன் 1980ல் அளித்தது. அப்போது மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா அரசாங்கம் கவிழ்ந்து விட்டது.

இதன் பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலங்களில் அது கிடப்பில் கிடந்தது. 1990ல் V.P. சிங் பிரதமரானதும் அந்த மண்டல் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றார்.

இது உயர்சாதி வகுப்பினரின் வயிற்றில் அடித்து விடும் என்பதால் அத்வானி வகையறாக்கள் கலவரத்தைத் தூண்டி விடுகின்றார்கள்.  அதன் விளைவாக நாடெங்கும் கடையடைப்புகள், போராட்டங்கள் நடைபெற்றன. சில மாணவர்கள் தீக்குளித்தனர்; தீக்குளிக்க வைக்கப்பட்டனர்.

ஆனால் V.P. சிங் அசைந்து கொடுக்கவில்லை. உயர்சாதி நலனை இது பாதிக்கும் போது தங்கள் வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கணக்குப் போட்ட L.K. அத்வானி, ‘நீ மண்டலை எடுத்தால் நான் மந்திரை (ராமர் கோயில் விவகாரத்தை) எடுப்பேன்; உனக்கு மண்டல் என்றால் எனக்கு கமண்டல் (அதவாது இராமர் கோயில் பிரச்சாரம்)’ என்று ரத யாத்திரையை அறிவிக்கின்றார்.

1989 வரைக்கும் பிஜேபியை மக்கள் யாரும் சீண்டவில்லை. 1984 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்குக் கிடைத்தது வெறும் இரண்டு இடங்கள் தான்.  ஆனால் 1989ல் காங்கிரஸுக்கு  எதிராகக் களம் அமைத்ததில் பிஜேபி 80 இடங்களைப் பெற்றது.

இந்த வாக்கு வங்கி சரிந்து விட பிஜேபி விரும்புமா? ஒரு போதும் விரும்பாது. அதன் விளைவாகத் தான் அத்வானி, ராமர் ரத யாத்திரை நடத்தினார். குஜராத் சோமநாத் கோயிலிலிருந்து துவங்கி அயோத்தியாவை அடைவது அவரது திட்டம்.  எதிர்பார்த்தது போல வழிநெடுகிலும் கலவரங்கள் வெடித்தன; இரத்த ஆறே ஓடியது.

அத்வானியின் ரத யாத்திரை உ.பி.யில் நுழைவதற்கு முன்னால் அது பீகாரில் நுழைந்தது. அப்போது லல்லு பிரசாத் யாதவ் அந்த மாநில முதல்வராக இருந்தார். அதனால் அவர் துணிச்சலாக,  ரத்த ஆற்றை ஓட்டிக் கொண்டிருந்த ரதயாத்திரையைத் தடுத்து நிறுத்தி அத்வானியைக் கைது செய்து காவலில் வைத்தார்.

இதன் விளைவாக தேசிய முன்னணி தலைமையில் அமைந்த   V.P. சிங் அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை பிஜேபி  விலக்கிக் கொண்டது. மண்டல் கமிஷன் பரிந்துரைந்த இடஒதுக்கீடு மண்ணைக் கவ்வியது. பிஜேபி தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் பாதிப்புக்குள்ளானது  பாபர் மஸ்ஜித். காரணம் 1990ல் அத்வானி கொளுத்தி வைத்த தீ தான் பாபரி மஸ்ஜித் 1992ல் வெடித்துச் சிதறுவதற்குக் காரணமானது.

1989ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமரைத் தன் வசமாக்க ராஜீவ் காந்தி முயற்சித்தார். அவரிடமிருந்து ராமர் தப்பிப் போய் விட்டார். நீ ராமரைத் துணைக்கு அழைத்து இந்துக்கள் வாக்குகளை அள்ளலாம் என்று பார்க்கின்றாயா? என்று காத்திருந்த பிஜேபிக்கு, V.P. சிங் மண்டல் கமிஷன்  பரிந்துரையைத்  தாக்கல் செய்தது ஒரு சாக்காக அமைந்தது.

தங்களது உயர்சாதி வாக்கு வங்கியைக் காப்பாற்ற ரத யாத்திரை நடத்திய அத்வானிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்று தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் வாக்கு வங்கியைத் தகர்த்த அதே வேளையில் V.P. சிங், மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்தி, அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை அள்ளும் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார். இப்படி இரண்டு ஆதாயங்களை அத்வானி அடைந்து கொண்டார். ஆனால் மொத்தத்தில் இந்த வாக்கு வங்கி அரசியலில் பலிகடாவானது, பாதிப்புக்குள்ளானது பாபரி மஸ்ஜித் தான்.

வெறுப்பு அரசியல் – பாகம்: 6

அத்துமீறிய அராஜகக் கும்பல்

1991ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில்   நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது  ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுகின்றார். அந்த அனுதாப அலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கின்றது. தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக அல்ல! தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைக்கின்றது. ஒரு சிறுபான்மை அரசாங்கமாக அது செயல்படுகின்றது.

சிறுபான்மை அரசின் பிரதமாகப் பொறுப்பேற்றவர் பி.வி. நரசிம்ம ராவ் ஆவார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜேபி ஆட்சி!   1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 அன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான 500 ஆண்டு கால பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜிதை அடித்து நொறுக்க ஒரு கூட்டம் அத்துமீறி, பள்ளி வளாகத்தில் நுழைகின்றது. சட்டம் ஒழுங்கு சமாதியானது. காவித்துறையான காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.

அருகிலுள்ள மாலத்தீவு ஆபத்தில் மாட்டிக் கொண்ட போது ஐந்து மணி நேரத்தில் காப்பாற்றிய இந்திய ராணுவம், கூப்பிடும் தூரத்தில் பள்ளி இடிக்கப்பட்ட போது மயானத் தீவில் மாயமாகி விட்டது; மதச்சார்பின்மை மரணத்தைத் தழுவியது.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் கும்பலின் தலைவர்களான எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முரளி மனோகர் ஜோஷி, விஷ்ணு ஹரி டால்மியா, வினய் கத்தியார், உமா பாரதி, பெண் துறவி சாத்வி  ரிதம்பரா ஆகியோரின் மேற்பார்வையில், கரசேவகர்கள் என்ற கயவர்கள் கைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த  கோடரிகள், வெட்டுக் கத்திகள், சம்மட்டிகள், இரும்புக் கம்பிகள் ஆகிய ஆயுதங்கள் மூலம் பாபரி மஸ்ஜிதைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தனர்.

தனது முதுகை உமா பாரதியிடம் சவாரிக்கு  விட்ட முரளி மனோகர் ஜோஷியும், அவரது முதுகில் சவாரி ஏறிய மொட்டை  உமா பாரதியும் கோலாகலமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்; கொக்கரித்து, குதூகலித்துக் கொண்டிருந்தனர். “ராம் நாம் சத்ய ஹை, பாபரி மஸ்ஜித் துவஸ்த ஹை” என்று உமாபாரதி பஜனை பாடிக் கொண்டிருந்தாள். எங்கு பார்த்தாலும் கரசேவக் வெறியர்களின் கைத்தட்டல்கள், காட்டுக் கத்தல்கள், விசில்கள், வெறிக் கூச்சல்கள் என பாபர் மஸ்ஜித் வளாகமே ஆராவாரப்பட்டது.

தரைமட்டமான இறையில்லம்

அத்வானி, ஆன்மா சாந்தியுடன் கரசேவர்கள் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். தனது ரத யாத்திரையின் இலட்சியக் கனவு கண்ணெதிரே பலித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.  ஐந்து நூற்றாண்டுகளாக ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்து நின்ற ஆலயத்தின் மணிமகுடங்கள், ஆறேழு மணி நேரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மண்ணில் உருண்டு விழுந்தன. ஒரு கோபுரம் கொஞ்ச நேரத்தில் குப்பைக் கூளமானது; ஒரு புராதனச் சின்னம், ஒரு புனிதப் பள்ளி  பொழுது அடங்குவதற்குள் புழுதிக் குவியலானது.

‘பள்ளியின் ஒரு செங்கலுக்குக் கூட சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்வேன்’ என்று உ.பி. மாநில முதல்வர் கல்யாண்சிங், உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதி காற்றோடு காற்றாகக் கரைந்து போனது.

பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் 1949, டிசம்பர் 22-23 தேதிகளில் அல்லாஹ்வின் ஆலயத்தில் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி நடத்தியது. மாநிலத்தின் முதல்வர் கோவிந்த பல்லப பந்து!

என்னதான் நேருவுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் ஒரு நிமிட நேரத்தில் தூக்கிய எறிய வேண்டிய சிலைகளை, ஒரு நூற்றாண்டு காலம் உறங்க வைப்பதற்கு அவர் காரணமானார். மாநில முதல்வர் G.B. பந்தைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்து பிரதமர் நேரு, பந்தாடியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறி விட்டார்.

அதனால் அன்றைக்கு மத்தியிலும் மாநிலத்திலும்  ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்வர் G.B. பந்து ஆகியோர்  பள்ளி இடிப்பிற்கான முன்னுரையை எழுதினார்கள்.

அவரது பேரன் ராஜீவ் காந்தி, பிரதமராக இருந்த போது, பள்ளி வளாகத்தின் வாயிற்கதவுகளை ஆதிக்க வெறியர்களுக்குத் திறந்து விட்டதும்,  அதன் பிறகு 1989-ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல்  நாட்டுவதற்கு அனுமதியளித்தது மட்டுமல்லாமல் ‘ராம ராஜ்யம் அமைப்போம்’ என்று அங்கிருந்தே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியதும் ஆதிக்க சக்திகள் பள்ளி இடிப்பிற்குரிய பாதையை அமைத்துக் கொடுத்தது. பின்னால் பிரதமரான பி.வி. நரசிம்ம ராவ், தனது முன்னோர் காட்டிய வழியில் பள்ளியைக் கச்சிதமாக இடித்தே விட்டார்.

இதன் மூலம் பள்ளி இடிப்பு எனும்  அத்தியாயத்தின்  முன்னுரையை நேருவும், மையப் பகுதியை ராஜீவ் காந்தியும் எழுதினார்கள்.  இறுதி உரையை நரசிம்மராவ் எழுதி முடித்தார்.

2019 நவம்பர் 9ந்தேதி பிஜேபியின் நரேந்திர மோடி ஆட்சியில் இன்னுமொரு அநியாய அத்தியாயம் வெளியாகி உள்ளது. அவ்வளவு தான்.

ஒரு நூற்றாண்டு காலம் விதைக்கப்பட்ட வெறுப்பு அரசியல் பள்ளியை வீழ்த்தியது. பள்ளியை மட்டுமல்ல! சுற்றி அமைந்த 63 ஏக்கர் நிலத்தையும் அது விழுங்கி விட்டது.

இதற்கு முழு முதல் காரணம் காங்கிரஸ் தான். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முஸ்லிம்களின் இதயங்களின் வேல் பாய்ச்சுவது போல், ‘ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் வரவேற்கிறது’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தீர்ப்பை வரவேற்கிறோம் என்று சொல்லியிருந்தால் கூட அதை ஒரு கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறோம் என்று சொல்லும் போது, தாங்கள் விதைத்த வெறுப்பு அரசியல் விளைச்சலைக் கொடுத்து விட்டது என்ற மகிழ்ச்சியை காங்கிரஸ் வெளிப்படுத்துகின்றது என்றே புரிய முடிகின்றது.

மொத்தத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் பாஜக நெஞ்சில் குத்தியது; காங்கிரஸ் முதுகில் குத்தியது. அது தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம். காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவாவைக் கையில் எடுத்தது; பாஜக தீவிரவாத இந்துத்துவாவைக் கையில் எடுத்தது.

‘ஆட்சியாளர்கள் தங்களை ஆட்சியில் தக்க வைக்க வேண்டுமென்றால் மக்களிடம் ஏதாவது ஓர் எதிரியைக் காட்டியாக வேண்டும்’ என்று அறிஞர் ஜோட் குறிப்பிட்ட கருத்தை முன்னுரையில் பார்த்தோம்.

அந்த அடிப்படையில் பாஜக, முஸ்லிம்களைப் பூதாகரமாகவும் விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற நேரடியான வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்திருக்கின்றது. அதில் வெற்றியும் கண்டு வருகின்றது.

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்ற வெறுப்புணர்வை ஊட்டி அது ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.  அங்கு அறிமுகப்படுத்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவதன் நோக்கமே, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை நாடு முழுவதும் பரவலாக்குவது  தான்.

முத்தலாக், பொது சிவில் சட்டம் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக பயன்படுத்துகின்ற வெறுப்பு அரசியலின் ஆயுதங்களே!

அண்மையில் உச்ச நீதிமன்றம் நம்மிடமிருந்து பறித்தது பாபரி மஸ்ஜித் என்ற வழிபாட்டுத் தலத்தையல்ல! வழிபாட்டு உரிமையைப் பறித்திருக்கின்றது. இனியும் நமது வாழ்வுரிமையைப் பறிப்பதற்கு இந்துத்துவா ஆதிக்க சக்திகள்  காத்திருக்கின்றன.

இப்போது முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள ஒரு வழிமுறை, ஆட்சியதிகாரத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கோரிப் போராடுவது தான். இப்போது இருக்கும் தேர்தல் முறையில் நமது வாக்குரிமை நம்மை வீழ்த்துவதற்குத் தான் பயன்படுகிறதே தவிர நம்மை வாழ வைப்பதற்குப் பயன்படுவதில்லை. அதனால் நமது அடுத்தக்கட்ட நகர்வு விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நோக்கித் தான். இந்தத் தலைமுறையில் அது கைகூடாவிட்டாலும் அடுத்தத் தலைமுறைக்கு அது கைகூட நாம் அடிக்கல் நாட்டுவோம்! இன்ஷா அல்லாஹ், நாம் நடத்துகின்ற வாழ்வுரிமை  மீட்புப் போராட்டம் அதற்கான முதல் படிக்கட்டாகட்டும்!

—————————————————————————————————————————————————————————————————————

லிபரஹான் கமிஷன் அறிக்கையும் பரிந்துரைகளும்

நாஷித் அஹமத்

உலகையே உலுக்கிய பாபரி மஸ்ஜித் இடிப்பு கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று நிகழ்ந்தேறியது.

கடப்பாரைகளுடனும் கோடரிகளுடனும் கரசேவகர்கள் அணிவகுக்க, சங்பரிவார இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் பலரின் நேரடி மேற்பார்வையில் கன கச்சிதமாகச் செய்து முடிக்கப்பட்டது இந்தப் பள்ளிவாசல் தகர்ப்பு!

வெறுமனே ஒரு பள்ளிவாசல் தகர்ப்பல்ல அது!

ஆட்சியும் அதிகார பலமும் இருந்தால் சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் இந்த தேசத்தில் எந்த மதிப்பும் இல்லை என்பதை இவ்வுலகம் அறிந்து கொண்ட நாள் அது!

அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு, இடித்த இடத்திலேயே பாபர் மசூதி மீண்டும் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்ததுடன், இந்தப் பயங்கரவாத நிகழ்வின் பின்னணி குறித்த ஆய்வுக்காகவும், குற்றவாளிகள் யார் யார் என்பதைக் கண்டறிவதற்காகவும், 1992 டிசம்பர் 16 அன்று (பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 10 நாட்களில்) கமிஷன் ஒன்றை நிறுவினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியிலிருந்தவரும், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணி செய்து ஓய்வு பெற்றவருமான திரு. மன்மோகன் சிங் லிபரஹான் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்தக் கமிஷனானது, பாபர் மசூதி இடிப்பையொட்டிய அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வு செய்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டது.

ஆனால், கிட்டத்தட்ட 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்டு, 17 வருடங்களை இந்த ஆய்வுக்காக நீதிபதி லிபரஹான் எடுத்துக் கொண்டார்.

399 ஆய்வமர்வுகள், பல கட்ட விசாரணைகள் என சுதந்திர இந்தியாவின் எந்தவொரு விசாரணைக் கமிஷனும் எடுத்துக் கொள்ளாத கால அவகாசத்தை இதற்காக எடுத்துக் கொண்ட நீதிபதி லிபரஹான், கடந்த 2009 ஜூலை 30ஆம் நாள், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம், தனது 998 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார்.

தாமதமாக அளிக்கப்பட்ட அறிக்கை என்றாலும், இயன்ற வரை நீதமான முறையில் தமது விசாரணைகளும் அதற்கான பின்னணி சான்றுகளும் சேகரிக்கப்ப‌ட வேண்டும் என்பதில் மிகுந்த கவனமெடுத்துக் கொண்ட அவர், பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தமது அறிக்கை மூலம் வெளியிட்டார்.

லிபரஹான் கமிஷனின் அறிக்கையானது, பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்துள்ளது.

‘பாபர் மசூதி இடிப்புக்கான காரணங்கள் என்ன? அதில் ஈடுபட்டவர்கள் யார்?’ என்று கண்டறிந்து கூறியதோடு, இனிமேலும் இப்படியொரு சம்பவம் நடந்து விடாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் லிபரஹான் கமிஷன் பரிந்துரைத்திருக்கிறது.

பாபர் மசூதி இடிப்புக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார இயக்கங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை அமைப்புகளின் தலைவர்களே காரணமாக இருந்தனர் என்று அவரது அறிக்கை தெளிவான சான்றுகளுடன் குற்றச்சாட்டுகள் சுமத்தியது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் அப்போதைய பாஜக முதல்வர் கல்யாண் சிங், பாஜகவின் முக்கிய தலைவர்களான அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அஷோக் சிங்கால், பிரமோத் மகாஜன், பிரவீன் தொகாடியா, சுவாமி சின்மயானந்தா, சிவசேனா கட்சித் தலைவர்கள் என 68 முக்கியப் பிரமுகர்களைக் குற்றவாளிகள் என அறிவித்தது அவரது கமிஷன் அறிக்கை!

இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசமே மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலரும் பலவிதமாகக் கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரஹான் கமிஷன் தெரிவித்துள்ளது.

மத துவேஷத்தைக் கக்கும் வகையிலான எண்ண ஓட்டங்களும், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கமுமே அவர்களின் குறிக்கோளாக இருந்திருக்கிறது எனவும் தெரிவிக்கிறது அவரின் அறிக்கை.

இன்னும் சொல்வதானால், தமது அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 17 வருட காலம் ஆனதற்குக் கூட, இந்தத் தலைவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தியதே முக்கியக் காரணம் என்றும் வெளிப்படையாகக் கூறினார்.

அறிக்கையில் நீதிபதி லிபரஹான் மேலும் குறிப்பிடும் போது, பாபர் மசூதி தகர்ப்பானது, தேசிய மற்றும் மாநிலத்தின் அதிகார வரம்புகளின் நேரடிக் கண்காணிப்பில் தான் நிகழ்ந்தது எனவும், அவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாளர்களாக இருந்தனர் எனவும் தெரிவிக்கிறார்.

மிக முக்கியமாக, உள்ளூர் காவல்துறை, அரசு சார் அதிகாரிகள், மாநில அரசின் அதிகார வரம்புகள் ஆகியவை இச்சதிச்செயலைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்க, மத்திய ஆளுமையோ அதனை ஊக்குவிக்கும் நிலையை எடுத்தது.

பள்ளிவாசல் தகர்ப்பு பற்றிய ஒட்டு மொத்தமான தமது பார்வையைக் குறிப்பிட்ட நீதிபதி லிபரஹான், இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த அடையாளச் சின்னமொன்றை, அற்பமான அரசியல் ஆதாயங்களை மையப்படுத்தித் தகர்த்து விட்டனர் எனவும், காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக தமது அறிக்கை இதனைப் பார்ப்பதாகவும் பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார்.

கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் போன்றோரை இந்த மசூதி தகர்ப்பு நிகழ்வில் நேரடியாகப் பங்கு கொண்ட குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் இந்த லிபரஹான் அறிக்கையானது, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரை ‘றிsமீuபீஷீ விஷீபீமீக்ஷீணீtமீs’ என்று குறிப்பிடுகிறது. அதாவது, களத்தில் நேரடியாகப் பங்கு கொள்ளாவிட்டாலும் ஒட்டுமொத்தத் திட்டத்தின் சூத்திரதாரிகளாகவும் மூளையாகவும் இவர்கள் தான் செயல்பட்டனர் என்றும், பின்னால் இருந்து இந்தத் திட்டத்தை செயல் வடிவத்திற்குக் கொண்டு வந்ததில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்கிற வகையில் நேரடிக் குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் கற்பிக்க இயலாது எனவும் திட்டவட்டமாக லிபரஹான் தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

அதோடு தனித்தனியே இந்தத் தலைவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அந்த அறிக்கை குறிப்பிடும் முக்கிய தகவல்கள் இதோ:

வாஜ்பாய்

பள்ளிவாசல் தகர்ப்பு தொடர்பான தமது செயல்திட்டங்களை விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் முடுக்கி விட்டது, அப்போதைய பாஜக தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் உடனான அவர்களது சந்திப்பிற்குப் பிறகு தான் என்கிறது லிபரஹான் அறிக்கை.

மேலும், அந்தக் காலகட்டத்தில், சங்பரிவாரக் கூட்டத்தினரைச் சந்தித்த பிறகு வாஜ்பாய் இது தொடர்பாகக் கூறும் போது கூட, ‘நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. எனினும் ராமர் கோவில் கட்டுவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமே இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியதாக லிபரஹான் தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

அத்வானி

அத்வானி என்னும் பெயர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட லிபரஹான் அறிக்கையில் இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறையாவது இடம்பெற்று விடுகிறது. ஒட்டுமொத்த செயல் திட்டத்திற்கும் சூத்திரதாரியாக அத்வானி விளங்கினார் என்று குற்றம் சுமத்தும் லிபரஹான், அவர் 1990களில் நாடெங்கிலும் நடத்திய ரத யாத்திரைகளும், அதனோடு தொடர்புடையதாக தேசமெங்கிலும் அவர் கக்கிய மத துவேஷப் பேச்சுக்கள் அனைத்துமே வெறுப்பு விதைகளாகத் தூவப்பட்டன எனவும், அவையே சங்பரிவாரக் கூட்டத்திற்கு உத்வேகத்தை அளிப்பதாக அமைந்ததாகவும் தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரை குறிப்பிடும் போது, “ஜிலீமீஹ் ஷ்மீக்ஷீமீ வீஸீtமீறீறீமீநீtuணீறீறீஹ் & வீபீமீஷீறீஷீரீவீநீணீறீறீஹ் க்ஷீமீsஜீஷீஸீsவீதீறீமீ” என்று சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை.

அதாவது, ஒட்டு மொத்த சதிச் செயலுக்கும் சித்தாந்த ரீதியில் பின்னணி மூளையாக அவர்கள் செயல்பட்டனர் என்பது அதன் பொருள்.

முரளி மனோகர் ஜோஷி

பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக 1991 முதல் 1993 வரை பொறுப்பில் இருந்தவர் முரளி மனோகர் ஜோஷி. இவரும், அப்போதைய உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங்கும் இணைந்து, பாபர் மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்பாக, அதாவது 1991ஆம் வருடம், ஜூலை மாதத்தில் அயோத்தியா நகரத்திற்கு விஜயம் செய்கிறார்கள்.

அங்கே தங்கள் ஆதரவாளர்கள் பலரையும் திரட்டி வைத்துக்கொண்டு பள்ளிவாசலைத் தகர்ப்போம், ராமர் கோவில் கட்டுவோம் எனும் கோஷத்தை முழங்கியதாகவும், அனைவருடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் சான்றுகளுடன் விவரிக்கிறது லிபரஹான் அறிக்கை. 1989ஆம் ஆண்டு முதலே, ஒட்டுமொத்த சதி திட்டத்திற்கும் மூளையாக இவர் இருந்து வந்துள்ளதை, அவரது பல்வேறு செயல்பாடுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம் பதிவு செய்கிறார் நீதிபதி லிபரஹான்.

மேலும் அவர் கூறுகிற போது,  கரசேவகர்களுக்கு உடலாலும் மன ரீதியிலும் பக்கபலமாக முரளி மனோகர் ஜோஷி  திகழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கின்றார்.

பால்தாக்கரே

பாபர் மசூதி தகர்ப்பில் முக்கியப் பங்கு வகித்த தலைவர்களில் ஒருவராக சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே திகழ்கிறார்.

தொடர்ச்சியாகத் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போதெல்லாம், நாம் அழைப்பு விடுக்கக் கூடிய கரசேவை என்பது வெறுமனே அடையாள கர சேவையாக இருக்காது என்றும், மாறாக உண்மையிலேயே கரத்தைக் கொண்டு செய்யப்படக்கூடிய ஒரு காரியமாகவே அது இருக்கப் போகிறது எனவும், மசூதி தகர்ப்பையும், ராமர் கோவில் கட்டுமானப் பணியையும் குறிக்கும் வகையில் ஆதரவாளர்களின் உணர்ச்சியை அவர் தூண்டி வந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உமா பாரதி

பாஜகவின் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்ட உமாபாரதியையும் இதன் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக லிபரஹான் தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

மசூதி தகர்ப்பு நிகழ்ந்து முடிந்த தருணத்தில் முரளி மனோகர் ஜோஷியை ஆரத்தழுவி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார் எனவும், இந்த நிகழ்வுக்காக தாம் மகிழ்வுருவதாகவும், எந்த நிலையிலும் இதற்காகத் தான் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை எனவும் வெளிப்படையாகவே அறிவித்து, தனது இஸ்லாமிய விரோதப் போக்கினை அவர் வெளிப்படுத்தினார் என்று அந்த அறிக்கையில் உமாபாரதி தொடர்பாகக் குறிப்பிடுகிறார்.

கல்யாண் சிங்

லிபரஹான் அறிக்கை, பாபர் மசூதி இடிப்பின் மிக முக்கிய குற்றவாளியாகக் கண்டறிந்தது அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்த பாஜகவின் கல்யாண் சிங்கைத் தான்.

1991ஆம் ஆண்டு முதல் முதல்வர் பதவியை வகித்து வருபவர் கல்யாண்சிங். ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸின் எண்ண ஓட்டங்களின்படி காய் நகர்த்தத் துவங்கினார்.

அவர் ஆட்சிக் காலத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி அமையப்பெற்ற 2.77 ஏக்கர் நிலத்தைத் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்தினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இவரது அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்தது என்றும், தமது காவல் படைகளையும் அதிகார வர்க்கத்தையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட கல்யாண் சிங், கரசேவகர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் மௌனம் காத்ததாகவும் லிபரஹான் தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

அத்துடன், இந்தச் சதித்திட்டத்தை ஏற்காத அல்லது மனதளவில் முழுமையான அங்கீகாரம் கொள்ளாத சில அரசு அதிகாரிகளைக் கூட, சட்ட வரம்புகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், பணியிட மாற்றம் எனும் உத்தரவின் பேரில் இடம்பெயர வைத்தார் என்கிறது இந்த அறிக்கையின் ஆய்வு.

அதன் மூலம் அயோத்தி நகரம் முழுவதையும் தமது அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கல்யாண் சிங், மசூதி தகர்ப்பிற்கு ஆதரவான நிலை கொண்ட அதிகாரிகளை மட்டுமே அங்கு அனுமதித்தார்.

நிகழப் போகும் அசம்பாவிதங்களை உ.பி. அரசு முன்கூட்டியே கணித்து வைத்திருந்தும்,  தடுப்பதற்கு எல்லா சூழலையும், அதிகார ஆற்றலையும் பெற்றிருந்தும் கூட அனைத்தையும் கண் கட்டி வேடிக்கை பார்க்கும் துர்பாக்கிய நிலையையே கல்யாண் சிங் மேற்கொண்டார் என்று மிகக் கடுமையான முறையில் குற்றம் சுமத்துகிறார் நீதிபதி லிபரஹான்.

மேலும், மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்றப் பார்வையாளரும் நடுநிலைமையாகச் செயல்படவில்லை. மசூதியின் கூரை, முகடுகள் இடிக்கப்பட்ட போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, அப்போதைய உத்தரப்பிரதேச மாநில காவல்துறையைப் பற்றிக் குறிப்பிடும் லிபரஹான் அவர்கள், பாபர் மசூதி இடிப்பின் போது அங்கே குழுமியிருந்த காவல்துறையினரில் 90% பேர் அந்த அசம்பாவிதச் செயலை அங்கீகரிக்கக் கூடியவர்களாகவும்,  இதர 10% பேர் கை கட்டி வேடிக்கை பார்க்கும் மௌன சாட்சிகளாக இருப்பதற்குமே பணிக்கப்பட்டனர் எனும் அதிர்ச்சித் தகவலையும் தமது அறிக்கையில் தெளிவான முறையில் குறிப்பிடுகிறார்.

கல்யாண சிங்கின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்வு செய்த நீதிபதி லிபரஹான், அக்கால கட்டத்தில், சங்பரிவாரக் கூட்டத்திற்கு மிக முக்கியமான ஆயுதமாக கல்யாண்சிங் மற்றும் அவரது அரசு தேவைப்பட்டது என்ற வகையில், அந்தத் தேவைகளை மிக நேர்த்தியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றிக் கொடுத்தார் கல்யாண்சிங் என பகிரங்கப்படுத்துகிறார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, பாபர் மசூதி தகர்ப்பு நிகழ்ந்த கால கட்டத்தில் உ.பி. அரசாங்கம் முழுவதையும் சங்பரிவாரக் கூட்டத்தினர், தங்கள் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் கொண்டு வந்து விட்டதாகவும், அதற்கு இடமளித்து தமது சங்பரிவார இயக்க விசுவாசத்தைக் கல்யாண் சிங் வெளிக் காட்டியிருந்தார் எனவும் குற்றம் சுமத்துகிறார்.

முக்கிய பரிந்துரைகள்

லிபரஹான் தமது அறிக்கையில். இனியும் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வை இந்த நாடு எதிர்கொள்ளாமல் இருக்க சில முக்கிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

  • இப்போது காவல்துறையும், அதிகார வர்க்கமும் மக்கள் நம்பிக்கையைப் பெருமளவில் இழந்து விட்டனர். எனவே, அவற்றை சீர்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
  • அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்குமிடையே இருக்கும் கூட்டணியை உடைத்து, பொறுப்பு வாய்ந்த காவல் துறை மற்றும் அதிகார வர்க்கத்தை உருவாக்கிட வேண்டும்.
  • காவல் துறையிலிருந்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமிருந்தும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு, களைய வேண்டும்.
  • அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றதற்குப் பின்னால் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்
  • மதம், சாதி முதலானவற்றை துஷ்பிரயோகம் செய்பவர்களை தண்டிப்பதற்குக் கடுமையான சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். அதன் கீழ் விரைவாக விசாரித்து, தண்டனை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நாட்டின் நான்கு திசைகளிலும் விசாரணை ஆணையங்களை அமைத்திட வேண்டும்
  • தேர்தல் நேரத்தில் மத உணர்வுகளைப் பயன்படுத்துவது, வாக்காளர்களிடம் மத உணர்வுகளைத் தூண்டுவது, அரசியல் ஊர்வலம் என்ற போர்வையில் மத ஊர்வலங்களை நடத்துவது முதலிய விஷயங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் செய்யப்பட்டால், அத்தகைய புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • காவல் துறையினருக்கும் அரசியல் வாதிகளுக்கும் இடையே இருக்கும் கூட்டணி, அதிகார வர்க்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கூட்டணி ஆகியவற்றைப் பற்றி இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட கமிஷன்களும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டியுள்ளன. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தாதது தான் நாடு இந்த அளவுக்குப் பாதிக்கப்படுவதற்குக் காரணம்.

இப்படி அவரது பரிந்துரைகள் அதில் ஏராளம்…

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட லிபரஹான் கமிஷன் அறிக்கையை முழுமையாகப் படித்து விவாதிக்கக் கூடிய நிலையில் நம்முடைய அரசியல் கட்சிகள் இன்று இல்லை.

அடிப்படையில், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் பாபர் மசூதியைத் தகர்த்த சங்பரிவாரக் கும்பலின் முன்னால் மண்டியிட்டு அடி பணிந்தது என்று தான் அறிக்கையின் சாரம்சம் கூறுகிறது.

அப்பட்டமான அதிகார மமதையே இதன் வெளிப்பாடாகத் தென்பட்டது எனவும், சுயநலமும் மதம் சார்ந்த துவேஷ சிந்தனையும் தான் இதன் அடித்தளமாக அமைந்ததேயன்றி, மக்கள் நலன் சார்ந்த சிந்தனை என்பது இங்கு துளியும் இருக்கவில்லை என்று மிகத் தெளிவான முறையில் தமது அறிக்கையைப் பதிவு செய்கிறார் நீதிபதி லிபரஹான்.

எதிர்கால இந்தியாவை, மதச்சார்பற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்றால், லிபரஹான் கமிஷன் அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் திறந்த மனதுடன் ஆய்வு செய்து செயல்படுத்தும் மனப்பாங்கு நீதித்துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் இருக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————————————

நீதிக்கு சாட்சியாளர்களாகி விடுங்கள்!!

M.A.. அப்துர் ரஹ்மான் M.I.SC.

இறைவன் இந்த உலகத்தில் மனிதப் படைப்புகளை, பிற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். மேலும், பகுத்தறிவின் மூலமாகவும், சிந்தனை ஆற்றலின் மூலமாகவும் மனிதர்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற சூழலை இறைவன் வழங்கி இருக்கின்றான்.

இதுபோன்ற ஏராளமான சிந்தனை ஆற்றல்கள், கூரிய அறிவு சார்ந்த காரியங்கள், சிந்தனைகளை உரசிப் பார்த்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஏராளமான செயல்பாடுகள் என்று மனித குலத்துக்கு இறைவன் வழங்கியிருந்தாலும், மனிதர்கள் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் அதிகப்படியான அலட்சியத்தையும், கவனக்குறைவையும், அராஜகப் போக்கையும் காண முடிகின்றது.

நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களின் விஷயத்தில், மனித உரிமைகளைப் பேணுகின்ற சமத்துவத்தையும், நீதியையும், நியாயத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஒரு சமுதாயத்தின் அறிவுசார்ந்த வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு செலுத்தப்படுகின்ற நீதியின் அடிப்படையிலேயே மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றது.

சமநீதியும், அநீதி கலக்கப்படாத அப்பழுக்கற்ற சமத்துவமும் எந்த இடத்தில் உச்சத்தில் நிற்கின்றதோ, அவர்களே தங்களின் வாழ்க்கைப் பயணத்தை மனசாட்சியுடன் சரியான பாதையில் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று உலகம் அறிந்து கொள்ளும்.

ஒரு காரியத்தில் நீதம் செலுத்துவது என்பது, ஜாதி, மதம், இனம், உயர்வு, தாழ்வு என்று மனிதர்களின் தோற்றத்தையும், அவர்கள் சார்ந்திருக்கின்ற மதத்தையும் பாராமல், மாறாக சமத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எவருக்கும் அநியாயம் செய்யப்படாத அளவுக்கு அப்பழுக்கற்ற நீதியாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் இதுபோன்ற கட்டமைப்புகளின் அடிப்படையிலும், கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும், நீதமாக நடப்பது என்பது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையினாலும், சட்டத்தினாலும் சாத்தியக் கூறுகள் அற்ற காரியமாகும்.

அகில உலகைப் படைத்திருக்கின்ற இறைவன், நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், அநீதி வேரறுக்கப்படுவதற்கும் எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ, அந்த அடிப்படையில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும்.

இஸ்லாம் என்பது பிற மதக் கொள்கை, கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப் பெரிய வித்தியாசத்தோடு தனித்து நிற்கின்றது. அந்த வரிசையில் நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான இடங்களின் அழுத்தந் திருத்தமாகவும், ஆழமாகவும் உள்ளங்களில் பதிய வைக்கின்றது. அநீதிக்கு சாட்சியாக இருப்பவர்களையும், அநியாயத்திற்குத் துணை போகின்றவர்களையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நீதியை நீதமாக வழங்குவதற்கும், அநியாயத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், உலக மாந்தர்களுக்கு நீதியை கற்றுக் கொடுத்த, படைத்த இறைவன் சொன்ன அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது…

உண்மையைக் கொண்டு வழிகாட்டி, அதன்படி நீதி செலுத்தும் ஒரு சாராரும் நாம் படைத்தவர்களில் உள்ளனர்.

அல்குர்ஆன் 7:181

இன்றைக்கும், என்றைக்கும், உலகம் அழிகின்ற நாள் வரை ஒரு நீதியாளர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீதிக்கு சாட்சியாக இருப்பது என்றால் என்ன என்பது போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளை இஸ்லாமிய மார்க்கம் உலகிற்குப் பறைசாற்றுகின்றது.

நீதி செலுத்துவது குறித்து அல்குர்ஆன்

இறைவனால் உலகிற்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இறைவன் ஏராளமான இடங்களில் பாடம் நடத்துகின்றான். நாம் வழங்குகின்ற நீதி என்பது உள்ளச்சத்துடனும், ஆழமான நம்பிக்கையுடனும் அமைந்திருக்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

எந்த இடத்தில் சரியான முறையில் நீதி வழங்கப்படவில்லையோ, நீதியின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றதோ, அநீதி மேலோங்கி நிற்கின்றதோ அந்த இடத்தில் பிரச்சனைகளும் குரோதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு, மனிதர்கள் பல கூறுகளாகப் பிளந்து நின்று புரட்சிகளாக வெடித்துச் சிதறி விடும்.

இதுபோன்ற ஏராளாமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் பல தரப்பட்ட அறிவுரைகளை மனிதகுலத்துக்கு வழங்குகின்றார்கள்.

அறியாமைக் கால தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?

அல்குர்ஆன் 5:50

அறியாமைக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட அநீதியான தீர்ப்பை நீங்கள் விரும்பாதீர்கள்! என்றும், அல்லாஹ்வை விட நீதியான தீர்ப்பு சொல்வதற்கும், அழகிய நீதியைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறு யாருமில்லை என்றும் இறைவன் சவால் விடுகிறான்.

மேலும் இறைவன் கூறும்போது;

(நபியே!) உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும் அதைப்  பாதுகாப்பதாகவும் உள்ளது. அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் உண்மை வந்த பிறகு அதை விட்டுவிட்டு, அவர்களது விருப்பங்களைப் பின்பற்றாதீர்!

அல்குர்ஆன் 5:48

தீர்ப்பளிக்கும் போது அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும். உண்மையை அலட்சியம் செய்து, அடுத்தவரின் விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் கண்டிக்கின்றான்.

மேலும் இறைவன் குறிப்பிடும் போது;

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களது விருப்பங்களைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் உம்மைக் குழப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால், அவர்களது சில பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்கவே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் பாவிகளாகவே உள்ளனர்.

அல்குர்ஆன் 5:49

தீர்ப்பளிக்கும் போது ஒரு சில கயவர்கள் குழப்பத்தை விளைவிப்பார்கள். பாவமான காரியத்தைச் செய்து, அட்டூழியம் செய்ய நினைத்து, தீர்ப்பை மாற்றுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.

மேலும் தீர்ப்பளிக்கும் போது பேணவேண்டிய ஒழுங்குகளாக இறைவன் குறிப்பிடும் போது,

நம்பித் தரப்பட்ட பொருட்களை அதற்குரியோரிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும், மக்களுக்கிடையே தீர்ப்பளித்தால் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரையே உங்களுக்கு மிகச் சிறந்தது.  அல்லாஹ் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:58

தீர்ப்பளிக்கும் போது நீதமாகவும், நியாயமாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடப்பதே அவர்களுக்கு நல்லது என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

இந்த வசனத்தை விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்! நீதிக்கு சாட்சியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்ற அற்புதமான வசனம்.

அதாவது நீதி வழங்கும் போது சுய விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது. யாருக்காக நாம் சொல்கிறோமோ அவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இறைவன் அழுத்தமாகப் பதிய வைக்கின்றான்.

மேலும், சாட்சியைப் புரட்டினாலோ, சாட்சியைப் புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்; அநியாயக்காரர்களை துவம்சம் செய்ய அல்லாஹ் போதுமானவன் என்ற கருத்தில் இறைவன் அச்சுறுத்துகின்றான்.

நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்து அல்லாஹ் மேலும் கூறும்போது,

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டு மொத்த நபர்களுக்கும் இந்த வசனம் அற்புதமான பாடத்தை நடத்துகின்றது.

அதாவது ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை காரணமாக, குரோதம் காரணமாக நீதி செலுத்த விடாமல், அநியாயமாக நடக்க உங்களை உங்கள் உள்ளம் தூண்டி விட வேண்டாம் என்று கூறி, நீதிக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டும் என்று இறைவன் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.

நீதிக்கு சாட்சியாக நின்ற நபிகளார்

இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நீதி செலுத்துவதிலும், நீதிக்கு சாட்சியாக நிற்பதிலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள், அவர்களின் வாழ்க்கை முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.

இன்னும் சொல்வதாக இருந்தால் முஹம்மது நபியை வேரறுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த எதிரிகள் கூட நபி (ஸல்) அவர்களின் நேர்மையையும், நீதியையும் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்து உண்மைப்படுத்தினார்கள்.

ரோமாபுரி மன்னருக்கும், அன்றைய தருணத்தில் எதிரியாக இருந்த அபூசுஃப்யானுக்கும் நடைபெற்ற உரையாடலை அபூஸுஃப்யான் (ரலி) அவர்களே விவரிக்கின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

(ரோம மன்னர்) ஹெர்குலஸ் என்னைப் பார்த்து, “உம்மிடம்,  “அவர் (முஹம்மது நபி) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நீர், “அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும், நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்’’ என்று கூறினார்.

ஆதாரம்: புகாரி 2681

நபிகாளர் குறித்து அன்றைய தருணத்தில் எதிரியாக இருந்த அபூஸுஃப்யான் மன்னர் ஹெர்குலஸிடம் கூறும் போது, முஹம்மது நபி வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளைப் பாதுகாத்து, திருப்பி ஒப்படைக்கும்படியும் கட்டளையிடுகின்றார் என்றும் நபி (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற குணநலனைப் பறைசாற்றுகின்றார்.

இன்றைய காலத்தில் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, நீதம் செலுத்துகின்ற இடத்தில் இருப்பவர்கள், அநியாயமான முறையில் தீர்ப்பளித்து, பிறரின் பொருளை அபகரித்து, பொருளுக்கு சொந்தக்காரர்களை ஏமாற்றி விடுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால், நபி (ஸல்) அவர்களின் நீதம் செலுத்தும் குணம் குறித்து, எதிரிகளின் வாயிலிருந்து வந்த அற்புதமான சான்றிதழை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

மேலும், நபி (ஸல்) அவர்கள் அநியாயமான காரியத்துக்குத் துணை நிற்க மாட்டார்கள்! என்பதைத் தமது வாழ்க்கையின் மூலம் தெரியப்படுத்துகின்றார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிது அன்பளிப்பு வழங்கும்படி என் தாயார் கேட்டார்கள். பிறகு, அவருக்குத் தோன்றியதன் அடிப்படையில் எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், “நீர் நபி (ஸல்) அவர்களை சாட்சியாக்காத வரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்’’ என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை, நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, “இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த்து ரவாஹா இவனுக்குச் சிறிது அன்பளிப்பு தரும்படி என்னிடம் கேட்டாள்’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?’’ என்று கேட்டார்கள். என் தந்தை, “ஆம் (உண்டு)’’ என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்’’ என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

ஆதாரம்: புகாரி 2650

சிறு குழந்தைகளுக்கு அன்பளிப்பு செய்கின்ற விஷயத்தில் கூடுதல், குறைவாகச் சில நிகழ்வுகள் நடக்கின்றது. அந்தச் சம்பவம் நபி (ஸல்) அவர்களின் கவனத்துக்கு வரும் போது அவர்கள் சொன்ன கண்டனத்திற்குரிய வார்த்தை “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்பதாகும்.

இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய வணக்கத்தலங்கள் உட்பட பல தரப்பட்ட சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. தீர்ப்பு வழங்குகின்ற இடத்தில் இருப்பவர்கள் அநியாயமாகவும், அக்கிரமாகவும் சர்வ சாதாரணமான முறையில் தீர்ப்பை மாற்றி வழங்கி விடுகின்றார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பு விஷயத்தை சிறிய ஒரு சம்பவமாக நினைத்து விடாமல், சின்னஞ் சிறிய காரியமாக இருந்தாலும், பென்னம் பெரிய காரியமாக இருந்தாலும் ‘அநியாயத்துக்கு நான் ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்!’ என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.

நீதியாளர்களுக்கு சிறந்த முன்மாதிரி

இன்றைய கால சூழ்நிலையில் நீதியாளர்கள் என்ற தகுதியிலும், அந்தஸ்திலும் இருப்பவர்கள் சகட்டு மேனிக்குத் தங்களின் மனம் போன போக்கில் நீதி வழங்கி விடுவதைப் பார்க்கின்றோம்.ஆனால் நீதி செலுத்துபவர்களின் மிகச் சிறந்த முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.

(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் (ஈரான்-ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான்

ஆதாரம்: புகாரி 7158

நீதி செலுத்தும் பொறுப்பைப் பெற்றவர் கடுமையான கோபத்திலும், ஆத்திரத்திலும் இருக்கும் போது நீதி வழங்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள். மேலும், அவ்வாறு நீதி வழங்கும் போது, எவர் மீது கோபம் கொண்டுள்ளோமோ, அத்தகையவர் நல்லவராகவே இருந்தாலும், அவரிடத்தில் தகுந்த சாட்சிகள், சான்றுகள் இருந்தாலும், அவரின் மீதுள்ள வெறுப்பு அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க தூண்டி விடும்.

மேலும் வழக்காடுபவரின் சாதுரியத் தன்மையை வைத்துத் தீர்ப்பு சொல்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு  செய்து கொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகின்றார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 7181

இன்றைய சூழலில் நீதமாகத் தீர்ப்பளிக்கின்ற ஒரே ஒரு நபர் கூட இல்லையோ என்று எண்ணத் தோன்றுகின்ற அளவுக்கு தீர்ப்புகளின் இலட்சணம் மிகவும் கொடூரமான முறையில் அமைந்து விடுகின்றது.

ஒருவேளை நியாயமாகத் தீர்ப்பளிக்க எண்ணுபவர், தவறு செய்பவரின் சிறந்த வாதத் திறமையின் காரணமாக அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விட்டாலும், அவர் பெறக்கூடிய அந்த பொருள் என்பது நரக நெருப்பின் ஒரு துண்டாகத்தான் இருக்க முடியும் என்று கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

மேலும் ஒரு பெண்மணி, ஒரு நபருக்கு இடர் இழைத்து விடும் போது, அந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேணிய நீதத்தை வரலாறுகளில் நம்மால் பார்க்க முடிகின்றது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி) காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், “பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க)’’ என்று கூறினார்கள்.

அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது’’ என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்‘’ என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், “அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது’’ என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.

ஆதாரம்: முஸ்லிம் 3462

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கு கொண்டு வரப்படும் போது, தவறிழைத்தது ஒரு பெண் என்று கூட பாராமல், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, பழிக்குப் பழி வாங்குங்கள்! பழிக்குப் பழி வாங்குங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றார்கள்.

மேலும் பழிக்குப் பழி வாங்கப்படாது என்று ஒருவர் குறிக்கிடும் போது கூட, அல்லாஹ்வின் வேத சட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றார்கள். பிறகு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகின்றது.

ஆனால் இன்றைய காலத்தில் எத்தனை கொலைகள் செய்தாலும், சொத்துக்களைச் சூறையாடினாலும், இரத்தங்களை ஓட்டினாலும் தீர்ப்பளிக்கின்ற நீதிமான்கள் என்ற அந்தஸ்த்தில் இருப்பவர்கள், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து கொண்டு, தெளிந்த நீரோடை போன்ற ஆதாரங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கண்டும் காணாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே அநியாயமாக தீர்ப்பளித்து நோகடிக்கின்ற, நீதியை சாகடிக்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.

நீதிக்கு சாட்சியாக நின்ற நபியின் தோழர்கள்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஏராளமான நல்ல பல மனிதர்கள் முஹம்மது நபியின் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள். அப்படிப்பட்ட தோழர்கள் தங்களுக்குப் பாதகமான சூழலிலும் கூட நீதத்தைக் கடைபிடித்த மகத்தானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்ட வரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையைஅல்லது உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையைஎடுத்துக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?’’ என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3439

இந்த செய்தியை ஆழமாகப் படித்து பாருங்கள்! தன்னுடைய முஸ்லிம் தோழர்களில் ஒருவரை யாரோ கொன்று விட்டார்கள்! அந்தத் தோழரோ, இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றார். இப்போது நபி (ஸல்) அவர்களிடம் வழக்கு வருகின்றது.

மேலும், அந்த முஸ்லிம் நபித்தோழர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் என்பது, சுற்றிலும் முஸ்லிமல்லாத யூதர்கள் வசிக்கின்ற பகுதியாகும்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில் கேட்கின்றார்கள். ஐம்பது நபர்கள் சத்தியம் செய்து இன்னார் தான் கொலை செய்தார் என்று சொல்லுங்கள்! என்று கேட்க, அதற்கு அருமை தோழர்கள் சொன்ன பதில், நம்முடைய உரோமங்களையெல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.

அதாவது, நாங்கள் கொலை நடந்த இடத்தில் இல்லாத போது, இன்னார் தான் கொலை செய்தார் என்று கண்கூடாகக் காணாத போது,  எப்படி நாங்கள் சத்தியம் செய்வோம் என்று கேட்பதன் மூலம், நாங்கள் நீதிக்குத்தான் சாட்சியானவர்கள்! அநீதிக்கு சாட்சியானவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அதாவது அந்த தோழர்கள் நினைத்திருந்தால் ஒரு ஐம்பது நபர்கள் பொய் சத்தியம் செய்து எதிரியாக இருந்த யூதர்களில் ஒருவனுக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் நீதியில் சங்கமித்த தோழர்கள் அப்படிப்பட்ட அநியாயத்தை எதிரியாக இருந்தாலும் செய்வதற்குத் துளியளவு கூட எண்ணவில்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஒரு சொத்தை அபகரிப்பதற்காக யார் திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்’’ என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி 7183

இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் சாட்சி சொல்வதையும், பொய்யான சாட்சியங்களை உண்டாக்கிக் கொண்டு வருவதையும் பார்க்கிறோம்.

சமமான நீதியை வழங்குகின்ற நீதியாளர்களையும், நீதிக்குச் சாட்சியாக நிற்கின்ற மக்கள் கூட்டத்தையும் அரிதாகப் பார்க்க வேண்டிய காலகட்டமாக மாறி விட்டது.

பிறருடைய சொத்துக்களையும், மான மரியாதைகளையும், உயிர்களையும் பறித்துக் கொண்டு விட்டு, சர்வ சாதாரணமாக நிரபராதி என்ற பட்டத்தைப் பெற்றவனாக பூமியில் நடமாடிக் கொண்டிருக்கின்றான்.

அதே போன்று எவ்வித சிரமுமின்றி, அடுத்தவர்களின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்து, அந்த சந்தோஷத்திலே குளிர் காய்வதையும் பார்க்கின்றோம்.

இதுபோன்ற அநியாயம் செய்பவர்களையும், அக்கிரக்காரர்களையும் அடக்கி ஒடுக்க வேண்டுமானால் சரியான நீதி வழங்குகின்ற நீதிமான்கள் பெருமளவில் உருவாக வேண்டும்.

ஒருக்காலும் அநியாயமான முறையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! நீதிக்குப் புறம்பாக, பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! அநியாயக்காரர்களுக்குத் துணை நிற்க மாட்டேன் என்று நீதிபதிகள் உளமாரத் தங்களின் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, எந்தச் சூழலிலும், எதிரியாகவே இருந்தாலும் கூட மனித உரிமைகளைப் பேணுவோம்! சமமான, நீதமான, உண்மையான நீதியை வழங்குவோம்! நீதிக்கு சாட்சியாக இருப்போம் என்ற சபதத்தை உளமார ஏற்போமாக!!

நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 5:42

—————————————————————————————————————————————————————————————————————

புகை  தொழுகைக்குப் பகை

எம். ஷம்சுல்லுஹா

புகைப்பவர் பொதுவாக புகை தன்னைப் பாதிக்கும் என்று தெளிவாகவே விளங்கி வைத்திருக்கின்றார். ஆனால் அது அடுத்தவரை எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவர் புகைக்கும் போது அவருக்கு அருகில் உள்ளவரும் புகைப் பொருளை பாவிக்காமலேயே புகைத்தவராகின்றார். இது புகைப்பவரால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பாகும். புகைத்து விட்டு வருகின்ற இவர், ஓர் அவையில் அமரும் போது அருகில் உள்ளவர் இவருடைய வாயிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றார். இது அடுத்தவருக்கு ஏற்படும் இன்னொரு பாதிப்பாகும்.

இது மாதிரியான பாதிப்பை நாம் பள்ளியில் சந்திக்கின்றோம். பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றை புகைத்து விட்டு, பள்ளியில் தொழுகையில் நமது பக்கத்தில் இந்த ஆசாமிகள் வந்து நின்று விடுகின்றனர். அந்த சமயத்தில் நாம் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல! புகைபிடிக்கும் தொழுகையாளி தன் சக தொழுகையாளிக்கு ஏற்படுத்தும் தொல்லையாகும்.

தூய இஸ்லாத்தை மக்களிடம் போதிக்கிறோம் எனக்கூறி பிரச்சாரம் செய்யும் தவ்ஹீத்வாதிகள் சிலரிடமும் இந்தப் பழக்கம் இருக்கின்றது.

அழைப்புப்பணியில் ஈடுபடுகிறோம், அதனால் நாம் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றோம் என்று கூறும் தப்லீக்வாதிகள், ஷைகு, பீர் – முரீதுகள், இமாம்கள், தரீக்காக்கள் என அனைவரிடமும் இந்தத் தீய பழக்கம் ஆக்கிரமித்து நிற்கின்றது,

அடுக்கடுக்காக அடுத்தடுத்து வரும் தொடர் இருமல் போராட்டத்திற்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையிலும் தன் மரண வேளை வரையிலும் புகைப்பழக்கத்தை விடாத புண்ணியவான்கள் பலருண்டு. புகைபிடித்தல் ஒரு பாவமல்ல என்ற எண்ணமோ அல்லது அது ஒரு சாதாரண பாவம்தான் என்ற எண்ணமோ தான் இதற்குக் காரணம்.

புகைப்பிடித்தல் ஒரு பாவமாகும்! அது ஒரு சாதாரண பாவமல்ல என்பதை விளக்குவதற்கு குர்ஆனில் ஏராளமான வசனங்களும் ஹதீஸ்களும் ஆதாரமாக அமைந்துள்ளன. அவையனைத்தையும் உளூவின் சிறப்புகள் என்ற இந்தத் தலைப்பின் கீழ் கொண்டு வருவது பொருத்தமாக அமையாது. எனினும் புகைப்பிடித்தல் தொழுகைக்கும், தொழுகையாளிக்கும் எந்த அளவுக்கு இடையூறாக அமைந்துள்ளது என்பதை மட்டுமே இந்த இடத்தில் பார்க்கவிருக்கின்றோம்.

அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்எனச் சொன்னார்கள்என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 972

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இந்தச் செடியிலிருந்து விளைவதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 977

பூண்டைச் சாப்பிடுபவர் நம்முடைய பள்ளிகளை நெருங்கவேண்டாம் என்று கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 853, முஸ்லிம் 970

இந்த ஹதீஸ்களில் பூண்டைச் சாப்பிட்டவர் நம்முடன் சேர்ந்து தொழ வேண்டாம். பள்ளிகளை நெருங்க வேண்டாம் என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதை தெளிவாகக் காண்கிறோம்.

இவை எல்லாவற்றையும் விட நம்மைத் தொல்லைக்குள்ளாக்குபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸில் நாம் காணமுடிகின்றது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல! மலக்குகளுக்கும் தொல்லை!

நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றொரு தடவை வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப்பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்”- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 976

மனிதர்கள் எந்தெந்தப் பொருட்களின் வாடையினால் தொல்லைக்குள்ளாகிறார்களோ அந்தப் பொருட்களின் வாடையினால் மலக்குகளும் தொல்லைக்குள்ளாகின்றனர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள். அத்துடன், நாற்றமெடுக்கும் செடி என்று பூண்டைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

பீடி, சிகரெட், சுருட்டு ஆகிய இந்த இலைகள் ஒருவிதமான நாற்றமெடிக்கும் இலைகள் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. இந்த இலைகளில் நெருப்பைப் பற்ற வைக்கும்போது இதிலிருந்து கிளம்பும் நாற்றத்திற்கு மேல் நாற்றத்தை நாம் குறிப்பிடவே தேவையில்லை.

பூண்டு, வெங்காயம் ஆகியவை உண்பதற்குத் தடுக்கப்பட்ட உணவல்ல! அதிலிருந்து கிளம்புகின்ற வாடையை வைத்தே சாப்பிடக்கூடாது என்று தடை செய்கின்றார்கள். அந்தத் தடையும் பள்ளிக்கு வரும்போது தான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.

வீண் விரயம், புகைப்பவரின் உடலுக்கும் அருகில் இருப்பவரின் உடலுக்கும் கெடுதி என்ற அடிப்படையில் பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை தடுக்கப்பட்ட பொருட்களாகின்றன. இந்தப் புகையின் நாற்றத்துடன் பள்ளிக்கு வருபவரின் நிலையை என்னவென்பது? மனிதர்களும், மலக்குகளும் இந்த நாற்றத்தால் எந்த அளவுக்கு அவதிக்குள்ளாவார்கள் என்பதைக் கொஞ்சம் நிதானமாக எண்ணிப்பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிட்டு விட்டு வருவதை வெறும் வார்த்தை அளவில் கண்டித்து மட்டும் விடவில்லை. தகுந்த நடவடிக்கையையும் எடுத்துள்ளார்கள்.

வாடையுடன் வந்தவருக்கு வழங்கிய தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்து சென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயத்தைச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிடவில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 979

மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை அல்பகீஉ பொது மையவாடிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக் கொள்ளட்டும்’’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃதான் பின் அபீ தல்ஹா

நூல்: முஸ்லிம் 980

முதல் ஹதீஸில் வெங்காயம் சாப்பிடாதவர் களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள். சாப்பிட்டவர்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றார்கள். இரண்டாவது ஹதீஸில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவோரை பகீஃ வரை அனுப்பிவிடுகின்றார்கள்.

அத்துடன், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பச்சையாகச் சாப்பிடும் போது வரும் வாடையைத் தான் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்! வேக வைத்ததை அல்ல என்று உமர் (ரலி) அவர்கள் கூறும் விளக்கத்திலிருந்து அந்தப் பொருட்களின் வாடை தான் வெறுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஹலாலான பொருட்களுக்கே இந்த நிலை என்றால் பீடி, சிகரெட்டுகளின் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கையைப் போல் ஒரு நடவடிக்கை எடுக்காத வரை இவர்கள் இதை நிறுத்த முன்வரமாட்டார்கள்.

பள்ளிவாசல் கழிவறைகளை கட்டை பீடிகள், சிகரெட்டுகள், சுருட்டுக்களால் அசிங்கப்படுத்தும் அவலமெல்லாம் நீங்குவதற்கு இது போன்ற நடவடிக்கை அவசியமாகும்.

தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை, மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.  (அல்குர்ஆன் 29:45)

இந்த இறைவசனம் இத்தகையவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொழுகையின் போது பக்கத்தில் நிற்பவர்களைக் கருத்தில் கொண்டும், மலக்குகளைக் கருத்தில் கொண்டும் தான் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள். இதை ஒரு முஃமின் ஏற்றுச் செயல்பட வேண்டும். மற்ற தொழுகையாளிக்குச் சங்கடம் அளிக்கக்கூடாது. இந்த அடிப்படையில் ஒருவர் செயல்படுவாரானால் இந்தத் தொழுகை அவரிடத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக அர்த்தமாகும்.

நபி (ஸல்) அவர்களின் வெறுப்பைக் கவனத்தில் கொண்டு, தொழுகை நேரங்களில் புகைப்பதை நிறுத்த ஆரம்பிப்பார்களானால் காலப்போக்கில் நிரந்தரமாக புகைப் பழக்கத்தை விடுவதற்கு இது காரணமாக அமையலாம். தொழுகை தீமையை விட்டு விலக்கும் என்ற அல்லாஹ்வின் வாக்கு இங்கு உண்மையாகி விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் பூண்டு, வெங்காயத்தைத் தடை செய்வதற்கு இன்னொரு காரணமுண்டு!

கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி (ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும் போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரது இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தமது இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கி விட்டு அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 405

இந்த ஹதீஸின்படி, ஒருவர் தொழும்போது அல்லாஹ்விடம் உரையாடுகின்றார். அவர் உலகிலுள்ள ஒரு தலைவரிடம் உரையாடும் போது இதுபோன்ற நாற்ற வாயுடன் உரையாட விரும்பமாட்டார். உலகில் உள்ள மனிதரிடம் இப்படியொரு மரியாதையைக் காட்டும் போது அல்லாஹ்விடம் இதை விடப் பன்மடங்கு மரியாதை காட்ட, வாய் சுத்தத்துடன் அல்லாஹ்வின் முன் நிற்க வேண்டும்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நம்மில் பலர் பிரியாணி அல்லது நெய்ச்சோறு சாப்பிடும் போது தயிர் பச்சடி சாப்பிடுகின்றனர். தயிர் பச்சடியில் கலந்திருப்பது வேகாத வெங்காயம் தான்! இந்த வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே தொழுகைக்கு வந்து விடுகின்றார்கள். நிச்சயமாக இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு ஒன்று தொழுத பிறகு சாப்பிட வேண்டும்! அல்லது சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் கழித்துத் தொழ வேண்டும். காரணம் வெங்காய வாடை உடனே நீங்குவது கிடையாது. இந்த வாடை நீங்கும் அளவுக்கு மவுத் வாஷ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வாயை சுத்தப்படுத்தி விட்டுத் தொழலாம்.

—————————————————————————————————————————————————————————————————————

மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்?

  1. M. முஹம்மது சலீம் I.Sc. மங்கலம்

நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் செய்வதற்கான சில வழிகளையும் இந்தக் கட்டுரையில் காண இருக்கிறோம்.

எதற்காக இந்த உலக வாழ்க்கை?

உலகில் வாழும் அனேக மக்கள் இந்த வாழ்க்கை எதற்காகத் தரப்பட்டுள்ளது என்பதைச் சரிவர அறியாமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். வாழ்க்கை நெறியாக அவர்கள் ஏற்றிருக்கிற கொள்கைகளும் கோட்பாடுகளும் அது பற்றிய சரியான பதிலை தெளிவுபடுத்தாமல் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இதற்கு உரிய முறையில் சிறப்பாகப் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(திருக்குர்ஆன் 67:2)

இங்கு வாழும் வாய்ப்பு தரப்பட்டதன் நோக்கம், நமது செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று சோதிப்பதற்குத் தான். ஒவ்வொரு நபரும் தமது வாழ்வில் நற்காரியங்களைச் செய்கிறாரா? தீமையான காரியங்களைச் செய்கிறாரா என்று சோதிக்கவே வாழ்க்கை தரப்பட்டுள்ளது. இதோ நபிகளார் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (5292)

மற்றொரு அறிவிப்பில்,  “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு ஆக்கியுள்ளான்)” என்று இந்தச் செய்தியில் வந்துள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் நம்மைச் சோதிக்கவே படைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ், மனிதர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மற்றிக் கொடுத்து சோதிப்பான்; அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தும் சோதிப்பான். எனவே எல்லா வேளையிலும் அவன் சொன்னபடி சரியாக நடக்க வேண்டும். அப்போது தான் மறுமையில் மகத்தான வெற்றி பெற முடியும்.

நம்பிக்கையின் பிரதிபலிப்பு

உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

(திருக்குர்ஆன் 84:25)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 2:82)

நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

மறுமைக்காக எதைச் செய்துள்ளோம்?

உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்? இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன் 59:18)

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிரஎன்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

அறிவிப்பவர்:  அனஸ்(ரலி)

நூல்: புகாரி (3688)

மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள்.  ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா? நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்வின் தூதருடைய அழகிய அறிவுரை

மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்.

நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடைஅல்லது நீளங்கிஅணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர்குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1848)

வறுமையில் வாடித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு, தான தர்மங்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். அப்போது அல்லாஹ்வின் வசனங்களை நினைவூட்டுகிறார்கள். அதில், மறுமைக்கான என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு நபித்தோழர்கள் அளப்பரிய உதவியை செய்தார்கள்; அள்ளிக் கொடுத்தார்கள்.

தர்மம் செய்வது மட்டுமல்ல வணக்க வழிபாடுகள், கடமைகள், பொறுப்புகள், பிறர் நலம் நாடும் செயல்கள் என்று எதுவாயினும் அதைத் திறம்பட செய்வதற்கு மறுமை சிந்தனை அவசியம். மறுமைக்காக என்ன செய்துள்ளோம் என்ற உணர்வு நம்மை மார்க்க விசயத்தில் என்றும் உயிர்ப்போடும் விழிப்போடும் வைத்திருக்கும்.

சொர்க்கத்தில் கிடைக்கும் வரவேற்பு!

சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும். அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும்.

அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)

(திருக்குர்ஆன் 69:18-24)

பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்; வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நரகவாசிகளின் புலம்பல்கள்

இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்? “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?’’ என்று கூறுவான்.

(திருக்குர்ஆன் 89:21-24)

அவகாசம் மீண்டும் கிடைக்காது!

உலகில் நல்லமல்கள் செய்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் நரகவாசிகள் அப்போது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் உலகில் வாழும் வாய்ப்பைக் கேட்டுக் கெஞ்சுவார்கள். இன்னொரு முறை அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து மன்றாடுவார்கள். இதோ அல்லாஹ் எச்சரிப்பதைப் பாருங்கள்.

அந்நாளின் சந்திப்பு நிகழ்வதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அந்நிகழ்வு நடக்கும் நாளில் இதற்கு முன் அதை மறந்து வாழ்ந்தோர் எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உள்ளனரா? அப்படியிருந்தால் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்யட்டும். அல்லது நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அவ்வாறாயின், நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு மாற்றமான (நல்ல) செயல்களைச் செய்வோமே!என்று கூறுவார்கள். அவர்கள் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிட்டன.

(திருக்குர்ஆன் 7:53)

இறை மறுப்பாளர்களுக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இறைமறுப்பாளர்கள் அனைவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

(திருக்குர்ஆன் 35: 36, 37)

நற்காரியம் செய்வதன் அவசியத்தை மறுமையில் உணர்வதால் எந்தப் பயனும் இல்லை ஒருமுறை தான் இந்த வாழ்க்கை. மீண்டும் மற்றொரு முறை இங்கு வாழும் வாய்ப்போ, அவகாசமோ கிடைக்காது. எனவே நமக்குரிய அவகாசம் முடிவதற்குள் அதாவது மரணம் வருவதற்குள் முடிந்தளவு நல்ல அமல்களைச் செய்து கொள்ள வேண்டும்.

வாய்ப்புகளை வீணடிக்காதீர்!

நாம் அனைவரும் இன்னொரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் வாழும் போது கூட எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நற்காரியம் செய்கிற சந்தர்ப்பம் கிடைத்து விடாது. ஆகவே நல்லது செய்யும் சூழல் வாய்க்கும் போதே அதை அழகிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதோ நபிகளாரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (186)

நபி (ஸல்) அவர்கள் “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ்பெருகி விடும்’’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலைஎன்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (7061)

நன்மைகள் செய்ய விரைவோம்

ஆரோக்கியமோ, செல்வச் செழிப்போ, நல்லது செய்வதற்குரிய சாதகமான சூழிநிலையோ எப்போதும் இருந்து கொண்டே இருக்குமென்ற உத்திரவாதம் எவருக்கும் இல்லை. எந்த நேரத்திலும் தற்போதிருக்கும் நிலை மாறலாம். எனவே தகுந்த வாய்ப்பு அமையும் போதே நன்மையை நோக்கி விரைய வேண்டும்; முந்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பு கொண்ட சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள். அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 3:133)

ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோக்கும்  திசை உள்ளது. அவர் அதை முன்னோக்குகிறார். எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

(திருக்குர்ஆன் 2:148)

எந்த நற்காரியமும் அற்பமானதல்ல!

நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக் கூடாது. இதைப் பின்வரும் செய்திகள் மூலம் விளங்கலாம்.

நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைத்தே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.

இவ்வாறு  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

நூல்: புகாரி (2631)

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியேஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5122)

அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக் கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராகஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

நூல்: முஸ்லிம் (5109)

சிறுதுளி, பெருவெள்ளம் என்று சொல்வார்கள். சின்னஞ்சிறிய அமல்களை நிறையச் செய்யும் போது அவற்றின் மூலம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நற்காரியங்களில் நிலைத்திருப்போம்

நேற்று தானே செய்தோம் என்றோ அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றோ எண்ணிக் கொண்டு எந்த நற்செயலையும் தள்ளிப்போடாமல், இயன்ற வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்வதைப் பார்ப்போம்.

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1436)

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா

நூல்: புகாரி (1987)

நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் சிறப்பை எடுத்துக் கூறிய நபியவர்கள், அதற்கு முன்மாதியாகவும் திகழ்ந்தார்கள். அவ்வாறு நாமும் நமது செயல்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

உயர்வாகக் கருதிக் கொள்ளாதீர்!

இஸ்லாத்தில் பல வகைகளில், பல்வேறு விதமான கோணங்களில் எல்லா விதமான நற்செயல்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில நற்செயல்களை செய்வதால் திருப்தி அடைந்து அத்துடன் முடங்கிப் போகக் கூடாது. அதல்லாத அமல்களைச் செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும். இதைப் பின்வரும் செய்தியில் அறியலாம்.

என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (43)

“நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை!” என்று நபியவர்கள் சொல்வதில் நமக்கு நிறைய போதனைகள் இருக்கின்றன. தொழுகை, நோன்பு, தர்மம் போன்றவற்றைச் செய்து விட்டால் சிலர் அதன் மூலம் தங்களை உயர்வாக நினைத்துக் கொள்கிறார்கள்.

இப்படி நம்மை நாமே பெருமையாக நினைத்துக் கொண்டு மற்ற அமல்களில் அலட்சியம் காட்டுவது நல்லதல்ல! எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அமல்களின் மூலம் நன்மையை அள்ளிக் கொள்ள முனைய வேண்டும்.

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலேஎன்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (6465)

குறைவாக இருந்தாலும் நிலையான செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது என்ற வாசகத்தைச் சரியாக விளங்க வேண்டும். எந்தவொரு அமலையும் தொடந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த வரிகளை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மறுமை வெற்றிக்கு சொற்பமான நற்செயல்களைச் செய்தால் மட்டும் போதுமென நினைத்து விடுகிறார்கள்.

இவர்களின் வாதம் தவறு என்பதை மேலுள்ள நபிமொழியின் இறுதியிலேயே சான்று இருக்கிறது. ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்’ என்று நபியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். எனவே, மறுமை வெற்றிக்காக முடிந்தளவு அதிக நற்காரியங்களை செய்வோமாக! இயன்ற வரை அவற்றைத் தொடர்ந்து செய்து நன்மைகளை அள்ளிக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

சமூக வலைத்தளங்களில் பரவும்  பொய்யான ஹதீஸ்கள்

சபீர் அலீ

சமூக ஊடகங்கள் வாயிலாக ஏராளமான பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். அதன் உண்மை நிலையறியாத மக்கள் அதைச் சரியான செய்தியென்று நம்பி அதன்படி அமல் செய்யத் துவங்கிவிடுகின்றனர்.

அத்தகைய செய்திகளின் உண்மைத் தன்மையை அவ்வப்போது நமது ஏகத்துவ மாத இதழ் வாயிலாக அறிந்து வருகிறோம்.

அந்த அடிப்படையில், நல்லாட்சியாளர்களை அல்லாஹ்விடம் கோருவது தொடர்பான ஒரு துஆ தற்போது அதிகமான மக்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த செய்தியின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்.

“எங்கள் மீது இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டிவிடாதே!” என்ற பொருள்பட                 உள்ள வாசகம் மட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டாலும் இது ஒரு நீண்ட துஆவின் சிறு பகுதியாகும்.

سنن الترمذى – مكنز (12/ 486، بترقيم الشاملة آليا)

3841 – حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ خَالِدِ بْنِ أَبِى عِمْرَانَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ لأَصْحَابِهِ « اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِى دِينِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا யு. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ أَبِى عِمْرَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.

الدعاء للطبراني 360 (ص: 535)

1911- حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ دَاوُدَ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْحَكَمِ ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ زَحْرٍ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ (ح) وَحَدَّثَنَا مُطَّلِبُ بْنُ شُعَيْبٍ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ ، ، حَدَّثَنِي اللَّيْثُ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ (ح) وَحَدَّثَنَا أَبُو الزِّنْبَاعِ رَوْحُ بْنُ الْفَرَجِ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا لَمْ يَقُمْ حَتَّى يَدْعُوَ لِجُلَسَائِهِ بِهَؤُلاءِ الْكَلِمَاتِ وَيَزْعُمُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو بِهِنَّ لِجُلَسَائِهِ اللَّهُمَّ افْتَحْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ رَحْمَتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا اللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمْنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلا مَبْلَغَ عَلِمْنَا وَلا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا

நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்கும் போது சிலவேளை தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள்.

இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக! எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி விடாதே!

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்ற இந்தச் செய்தி திர்மிதீ, பஸ்ஸார், சுனனுல் குப்ரா உள்ளிட்ட நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம்பறுகிறது.

அவர்களிடமிருந்து காலித் பின் அபீ இம்ரான் என்பவரே நேரடியாக அறிவிப்பதாகவும் இப்னு உமரிடமிருந்து நாஃபிஃ கேட்டு அவரிடமிருந்து காலித் பின் அபீ இம்ரான் என்பவர் அறிவிப்பதாகவும் உள்ளது.

காலித் பின் அபீ இம்ரான் என்பாரிடமிருந்து மூவர் அறிவிக்கின்றனர்.

  1. உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர்.
  2. அப்துல்லாஹ் பின் லஹீஆ.
  3. லைஸ் பின் ஸஅத்.

இவற்றில் ஒவ்வொருவர் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளின் தன்மையைப் பார்ப்போம்.

  1. உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர்

காலித் பின் அபீ இம்ரான் வழியாக அறிவிக்கும் மூவரில் ஒருவர் உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர் ஆவார்.

இவர் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்பு திர்மிதி உட்பட சில நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவர் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர் ஆவார்.

الثقات للعجلي (2/ 109)

 1156 – عبيد الله بن زحر يكتب حديثه وليس بالقوي

الجرح والتعديل (5/ 315)

نا عبد الرحمن انا حرب بن اسماعيل الكرماني فيما كتب إلى [ قال قلت لاحمد بن حنبل: عبيد الله بن زحر فضعفه.

انا أبو بكر بن ابي خيثمة فيما كتب إلى – 1 ] قال سئل يحيى ابن معين عن عبيد الله بن زحر فقال: ليس بشئ.

نا عبد الرحمن نا محمد ابن احمد بن البراء قال قال على ابن المدينى: عبيد الله بن زحر منكر الحديث.

نا عبد الرحمن قال سألت ابي عن عبيد الله بن زحر فقال: [ لين الحديث سألت ابا زرعة عن عبيد الله بن زحر فقال ؟ – 1 ]: لا بأس بن صدوق.

الضعفاء للعقيلي (3/ 120)

حَدَّثَنَا أحمد بن محمود ، قال : حَدَّثَنا عثمان بن سعيد ، قال : قلتُ ليحيى فعبيد الله بن زحر كيف حديثه فقال كل حديثه عندي ضعيف

الضعفاء والمتروكين لابن الجوزي (2/ 162)

 2238 عبيد الله بن زحر الضمري الإفريقي الكناني يروي عن علي بن يزيد نسخة باطلة ضعفه أحمد وقال ابن المديني منكر الحديث وقال يحيى ليس بشيء كل حديثه عندي ضعيف وقال الدارقطني عبيد الله ليس بالقوي وعلي متروك وقال ابن حبان يروي الموضوعات عن الأثبات

உபைதுல்லாஹ் பின் ஸஹ்ரின் ஹதீஸ்கள் எழுதப்படும். இவரோ பலமானவர் அல்ல என்று இமாம் இஜ்லீ கூறியுள்ளார்.

இமாம் அஹ்மத் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஒரு பொருட்டாக இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியள்ளார்.

ஹதீஸில் மறுக்கப்படுபவர் என்றும் இமாம் அலீ இப்னுல் மதீனீ கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார்.

இவரைக் கொண்டு எந்தப் பிரச்சனையும் அல்ல என்று இமாம் அபூஸுர் ஆ கூறியுள்ளார்.

இவரது அனைத்து ஹதீஸ்களும் என்னிடம் பலவீனமானது என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவர் பலமானவர் அல்ல என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கிறார் என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(பார்க்க: அஸ்ஸிகாத், பாகம் 2, பக்கம் 109, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 315, லுஅஃபா, பாகம் 3, பக்கம் 120, லுஅஃபா வல்மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 162)

ஒரு சில அறிஞர்கள் இவரை உண்மையாளர், இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தாலும் இவர் மீது குறைகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளதால் இவர் பலவீனமானவர் ஆவார்.

எனவே, இவர் இடம்பெறும் முதல் அறிவிப்பு பலவீனமடைகிறது.

இவரிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அய்யூப் என்பார் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹதீஸ் மேலுள்ள உபைதுல்லாஹ் பின் ஸஹ்ர் என்பாரின் குறைகளே இந்த செய்தி பலவீனமடைய போதுமானது என்பதால் இவரது விமர்சனங்களையும் கொண்டு வரத்தேவையில்லை.

  1. அப்துல்லாஹ் பின் லஹீஆ

காலித் பின் அபீ இம்ரானிடமிருந்து அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் லஹீஆ ஆவார்.

இவர் இடம்பெறும் அறிவிப்பு இமாம் தப்ரானிக்குரிய துஆ எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

இவரும் ஹதீஸ் துறையில் கடுமையாக அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

تهذيب الكمال 742 (15/ 490)

وقَال البُخارِيُّ (1) ، عن الحميدي : كان يحيى بن سَعِيد لا يراه شيئا (2).

تهذيب الكمال 742 (15/ 491)

وَقَال علي ابن المديني (1) : سمعت عبد الرحمن بن مهدي ، وقيل له ، تحمل عن عَبد الله بن يزيد القصير ، عن ابن لَهِيعَة ؟ فقال عبد الرحمن ، لا أحمل عن ابن لَهِيعَة قليلا ولا كثيرا

الجرح والتعديل (5/ 147)

قال قلت ليحيى بن معين: كيف رواية ابن لهيعة عن ابي الزبير عن جابر ؟ فقال: ابن لهيعة ضعيف الحديث.

الضعفاء للعقيلي (2/ 295)

حَدَّثَنَا محمد بن عبد الحميد السهمي ، قال : حَدَّثَنا أحمد بن محمد الحضرمي ، قال : سَأَلْتُ يحيى بن مَعِين عن عَبد الله بن لهيعة فقال ليس بقوي في الحديث.

அப்துல்லாஹ் பின் லஹீஆவை, யஹ்யா பின் ஸயீத் பொருட்டாகக் கருத மாட்டார் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.

நான் இப்னு லஹீஆவிடமிருந்து குறைவாகவோ, அதிகமாகவோ எதையும் எடுக்க மாட்டேன் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹதீ கூறியதாக அலீ இப்னுல் மதீனீ கூறுகிறார்.

இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

(பார்க்க: தஹ்தீபுல் கமால், பாகம் 15, பக்கம் 490, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 147, அல்லுஅஃபா, பாகம் 2, பக்கம் 295)

இன்னும் இதுவல்லாத ஏராளமான குறைகள் இவர் மீது சொல்லப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர் என்பதற்கு இதுவே போதுமான குறைகளாகும்.

இவரின் காரணமாக இந்தச் செய்தியின் இரண்டாம் அறிவிப்பும் பலவீனமடைகிறது.

  1. லைஸ் பின் ஸஅத்

அடுத்து, இந்தச் செய்தியை காலித் பின் அபீ இம்ரானிடமிருந்து அறிவிக்கும் கடைசி அறிவிப்பாளர் லைஸ் பின் ஸஅத் என்பவர் ஆவார்.

இவர் இடம்பெறும் அறிவிப்பு முஸ்தத்ரக் ஹாகிம் மற்றும் தப்ரானி இமாமுக்குரிய துஆ அகிய நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவர் நம்பகமான அறிவிப்பாளர்தான் என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.

تهذيب الكمال 742 (15/ 102)

وَقَال علي ابن المديني (4) : ضربت على حديث عَبد الله بن صالح وما أروي عنه شيئا.

تهذيب الكمال 742 (15/ 103)

وَقَال أبو حفص بن شاهين (1) : في كتاب جدي ، عن ابن رشدين ، يعني أحمد بن محمد بن الحجاج بن رشدين بن سعد ، قال : سمعت أحمد بن صالح ، يقول في عَبد الله بن صالح : متهم ليس بشيءٍ ، وَقَال فيه قولا شديدا.

وَقَال النَّسَائي (2) : ليس بثقة.

الضعفاء والمتروكين لابن الجوزي (2/ 127)

 2048 عبد الله بن صالح أبو صالح كاتب الليث بمصر يروي عن ابن لهيعة قال احمد كان متماسكا في أول أمره ثم فسد بأخرة وليس هو بشيء وقال سعد بن منصور جاءني يحيى بن معين فقال أحب ان تمسك عن كاتب الليث فقلت لا امسك عنه وانا اعلم الناس به وقال ابن المديني ضربت على حديثه وما أروي عنه شيئا قال أبو علي صالح بن محمد الحافظ كان كاتب الليث يكذب وقال النسائي ليس بثقة وقال ابن حبان هو منكر الحديث جدا يروي عن الأثبات ما ليس من حديث الثقات وكان في نفسه صدوقا وإنما وقعت المناكير في حديثه من قبل جار له كان يضع الحديث على شيخ عبد الله بن صالح ويكتبه بخطه شبه خط عبد الله ويرميه في داره بين كتبه فيتوهم عبد الله أنه خطه فيحدث به وقال أبو حاتم الرازي يرى أن الأحاديث التي أنكرت عليه مما افتعل خالد وكان أبو صالح يصحبه وكان سليم الناحية وكان خالد بفتعل الأحاديث ويضعها في كتب الناس ولم يكن أبو صالح ممن يكذب كان رجلا صالحا وقال النسائي ليس بثقة

நான் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பாரிடமிருந்து எதையும் அறிவிக்கவில்லை என்று அலீ இப்னுல் மதீனீ கூறியுள்ளார்.

இவர் சந்தேகம் கொள்ளப்படுபவர். இவர் ஒரு பொருட்டாக இல்லை என்று அஹ்மது பின் ஸாலிஹ் கூறி, இவர் விஷயத்தில் கடுமையாகப் பேசினார்.

இவர் நம்பகமானவர் அல்ல என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

இவர் தனது விஷயத்தில் ஆரம்பத்தில் ஊன்றுகோல் பிடிக்கப்படுபவராக இருந்தார். பிறகு இறுதியில் குழம்பிவிட்டார். இவர் எந்த ஒரு பொருட்டாகவும் இல்லை என்று இமாம் அஹ்மது கூறியுள்ளார்.

நான் இவரிடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டேன். மக்களிலேயே அவரைப் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும் என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவரது செய்திகளில் மறுக்கத்தக்கவை உள்ளன என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(பார்க்க: தஹ்தீபுல் கமால், பாகம் 15, பக்கம் 102, அல்லுஅஃபா வல்மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 127)

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் மீது மேற்படி விமர்சனங்களும் இதுவல்லாத இன்னும் அதிகமான விமர்சனங்களும் சொல்லப்படுவதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.

எனவே, இந்தச் செய்தி தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் பலவீனமடைகிறது.

தான் நாடியோருக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான்.

நமக்கு யார் ஆட்சியாளர்களாக வர வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கோரிக்கை வைத்துப் பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு ஒரு துஆ நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள் என்று எண்ணி, இதுபோன்ற பலவீனமான செய்திகளை அமல்படுத்தினால் அது தவறாகிவிடும்.

சமூக வலைத்தளங்களில் பரப்பும் போதும் சரி! அதில் பரப்பப்படும் செய்திகளை அமல்படுத்தும் போதும் சரி! அவை சரியானதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு முஃமினின் மீதும் கடமையாகும்.

அவ்வாறின்றி பரப்பினால் பொய்யர்களில் ஒருவராகிவிடுவோம்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 6

—————————————————————————————————————————————————————————————————————

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? – தொடர்: 40

தவக்குல், துஆவிற்குத் தவறான விளக்கம்

தவ்ஹீதைத் தகர்க்கும் இஹ்யா உலூமீத்தீன்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

قال الغزالي: ولهذا دخل جماعة على الجنيد فقال: ماذا تطلبون؟ قالوا: نطلب الرزق، فقال: إن علمتم في أي موضع هو فاطلبوه، قالوا: نسأل الله، قال: إن علمتم أنه ينساكم فذكروه، فقالوا: ندخل البيت ونتوكل وننظر ما يكون، فقال: التوكل على التجربة شك، قالوا: فما الحيلة؟ قال: ترك الحيلة. وقال أحمد بن عيسى الخراز: كنت في البادية فنالني جوع شديد، فغلبتني نفسي أن أسال الله تعالى طعاما، فقلت: ليس هذا من أفعال المتوكلين، فطالبتني أن أسأل الله صبرا، فلما هممت بذلك سمعت هاتفا يهتف بي ويقول:

ويزعم أنه منا قريب وأنا لا نضيع من أتانا

ويسألنا على الإقتار جهدا كأنا لا نراه ولا يرانا

   بيان  توكل المعيل من  كتاب التوحيد والتوكل / الجزء الرابع  من إحياء علوم الدين

இஹ்யா உலூமித்தீன் என்றால் மார்க்கக் கல்விகளுக்கு உயிரூட்டல் என்று பொருள். இது பெயரளவில் தான். ஆனால் செயலளவில் மார்க்கக் கல்வியை சாகடிப்பதைத் தான் தனது தலையாய பணியாயக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் அடித்தளங்களை அடித்து நொறுக்குவது இஹ்யாவின் ஆயுட்காலப் பணியாக  அமைந்திருக்கின்றது. இதோ அதற்குரிய எடுத்துக்காட்டு:

தவக்குல் (அல்லாஹ்விடம் பொறுப்பைச் சாட்டுதல்) உடைய பாடத்தில் உணவைப் பற்றி கஸ்ஸாலி பேசிக் கொண்டு வருகையில்  அவர் குறிப்பிடுவதாவது:   இதற்காக (தவக்குல் பற்றி தெளிவு பெறுவதற்காக) வேண்டி ஜுனைதிடம் ஒரு ஜமாஅத் வந்தனர். அவர்களை நோக்கி, “நீங்கள் என்ன  தேடுகின்றீர்கள்?” என்று கேட்டார். ‘ரிஸ்கை (உணவை) தேடுகின்றோம்’ என்று பதிலளித்தனர். “உங்களுக்குரிய உணவு  எந்த இடத்தில் இருக்கின்றது என்று தெரிந்தால் தேடுங்கள்” என்று அவர் சொன்னார். (உணவு எங்கிருக்கின்றது? என்பது  எங்களுக்குத் தெரியாது. எனவே அதை தெரிந்தவனாகிய) அல்லாஹ்விடம் கேட்கின்றோம் என்று அவர்கள் பதில் அளித்தனர்.

அதற்கு அவர், “(உணவு அளிப்பதற்கு)அவன் உங்களை மறந்து விட்டான் என்று விளங்கினீர்கள் என்றால் அவனுக்கு இதை நினைவூட்டுங்கள்” என்று சொன்னார்.

“அப்படியானால் நாங்கள் வீட்டிற்குச் சென்று தவக்குல் வைத்துக் கொள்கின்றோம். பிறகு என்ன நடக்கின்றது? நாங்கள் காத்திருக்கின்றோம்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

“ஒன்றைச் செய்து பார்க்கிறோம் என்பது சோதனை முயற்சி அல்ல! அது சந்தேகம் ஆகும்’’ என்று அவர் சொன்னதும், “அப்படியானால் என்னதான் வழி முறை” என்று மக்கள் கேட்டனர்.  “எந்த வழிமுறையையும் கையாளாமல் அப்படியே விட்டு விடுவது தான் அதற்குரிய தீர்வாகும். (அதாவது  சம்பாதிக்காமல், உழைக்காமல் அப்படியே அல்லாஹ் தருவான் என்று உட்கார்ந்து விடவேண்டும்)” என்று பதில் சொன்னார்.

அஹ்மத் பின் ஈஸா அல்கராஸ் பின்வருமாறு கூறுகின்றார்:

நான் ஒரு கிராமத்தில் இருந்தேன். அப்போது எனக்குக் கடுமையான பசி ஏற்பட்டது.  என்னுடைய மனம் அல்லாஹ்விடம் உணவைக் கேட்கும்படி வலியுறுத்தியது.  “இது தவக்குல் வைப்பவர்களின் செயல் கிடையாது” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.    அப்போது என் மனம் அல்லாஹ்விடம் பொறுமையைக் கேட்கும்படி  என்னை வேண்டியது.  இவ்வாறு நான் நினைக்கத் தொடங்கிய மாத்திரத்தில் ஆள் தெரியாத திசையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “(இறைவனாகிய) நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்று இவர் கருதுகின்றார். நம்மிடத்தில் வருபவர்களை நாம்  வீணடித்து விட மாட்டோம். நாம் ஏதோ அவரை தெரியாத மாதிரியும் நம்மை அவர் தெரியாத மாதிரியும்  வறுமையைத் தாங்கிக் கொள்வதற்கு நம்மிடம் தாங்கும் வலிமையை அவர் வேண்டுகின்றார்” என்று  அந்த குரல் கூறியது

இஹ்யா உலூமித்தீன்; பாகம்: 4 அத்தியாயம் தவ்ஹீதும் தவக்குலும், பாடம்: குடும்பக் காப்பாளரின் தவக்குலை விளக்குதல்

நாம் மேலே குறிப்பிட்டது போன்று கஸ்ஸாலியின் இந்தக் கருத்து  இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்த்தெறிந்து விடுகின்றது.  ஆம்! நாம் படைக்கப்பட்டவர்கள். அல்லாஹ் நம்மைப் படைத்தவன். அவனுக்கும் நமக்கும் மத்தியில் உள்ள ஒரே உறவும் வலுவான தொடர்பும் துஆ தான். அடியார்கள் என்ற அடிப்படையில் கழிகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவனிடம் துஆ கேட்கும் நிலையிலும் நெருக்கடியிலும் இருக்கின்றோம்.

அடிமைத்தனத்தின் அடித்தளம் துஆ!

நபி (ஸல்) அவர்கள், “துஆ தான் வணக்கமாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதி 2895, அபூதாவூத் 1264

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்  ஓர் அடியானின்  முழு அடிமைத்தனமும் வெளிப்படுவது துஆவில் தான். தொழுகைக்கு  அரபியில் ஸலாத்  என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. அந்த வார்த்தைக்கு அரபியில் துஆ அதாவது பிரார்த்தனை என்று பொருள்.

தொழுகையில்   அல்லாஹ்வைப் புகழ்ந்து, தூய்மைப்படுத்தி, பெருமைப்படுத்துகின்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றிருப்பது போலவே அவனிடம் உதவி தேடிப் பிரார்த்திக்கின்ற வார்த்தைகளும் அதிகம் இடம்பெறுகின்றன. மொத்தத்தில் தொழுகை  அரபியில் அதன் வார்த்தைக்கு ஏற்ப துஆ என்ற அடிப்படையில் அமைந்து விடுகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக துஆ ஏகத்துவத்தை நிலை நிறுத்துகின்ற ஒரு வணக்கமாக அமைந்திருக்கின்றது. ஓர் அடியான் அல்லாஹ்விடமே தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது. அதே சமயம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கேட்பதில்லை என்று ஒப்புக் கொண்டு விட்டு, அல்லாஹ்விடமே எதையும் கேட்காமல் இருந்தால் அதற்குப் பெயர் தவ்ஹீது அல்ல.

ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும் போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னிடமே பிரார்த்திக்கட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (எனக் கூறுவீராக!)   

  (அல்குர்ஆன் 2:186)

அது மட்டுமல்லாமல் ஜுனைத் என்பார் கூறுவது போன்று ஒருவர் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் இருந்தால் அது ஒரு திமிராகும். ஆணவமாகும்.

“அல்லாஹ்விடம் உணவு கேட்க வேண்டுமா?  அது எங்கிருக்கின்றது எனக்கு தெரியாதே! அவனிடம் எப்படி கேட்பது?”

“எனக்கு உணவில்லை என்பது அல்லாஹ்வுக்குத் தெரியாதா?”

இப்படியெல்லாம் கேட்கும் கஸ்ஸாலியின் இந்த வாதப்படிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்குமே இப்படி கேட்க முடியும்.

எனக்கு வயிற்று வலி.  நான்  ஏன் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்? அல்லாஹ்வுக்குத் தெரியாதா? மன்னிப்புக் கேட்க வேண்டுமா? நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ் தடுத்த பாவங்களை நான் தான் செய்யவில்லையே! பிறகு எதற்கு நான் அவனிடம் மன்னிப்புத் தேட வேண்டும்? மழை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டுமா? மழை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகள், மரம், செடி, கொடிகள் அத்தனைக்கும் இன்றியமையாத ஒன்று என்று அல்லாஹ்வுக்கு தெரியாதா?

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தைச் சொல்லி, அல்லாஹ்விடம் எதையுமே கேட்க வேண்டாம் என்ற நிலைக்கு ஓர் அடியான் தள்ளப்பட்டு விடுவான்.

எல்லாம் தானாகக் கிடைத்து விடும், எல்லாவற்றையும் அல்லாஹ் தானாகத் தந்து விடுவான் என்ற நிலைக்கு ஒருவனை இது கொண்டு போய் விட்டு விடும். அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது மட்டும் தவ்ஹீது அல்ல! அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்பதும் தவ்ஹீதே ஆகும். அந்த அடிப்படையை கஸ்ஸாலியின் இந்த வாதம் தகர்த்து விடுகின்றது.

இறை எச்சரிக்கை: 1

தன்னிடம் துஆ கேட்காமல் பெருமை யடிப்பவர்களை, ஆணவம் கொள்பவர்களை நரகத்தில் தூக்கி வீசுவேன் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் கர்வம் கொள்வோர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 40:60)

இந்த எச்சரிக்கைக்கு எதிரான போக்கைத் தான் ஜுனைத் என்ற பேர்வழி கடைப்பிடிக்கின்றார். பொதுவாக, மார்க்கத்தின் வரையறைகளையும் வரம்புகளையும் அப்பட்டமாக மீறுவது தான் சூஃபிகளின்  வாடிக்கையாகும். அதில் இந்த ஜுனைதும் விதிவிலக்கல்ல என்பதைத் தான் கஸ்ஸாலி கூறும்  சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

இறை எச்சரிக்கை: 2

உங்களது பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை விட்டு வைத்திருக்க மாட்டான். நீங்கள் பொய்யெனக் கூறி விட்டீர்கள். கட்டாயம் (அதற்கான தண்டனை) ஏற்பட்டே தீரும்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 25:77)

இவ்வளவு நாள் உங்களை விட்டு வைத்திருப்பதற்கு ஒரே காரணம் உங்களுடைய துஆ தான். அது மட்டும் இல்லையென்றால் உங்களின் கதையையும் கணக்கையும் முடித்திருப்பான் என்று இந்த வசனம் கூறுகின்றது, இந்த வசனங்கள் இறைவனிடம் கையேந்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக  எச்சரிக்கை விடுகின்றன.

அச்சத்தின் போது அலறும் நபி (ஸல்) அவர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரு போரின் போது கேட்ட பிரார்த்தனையின் வரிகள்  ஜுனைத் போன்ற சூஃபிஸப் பேர்வழிகளின் செவிப்பறைகளைத் தட்டவில்லை போல் தெரிகின்றது. தட்டினாலும் அவர்கள் மேனியின் மேல் நிற்கும் ஈக்களைப் போன்று தட்டி விட்டு நகர்ந்து விடுவார்கள்.

இதோ நபி (ஸல்) அவர்கள் பத்ரின் போது கேட்ட பிரார்த்தனையை இப்போது பார்ப்போம்:

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் இணை வைப்பாளர்கள் ஆயிரம் பேராக இருப்பதையும், தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் பிராத்தித்தார்கள்.

இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்என்று கூறினார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் 3621

இத்தனைக்கிடையே நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்திருந்தான்.

“(வாணிபக் கூட்டம் அல்லது எதிரிப்படை ஆகிய) இரண்டு கூட்டத்தில் ஒன்று உங்களுக்கு உண்டுஎன அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த போது, ஆயுதமேந்தாத (வாணிபக்) கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தனது கட்டளைகளால் உண்மையை உறுதிப்படுத்தவும் இறைமறுப்பாளர்களை வேரறுக்கவும் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 8:7)

இந்த வாக்குறுதிக்குப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியவாறும் அலறியவாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை நாம் பார்க்க முடிகின்றது. அல்லாஹ் தான் வாக்குறுதி அளித்து விட்டானே அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமலா போய் விடுவான் என்றும், அல்லாஹ்வுக்கு உதவி செய்யத் தெரியாதா? என்றும் நபியவர்கள் அலட்சியமாக இல்லை. மேதாவித்தனம் பேசும் ஜுனைதை போன்று நபி (ஸல்) அவர்கள் மெத்தனமாக இல்லை.

உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடியபோது அணிவகுத்து வரும் ஆயிரம் வானவர்கள் மூலம் உங்களுக்கு உதவுவேன்என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.

அல்குர்ஆன் 8:9

நபி (ஸல்) அவர்கள் அஞ்சி நடுங்கிச் செய்த பிரார்த்தனையின் அங்கீகரமாகவே அமைகின்றது. பத்ருப்போர், இன்னபிற போர்க் களங்கள் மட்டுமல்லாமல் சண்டை, சமாதானம், வறுமை, செழிப்பு என்று எல்லாக் காலக் கட்டங்களிலும்  அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எல்லாம் வல்ல இறைவனிடம் தானும் பிரார்த்தித்து, தமது சமுதாயத்தை பிரார்த்திக்கச் சொன்ன பல ஆயிரக்கணக்கான துஆக்கள் அடங்கிய ஹதீஸ்களும் ஏராளம்! ஏராளம்! இவை எல்லாம் ஜுனைதின் பழுதுபட்ட கண்களில் படுவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. இவற்றைத் தெரிந்திருந்தாலும் இவற்றின் பக்கம் இந்த சூஃபியாக்கள் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம்.

இறைஞ்சிய இறைத்தூதர்கள் ஏற்றுக் கொண்ட இறைவன்

முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமல்ல! பல்வேறு இறைத்தூதர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனைகளை குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

21:75,77,  21:83,84, 21:87,88  21:89,90  இந்த வசனங்களெல்லாம் இறைத்தூதர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளின் போது இறைவனிடம் துஆச் செய்ததையும் அவன் பதிலளித்ததையும் இதுபோல் இறை நம்பிக்கையாளர்களுக்கு அவன் பதிலளிப்பதாகவும் தெரிவிக்கின்றன.  ஆனால் இவர்களோ தவக்குல் என்ற பெயரில் அல்லாஹ்விடம் துஆச் செய்வதைத் தடை செய்து கொண்டிருக்கின்றனர். இங்கே தவக்குலைப் பற்றி நபி (ஸல்)  அவர்கள் கூறுகின்ற விளக்கத்தைப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும்.

நீங்கள் உண்மையான முறையில் இறைவன் மீது   நம்பிக்கை (தவக்குல்) வைத்தால், காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பத் திரும்புகின்ற பறவைகளுக்கு  அவன் உணவளிப்பது போன்று  உங்களுக்கு  உணவளிப்பான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2266, இப்னுமாஜா 4154

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படித் தவக்குல் வைக்க வேண்டும் என்று விளக்கம் சொன்ன பிறகு ஜுனைத் போன்ற அதிமேதாவிகளின் அதிகப்பிரசங்கித்தனம் அல்லாஹ்வின் தூதருக்கே பாடம் சொல்லிக் கொடுப்பது போல் இருக்கின்றது. இதைத் தான் கஸ்ஸாலி தனது இஹ்யா என்ற நூலில் அரங்கேற்றம் செய்து அதை உலகுக்குப் போதிக்கின்றார்.  இந்த நூலை பக்தர்கள் தங்கள் ஆன்மீகத் தேடலுக்கான  அருட்களஞ்சியம் என்று நினைத்துப் போற்றுவதும் பாராட்டுவதும் அறியாமையின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையாது.