ஏகத்துவம் – டிசம்பர் 2014

தலையங்கம்

பாதை மாறாமல் பயணம் தொடரும்

எண்பதுகளின் துவக்கத்தில் ஏகத்துவக் கொள்கை இதயத்தைக் கழுவியதும் நம்மை விட்டு ஒரு பெருங்கூட்டம் விலகிச் சென்றது. அவர்களது பிரிவு நம்முடைய பயணத்தை முறிக்கவோ, முடிக்கவோ இல்லை. பயணம் தொடர்ந்தது.

ஏகத்துவத்தை நமது இதயம் ஏற்ற ஆரம்ப நாட்களில் நான்கு மத்ஹபுகள் என்ற மதில் சுவர்கள் கொண்ட கோட்டையில் நாம் குடியிருந்தோம். அந்தக் காலத்தில் மத்ஹபுக் கோட்டையை விட்டு வெளியேறுவது என்பது எண்ணிப் பார்க்க முடியாத, நாம் எதிர்பார்த்திராத ஒரு விஷயமாகும். ஆனால் ஏகத்துவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரவத் தொடங்கியதும் மத்ஹபுக் கோட்டையின் மதில் சுவர்கள் வெடிப்புக்கும் விரிசலுக்கும் உள்ளாகி அடியோடு சரிந்து விழுந்தது. விளைவு, மத்ஹபுகளை விட்டு வெளியேறினோம். இதனால் நம்மீது அபிமானம், அன்பு கொண்டவர்களையும், அளவுக்கு அதிகமான வெறுப்பு கொண்டவர்களையும் விட்டு ஒருசேரப் பிரிந்தோம்.

நாம் வெளியேறுவதற்கும், விலகுவதற்கும் மிகவும் பாரதூரமாக இருந்தது மத்ஹபுகள் தான். அந்த அளவுக்கு மத்ஹபு மாயை நம்மிடம் ஊட்டப்பட்டிருந்தது. 1983 வாக்கில் சங்கரன்பந்தல் மத்ரஸா மாணவர்களிடம், மத்ஹபை விட்டு விலகலாமா? என்ற வினா எழுந்த போது, அது தொடர்பான விவாதப் பொறி பறந்த போது, சங்கரன்பந்தல் பைஜுல் உலூம் மதரஸாவின் முதல்வரான பி.எஸ். அலாவுதீன் அவர்கள் அக்கினிக் குழம்பானார். மத்ஹபை விட்டு வெளியேறினால் கூழ்முட்டைகளாகி விடுவீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது அவர்களது நிலைப்பாடு, மத்ஹபு வெறி கூடாது என்ற அளவில் மட்டும் இருந்தது. ஆனால் அன்றைய ஆலிம்கள் அந்த நிலைப்பாட்டைக் கூட சகித்துக் கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.

மத்ஹபின் பிடிமானம் பி.எஸ். அலாவுதீன் போன்ற புரட்சி சிந்தனை கொண்டவர்களிடமும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் மத்ஹபிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்பது தனி விஷயம்.

இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நம்மை வசப்படுத்தி ஆட்டுவித்த மத்ஹபின் பரிமாணத்தை விளக்குவதற்காகத் தான். இறுதியாக, மத்ஹபுகள் குர்ஆன், ஹதீஸின் நேர்எதிர்த் திசையில் பயணிக்கின்றது; அதில் பயணம் செய்வது நரகத்தின் பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்று அல்லாஹ்வை அஞ்சி அதிலிருந்து இறங்கி, குர்ஆன், ஹதீஸ் பாதையில் பயணமானோம்.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் பெயரிலேயே கொண்ட ஜாக் என்ற இயக்கம் கண்டோம். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகள் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையில் நின்றோம். மார்க்கப் பயணத்தைத் தொடர்ந்தோம். அவ்விரண்டின் அடிப்படையிலேயே மார்க்கத் தீர்ப்பளித்தோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லைஎன்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் 2:102

இந்த வசனத்தின் விளக்கத்தை அன்றே அடித்துச் சொன்னோம். ஸிஹ்ர் என்பது ஒரு வித்தை, தந்திரம்; அதைப் பயன்படுத்தி கணவன், மனைவிக்கு மத்தியில் அல்லாஹ் நாடினால் பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று விளக்கமளித்தோம். அதுவும் கூட சூனியத்தின் ஆற்றலால் அல்ல. கணவன் மனைவி ஆகிய இருவருக்குமிடையில் கோள் மூட்டிப் பிரிக்க முடியும் என்றே விளக்கமளித்தோம்.

இப்போதும் சூனியத்தின் சக்தியைக் கொண்டு கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்றே சொல்கிறோம். மொத்தத்தில் சூனியத்திற்கு எந்த ஆற்றலும் இல்லை என்று அன்று ஜாக்கில் இருக்கும் போதே சொல்லி விட்டோம்.

ஜாக் இயக்கத்தில் இப்படித் தெளிவான திசையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது தான் காவி பயங்கரவாதிகளால் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது, சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்றளவுக்கு சமுதாயத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது.

சமுதாயப் பணியும் அழைப்புப் பணியின் ஓர் அத்தியாவசிய அம்சம் தான். மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை தவ்ஹீதில் இழுப்பதற்கு ஓர் ஆயுதம் தான் சமுதாயப் பணி என்பதை ஜாக்கின் தலைமைக்குப் பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எடுத்து வைக்கப்பட்டது. ஜாக் தலைமை அதை ஏற்க மறுத்தது.

இனிமேலும் இந்தக் கூடாரத்தில் இருக்க முடியாது என்று கருதி, அல்லாஹ்வை அஞ்சியவர்களாக அங்கிருந்து வெளியேறினோம்.

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு, சமுதாயப் பணிக்கு வேறோர் அமைப்பு என இரண்டு அமைப்புகளைக் கண்டோம். பாதை மாறாமல் பயணம் தொடர்ந்தது. சமுதாயப் பணியில் முன்னிலைப்படுத்தப் பட்டவர்களுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. நாற்காலிக் கனவுகள் அவர்களது கண்களில் நடனம் ஆடின. தங்களது வளர்ச்சிக்கு தவ்ஹீதுக் கொள்கை தான் தடை என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

அல்லாஹ்வை அஞ்சி அங்கிருந்து வெளியேறினோம். சத்தியப் பணிக்கும் சமுதாயப் பணிக்குமாகச் சேர்த்து ஒரே அமைப்பைக் கண்டோம். அப்போதும் பாதை மாறாமல் பயணம் தொடர்ந்தது.

இந்த அமைப்பு கண்ட பின்னர் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், நிர்வாகத்தின் விதிகளுக்கு எதிராக நடந்தவர்கள் என நம்முடன் பயணித்தவர்களில் சிலர் கழிந்தனர். அதன் பின்னரும் நமது பயணம் தொடர்ந்தது. இப்போது அண்மையில் இதே ஏகத்துவத்தில் பல கட்டுரைகளைப் பதிய வைத்த ஒருவர் தன்னுடைய பயணத்தை இடையில் நிறுத்திக் கொண்டு பாதை மாறிப் போய்விட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டுக் கழிந்தவர்களில் இவரும் ஒருவர் என்ற கணக்கில் வந்துவிட்டார். இருப்பினும் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனியம் குறித்தான நிலைப்பாட்டை மையப்படுத்தி வெளியே சென்றுள்ளார்.

இவர் ஜமாஅத்தை விட்டு வெளியேறும் போது, இது அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு என்றும் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார். இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வை அஞ்சவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் இஸ்லாமிய உலகமே சூனியத்திற்கு ஆதரவான கொள்கையைக் கொண்டிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும், “அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் சூனியக்காரனுக்கு அறவே இல்லை, தெரிந்தே அவ்வாறு நம்புவது ஓர் இணை வைப்பு’ என்று அல்லாஹ்வை மட்டும் அஞ்சி, வேறெந்த சக்திக்கும் அஞ்சாமல் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது.

அல்லாஹ்வுக்கு எந்தவகையிலும் இணை வைத்துவிடக் கூடாது என்பதைத் தவிர தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் உலகத்திலிருந்து இந்தக் கருத்தில் தனித்து நிற்கின்றது.

தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த இறைத்தூதர்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே அஞ்சியுள்ளனர் என்பதை கீழ்க்காணும் வசனம் தெரிவிக்கின்றது.

அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 33:39

ஜைனப் (ரலி) திருமண விவகாரத்தில் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களை நோக்கி இவ்வாறு எச்சரிக்கை செய்கின்றான்.

மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.

அல்குர்ஆன் 33:37

அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:150

அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவுபடுத்தி) உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

அல்குர்ஆன் 7:169

இதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கடைப்பிடிக்கின்றது. ஆனால் இந்த ஜமாஅத்திலிருந்து வெளியேறியவர் பெருங்கூட்டத்திற்கு அஞ்சி தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு வெளியே போய்விட்டு தனக்குத் தானே இறையச்சம் என்று சொல்வது வேடிக்கையாகும்.

ஆரம்பத்திலிருந்து கப்ரு வணக்கம், மத்ஹபு, சூனிய நம்பிக்கை என அத்தனை ஷிர்க், பித்அத்களை விட்டு வெளியேறியது அல்லாஹ்வை அஞ்சித் தான். எத்தனை பேர்கள் பயணத்திலிருந்து விலகினாலும் சரி! அது தவ்ஹீத் ஜமாஅத்தை ஒருபோதும் பாதிக்காது. அகிலத்தை அஞ்சாமல் அல்லாஹ்வை மட்டும் அஞ்சி, பாதை மாறாமல் தவ்ஹீத் ஜமாஅத், சுவனத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடரும்.

இதுவரையிலும் எத்தனையோ பேர் வெளியே சென்றுள்ளனர். அவர்கள் எல்லோரும் ஜமாஅத்தின் கொள்கையில் ஒன்றுபட்ட நிலையில் தான் வெளியேறினர். பின்னர் வெளியே போய் தங்கள் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர்.

வெளியேறியவர் இங்கிருக்கும் போது, அதிலும் குறிப்பாக மிக அண்மைக்காலத்தில் சூனியம் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் தனது பேச்சு, எழுத்து ரீதியாக ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் ஆதரித்தார். இப்போது வெளியேறுகையில் நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. இது அவசரமாக எடுத்த முடிவல்ல, மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த முடிவுக்கு நான் வந்து விட்டேன் என்றெல்லாம் சொல்வதன் மூலம் இவ்வளவு காலமும் தான் அல்லாஹ்வை அஞ்சவில்லை, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அஞ்சியதாக அவரே வாக்குமூலம் கொடுக்கின்றார். அல்லாஹ்வே இந்த வார்த்தைகளை அவரிடமிருந்து வரவழைத்து அவரது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியுள்ளான். இதன் மூலம் இவரது இறையச்சம் கேள்விக்கும் கேலிக்கும் உரியதாக ஆகியுள்ளது.

இந்த இயக்கத்தை விட்டும் வெளியே சென்றவர்களில் தனக்கு எதிரான தடத்தைப் பதிய வைத்து, தகுந்த தடயங்களையும் விட்டுச் சென்றவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பயணம் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் அச்சத்தை அச்சாணியாகக் கொண்டே செல்கின்றது. அந்த இலக்கை நோக்கியே பாதை மாறாமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்கின்றது.

—————————————————————————————————————————————————————-

ஹதீஸ்களை மறுப்பது யார்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

திருக்குர்ஆனும் நபிவழியுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள்.  இதை தக்க வாதங்களோடும் தெளிவான சான்றுகளோடும் எண்பதுகளிலிருந்து  தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகிறது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்தால் அதிக அளவில் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். விளைவு ஊருக்கு நாலைந்து பேர் என்ற நிலை மாறி சத்தியக் கொள்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

“சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற (அல்குர்ஆன் 34:49) இறைவாக்கின் அடிப்படையில் தமிழகத்தில் அசத்தியவாதிகளின் கூடாரம் காலியாகத் துவங்கியது அவர்களுக்குக் கிலியை உண்டாக்கியது.

சத்தியவாதிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த அவர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை. நமது வாதங்களுக்குத் தக்க பதிலும் அசத்தியவாதிகளிடம் இல்லை. ஆகவே தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் சத்தியத்தை நோக்கிப் படை திரண்டு வரும் மக்கள் திரளைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் பொய்ப் பிரச்சாரத்தைக் கையிலெடுக்கலானார்கள்.

தங்களிடம் பதில் இல்லை எனும் போது பொய்ப்பிரச்சாரத்தை கையிலெடுப்பது தான் நபிமார்கள் காலத்திலிருந்தே அசத்தியவாதிகளின் அணுகுமுறையாக இருந்தது.

இறைத்தூதர்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் வேளையில் அதற்குப் பதிலளிக்க இயலாத எதிரிகள் நபிமார்களை பைத்தியக்காரன், கவிஞன், சூனியக்காரன் என்று பொய் கூறியே மக்கள் கூட்டம் சத்தியத்தை ஏற்பதை விட்டும் தடுக்க எண்ணினார்கள். அல்லாஹ் அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தான் என்பது தனி விஷயம்.

அது போன்று தான் எதைச் சொன்னால் மக்கள் பாரதூரமாகக் கருதி நம்மை விட்டும் விலகுவார்களோ அது போன்ற பொய்யான, அவதூறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள்.

இவர்கள் நபி மீது ஸலவாத் சொல்ல மறுக்கிறார்கள்.

இவர்கள் அவ்லியாக்களை திட்டுகிறார்கள்.

இமாம்களை ஏசுகிறார்கள்.

என்றெல்லாம் பல்வேறு அவதூறுகளைக் கூறினார்கள்.

இவற்றில் எதுவுமே உண்மையல்ல. அனைத்துமே உண்மைக்கு புறம்பான, மக்களை நம்மை விட்டும் அப்புறப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகள். மேற்சொல்லப்பட்டவற்றில் எந்த ஒன்றையாவது எந்தக் காலகட்டத்திலாவது நாம் சொல்லியிருக்கிறோமோ? என்றால் கிடையாது.

பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் ஓதும் நடைமுறை தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்டது. இது நபிவழிக்கு மாற்றமானது, பாங்கிற்குப் பிறகே ஸலவாத் ஓத வேண்டும்; அதுவே நபிவழி என்று மக்களிடம் நாம் சத்தியப்பிரச்சாரம் செய்ததை திரித்து நபி மீது ஸலவாத் ஓத மறுக்கிறார்கள் என்று கூறலானார்கள்.

இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்கிறீர்களே! அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு, குழந்தை தரும் ஆற்றல் உண்டு என்றெல்லாம் சொல்கிறீர்களே இது இணைவைப்பு அல்லவா? என்று பிரச்சாரம் செய்தோம்.

அது மட்டுமின்றி யானை, குரங்கு போன்றவற்றையும் கஞ்சா அடிப்பவர்களையும், பீடி குடிப்பவர்களையும் இறைநேசர் என்கிறீர்களே! இது முறையா என்று பிரச்சாரம் செய்தோம். இதைத்தான் திரித்து, மறைத்து “அவ்லியாக்களைத் திட்டுகிறார்கள்’ என்று மக்களிடம் கொண்டு சென்று மக்களை நம்மை விட்டும் தூரமாக்கும் இழிச்செயலைச் செய்தார்கள்.

அனைவரும் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றுங்கள்; இமாம்களையோ, ஸஹாபாக்களையோ பின்பற்றாதீர்கள் என்று கூறியதை இமாம்களையும், “ஸஹாபாக்களையும் திட்டுகிறார்கள்’ என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.

இப்படி சத்தியத்தை நோக்கி அலை அலையாய் ஆர்ப்பரித்து வரும் மக்கள் திரளைத் தடுத்து நிறுத்த எத்தனையோ பொய்ப்பிரச்சாரங்களைக் கையிலெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அவர்களின் அனைத்து சதிகளையும் முறியடித்து இன்று மிகப் பெரும் வளர்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் அடைந்திருக்கின்றது.

இறை உதவியோடு அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் சத்தியமே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

சத்தியத்திற்கு முன் அசத்தியவாதிகள் வாயடைத்து மௌனிகளாகி விடுவார்கள் என்பதே வரலாறு. அதற்கு இப்றாஹீம் நபியின் நிகழ்வு ஓர் சிறந்த எடுத்துக் காட்டு.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 2:258

ஸலஃபுக் கும்பலும் ஹதீஸ் மறுப்புக் கொள்கை குற்றச்சாட்டும்

நமது வாதங்களுக்குப் பதிலளிக்க இயலாத தரீக்காவாதிகள், மத்ஹபுவாதிகள் எடுத்த அதே பொய்ப்பிரச்சாரம் எனும் ஆயுதத்தை இன்று தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் அல்லது தவ்ஹீத் முகமூடி அணிந்துள்ள சிலர் கையிலெடுத்துள்ளார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ், சூனியம் போன்ற விவகாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைக்கும் வாதங்களுக்குத் தகுந்த பதிலளிக்க இயலாத இந்த பலவீனர்கள் நம்மைப் பார்த்து, “இவர்கள் ஹதீஸை மறுப்பவர்கள்’ என்று ஓலமிடுகின்றார்கள்.

நவீன முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், ஹதீஸ் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் இதுவெல்லாம் மனோ இச்சைவாதிகளான ஸலபுக் கும்பல் நமக்குச் சூட்டியுள்ள அடைமொழிகள்.

இவர்களை மனோ இச்சைவாதிகள் என்று நாம் கூறுவதற்கு காரணம், எழுப்பப்படும் வாதங்களுக்குத் தகுந்த பதில் அளிக்காதவர்களை குர்ஆன் அவ்வாறு தான் வர்ணிக்கின்றது.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 28 50

உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைக் கொண்டவர்களா?

இந்தக் கேள்விக்கான பதிலை தமிழக தவ்ஹீத் வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

குர்ஆனும் ஹதீசும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை எந்த இயக்கமும் சொல்லாத அளவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அழுத்தமாக சொல்லி வருகிறது.

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்”

என்று அல்லாஹ் (22:40) கூறியதற்கேற்ப குர்ஆனும் ஹதீசும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்த காரணத்தாலேயே ஊர்நீக்கம், அடி உதை, அரிவாள் வெட்டு என பல துன்பங்களை தவ்ஹீத் ஜமாஅத் தன் பிரச்சாரப் பயணத்தின் துவக்கத்தில் சந்தித்துள்ளது.

திருச்சி, மேலப்பாளையம், நாகூர் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த தவ்ஹீத் ஜமாஅத்தார்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கொள்கையில் இறந்து போனவர்களது உடல் மையவாடியில் அடக்கம் செய்ய மறுக்கப்பட்டது.

இவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, கொடுத்த அடியையும் வாங்கி கொண்டு குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று பிரச்சாரம் செய்து தமிழத்தில் இந்தக் கொள்கையை வளர்த்தவர்கள், இந்தக் கொள்கைக்காகப் பாடுபட்டவர்கள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸலபுக் கும்பல் அல்ல. மாறாக இவர்களால் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்று சொல்லப்படும் தவ்ஹீத் ஜமாஅத்தினர்களே இந்த அரும்பணியைச் செய்தார்கள்.

மனோஇச்சைவாதிகள் கூறுவதைப் போன்று ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்திருந்தால் ஹதீஸைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னதற்காக அவ்வளவு துன்பங்களையும் அடி உதைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே!

கொள்கையில் கொஞ்சம் வளைந்து கொடுத்திருந்தால் போதும் ஊர் ஜமாஅத்தார்கள் இந்த ஜமாஅத்திற்கு பட்டுக் கம்பளம் விரித்திருப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாம் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பிர்ச்சாரம் செய்த, செய்து வருகின்ற அமைப்பு இந்த தவ்ஹீத் ஜமாஅத்.

குர்ஆன் மட்டும் போதும், நபிவழி தேவையில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் முஸ்லிமல்ல என்பதை ஆணித்தரமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருவது மட்டுமல்ல; அந்த வழிகெட்ட கொள்கையில் உள்ளவர்களோடு பல விவாதக்களங்களை சந்தித்துள்ளது. அவர்களுக்கு எதிராக நூல்களையும் எழுதி உள்ளது.

(இந்த ஜமாஅத் நபிமொழிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிய இந்த ஒரு நூல் மிகச்சிறந்த சான்று)

குர்ஆனும் நபிமொழியும் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கே. நபிமொழிகளில் ஒன்று சொல்லப்பட்டு விட்டால் அதை எப்பாடு பட்டாவது கடைபிடிக்க வேண்டும், எத்தகைய துன்பத்தைச் சந்தித்தாலும் மக்களிடையே அதை நிலைநாட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு செயல்படும் அமைப்பு இது.

தொழுகையில் விரலசைத்தல்

அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் தொழுகையில் விரலசைப்பது.

தொழுகையில் கையை நெஞ்சின் மீது கட்ட வேண்டும், அத்தஹிய்யாத்தின் போது விரலை அசைக்க வேண்டும் என்பது நபிமொழி தான். இந்த நபிமொழிகளை அறிந்திராத காலகட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாகவே தங்கள் தொழுகை முறையை அமைத்திருந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் இந்த நபிமொழிகளை அறிந்ததும் அதை அமுலுக்குக் கொண்டு வந்தது. விளைவு ஊர் முழுவதிலும் எதிர்ப்பலைகள்.

நபிமொழிகளைப் பின்பற்றி நெஞ்சின் மீது கை கட்டி தொழுபவர்கள் அடிக்கப்பட்டார்கள். விரல் அசைப்பவர்களது விரல்கள் தொழுகையிலேயே ஒடிக்கப்பட்டன. தொழுது கொண்டிருக்கும் போதே செங்குத்தாக தூக்கி ஹவ்ஸில் (ஒழு செய்யுமிடத்தில்) தூக்கி போடப்பட்டனர். விரலை அசைத்துத் தொழுபவர்களுக்கு பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று அடித்து விரட்டப்பட்டனர். நபிவழி அடிப்படையில் இறைவனை வணங்குவதற்குப் பள்ளியில்லாமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

ஹதீஸ் மறுப்பை கொள்கையாகக் கொண்டிருந்தால், அஹ்மதில் இடம்பெறும் விரலசைத்தல் ஹதீஸை அமுல்படுத்துவதற்கு இத்துணை துன்பங்களை ஏன் அனுபவிக்க வேண்டும்?

அஹ்மத் என்று நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இவர்கள் வஹிக்கு ஒப்பாகக் கருதும் புஹாரி, முஸ்லிமில் கூட இந்தச் செய்தி இல்லை  என்பதை நினைவுபடுத்தவே!

ஒன்று நபிமொழி என்று உறுதியாகி விட்டால் அது எந்த நூலில் இருந்தாலும் அதை அமுல்படுத்த இந்த ஜமாஅத் தயங்காது. அதற்காக வரும் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சாது என்பதே வரலாற்று உண்மை.

இத்தகைய ஜமாஅத் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுவது எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்?

எளிய திருமணம்

இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி, அது சொல்லும் சத்தியத்திற்காக பெருந்திரளான மக்கள் படையெடுத்து வந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் ஹதீஸிற்கு உட்பட்ட சில நிலைப்பாடுகளால் இன்னும் பல மக்கள் ஆதரவை இந்த ஜமாஅத் இழக்கவே செய்கிறது. அது போன்ற நிலைகளை இந்த ஜமாஅத் தளர்த்தினால் இன்னும் அதிக மக்களை வென்றெடுக்க முடியும்.

உதாரணத்திற்கு, திருமணத்தை ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.  பெரியளவில் விருந்து வைத்து மண்டபங்களில் திருமணத்தை நடத்தினால் கூட அது ஆடம்பரமாக ஆகும் என்று ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது. அந்த திருமணங்களைத் தவிர்க்கின்றது.

இது மனோஇச்சை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. நபிமொழியே இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க எங்களைத் தூண்டியது.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது (நூல்: அஹ்மத்)

இந்த நபிமொழி அடிப்படையிலும், நம் சமுதாயம் திருமணத்திற்காக பணத்தை வாரி இறைத்து விரையம் செய்வதைக் கவனத்தில் கொண்டும் எளிமையான முறையில் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மண்டபம், பெரிய அளவில் விருந்தளித்தல் ஹராமல்ல என்றாலும் மேற்கண்ட நபிமொழி அடிப்படையிலும் சமூக நிர்ப்பந்தத்தைத் தவிர்க்கும் வகையிலும் திருமணத்தை எளிமைப்படுத்துவதே சிறந்தது என்பதே ஜமாஅத்தின் நிலை.

இதனடிப்படையில் மண்டபம், பெரிய அளவிலான விருந்து போன்றவற்றை இந்த ஜமாஅத் தவிர்க்கும் போது அதற்காகவே சில மக்கள் இந்த ஜமாஅத்திற்கு வராமல் இருக்கிறார்கள். அல்லது ஜமாஅத்தில் இருக்கிற சில நபர்களும் திருமண விவகாரம் வரும் போது ஜமாஅத்திலிருந்து விலகி விடுகிறார்கள்.

இப்படி ஒரு வகையினரை திருமண நிலைப்பாட்டால் இந்த ஜமாஅத் இழக்கவே நேரிடுகிறது. எனினும் இந்த ஜமாஅத் இந்த நிலைப்பாட்டைத் தொடர்வதற்கு மேற்கண்ட நபிமொழியே காரணம்.

இதை குறிப்பிடுவதற்குக் காரணம், ஹதீஸை மறுப்பவர்களது செயல்பாடுகள் இப்படி இருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மக்கள் ஆதரவை இழந்தாலும் பரவாயில்லை நபிமொழி என்ன சொல்கிறதோ அதைச் செய்வோம் என்ற நிலைப்பாட்டில் தான் ஹதீஸை மறுப்பவர்கள் இருப்பார்களா?

உண்மையில் ஹதீஸ் மறுப்புக் கொள்கை ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸை அல்லவா மறுத்திருக்க வேண்டும். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று இதை மறுத்து மக்கள் ஆதரவை திரட்டி இயக்கத்தின் மக்கள் சக்தியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

சொல்லப்போனால் எதிர்க்கூடாரத்தில் இருந்த சில சாப்பாட்டுப் பிரியர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என்று கூக்குரலிட்ட போதும் அது தவறு, இந்த ஹதீஸ் சரியானதே என்று ஆய்வு செய்து மறுப்புக் கட்டுரை வெளியிட்டது இந்த ஜமாஅத்.

மக்கள் கூட்டம் எங்களுக்கு முக்கியமில்லை. நபிமொழியைப் பின்பற்றுவதே முக்கியம் என்பதை கொள்கையாகக் கொண்டது இந்த ஜமாஅத் என்பதற்கு இது ஓர் சான்று.

இது போன்று திடல் தொழுகை, ஸஹர் பாங்கு, ஜனாஸா தொழுகையை குடும்பத்தார் தொழுவிப்பது போன்ற எண்ணற்ற நபிமொழிகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து அதை உயிர்ப்பிக்கும் விதமாக நடைமுறைக்கு கொண்டு வந்ததால் பல எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் இந்த ஜமாஅத் சந்தித்துள்ளது.

இத்தகைய ஜமாஅத்தை நோக்கி ஹதீஸை மறுப்பவர்கள் என்று கூறு கெட்டவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையா? என்பதை சிந்தனையுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

குர்ஆன் மட்டும் போதும் என்று ஒரு கூட்டம் கொக்கரித்த போது அமைதி காத்து தங்கள் நபிமொழிப் பற்றை வெளிப்படுத்திய ஹதீஸ் காப்பாளார்கள் (?) நம்மைப் பார்த்து ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்று விமர்சிப்பது சந்தேகமற வியப்பின் சரித்திரக் குறியீடே!

சிந்தனைக்கு முக்கியத்துவமா?

தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு ஹதீஸை விட தங்கள் புத்தியே மேலானது. எனவே தங்கள் புத்திக்கு ஒத்துவராவிட்டால் உடனே ஹதீஸை மறுத்துவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டையும் இந்த நவீன மத்ஹபுவாதிகள் (ஸலபுக் கும்பல்) முன்வைக்கின்றனர்.

இதுவும் அபாண்டமான, நாம் சொல்லாததைச் சொல்வதாக திரித்துக் கூறும் பொய்க்குற்றச்சாட்டே!

அறிவுக்குக்குப் புலப்படாததை எல்லாம் மறுப்பவர்கள் என்ற ரீதியில் இவர்கள் நம்மை விமர்சிப்பதில் துளியும் உண்மை கிடையாது. நபிமொழியை விட நமது அறிவே மேலானது. அறிவுக்குப் பொருந்தவில்லை எனில் மறுத்துவிட வேண்டியது தான் என்பதை என்றைக்கும் நாம் பிரச்சாரம் செய்தது கிடையாது.

மாறாக அறிவுக்குப் புலப்படாத எண்ணற்ற நபிமொழிகளை நாம் நம்பி நடைமுறைப்படுத்தவே செய்கிறோம்.

காற்றுப் பிரிதல் நிகழ்ந்தால் உளூ முறிந்து விடும் என்பது நபிமொழி.

காற்றுப் பிரிதல் நிகழ்வது ஒரு இடம், ஆனால் அதற்காக நாம் உளூ செய்யும் போது கழுவுவது இதர இடங்கள் ஆகும். காற்றுப் பிரிதல் ஏற்பட்ட பின்புறத்தைத் தவிர கை, கால், முகம் என கழுவி விட்டுச் செல்வது அறிவுக்கு புலப்படவில்லை தான்.

அறிவுக்குப் புலப்படாததை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸை மறுத்திருக்க வேண்டுமே!

மேலும் காலுறை அணிந்தவர்கள் ஒழு செய்யும் போது காலை கழுவுதற்குப் பதிலாக, காலுறையின் மேற்புறம் மஸஹ் செய்யலாம் என்ற சலுகையை நபிகளார் வழங்கியுள்ளார்கள். இதுவும் நபிமொழிதான்.

காலுறையில் மஸஹ் செய்வதாக இருந்தால் அதற்கு தகுதியான இடம் அதன் கீழ்புறம் தான். ஏனெனில் காலுறையின் கீழ் புறம் தான் அசுத்தமடையும்.

அசுத்தமாகும் கீழ் பகுதியின் மேல் மஸஹ் செய்வதை விட்டுவிட்டு மேல்புறம் மஸஹ் செய்வது அறிவுக்குப் புலப்படவில்லையே!

அறிவுக்குப் புலப்படாததை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸையும் மறுத்திருக்க வேண்டுமே!

பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்டால் தொழுவது, நோன்பு நோற்பது கூடாது. மாதவிலக்கு காலத்தில் விடுபட்ட கடமையான நோன்பை களாச் செய்ய வேண்டும், ஆனால் தொழுகையை களாச் செய்ய தேவையில்லை என்பது நபிமொழி.

தொழுகை, நோன்பு இரண்டும் வணக்க வழிபாடுகள் தான். இரண்டில் நோன்பை களாச் செய்ய அனுமதித்து, ஆனால் தொழுகையை களாச் செய்ய கூடாது என்று சட்டம் சொல்வதும் அறிவுக்கு புலப்படவில்லைதான்.

ஒரு குவளை பாலில் 70க்கும் மேற்பட்டோர் வயிறாற அருந்தியது, சிறிதளவு தண்ணீரில் அதிகமான நபர்கள் உளூ செய்தது போன்ற நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்வுகளும் அறிவுக்குப் புலப்படவில்லை தான்.

இப்படி சொர்க்கம், நரகம், மறுமை, மரணித்த பின் எழுப்பப்படுதல் போன்ற எத்தனையோ அறிவுக்குப் புலப்படாத விஷயங்களை நபிமொழி உறுதிப்படுத்திய பின் அவற்றை உறுதியாக நம்புவதோடு தர்க்கரீதியான வாதங்களோடு அதை மக்களிடையே பிரச்சாமும் செய்து வருகிறது.

அறிவுக்குப் புலப்படாதவற்றை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கை எனில் இவைகளை மறுத்திருக்க வேண்டுமே.

இதிலிருந்து இவர்களின் குற்றச்சாட்டு சத்தியத்தை நோக்கி வரும் மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்காக கூறும் அல்லது அவர்களது கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சொல்லப்படும் பொய்க்குற்றச்சாட்டே என்பதை அறியலாம்.

அறிவுக்கு புலப்படாத நபிமொழிகளை மறுத்து விடுகிறது என்ற வாதம் எதிரிகளால் திரித்துக் கூறப்படும் பொய்யே என்பது தெளிவாக அம்பலமாகிறது.

நாங்கள் சொல்வது என்ன?

குர்ஆனும் நபிவழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் பாதுகாக்கப்படும் முறைகளில் இரண்டும் சமமானவை அல்ல.

இது குறித்து திருக்குர்ஆன் தர்ஜுமாவில் எழுதிய சிறு விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம்

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித் தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம்.

குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

“ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது” என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.

இது தான் திருக்குர்ஆன் தர்ஜுமாவில் இடம்பெற்றுள்ள அந்த விளக்கம்.

எந்த வகையிலும் இணைத்து விளக்கம் அளிக்க முடியாதபடி குர்ஆனுக்கு முரண்பட்டால் குர்ஆனுக்கு முன்னுரிமை அளித்து முரண்படும் செய்திகளை இது நபிமொழியே அல்ல என்று நிராகரித்து விட வேண்டும் என்று கூறுகிறோம்.

ஒரு செய்தி குர்ஆனுடன் தெளிவாக மோதும் போது இது குர்ஆனுடன் மோதுகிறது; எனவே நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று கூறி மறுப்பது ஹதீஸை மறுப்பதாகுமா? இது ஹதீஸ் மறுப்புக் கொள்கையா?

அப்படியெனில் நபிகள் நாயகம் கூறியதாக உமர், இப்னு உமர், அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கும் செய்திகளை குர்ஆனுக்கு மாற்றமாக நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அன்னை ஆயிஷா (ரலி) மறுத்தார்களே? அன்னை ஆயிஷா அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருக்கிறார்களா?

பார்க்க: முஸ்லிம் 1694, 1697, 1693, அஹ்மத் 24894

இது போன்று ஃபாத்திமா பின் கைஸ் (ரலி) என்ற பெண்மணி நபிகள் நாயகம் கூறியதாக ஒரு செய்தியைக் கூறியதை உமர் (ரலி) அறிந்த போது, குர்ஆனுக்கு மாற்றமாக நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுத்தார்களே, உமர் (ரலி) அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருந்தார்களா? (பார்க்க: முஸ்லிம் 2963)

இன்னும் பல அறிஞர்கள் இந்த வழிமுறையைக் கடைபிடித்தார்களே! அவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் இருந்தார்களா? என்பதை இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்த ஹதீஸ் பாதுகாவலர்கள் (?) பதில் அளிக்க வேண்டும்.

இது தொடர்பாக இப்னு தைமிய்யா அவர்களது கூற்றை பாருங்கள்.

நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார் என்று இன்ன ஆதாரம் சொல்கிறது; எனவே அறிவிப்பவர் தவறுதலாக அறிவித்து விட்டார் அல்லது பொய் சொல்லி விட்டார் என்று நம்பி ஸஹாபாக்கள் மறுத்ததைப் போன்று யார் அறிவிப்பாளர் தொடர் சரியான செய்திகளை மறுக்கிறார்களோ அவர் காஃபிர் என்றோ பாவி என்றோ சொல்லப்பட மாட்டார்.

அவனது நம்பிக்கை சரியாக இல்லையென்றாலும் சரியே. ஏனெனில் பல நபித்தோழர்களும் ஹதீஸ் துறை வல்லுனர்களிடம் சரியான செய்திகள் பலதை மறுத்துள்ளார்கள்.

நூல்: அல்முஸவ்வதா, பாகம் 1,  பக்கம் 222

நபிகள் நாயகம் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று கூறி ஹதீஸை மறுப்பது பாவமோ குஃப்ர் ஆக்கும் செயலோ அல்ல என்று இப்னு தைமிய்யா கூறுகிறார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் இதைக் கடைபிடித்துள்ளார்கள் என்கிறார்கள். (அவரது எல்லாக் கருத்திலும் நாம் உடன்படவில்லை என்பது தனி விஷயம்)

குர்ஆனுக்கு இந்தச் செய்தி முரண்படுகிறது; எனவே நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் சில செய்திகளை மறுத்தால் அது எப்படி ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையாகும்?

ஹதீஸில் பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது, ஷாத் வகையை சார்ந்தது என்று பல வகைகள் உள்ளதும் அவை அனைத்தும் மறுக்கப்பட வேண்டியது என்பதும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.

இந்த வகை ஹதீஸ்களை எதிர்தரப்பாளர்களும் மறுக்கத்தான் செய்கிறார்கள். எனவே அவர்களும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் உள்ளார்களா?

இத்தனைக்கும் ஷாத் வகை ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் சரியானதாக இருந்தும் அதை மறுக்கத்தான் செய்கிறார்கள். இதனால் ஹதீஸ் கலை அறிஞர்களோ இவர்களோ ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?

குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் இது பொய், நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள் என்று மறுப்பது ஒரு போதும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையாகாது.

எனவே சத்தியத்தை அழிக்க எத்துணை பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் சத்தியத்திற்கு முன் அவை ஒரு போதும் நிலைத்து நிற்காது. சத்தியம் எடுத்துரைக்கப்படும் போது அசத்தியம் தகர்ந்து, தரைமட்டமாகிப் போகும்.

உண்மையை பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

திருக்குர்ஆன் 21:18

எனவே வார்த்தை விளையாட்டுக்களை விட்டு விட்டு, வாதங்களுக்கு முறையாகப் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்தரப்பினரை கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றது. சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் ஷியாக் கொள்கையுடையவர்கள் என்று அடித்துச் சொல்லிவிடலாம்.

இவர்களே ஷியாக்களாக இருந்து கொண்டு மற்ற ஷியாக்களை இவர்கள் விமர்சிப்பது வேடிக்கையும் வினோதமும் ஆகும். தமிழக முஸ்லிம்கள் ஷியாக்களா? என்று இதைப் படிப்பவர்கள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் வினவலாம். சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகின்ற சடங்கு சம்பிரதாயங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டலாம்.

  1. தரீக்காக்கள்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்ற தரீக்காக்களில் தங்களுக்கென்று ஸில்ஸிலா (சங்கிலித் தொடர்) என்ற பெயரில் தலைமுறைகளை வைத்திருக்கின்றார்கள். இந்தத் தலைமுறைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் இவர்களாக ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இந்தத் தலைமுறை சங்கிலித் தொடரில் ஒன்று கூட அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற நபித்தோழரில் எவரிடமும் போய் முடியாது. எல்லா தரீக்காவுமே அலீ (ரலி) அவர்களிடம் தான் போய் முடியும். ஷியாக்கள் தான் இப்படி தலைமுறையை வைத்திருக்கிறார்கள். அந்தத் தலைமுறைகள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களிடம் தான் போய் முடியும். அதுபோன்று தான் சுன்னத் ஜமாஅத்தினர் வைத்துள்ள தரீக்காக்களின் தலைமுறையும் அலீ (ரலி)யிடம் போய் முடிகின்றது.

  1. பூரியான் ஃபாத்திஹா

ரஜப் மாதத்தில் வீடுகள் தோறும் ஃபாத்திஹா ஓதுவார்கள். இந்த ஃபாத்திஹாவை இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் பெயரால் ஓதுவார்கள். இந்த ஜாஃபர் சாதிக் யார்? இவர் ஷியாக்களின் 6வது இமாம் ஆவார். இவரது பெயரில் தான் பூரி, சேமியா பாயாசம் செய்து பாத்திஹா ஓதுவார்கள். இன்றைக்கு வரைக்கும் இந்த ஃபாத்திஹாக்களில் ஆலிம்கள் கலந்து கொண்டு ஃபாத்திஹா ஓதிவிட்டு, பூரியையும் பாயாசத்தையும் வெளுத்து வாங்கிவிட்டு வருகிறார்கள். இது ஷியாக்களின் நடைமுறை தவிர்த்து வேறெதுவும் கிடையாது.

  1. பஞ்சா எடுத்தல்

முஹர்ரம் பிறை 1 முதல் 10 வரை ஹுசைன் (ரலி) நினைவு நாள் அனுஷ்டிக்கிறார்கள். இந்தப் பத்து நாட்களிலும் மீன் சாப்பிட மாட்டார்கள். தாம்பத்தியத்தில் ஈடுபட மாட்டார்கள். ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் பஞ்சா எடுப்பார்கள். பஞ்சா என்பது சுமார் 10 அடி உயரம், 10 அகலத்தில் கம்புகளால் அமைக்கப்பட்ட சதுவர வடிவத்தின் இரு பக்கத்திலும் இரு கோபுரங்கள் போன்று அமைத்திருப்பார்கள். பள்ளிவாசலில் உள்ள மிஹ்ராபைப் போன்று குழி விழுந்த மாடமும் இருக்கும். இந்த மொத்த தோற்றத்தையும் மஞ்சள் நிற ஜரிகைத் தாள் கொண்டு அலங்கரித்திருப்பார்கள். சிறு சிறு மின்விளக்குகளையும் அதில் பொருத்தியிருப்பார்கள். இந்த மின்விளக்குகளின் வெளிச்சம் ஜரிகைத் தாளின் மினுமினுப்பில் படுகின்ற போது தங்கக் கதிர்கள் அதிலிருந்து தெறிப்பது போன்று காண்போர் கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்தப் பஞ்சாவில் நடுநாயகமாக ஒரு வெள்ளிப் பட்டையில் ஐந்து விரல்கள் கொண்ட ஒரு கைச் சின்னம் வீற்றிருக்கும். அதைச் சுற்றி பூக்கள் தொங்கிக் கொண்டிருக்கும். பஞ்சா ஊர்வலமாகப் புறப்பட்டு ஒவ்வொரு அங்குலமாக நகரும் போது பக்தர்கள், பக்தைகள் பக்திப் பிரவாகமெடுக்க பூமாலைகளை அள்ளி அதன் மீது வீசிக் கொண்டிருப்பார்கள்.

ஐந்து விரல்களில் அடங்கிய ரகசியம்

பார்ப்பவர்களின் விழிகளுக்கு விருந்தாகவும், பக்தர்களுக்கு மருந்தாகவும் காட்சியளிக்கின்ற கைச்சின்னத்தின் ஐந்து விரல்களில் அடங்கிய ரகசியம் என்ன? அதுதான் ஷியாக்களின் கொள்கையாகும்.

முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகிய ஐந்து பேரையும் கடவுளாக்குவது தான் அதில் ஒளிந்திருக்கும் ரகசியமாகும்.

சுக்கு நூறாக நொறுங்க வைத்து, சுட்டெரிக்கும் சூடான நெருப்பிலிருந்து என்னைக் காக்கின்ற ஐவர் இருக்கின்றனர். முஸ்தபா (என்ற முஹம்மது – ஸல்), முர்தளா (என்ற அலீ) அவ்விருவரின் பிள்ளைகள் (ஹஸன், ஹுஸைன்), ஃபாத்திமா ஆகியோர் தான் அவர்கள்.

ஷியாக்களின் கடவுள் கொள்கையை இந்தக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்றன. அபத்தமும், ஆபத்தும் நிறைந்த ஐந்து கடவுள் கொள்கையைப் படம் போட்டுக் காட்டுகின்ற கை விரல்கள் தான் பஞ்சாவின் நடுவில், நடு நாயகமாகக் கொலு வீற்றிருக்கின்றன.

இங்கு சுட்டிக் காட்டியிருப்பது பஞ்சாவின் முழு நேர்முகமல்ல. அதனுடைய ஒரு பகுதியைத் தான் காட்சிப்படுத்தியிருக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு இந்தச் சிறிய துணுக்கு போதும். இது நமக்குச் சொல்வதென்ன?

இந்தப் பஞ்சாவும் இதற்கு முன்பு நாம் கண்ட தரீக்கா தலைமுறை, பூரியான் ஃபாத்திஹா அத்தனையும் உணர்த்துவது, உரக்கச் சொல்வது இங்குள்ள சுன்னத் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும் கொள்கை, ஷியாக்களின் கொள்கை என்பதைத் தான்.

ஐவர் பெயரில் அரும் படங்கள்

பிற மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய வீட்டுச் சுவர்கள், கடைகளின் கல்லாப் பகுதிகள் போன்றவற்றில் சாமிப் படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். அவற்றின் மூலமாகத் தங்கள் வீடு மற்றும் கடைகளில் தெய்வ அருள் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை! முஸ்லிம்கள் இதுபோன்று சில படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். அந்தப் படங்களில் முஹம்மத் (ஸல்), அலீ (ரலி), ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றிருக்கும். இதுவும் இவர்களின் ஷியாக் கொள்கையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது.

இதுபோன்று ஷியாக்களின் கொள்கை வார்ப்புகளை, அடையாளங்களை ஒரு பெரிய பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். அதற்கு இந்தக் கட்டுரை இடம் தராது என்பதால் இப்போது ஷியாக்களின் முக்கியமான அடையாளமாகத் திகழ்கின்ற ஹுஸைன் மவ்லிதைப் பார்ப்போம்.

ஹுஸைன் மவ்லிது

அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு நிகராக ஏற்றிப் பேசுகின்ற மவ்லிதுகளை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆய்வு செய்து அடையாளங்காட்டி விட்டார்கள். இறந்து விட்ட நல்லடியார்களைக் கடவுளாகப் பாவிக்கின்ற பாடல்களை வரிக்கு வரி மக்களிடம் விளக்கி, வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.

தமிழகத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி, பேராதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போன்றவற்றின் பாடல் வரிகள் நமது ஆய்வு நூல்களின் அக்கினிப் பரிட்சையில் எரிந்து சாம்பலாயின. தமிழகத்தின் மவ்லிதுக் கச்சேரி சபாக்களில் சண்டமாருதம் செய்து கொண்டிருந்த யாகுத்பா, மறைந்த பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேனா முனையில் கிழிந்து சண்டாகிப் போனது; சமாதியானது.

கடந்த காலத்தில் நம் கைவசமிருந்த அல்ஜன்னத் இதழில், ஷாகுல் ஹமீது மவ்லிது வரிகள் நமது விமர்சனக் கணைகளுக்கு இலக்காகி சிறிது காலம் தொடராக வெளிவந்தது.

தோளை அழுத்திய சமுதாயப் பணிச் சுமையால் அந்தத் தொடர் முழுமையடையாமல் போனது. இருப்பினும் அந்த இணைவைப்புக் கவிதைகளின் மீது நாம் தாக்குதல் தொடுத்து அதனைக் கலங்கடித்தது வரலாற்றுச் சுவடுகளில் பதிவாகி விட்டது, அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் போர்க்கணைகளிலிருந்து ஹுஸைன் மவ்லிது மட்டும் இதுநாள் வரை தப்பித்துக் கொண்டிருந்தது. இந்த மவ்லிது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனும் போது அதன் மீது தாக்குதல் தேவை தானா? என்ற கேள்வி எழலாம்.

இன்று ஹதீஸ்களின் பெயரால் எவ்வளவோ கற்பனைச் சரக்குகளை, கலப்படப் பண்டங்களை அவ்வப்போது புதிது புதிகாக ஆலிம்கள் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றார்கள். இறக்குமதி செய்த இந்தப் பொய் ஹதீசுக்கு நதி மூலம் எங்கே கிடைக்கப் போகின்றது? இதை எப்படி நாம் ஆய்வு செய்வது என்ற நிராசை நம் நெஞ்சை அடைக்கின்றது. ஆனால் இந்தப் பொய்யான ஹதீஸ் தொடர்பான வார்த்தையைப் போட்டு கூகுள் கடலில் தேடினால் அது தொடர்பான ஆய்வுகளையும் ஆவணங்களையும் அள்ளி வீசிவிடுகின்றது.

புனிதத் தூதர் மீது சொல்லப்பட்ட பொய்களையெல்லாம் ஹதீஸ் கலை அறிஞர்கள் புலன் விசாரணை நடத்தி, அந்தப் பொய்யை உலகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கின்றார்கள்; அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் காணும் போது மேனி சிலிர்க்கின்றது. அந்தத் தூதருக்கு அல்லாஹ் போட்டிருக்கும் பாதுகாப்புக் கவசத்தை எண்ணி அவனை நோக்கி, உனக்கே புகழனைத்தும் என்று புகழாரம் சூட்டுகின்றது.

அந்த அடிப்படையில் இந்த ஹுஸைன் மவ்லிதும் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் வலையைப் பின்னியிருக்கின்றது. அதன் ஒவ்வொரு இழையையும் அறுத்து எறிவது தவ்ஹீத் ஜமாஅத்தின் தார்மீகக் கடமை என்ற அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு என்ற பெயரில் அதில் ஒளிந்திருக்கும் பொய்யான ஹதீஸ்களை ஏகத்துவம் அம்பலப்படுத்தவுள்ளது. அதில் உள்ள இணைவைப்பு அபத்தங்களை அடையாளப்படுத்தவுள்ளது.

இந்த மவ்லிது பிரபலமானது இல்லை என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில ஊர்களில் இன்னும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் அது நூல் வடிவிலும் உள்ளதால் அதில் அடங்கியிருக்கின்ற நாசகாரக் கருத்துக்களை, நச்சுக் கருத்துக்களை மக்களுக்கு விளக்குவது ஓர் ஏகத்துவவாதியின் கடமை என்ற அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வரும் இதழிலிருந்து இந்த ஆய்வைப் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 26

மறைவான ஞானமும் இறைவனின் செய்திகளும்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

தவறான வாதங்களும் தக்க பதில்களும் என்ற இத்தொடரில் இணை கற்பித்தல் பற்றி நாம் அறிந்து வருகிறோம்.

இறைநேசர்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், இறைவனும், இறைத்தூதரும் யாரை இறைநேசர் என்று அறிவித்துக் கொடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் இறைநேசர்கள் என்று சொல்லக்கூடாது என்பதையும், அப்படியே அவர்கள் இறைநேசர்களாக இருந்தாலும் கூட அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் அடிமைகளாக -அடியார்களாகத் தான் இருந்தார்களே தவிர அல்லாஹ்வுடைய அதிகாரத்தை ஒரு சிறிதளவும் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

குறைந்த பட்சம் தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவாவது இறைநேசர்கள் இருந்தார்களா என்று கேட்டால் அது கூட இல்லை என்பதற்கு நிறைய சான்றுகளை – சம்பவங்களை  நாம் பார்த்தோம். நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம்.

இதற்கு மேலும் பல சம்பவங்கள் ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாüல்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குüத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்களுக்கு நான் சலாம் (முகமன்) சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள், “யாரம்மா இவர்?” எனக் கேட்டார்கள். அதற்கு “நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப்என்றேன். உம்மு ஹானியே வருக! வருக! என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி), நூல்: புகாரி 357

இந்த சம்பவத்தில் வருகின்ற உம்மு ஹானி என்ற ஸஹாபியப் பெண்மனி நபியவர்களின் நெருங்கிய உறவுக்காரப் பெண் ஆவார். சகோதரி ஆவார். அப்படியிருந்தும் நபியவர்கள் உம்முஹானியின் குரலைக் கேட்டும் கூட வீட்டிற்கு வந்திருப்பவர் நம்முடைய சகோதரி தான்  என்பதை அறிய முடியவில்லை.

ஆனால் நம்மில் சிலர் நபியவர்களுக்கு இரண்டு கண்களுக்கு மேலாக ஞானக்கண் என்ற ஒன்று இருக்கிறது. அவர்கள் உலகத்திலுள்ள எந்த ஒரு விஷயத்தையும் இங்கிருந்தே பார்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் கூட கிடையாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்திருக்குமென்றால் உம்மு ஹானி அவர்கள் நபியவர்களின் வீட்டிற்கு வரும் போது இவர் யார் என்று கேட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ – எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி), நூல்: புகாரி 799, 5458

இந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அறவே தெரியவில்லை. யார் என்று கேட்டுத் தான் தெரிந்து கொள்கிறார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களது மகளின் அடக்கத்தில் கலந்துகொண்டோம். அப்போது கப்றுக் கருகில் உட்கார்ந்திருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். “(கடந்த) இரவு தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரும் உங்களில் உள்ளனரா?” என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அபூதல்ஹா (ரலி), நான் உள்ளேன் என்றதும் “இந்தக் குழியில் இறங்குவீராக!என்றார்கள். உடனே அவர் குழியில் இறங்கி அடக்கம் செய்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1342

இந்த சம்பவத்தில், நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்குமென்றால், இல்லறத்தில் ஈடுபடாதவர் யார் என்பதை ஏன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்? கேள்வியைக் கேட்காமலேயே அதற்குத் தகுதியானவர் யார் என்பதை அறிந்திருப்பார்களே!

ஆக, நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஒன்றல்ல! இரண்டல்ல! ஆயிரக்கணக்கான சம்பவங்களை ஆதாரமாக நாம் எடுத்துக் காட்டலாம். மேலும் நபியவர்கள் எதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்களோ அவை அனைத்துமே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தான் காட்டுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லைஎன்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு “ஹைஸ்எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுஎன்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (2125)

நபியவர்களுக்கு உண்மையாகவே மறைவான ஞானம் இருந்திருந்தால் தம் வீட்டில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதை ஏன் கேட்டுத் தெரிய வேண்டும்? அதைப் பற்றி விசாரிக்காமலேயே அதைக் கொண்டு வா என்று தான் சொல்லியிருப்பார்கள். தம் வீட்டில் என்ன இருக்கிறது என்பதைக் கூட  அவர்களால் அறிய முடியவில்லை. இந்தச் சம்பவமும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைத் தான் காட்டுகிறது.

அதே போன்று எந்த ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டாலும் நபியவர்கள் மக்களிடம் இவர் கடனாளியா? என்ற ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ஏனென்றால் கடன் இருக்கும் நிலையில் இறந்தவருக்கு நபியவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள். அவர் கடனாளியாக இருந்தால் கடன் தீர்க்கப்படும்வரை அவருக்குத் தொழுகை நடத்த மாட்டார்கள்.

ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார்.

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் “இல்லை!என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “இவர் கடனாளியா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம்!” என்றனர். நபி(ஸல்) அவர்கள் “அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) “இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.                       

நூல்: புகாரி 2295

இந்தச் சம்பவத்தில் நபியவர்களுக்கு அவர் கடனாளியா என்பதும் தெரியவில்லை. அவரிடம் கடனை அடைப்பதற்கு ஏதாவது பொருள் இருந்ததா? என்பதும் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அந்த மக்களிடம் இவர் கடனாளியா என்று கேட்டிருக்க மாட்டார்கள். இதுவும் நபிகளாருக்கு மறைவான விஷயம் தெரியாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாம் ஒவ்வொரு ஹதீஸையும் படிக்கும் போது அதில் நபியவர்களுடைய உரையாடலை நாம் கவனித்தால் அந்த உரையாடல்கள் சாதாரண மனிதனுடைய உரையாடல்கள் எப்படி இருக்குமோ அதுபோன்று தான் அமைந்திருக்குமே தவிர ஒரு கடவுளின் உரையாடல் போன்றோ, ஒரு மந்திரவாதியின் உரையாடல் மாதிரியோ, ஏமாற்றுப் பேர்வழியான சாமியார்களின் உரையாடலாகவோ இருந்தது கிடையாது. மனிதனுடைய உரையாடலாகத் தான் இருக்கும்.

நாம் ஒரு மனிதனிடம் எவ்வாறு உரையாடுவோமோ அதே போன்று, விசாரித்து அறிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்வது மற்றும் தமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லக்கூடிய வகையில் தான் இருக்கும். ஆக எந்த ஒரு நபிமார்களாக இருந்தாலும் அவர்களுக்கு அதிகாரமும் இல்லை; மறைவானவற்றை அறியும் திறனும் இல்லை என்பது தெளிவாகின்றது.

மேலும் இணை கற்பித்தலை நியாயப்படுத்தக்கூடியவர்கள், நபியவர்களுக்கு மறைவான விஷயம் தெரியும்; அவர்கள் மனிதனால் செய்ய முடியாத, இறைவனுக்கு மட்டுமே செய்ய முடிந்த பல அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள் ஆகிய இரண்டு வாதங்களை வைக்கிறார்கள்.

நபிகளார் பல மறைவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதை யாராலும் மறுக்க இயலாது. நாம் இதுவரைக்கும் கூறிய பல சம்பவங்களிலேயே அது வந்திருக்கின்றது. பொதுவாகவும் சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள்.

சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட 10 மனிதர்களை நபிகளார் குறிப்பிட்டது, போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையின் காரணத்தினால் தற்கொலை செய்த ஒருவரை எல்லோரும் நல்லவர் என்று கூற நபியவர்கள் அவரை நரகவாசி என்று கூறியது இப்படி ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றன.

இந்தச் செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டி இதையெல்லாம் நபியவர்களால் எப்படி சொல்ல முடிந்தது? அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்ததால் தான் சொல்ல முடிந்தது என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

சில சம்பவங்களை நபியவர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அந்த சம்பவங்களெல்லாம் கண்ணால் பார்த்து அறியக்கூடிய சம்பவம்  கிடையாது. காதால் கேட்டு அறியக்கூடிய சம்பவம் கிடையாது. ஐந்து  புலன்களையும், ஆறாவதாக இருக்கக்கூடிய சிந்திக்கும் அறிவின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கின்ற விஷயம் கிடையாது. இறைவன் அறிவித்துக் கொடுக்கின்ற விஷயங்கள்.

நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதற்கு நாம் பல்வேறு ஆதாரங்களை வைக்கின்ற போது, “அவை உங்களுடைய ஆதாரம். மறைவான ஞானம் நபியவர்களுக்கு இருக்கின்றது என்பது சம்பந்தமாக பல செய்திகளை நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அவை எங்களுக்குரிய ஆதாரங்கள்’ என்று கப்ரு வணங்கிகள் குழப்புகின்றார்கள்.

இஸ்லாத்தை, மார்க்கத்தின் ஆதாராங்களை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து விட்டார்கள். குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களுமே அனைத்து முஸ்லிம்களுக்கும் உள்ள ஆதாரங்கள் தான். ஹதீஸில் உள்ள அனைத்துமே அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய ஆதாரங்கள் தான். அவர்களும் நாமும் வைக்கக்கூடிய ஆதாரங்கள் அது குர்ஆனில் இருந்தாலும் சரி, ஹதீஸ்களில் இருந்தாலும் சரி அனைத்துமே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைத் தான் காட்டுகின்றன.

நபியவர்களுக்கு மறைவான விஷயங்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்த அறிவைக் கொண்டு தானாக அறிந்து கொள்ள இயலாது என்பதைத் தான் நாம் கூறுகின்றோம்.

நபியவர்கள் 10 பேரை சொர்க்கவாசி என்று சொன்னார்களே! அதை எப்படிச் சொன்னார்கள்? சொர்க்கவாசி என்று ஒருவரை சொல்வது ஆறு புலன்களின் மூலம் அறியக்கூடியதா? ஒருவரைப் பார்த்து நீ சொர்க்கவாசி என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் நபியவர்கள் 10 பேர் மற்றும் இன்னும் சிலரையும் சொர்க்கவாசி என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் கியாமத் நாளின் அடையாளங்கள் மற்றும் கப்ரில் நடக்கின்ற செய்திகள், மறுமையின் நிகழ்வுகள், எதிர்காலத்தில் நடக்க்கூடிய விஷயங்கள், கண்ணுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதை அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட ஆறறிவின் மூலம் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ஆனால் அல்லாஹ் தேவையென்று கருதினால் சில விஷயங்களை, சில காரியங்களை மட்டும் தேவைக்காக வேண்டி நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அது வஹீ என்பதாகும்.

மனிதர்கள் அனைவருக்கும் ஆறறிவு இருக்கிறது. இறைத்தூதர்களுக்கு இறைவனிடமிருந்து செய்திகள் கிடைப்பதற்கு ஏழாவது வழி ஒன்று இருக்கின்றது. அந்த ஏழாவது வழி என்றவென்றால், ஒரு மலக்கு மூலமாக செய்தி வரும். அல்லது உள்ளத்தில் உதிக்கச் செய்வது, அல்லது நேருக்கு நேர் இறைத்தூதர்களிடம் (அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்காத வண்ணம்) அல்லாஹ் பேசுவான். அல்லது அல்லாஹ்வுடைய அசரீரீ அவர்களுக்குக் கேட்கும். கேட்டவுடன் அது அவர்களுடைய மனதில் செய்தியாகப் பதிந்துவிடும். நமக்கு அது தெரியாது. இது ஏழாவது வழியாகும்.

இந்த ஏழாவது அறிவினைப் பெறக்கூடிய வழிமுறை இறைத் தூதர்கள் அனைவருக்கும் இருந்தது. அந்த அடிப்படையில் அவர்கள் எதையெல்லாம் இறைவன் அறிவித்துக் கொடுத்தானோ அதை மட்டும்தான் அவர்கள் சொல்வார்கள். அறிவித்துக் கொடுக்காத விஷயங்களை அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. இறைவன் அறிவித்துக் கொடுத்தவை மறைவானது ஆகுமா? ஆகாது. ஒருவர் சொல்லிக் கொடுத்து அறிவது என்பது மறைவான விஷயம் கிடையாது. யாரும் எதையும் அறிவிக்காமல் தன்னுடைய அறிவைக் கொண்டு தன்னால் பார்க்க முடியாத, கேட்க முடியாத விஷயங்களை அறிந்து கொள்வது தான் மறைவானதாகும்.

மேலும் இந்த வழிகேடர்கள் சில வசனங்களையும் தவறான கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆனால் அது அவர்களுக்குரிய ஆதாரம் கிடையாது. நாம் அந்த வசனங்களை ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் நபிமார்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று வாதிடுபவர்களுக்கு நேர் எதிரான சான்றாகத் தான் இருக்கின்றது. அந்த வசனங்களைப் பார்ப்போம். அந்த வசனத்தை இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்தியை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். (அல்குர்ஆன் 72:26,27,28)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, தனது தூதர்களுக்கு அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்துக் கொடுக்கிறான்; ஏனென்றால் அனைத்து நபிமார்களும் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள்; அதனால், நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மறைவானதை அறியக்கூடியவர்களாக இருந்தார்கள். இறந்த பிறகும் கப்ருக்குள் இருந்து கொண்டே நாம் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதையும் அறிவார்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

நபிமார்கள் இறைவனுடைய திருப்தியைப் பெற்றவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பதாகத் தான் இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறானே தவிர அல்லாஹ்வைப் போன்று தூதர்களும் மறைவானதை தாங்களாகவே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்று சொல்லவில்லை. அதிலும் அனைத்தையும் இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்றால் நாம் இதுவரைக்கும் பார்த்த அத்தனை சம்பவங்களிலும் நபியவர்களுக்கு மறைவானது இல்லை என்பதைத் தானே காட்டுகின்றது. இதிலிருந்தே அனைத்தையும் இறைவன் அறிவித்துக் கொடுக்கவில்லை என்பது விளங்குகின்றது. ஆக அவர்கள் கூறுவது அவர்களுக்கே எதிரான வாதமாக அமைந்துள்ளது.

மேலும், “எனக்கு மறைவான ஞானம் எதுவும் கிடையாது. அவ்வாறு மறைவானவற்றை அறிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தால் நான் நன்மைகளை மட்டுமே அதிகம் அடைந்திருப்பேன். தீமைகள், துன்பங்கள்  என்னை அடைந்திருக்காது. துன்பங்களை விட்டும் நான் தூரமாகியிருப்பேன்’ என்று நபியவர்களையே அல்லாஹ் மக்களுக்குச் சொல்லச் சொல்கிறான். இதுவே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைக் காட்டவில்லையா?

மேலும் இறைவன் எதையெல்லாம் மறைவானது என்று நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தானோ அதை நமக்கும் நபியவர்கள் சொல்லி விட்டார்கள். அதனால் நபியவர்களுக்கு தெரிந்த அத்தனை மறைவான விஷயங்களும் நமக்கும் தெரியும். சொர்க்கம் என்பது மறைவான விஷயம். ஆனால் அதை நபியவர்கள் நமக்கு அறிவித்துள்ளதால் நாமும் சொர்க்கத்தை நம்புகிறோம்.

மண்ணறை வாழ்க்கை என்பதும் மறைவானதுதான். அதைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து அதை நமக்கும் சொன்னதால் அதைப் பற்றி நாமும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

மண்ணறையில் தீயவர்களுக்கு என்னென்ன வேதனைகள் கொடுக்கப்படும் என்பதையும், நல்லவர்கள் அங்கு எப்படி இருப்பார்கள் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இதை நாம் நேரில் பார்த்து அறிந்து கொண்டோமா? இல்லை. நபியவர்கள் அறிவித்துக் கொடுத்துள்ளதால் நாமும் அதை அறிந்து வைத்திருக்கின்றோம். அவ்வாறு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்களை நமக்கு நபியவர்கள் சொல்லவில்லையென்றால் தூதுத்துவத்தை அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றாகிவிடும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

இயங்குவதும் தவ்ஹீத்! எதிர்ப்பதும் தவ்ஹீத்!

ஏனிந்த இரட்டை நிலை?

“தவ்ஹீதா? தமுமுகவா? என்றால் எனக்குத் தவ்ஹீது தான் அண்ணே!”

தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக பிரிவுக்கு முன்னர் இப்படிச் சில குரல்கள் ஒலித்தன. இன்னும் அவை செவிப்பறைகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

“இந்த ஜமாஅத்தை விட்டுப் போனால் தற்குறியாகப் போய்விடுவோம்”

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பிரியும் முன்பு ஒலித்த குரல்கள் ஒலி, ஒளி நாடாக்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.

இப்படிச் சொல்லிவிட்டு வெளியே சென்றவர்கள், “தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தால் தான் தவ்ஹீதுவாதியா? இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே போய் தவ்ஹீதில் இருக்க முடியாதா?’ என்று சொல்லி இயக்கம் கண்டவர்கள் இயங்குவது என்னவோ தவ்ஹீதின் பெயரில் தான். ஆனால் எதிர்ப்பதும், ஏறி மிதிப்பதும், எகிறித் தாக்குவதும் தவ்ஹீதுக் கொள்கையைத் தான். அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கின்றதா?

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை மையமாக வைத்து, அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. வக்ஃப் வாரியத் தலைவர் பதவி, ராஜ்யசபா எம்.பி. பதவி போன்ற தன்னலத்தை மையமாகக் கொண்டு தமுமுக, திமுகவை ஆதரித்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அது தனிப்பெரும்பான்மை பெறவில்லை. அதனால் ஒரு சிறுபான்மை அரசாகவே தனது ஆட்சியைத் துவங்கியது.

ஆலயமே அலுவலகமாய்…

மேலப்பாளையத்தில் தேர்தல் சமயத்தில் இடஒதுக்கீட்டை மையப்படுத்தி அதிமுகவுக்கு ஆதரவான பணிகளையும் மேற்கொண்டதால் எதிரிகளின் கூடாரத்தை இது கலங்கடிக்கச் செய்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணி அவர்களைக் நிலைகுலையச் செய்தது.

இதையெல்லாம் திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கான் அவர்களிடம் எடுத்துக் கூறி, உசுப்பேற்றி, தேர்தலுக்கு முன்பே அவரை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக ஆயத்தப்படுத்தினார்கள்.

அதற்கேற்ப அவர் திமுக அமைச்சரவையில் வக்ஃப் வாரிய அமைச்சராகவும் ஆனார். ஆட்சி வந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே ஜாக் அமைப்பை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு வக்ஃப் வாரியத்தைக் களமிறக்கி, மஸ்ஜிதுர்ரஹ்மானைக் கைப்பற்ற அத்தனை ஏற்பாடுகளையும் செய்தனர்.

ஏகத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்ற, ஏகத்துவத்தின் இதயத் துடிப்பான மஸ்ஜிதுர்ரஹ்மானைக் கையில் எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகரக் காவல்துறை, வக்ஃப் வாரிய அதிகாரிகள் என்ற அத்தனை அதிகார வர்க்கத்தினரும், தமுமுக ஜாக் பரிவாரமும் படையெடுத்து வந்தனர்.

ஆயுதமேந்திய இந்த அதிகார வர்க்கத்திற்கு முன்னால் நிராயுதபாணிகளான தவ்ஹீதுப் போராளிகள் என்ன செய்ய முடியும்? அனைத்திற்கும் அதிபதியான, ஏகாதிபதியான அந்த ஏகன் அல்லாஹ்விடம் இதயப்பூர்வமாக இருகரம் ஏந்தினர். ஏகத்துவ ஆலயமான மஸ்ஜிதுர்ரஹ்மானின் நிலப்பரப்பில் நெற்றிகளைப் பதித்து தங்கள் கண்களை நீர்வீழ்ச்சிகளாக்கினர். நெஞ்சுருக அந்த அல்லாஹ் மட்டுமே தஞ்சம் என்று கெஞ்சினர்.

வக்ஃப் வாரியத்தின் கண்காணிப்பாளர் மஸ்ஜிதுர்ரஹ்மானின் வாசலில் காலெடி எடுத்து வைக்கும் போது, உங்கள் கால்கள் எங்கள் சடலங்களைத் தாண்டித் தான் பள்ளியின் வாயிலில் நுழையும் என்று கொதிப்போடும் கொந்தளிப்போடும் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எட்டி உதைத்து, எட்டுக்கள் முன்வைக்க முனைந்த கண்காணிப்பாளர் தனது கால்களைப் பின்னோக்கி வைத்தார். அவரால் ஓரடி கூட முன்னேற முடியவில்லை. திருப்பிச் சென்றார். காவல்துறையையும் திருப்பி அனுப்பினார்.

ஆயுதத்தை வீழ்த்திய அல்லாஹ்வின் அற்புதம்

இடையில் நடந்தது என்ன? ஆயுதத்தை வீழ்த்தியது அல்லாஹ்வின் அற்புதம்! கொள்கைச் சகோதரர்கள் தங்கள் கண்களால் கண்ட ஓர் இறை அற்புதம்! ஏகத்துவ ஆலயம் ஏகன் அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டது. இந்த ஏகத்துவ சகோதரர்கள் செய்த பாவம் என்ன? இஸ்லாத்தை அதன் தூய வடிவில், ஏகத்துவ அடிப்படையில் நிலைநாட்டியது தான்.

அந்த ஏகனின் ஆலயத்தை, ஏகத்துவக் கேந்திரத்தை இழுத்து மூடுவதற்கும் தமுமுவினர் தயாராக இருந்தனர். பிரச்சனையாகி விட்டால் பள்ளியை இழுத்து மூடிவிடுவோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெளிவாகவே தெரிவித்தார். ஆளும் வர்க்கத்திலிருந்து அவருக்கு இடப்பட்ட கட்டளையை அவர் பிரதிபலித்தார்.

இத்தனைக்கும் காரணமான தமுமுகவினர் இன்று வரையிலும் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்றே சொல்கின்றனர். இவர்கள் இயங்குவது என்னவோ தவ்ஹீது தான். ஆனால் இடிப்பதும், இழுத்து மூடுவதும் ஏகத்துவத்தை நிலைநாட்டும் இறை ஆலயங்கள்.

பள்ளியை விட்டும் தடுத்தல்

இவர்கள் செய்கின்ற அநியாயங்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தையில் என்ன பெயர்?

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:217

இந்த வசனத்தில் மிகப் பெரிய குற்றங்களை அல்லாஹ் பட்டியலிடுகின்றான். அதில், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதையும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதையும் அந்த மிகப் பெரிய குற்றங்களில் சேர்த்துள்ளான்.

சத்தியக் கொள்கையில் இருந்த முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் புனித ஆலயத்தில் தொழுவதை விட்டும் அபூஜஹ்ல் வகையறாக்கள் தடுத்தார்கள். பள்ளியை விட்டும் தடுக்கின்ற இந்த அபூஜஹ்ல் வேலையைத் தான் மிகக் கச்சிதமாக தமுமுக, ஜாக் பரிவாரம் செய்தது.

ஆரம்ப காலத்தில் நாம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் போது சுன்னத் வல் ஜமாஅத்தினர் அபூஜஹ்லின் வாரிசுகளாக இந்த அநியாயத்தையும், அக்கிரமத்தையும் அரங்கேற்றினார்கள். அப்போது அவர்களை நோக்கிச் சுட்டிக் காட்டிய வசனம் இது தான்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

அதே வசனத்தை தமுமுக, ஜாக்கினரை நோக்கித் திருப்புகின்ற அளவுக்கு இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்தன.

சுன்னத் ஜமாஅத்தினர் கூட, பள்ளியை இழுத்து மூடுகின்ற படுபாதகச் செயல்களில், பாதாளக் குழியில் இறங்கவில்லை. தவ்ஹீதுப் பெயர் தாங்கிய இவர்கள் இந்த அக்கிரமத்தை எள்ளளவும் இறையச்சமின்றி செய்தனர்.

இதற்கு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஓர் எடுத்துக்காட்டாகும். பள்ளிக்குப் பூட்டுப் போட்டுவிட்டு, பள்ளியை நிர்வாகம் செய்து வந்த அப்போதைய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் சிறைக்குள் தள்ளினார்கள்.

சுன்னத் ஜமாஅத்தினர் நமக்கு எதிராகக் கடைப்பிடித்த அத்தனை யுக்திகளையும் இவர்களும் நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். இது அல்லாஹ் தன் வசனத்தில் பட்டியலிட்ட, பள்ளியை விட்டும் தடுக்கும் மாபாதகம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? இவர்கள் எப்படித் தங்களை ஏகத்துவவாதிகள் என்று அடையாளப்படுத்த முடியும்?

பெயரில் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொண்டு, செயலில் அதை எதிர்ப்பதில் மும்முரமாக இருக்கின்றனர். இதனால் தான் அவர்களிடம் ஏனிந்த இரட்டை நிலை என்று கேட்கிறோம்.

பாதையை விட்டும் தடுத்தல்

பள்ளியை விட்டுத் தடுக்கின்ற செயலை, அல்லாஹ் பெருங்குற்றமாக்கிக் கூறுவது போல், அவனது பாதையை விட்டும் தடுப்பதையும் பெரும் குற்றமாகக் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் என்றால் என்ன?

பாதை என்ற வார்த்தையை, அல்லாஹ் மார்க்கம் என்ற பொருளில் பயன்படுத்துகின்றான். ஏகத்துவத்தை நிலைநாட்டுவது மார்க்கத்தின் உயர்ந்த உன்னதப் பணியாகும். அந்தப் பணியைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் உயிரைக் கொடுத்து செய்கின்றது. அந்தத் தூய பணியைச் செய்யும் போது சுன்னத் ஜமாஅத்தினர் அதைத் தடுக்க மூர்க்கத்தனமாக முனைகின்றனர். அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதே வேலையை தமுமுகவினரும் செய்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அருகிலுள்ள ஆவணம் என்ற ஊரில் தவ்ஹீதுவாதிகள் ஏற்பாடு செய்த மார்க்கப் பொதுக்கூட்டத்தை முன்னின்று தடுத்தவர்கள் தமுமுகவினர் தான்.

இதைவிட உச்சக்கட்டமாக, குடந்தைக்கு அருகிலுள்ள குத்தாலம் என்ற ஊரில் ஷர்புத்தீன் என்ற தவ்ஹீதுவாதியின் ஜனாஸா தொழுகை, அடக்கம் செய்வது போன்றவற்றையும் தடை செய்தனர். இதுபோன்றே லெப்பைக்குடிக்காட்டிலும் ஜனாஸாவை தொழ விடாமலும் அடக்க விடாமலும் தடுத்தனர்.

இது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற பகிரங்க நடவடிக்கையைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்? இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். மறுபக்கம் தவ்ஹீதைத் தகர்த்து, தரைமட்டமாக்குகின்ற பணியில் முழு மூச்சாக இறங்குகின்றனர்.

இதைத் தான் ஏனிந்த இரட்டை நிலை என்று கேட்கின்றோம். இவர்கள் இயங்குவது ஏகத்துவத்தின் பெயரில், எதிர்ப்பது ஏகத்துவக் கொள்கையை என்று கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் பணியைத் தான் ஜாக், தமுமுக போன்ற அத்தனை இயக்கங்களும் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றுடன் வேறு சில இயக்கங்களும் சேர்ந்து கொண்டன.

திருவிடைச்சேரியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்த அனைத்து இயக்கங்களுமே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகக் கிளம்பி தங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்கள் என்று தெளிவாக இனங்காட்டினர்.

இவற்றில் தங்களை தவ்ஹீது என்று அடையாளம் காட்டாமல் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்பவர்களை ஒரு வகையில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். காரணம், அவர்கள் தவ்ஹீது போர்வையைப் போர்த்திவிட்டு வரவில்லை. தவ்ஹீது வேஷம் போட்டு வரவில்லை. நாம் விமர்சனம் செய்வதெல்லாம் தங்களைத் தாங்களே தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களைத் தான்.

இப்போது இந்த இயக்கங்களுடன் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி என்ற கோஷ்டியினரும் இணைந்து கொண்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற பணியைச் செய்து கொண்டிருக்கின்றது.

பெருநாள் திடல் தொழுகை விவகாரத்தில், மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும் என்று சொல்வார்களே! அந்தக் கதையில் முபாரக் கமிட்டி செயல்பட்டுவருகின்றது.

ஏற்கனவே ஸைபுல்லாஹ் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் பொறுப்பில் இருக்கும் போது அவரது தலைமையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடந்து வந்தது. அவர் விலகிய பிறகு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல்வேறு தாயீக்களின் தலைமையில் அதே திடலில் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக ஒவ்வொரு பெருநாளின் போதும், தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் திடலை வழங்கக் கூடாது என்று ஸைபுல்லாஹ் என்பவர் போர்க்கொடி தூக்குகின்றார். காவல்துறையில் புகார் செய்கின்றார். இந்தப் பிரச்சனை ஆர்.டி.ஓ. முன் விசாரணைக்கு வரும் போது, ஸ்டேடஸ் குவோ எனும் தற்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நியாயமான முறையில் தீர்ப்பளித்து வருகின்றது. ஆட்சியாளர்கள் இப்படித் தான் தீர்ப்பளிக்க முடியும். இந்த இயற்கையான தீர்ப்புக்கு எதிராக கீழ்க் கோர்ட்டில் துவங்கி, ஹைகோர்ட் வரை வழக்கைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் காயிதே மில்லத் திடல் விவகாரத்தில் சுன்னத் ஜமாஅத்தையும் ஸைபுல்லாஹ் இந்த வழக்கின் உள்ளே கொண்டு வந்து விட்டார். அவர்களையும் இந்தத் திடலுக்கு உரிமை கோர வைத்தது மட்டுமல்லாமல், “தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் வேண்டாம்; முபாரக் கமிட்டிக்கும் வேண்டாம்; அந்தத் திடலுக்கு மிகவும் அருகிலுள்ள மக்தூம் ஞானியார் தர்கா கமிட்டியினர் தொழுவதற்குத் திடலை அளியுங்கள்’ என்று ஆர்.டி.ஓ.விடம் தெரிவிக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக ஸைபுல்லாஹ் சென்று விட்டார்.

சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த பக்கா தர்காவாதிகள் தொழுதாலும் சரி! தவ்ஹீது ஜமாஅத்தினர் தொழக்கூடாது என்ற உச்சக்கட்டத்திற்குச் சென்று விட்டார். இதை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவர்களும் தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கை. பெயரில் ஏகத்துவம்! செயலில் ஏகத்துவ எதிர்ப்பு! என்ன வினோதம்!

இதில் வேடிக்கை என்னவென்றால் மஸ்ஜிதுல் முபாரக்கை ஜாக், தமுமுகவினர் கைப்பற்ற வந்த போது கடையநல்லூரைச் சேர்ந்த ஸைபுல்லாஹ் கோஷ்டியினர் அனைவரும் சிட்டாய் பறந்து விட்டார்கள். அன்று களத்தில் நின்று பள்ளியைக் காப்பாற்றப் போராடியது மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்றிருந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான். பள்ளியைக் காப்பாற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகையாளியாகவும், அதைக் கைப்பற்ற வந்தவர்கள் நட்பாளியாகவும் ஆகி விட்டார்கள்.

இப்போது தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியே சென்ற அப்பாஸ் அலீ என்பவர், நாளுக்கு ஒரு நிலைப்பாடு என்று கூட இல்லாமல் மணிக்கு ஒரு முரண்பாடு என்ற அளவில் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வது இவரது சமீபத்திய நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.

இவர் இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே போனதும் இதை விடத் தூய்மையான ஜமாஅத்தைத் தேர்வு செய்து விட்டார் போலும் என்றெண்ணி அந்த ஜமாஅத் எது என்று காண, கடும் ஆவலில் நாம் காத்திருந்தோம். ஆனால் அவர் அடைக்கலமானது, ஐக்கியமானது எல்லாமே மேலே நாம் கூறிய ஒட்டுமொத்த இரட்டை நிலைபாட்டுக் கொள்கையாளர்களிடம் தான். இனி என்ன? முதலில் தர்ஹா வாசல்! பிறகு தர்ஹா வாசனை! அதன் பின்னர் தர்ஹா வாசம் தான். இந்த வாசல் கதவு இப்போது உடனே திறந்து விடாது. ஹாமித் பக்ரிக்குத் திறந்தது போன்று மெதுவாகவே திறக்கும்.

ஹாமித் பக்ரி இங்கிருந்து வெளியே போனதும் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு உடனே சென்றுவிடவில்லை. முதலில் இந்த இரண்டுங்கெட்ட, இரண்டாம் தர, இரட்டை நிலைபாட்டுக்காரர்களின் பள்ளிகளுக்குத் தான் சென்றார். பின்னர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகள், அதன் பிறகு தர்ஹா படிக்கட்டுகளுக்குப் பயணமானார். அல்லாஹ் காப்பானாக!

இதுபோன்ற ஏகத்துவப் போர்வையில் இயங்கும் அத்தனை இயக்கங்கள், தனி நபர்களையும் நோக்கி நாம் கேட்க விழைவது, ஏனிந்த இரட்டை நிலை என்பது தான். இறுதியாக இவர்களிடம் நாம் தெரிவிப்பது ஒன்று தான்.

அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம்

அல்குர்ஆன் 6:110

இந்த இறை எச்சரிக்கைக்கு இலக்காகி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 18

ஆண்களின் கண்டிப்பும் பெண்களின் கரிசனமும்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையில் வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக அறிந்தோம். இப்போது ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு சிந்தனை முக்கியமா? நினைவாற்றல் முக்கியமா? என்று ஆராய்ந்தால், சிந்தனைதான் முக்கியம்.

பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்துவது, இதில் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதினால் நமக்கு இலாபமா? நஷ்டமா? என்றெல்லாம் ஆராய்பவர்கள் ஆண்கள்தான். இதில் பெண்கள் ஏமாளிகளாகத் தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு.

நடைமுறையில் உதாரணம் சொல்வதாக இருப்பின், 1000 ரூபாய் பொருளை 2000 ஆயிரம் ரூபாய்க்குத் தவணை முறையில் விற்கிறார்கள். அதை நம்பி ஏமாறுகிறவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். ஆண்களில் பெரும்பாலும் இப்படி ஏமாற மாட்டார்கள். குறைவாகப் பணம் கட்டினால் நிறைய கிடைக்கும் என்று நம்பி ஏமாறுவதும், சீட்டுக் கட்டி ஏமாறுபவர்களும் அதிகமாகப் பெண்களாகத் தான் இருக்கிறார்கள்.

குடும்பம் என்பது பொருளாதார ரீதியாக நாம் எடுக்கிற முடிவு சரியாக இருக்க வேண்டும்; குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய காரியங்களில் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்க வேண்டும்.

ஒரு அலுவலகத்திற்குத் தலைமை நிர்வாகியைத் தேர்வு வேண்டுமெனில், 25 ஆண்டுகளாக குமாஸ்தாவாக வேலை செய்பவரைப் போடவேண்டுமா? அல்லது இந்த அலுவலகத்தின் அனைத்துப் பணிகளை திறம்பட செயல்படுத்துகிற திறமை வாய்ந்தவரை நிர்வாகத்தில் போட வேண்டுமா? நேற்று வந்தவராக இருந்தாலும் அதற்குரிய திறமை இருப்பவரைத் தான் நிர்வாகத்தில் போடுவோம். 25 ஆண்டுகளாக நமது நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை செய்திருக்கிறார் என்று அங்கு பரிதாபப்படுவதற்கு அவசியமில்லை.

காவல் துறை நிர்வாகத்தில் ஒடந போன்ற தலைமைப் பணிக்காக மேற்படிப்பை முடித்து அதில் பல்வேறு பரிசோதனைகளைக் கடந்து பல தடவை தோற்று, பிறகு வெற்றி பெறுகிற நபர்களைத் தான் தேர்வு செய்கின்றனர். இவரை விடவும் காவல் நிலையங்களில் 30 வருடம், 40 வருடங்கள் வேலை பார்க்கும் அனுபவசாலிகள் என்று காவல் துறை நிர்வாகம் அவர்களைத் தேர்வு செய்வதில்லை. ஏனெனில் ஒரு ஏட்டாக வேலை செய்பவருக்குக் காவல்துறையின் தலைவர் பணியைத் திறம்பட செய்ய முடியாது. இதற்கெல்லாம் மூளையானது சிந்தனைத் திறன் மிக்கதாக இருக்கவேண்டும்.

எனவே ஆண் பெண்ணை நிர்வாகிப்பான் என்று அல்லாஹ் சொல்வது, அந்தத் தகுதியை ஆணுக்குக் கொடுத்து விட்டுத்தான் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகவும் இருக்கிறது. ஒரு ஆண் நிர்வகிப்பான் என்பது ஆண் என்ற காரணத்தினால் மட்டுமல்ல. உடல் உறுப்புக்கள் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆராய்ந்து அவற்றில் ஆணுக்குத் தான் அந்தத் தகுதி இருக்கிறது என்று அறிவியல் ஆய்வாளர்களும் உடற்கூறு ஆய்வாளர்களும் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.

பெண்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாவது ஏன்?

மூளையில் உணர்வுகள் சம்பந்தப்பட்ட செயல்திட்ட நாளங்கள் (கஒஙஇஒஈ நவநபஊங)  இருக்கிறது. பாசம் என்பது தர்க்க ரீதியாக உருவாவதில்லை. பிள்ளை என்றோ, அண்ணன் என்றோ, தந்தை என்றோ ஒருவர் மீது விருப்பம் வைத்துவிடுவோம். இதற்கென மூளையில் ஒரு பகுதி உண்டு. இந்தப் பகுதி ஆணுக்கு மிகவும் திறன் குறைவாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சி சம்பந்தப்பட்ட மூளையின் பகுதி நன்றாகத் திறம்பட வேலை செய்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். அதனால்தான்  பெண்களால் பிள்ளைகளை சரியாகக் கவனிக்க முடிகிறது.

ஆண்களைப் பொறுத்தவரை இரண்டு தடவை மூன்று தடவை பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சுவோம். அவ்வளவு தான். பாசத்தைக் காட்டுவதாக இருந்தாலும் அளவோடு தான் காட்டுவார்கள் ஆண்கள். ஆனால் பெண்களுக்கு 24 மணி நேரமும் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சினாலும் அலுப்பு தட்டாமல் இருப்பதற்குக் காரணம் இந்த உணர்ச்சி நாளங்கள் திறம்பட செயல்படுவதினால் தான். இதற்குக் காரணம் பெண்ணுக்கு கஒஙஇஒஈ நவநபஊங இறைவனால் கூடுதலாக படைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இது அறிவியல் உண்மை. இந்தப் பகுதி பெண்ணுக்கு பெரிது. ஆணுக்கு சிறிது. அதனால் தான் சீரியல் நாடகங்களில் உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள். அதில் உணர்ச்சி தான் முக்கியமாக இருக்கிறது.

ஆண்களின் ரசனை கூட குத்துச் சண்டையும் மல்யுத்தமும் கிரிக்கெட்டும் கால்பந்துமாகத் தான் இருக்கிறது. கரடுமுரடானவைகளைத் தான் ஆண்கள் ரசிக்கின்றனர். ஆணுக்கு வீரம். பெண்ணுக்கு உணர்ச்சி. இப்படித்தான் இறைவன் படைத்திருக்கிறான்.

இதற்கு வளர்ப்பு முறையெல்லாம் காரணம் கிடையாது. ஏனெனில் எல்லாப் பெண்களும் இப்படி இருப்பதற்குக் காரணம், படைப்பிலக்கணமே அப்படியிருக்கிறது என்பதுதான். இப்படி உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான், குழந்தையின் அசைவுகளை வைத்தே அதன் தேவையை பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். குழந்தை ஒரு மாதிரியாகப் போனால் தூக்கத்திற்கு ஏங்குகிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள். இது பசிக்கு உரியது, இது தூக்கத்திற்கு உரியது, இது வயிற்று வலிக்கு உரியது, இது செரிக்காமல் இருப்பதால் வந்தது என்றெல்லாம் கண்டுபிடித்து விடுபவர்கள் பெண்கள் தான். ஆண்களுக்கு இப்படியெல்லாம் சொல்லவே முடியாது.

எனவே பாசம் காட்டுவது, மனனம் செய்வது, அக்கறை காட்டுவது போன்ற வேலைகளை பெண்கள் செய்து கொள்ள வேண்டியதுதான். ஆண்களுக்கு இதில் அக்கறையே இருக்காது.

உதாரணத்திற்கு, கணவனுக்குத் தலைவலி வந்தால் மனைவி மிகவும் அக்கறை எடுத்துப் பார்ப்பாள். தைலம் தடவி விடுவாள். பரிதாபத்துடன் கவனிப்பாள். ஆனால் அதுவே பெண்ணுக்குத் தலைவலி காய்ச்சல் என்றால் மனைவி அக்கறை எடுத்தளவுக்கு ஆண் எடுத்துக் கொள்ளமாட்டான். தலைவலித்தால் மாத்திரை போட்டுக் கொள் என்றோ மருத்துவமனைக்குச் சென்றுவிடு என்றோ சொல்லிக் கொண்டு இடத்தைக் காலிசெய்து விடுவார்கள்.

ஆண்கள் இப்படி இருப்பதை மனைவிமார்கள் சொல்லிக் காட்டி சச்சரவு செய்வதையும் கண்கூடாகப் பார்க்கத்தான் செய்கிறோம். இதற்குக் காரணம் ஆண்களுக்கு அப்படித்தான் செயல்திட்ட நாளங்கள் (டதஞஏதஆஙஒசஏந) இருக்கிறது. இப்படி நடப்பதை வைத்துக் கொண்டு பாசம் கூடுதல் குறைவு என்றெல்லாம் முடிவெடுத்துவிடக் கூடாது. பெண்களுக்கு இறைவன் பாசம் காட்டுவதைப் போன்ற மூளை நரம்புகளைப் படைத்துள்ளான். பெண் அளவுக்கு அந்த நாளங்கள் ஆணுக்குக் கிடையாது என்பதே நிதர்சன அறிவியல் உண்மை. இறைவனின் படைப்பே அப்படித்தான் இருக்கிறது.

இப்படி அளவோடு பாசம் இருப்பது தான் குடும்ப நிர்வாகத்திற்கு சரியான தன்மையாக இருக்கிறது. தந்தை கண்டிப்புடன் பிள்ளையை வளர்ப்பதற்குக் காரணம் அளவோடு பாசம் வைப்பதினால் தான். தாய் தான் பிள்ளை கெட்டுப் போவதற்குக் காரணமாக அமைகிறாள். ஏனெனில் பாச உணர்வு கண்ணை மறைத்துக் கொண்டு மதுக் குடிப்பதற்கும், தவறான வழியில் செல்வதற்கும் பிள்ளைக்குத் தாய் உதவுகிறாள். ஆனால் தந்தை அப்படி உதவமாட்டார். அதனால்தான் குடும்பத்தை நிர்வகிக்கிற பொறுப்பை அல்லாஹ் ஆணிடம் கொடுத்துள்ளான்.

நாம் பெற்ற பிள்ளைகள் தங்களது காரியத்தைச் சாதிப்பதற்கு தந்தையைப் பயன்படுத்துவதை விட தாயைத்தான் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் பெண்ணின் தன்மையை சிறுவர்கள் கூட விளங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு சைக்கிள் வேண்டுமானால், தாயிடம்தான் முறையிடுகிறது. காரணம் தாய்க்குரிய செயல்திட்ட நாளங்களை அந்தக் குழந்தை விளங்கியிருக்கிறது. ஆனால் பச்சைக் குழந்தைக்கு விளங்கிய விஷயம் கூட பெண்ணியம் பேசும் அறிவு (?) ஜீவிகளுக்கு விளங்காமல் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. மூளையை ஆராய்ச்சி செய்து இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.

வளர்ப்பு முறை தான் காரணமா?

இன்னும் சொல்வதெனில், கேம்ப்ரிட்ஜ் என்ற உலகளாவிய பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். பெண்ணை இப்போது உள்ளபடி வளர்த்ததனால் பெண் என்ற அடையாளம் ஏற்பட்டுவிட்டது என்றும், ஆணை இப்போது உள்ளபடி வளர்த்ததால்தான் ஆண் என்ற அடையாளம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரு வாதம் வைக்கப்பட்டது. வளர்ப்பு முறைதான் பெண் என்றும் ஆண் என்றும் பிரிக்கிறது என்ற கருத்தை ஆய்வு செய்தனர். அதில் வளர்ச்சியடையாத ஒரு வயதுக் குழந்தைகளை யாருடைய வளர்ப்பிலும் உருவாகாத குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்தினார்கள். இந்தக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களும் செயல்திட்ட நாளங்களும் எப்படி இருக்கிறது என்று நூற்றுக்கணக்கான குழந்தைகளை வைத்து ஆராய்கின்றனர்.

இந்த ஆய்வில் பல நூறு ஆண், பெண் குழந்தைகளை கலந்து வைத்துக் கொண்டு மல்யுத்தம், கபடி விளையாட்டு போன்ற வீரதீரமான காட்சிகளையும் சீரியல், குழந்தையைக் கொஞ்சுவது, அழுவது போன்ற பாசம் நேசம் சார்ந்த மென்மையான காட்சிகளையும் திரையில் ஓடவிட்டுப் பார்த்தால், வீரதீரமான காட்சி வருகிற போது ஆண் குழந்தைகள் ரசிக்கின்றனர். மென்மையான காட்சிகள் வரும் போது பெண் குழந்தைகள் ரசிக்கின்றனர்.

இதற்குக் காரணம், பெண் குழந்தை படைக்கப்படும் போதே அதற்கான காரணங்களுடன் தான் படைக்கப்படுகிறது. ஆண் குழந்தையும் அதற்குண்டான தன்மைகளுடன் தான் படைக்கப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ளாத பெண்ணியல் ஆதாரவாளர்கள் என்ற பெயரில் தங்களை பெரிய அறிவு ஜீவிகளாக நினைத்துக் கொள்பவர்கள், வளர்க்கும் முறையில் தான் ஆண் பெண் வித்தியாசம் உருவாகிறது என்று கொக்கரிப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் இந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம்தான் முதன் முதலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் வித்தியாசம் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்கள். என்னதான் வளர்த்தாலும் பயிற்சி கொடுத்தாலும் ஆணும் பெண்ணும் தனித்தனியான கட்டமைப்பில்தான் உருவாக்கப்படுகின்றனர் என்றும் இருவரின் சிந்தனையும் திறனும் வெவ்வேறானது தான் என்று நிரூபித்து பெண்ணியல் ஆதரவாளர்களின் மூடக் கருத்தை உடைத்தனர்.

எனவே இறைவன் ஆண்கள் தான் பெண்ணை நிர்வகிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடாமல் அதற்கான காரணத்துடன் தான் சொல்கிறான். இதற்கு இன்னுமொரு ஆய்வை ஆதாரமாகக் கூறலாம்.

மூளை பெண்களுக்குச் சிறியதாகவும் ஆண்களுக்குப் பெரியதாகவும் இருப்பதாகக் கண்டுபிடிக்கின்றனர். இதையும் கூட தெளிவாக ஆய்வு செய்து விட்டனர். 25 வருடங்கள் மதுபானம் குடிக்காத ஒருவனின் மூளையின் அளவை ஸ்கேன் மூலம் அளந்து விடுகின்றனர். பின்னர் பத்து வருடங்கள் மது குடிக்கிறான் எனில் அவனது மூளை பெண்களைப் போன்று சிறியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் சிந்திப்பதினால் தான் மூளை பெரியதாக ஆகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபிக்கின்றனர்.

மதுபானம் ஒருவன் அருந்தினால் முதலாவது மூளையில் தாக்கும் பகுதி சிந்தனைக்குரிய பகுதியைத்தான். மற்றபடி சாப்பிடுவான், குடிப்பான், பேசுவான், வேலைகளைச் செய்வான். ஆனால் சிந்திக்கிற பகுதி பாதிக்கப்பட்டுவிடும். இப்படி தொடர்ச்சியாக மதுவைக் குடித்துக் குடித்து சிந்திக்கிற செல்கள் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கிற போது மூளையின் 100 கிராம் ஆண்களுக்கென பிரத்தியேகமாக இருக்கிற பகுதி குறைந்துவிடும், அல்லது வளரவே செய்யாது என்கின்றனர் இன்றைய ஆய்வாளர்கள். அப்படியெனில் சிந்திக்கிற பகுதியை பயன்படுத்துவதன் மூலம்தான் மூளையின் பெண்ணுக்கில்லாத, ஆணுக்கு மட்டுமே உள்ள 100 கிராம் அதிகமான பகுதி விரிவடைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே சிந்திக்கிற பகுதிக்குத் தான் 100 கிராமுக்குத் தேவையான செல்களையெல்லாம் அதிகமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இப்படியெல்லாம் பல வகையில் ஆய்வு செய்து சிந்தனை செய்கிற மூளை பெரிதாக இருக்கும் என்று ஆய்வில் தீர்மானிக்கின்றனர். இது மனிதனுக்கு மட்டும்தான். மாட்டு மூளையை மனிதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவைகளுக்கு மனிதர்களைப் போன்று எந்த செயல்திட்ட நாளங்களும் கிடையாது. எனவே சிந்திக்கும் மனிதனுக்கு மூளை பெரிதாகவும் சிந்திக்காத மனிதனுக்கு அதற்குத் தகுந்தமாதிரி சிறியதாகவும்தான் இருக்கும் என்ற ஆதாரங்களெல்லாம், நிர்வாகத்திற்குத் தகுதியானவன் ஆண்தான் என்று அல்லாஹ் சொன்ன செய்தியை நிரூபிக்கின்ற ஆதாரங்களாக இருக்கின்றன.

அடுத்து இரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கெல்லாம் கொண்டு செல்கிற வேலையைச் செய்கிற இதயத்தினை ஆராய்கின்றனர். நாமெல்லாம் ஆணுடைய இதயமும் பெண்ணுடைய இதயமும் ஒன்றாகத்தான் செயல்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் அதை ஆராய்கிற விஞ்ஞானிகள், ஆணின் இதயத்தின் வடிவம் 250 கிராம் முதல் 300 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கிறது. அதுவே ஆணுடைய இதயத்தில் பெரிய இதயம் என்று சொல்வதாக இருப்பின் 350 கிராம் வரை இருக்கும். அப்படியெனில் குறைந்த பட்சம் சிறியது என்று ஆணுக்கு எடுத்துக் கொண்டால் 250 கிராம் எடை கொண்டதாகவும் அதிக பட்சம் ஆணுக்கு 350 கிராம் எடை கொண்டதாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் பெண்களை ஆய்வு செய்ததில் பெரிய உடல்வாகு கொண்ட பெண்ணின் இதயம் என்றால் கூட 300 கிராம் எடையைத் தாண்டாது என்றும் அறிவியல் உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. இதில் ஆண்களை விட 50 கிராம் குறைந்து தான் காணப்படும். அதுவே பெண்களுக்குச் சிறியது என்று எடுத்துக் கொண்டால் 200 கிராம் எடைதான் இருக்கும். ஆனால் 200 கிராமில் எந்த ஆணுடைய இதயமும் இருக்காது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்படி எல்லோருக்கும் இருப்பதற்குக் காரணம் என்ன என்று ஆராய்கிற போது, ஆண் கடின வேலை செய்வதற்காக இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்கிற பேருண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர். எனவேதான் ஆணிடம் இஸ்லாம் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வழங்குகிறது. இதிலும் ஆணும் பெண்ணும் சமமாக இல்லை என்கிறது அறிவியல்.

அதேபோன்று மனித உடலில் ஆண் பெண் இருபாலரின் இறைச்சி என்கிற சதைப் பகுதியை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தனர். அதிலும் ஆண் பெண் சமமில்லை என்பதைத் தான் விஞ்ஞானம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்திருக்கிறது. சராசரியாக 100 கிலோ எடை கொண்ட ஆணிடம் சதை என்கிற தசை அதாவது எலும்பு, நரம்பு, கொழுப்பு போன்றவைகள் இல்லாமல் இறைச்சியாக இருக்கிற பகுதி 40 கிலோ எடை என்று கண்டறிந்துள்ளனர். அதேபோன்று ஆண்களுக்கு கொழுப்பு 15 சதவீதம் அதாவது 100 கிலோவுக்கு 15 கிலோ கொழுப்பு இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 100க்கு 55 கிலோ சதையும் கொழுப்பும் போக எலும்பு, நரம்பு, நாளங்கள் போன்றவைகள் 45 கிலோ இருக்கும் என்கின்றனர்.

பெண்களின் உடலை ஆராய்ந்த போது, சராசரியாக 100 கிலோ எடை கொண்ட பெண்ணிடம் சதை என்ற இறைச்சிப் பகுதி 30 கிலோ இருக்கிறது. அதாவது ஆண்களை விட 10 சதவிகிதம் குறைவாகத்தான் பெண்களுக்குச் சதை இருக்கிறது. அதேபோன்ற கொழுப்பு 27 கிலோ பெண்ணிடம் இருக்கிறது. அதாவது 100 கிலோ எடை கொண்ட பெண்ணிற்கு 30 கிலோ சதையும் 27 கிலோ கொழுப்பும் காணப்படுகிறது. ஆண்களை விட கொழுப்பில் பெண்கள் 12 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. ஏறத்தாழ ஆண்களுக்கு இருப்பதைப் போன்று இன்னொரு மடங்கு அதிகமாக பெண்களுக்கு கொழுப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இப்படித்தான் ஆணும் பெண்ணும் வித்தியாசத்துடன் படைக்கப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு ஆணின் உடலை இயக்குவதற்கு அதிகமான எரிபொருள் தேவை என்பதை உணர்த்துகிறது. அதாவது சதை என்கிற இறைச்சிப் பகுதி செயல்படுவதற்கு அதிகமான ஊட்டச் சத்து தேவை என்றும், கொழுப்பு இயங்குவதற்கு அதிகமான எரிபொருள் தேவையில்லை என்றும் உணர்ந்தனர். அதனால் அவர்களுக்கு ஆண்களைப் போன்ற ஊட்டச் சத்துக்கள் பெரியளவுக்குத் தேவைப்படாது என்றும் கண்டறிந்துள்ளனர்.

அதிகமான எரிபொருள் ஆண்களுக்குத் தேவைப்படுகிறது என்பதால் தான் பெண்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பது மிகப் பெரிய அறிவியல் உண்மை. இதை மறுக்க முடியாது. சாப்பிடுகின்ற அளவும் ஆண்களுடன் ஒப்பிடுகிற போது பெண்களிடம் குறைவுதான். அதுபோன்று சாப்பிடுகிற முறையைப் பார்த்தாலும் ஆண்கள் அனைத்தையும் நன்றாக மிச்சம் வைக்காமல் ஒன்றும் விடாமல் சாப்பிடுவார்கள். எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு வாழ்கிறவளாகத் தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுவும் நடைமுறை உண்மை. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவர்களுக்கு அதிகமான கலோரிகள் தேவையாக இல்லை. ஏனெனில் சதை குறைவாக இருப்பதால் அதை இயக்கும் அளவுக்கு கலோரி கிடைத்தால் அதுவே போதுமானதாக இருக்கிறது என்பதுதான் இதற்குரிய காரணம். ஆண்களுக்கு சதை அதிகமாக இருப்பதினால் அதிகமான கலோரிகள் தேவைப்படுவதால் தான் பெண்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பது யாராலும் மறுக்கவே முடியாத உண்மையாக இருக்கிறது.

எனவே ஒன்றை நிர்வாகம் செய்வதற்கு முதலில் உடல் திடகாத்திரமானதாக இருக்க வேண்டும். இதை ஈடுகட்டுவதற்காகச் சில பெண்கள் உடற்பயிற்சியெல்லாம் எடுத்துப் பார்க்கிறார்கள். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் இறைவன் படைத்த இயற்கைக்கு ஈடுசெய்யவே முடியாது என்பது தான் உண்மை. நிச்சயம் ஆண்களைப் போன்று ஆகவே முடியாது.

ஒலிம்பிக்கில் ஒரு பெண்மனி பதக்கம் வாங்கிவிடுகிறாள். ஆனாலும் பெண்களுக்கான உடல் நிலையில் அவள் ஓடவில்லை என்று ஆய்வாளர்கள் சந்தேகம் கொண்டதால் அந்தப் பெண்ணின் ஹார்மோன்களை ஆராய்ந்தனர். அதில் ஆண் தன்மைக்கான ஹார்மோன்கள் மிகைத்து இருந்ததால் முதலில் வந்துள்ளார். பெண்கள் எனில் பெண்களுக்கான நிலையில் இருந்து ஓடி அதில் முதலில் வந்தால் தான் அந்த பரிசைப் பெறுவதற்கான தகுதியிருக்கும் என்று கூறி, கொடுத்த பதக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட வரலாறெல்லாம் நடந்திருக்கிறது.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், என்னதான் பெண்கள் என்றாலும் ஒரு பெண்ணை பெண்ணுடன்தான் விளையாட வைக்கிறார்கள். ஒரு ஆண் குத்துச் சண்டை வீரனுடன் ஒரு பெண் குத்துச் சண்டை வீராங்கனையை யாராவது போட்டிக்கு வைக்கிறார்களா? அப்படி வைத்தாலும்  எவரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பெண்ணுக்கும் பெண்ணுக்கும் குத்துச் சண்டை வைத்து அதில் ஒரு பெண் வெற்றி பெற்றால்தான் சரியாக இருக்கும் என்பதை விளங்கியிருக்கின்றனர். இன்று உலக அளவில் இந்தச் சட்டம் எழுதப்படாத விதியாக நடைமுறைப்படுத்தப் படுவதற்குக் காரணம் ஆண் வேறு, பெண் வேறு என்றும், இருவரும் சமமில்லை என்பதும் தான் காரணம். அதற்கான உடல் அமைப்பு கிடையாது என்பதும் உண்மை.

மேலும் பெண்கள் கொழு கொழுவென்று இருப்பதற்குக் காரணம் அவர்களின் உடலில் சதை இருக்கும் அளவுக்கு கொழுப்பு இருப்பதினால் தான். கொழுப்பு இல்லாததினால்தான் ஆண்களின் உடலைப் பார்த்தால் மெலிந்த தேகம் உடையவர்களாக காட்சி தருகிறார்கள். ஆனால் பெண்கள் எவ்வளவு மெலிந்தவர்களாக இருந்தாலும் ஆண்களை ஈர்ப்பதைப் போன்று மெனுமெனுவென்று இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் கொழுப்பு அதிகமாக இருப்பதினால் தான் என்பது அறிவியல் உண்மை. இதற்குக் காரணம் ஆண்களுக்குப் பெண்கள் ஈர்ப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு சதை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் வைத்து இறைவன் பெண்ணைப் படைத்திருக்கிறான். அதுவே வலிமை இருந்தால் தான் நிர்வகிக்க முடியும் என்பதால் பெண்களை விட ஆண்களுக்கு கொழுப்பைக் குறைத்து சதையை அதிகமாக்கி ஆண்களைப் படைத்துள்ளான்.

எனவே நிர்வாகத் திறமைக்கு முதலில் மூளை திறம்பட செயல்பட வேண்டும் என்பதிலும், இரத்த ஓட்டம் என்கிற வேலையைச் செய்கிற இதயம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதிலும், சதை மற்றும் கொழுப்பு பகுதிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதிலும், மூளை சின்னது பெரியது என்ற வித்தியாசத்திலும், ஆண் பெண் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான அனைத்திலும் பெண்ணை விட கூடுதல் தன்மையுடன் ஆண் படைக்கப்பட்டிருக்கிறான் என்பது அறிவியல் உண்மை. இதை மீறுகிறவர்கள் பலவிதமான கேடுகளைச் சுமக்க நேரிடும். இது சம்பந்தமாக இன்னும் பல தகவல்களை அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்

அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை

எம். ஷம்சுல்லுஹா

ஆரம்பத்தில் ஏகத்துவக் கருத்து என்னைப் போன்றவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டபோது பற்றிக் கொண்ட பயமும், தொற்றிக் கொண்ட கேள்வியும், “இதற்கு முன்பு இதே போன்று ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அறிஞர்கள் நமக்குத் தென்படவில்லையே! அப்படி ஏற்றுக் கொண்ட யாரும் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் நாமும் ஏற்றுக் கொள்வோம்’ என்பது தான்.

அதற்கு ஏற்பவும் இசையவும் மறைந்த அறிஞர் அன்வாருல் குர்ஆன் ஆசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். அவர்களிடம் நாங்கள் ஐயங்களைக் கேட்டோம். தெரிந்தோம்; தெளிந்தோம். தீர சிந்தித்த பிறகு கேள்விகள், எதிர்க் கேள்விகள் என்று மாறி மாறி எழுந்து விவாதித்த பின்பு இறுதியில், என்ன எதிர்விளைவு ஏற்பட்டாலும் ஏகத்துவத்தை ஏற்போம் என்று உறுதிகொண்டு ஏற்றோம். பிறருக்கும் எடுத்துச் சொன்னோம். இந்தப் பயணத்தின் கடைசி ஸ்டேஷன் மரணம் என்ற எல்லை வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

இன்று இறையருளால் சத்தியம் என்று வந்துவிட்டால் அதை ஏற்க முன்னுதாரணம், முன்மாதிரி ஏதேனும், எங்கேனும் இருக்கின்றதா? என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்ற அளவுக்கு ஒரு மனப்பக்குவத்தை அல்லாஹ் தந்திருக்கின்றான். அதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸ்கள் எதுவும் அறவே இடம்பெறாது என்று உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் நம்பியது போன்று நாமும் நம்பியிருந்தோம்.

ஆனால் எதையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற குர்ஆனின் போதனைக்கு ஏற்ப, ஆய்வு செய்து, அலசிப் பார்த்து ஏற்க வேண்டும் என்ற தெளிந்த சிந்தனை ஓட்டத்துடன் சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் செய்யத் துவங்கினோம். இந்த நிலையில் புகாரி, முஸ்லிமையும் பலவீனமான ஹதீஸ்களின் தாக்கம் பதம் பார்க்காமல் விடவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.

பலவீனமான ஹதீஸ்களாக இருந்தால் மட்டும் பரவாயில்லை, குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற ஹதீஸ்கள் கூட, அல்குர்ஆனுக்கு அடுத்த நூல் என்ற பெயரைப் பெற்ற புகாரியிலேயே இடம் பெற்றிருப்பது தெரிய வந்த போது, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு ஏற்படுகின்ற தயக்கமும் சங்கடமும் ஏற்பட்டது. அதனால் அதற்குண்டான விடையும் விளக்கமும் கேட்டு இந்த ஹதீஸ்களை உலகத்தின் முன்வைத்தோம். விடையும் விளக்கமும் வரவில்லை. மாறாக, இவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்ற பட்டம் கிடைத்தது. முஃதஸிலாக்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸா? இதற்கு முன்பு இதுபோன்று யாரும் சொன்னதில்லையே! இவர்கள் தான் இதைப் புதிதாகச் சொல்கிறார்கள்; அதனால் இதை ஏற்க முடியாது என்ற குருட்டுப் பார்வை மட்டும் தான் அவர்களுடைய பதிலில் தெரிந்தது.

நாம் அஞ்சுவது அல்லாஹ்வை மட்டுமே! பின்பற்றுவது கலப்படமில்லாத தூய இறைச் செய்தியை மட்டுமே என்ற எஃகுச் சிந்தனையோடு, புகாரியிலும் குர்ஆனுக்கு முரண்படும் பாதகமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன எனற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டோம்.

ஒரே உறுதிப்பாட்டில் பயணத்தைத் தொடர்கின்றோம். இம்மாத ஏகத்துவத்தின் பக்கங்கள் இந்த சிந்தனையோட்டத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருப்பதை வாசகர்கள் உணரலாம். இந்த ஏகத்துவம் இதழ் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத் தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள், நாஸிருத்தீன் அல்பானி என்ற தற்கால அறிஞரின் கேள்வி பதில் அடங்கிய ஓர் உரையை நமக்கு அனுப்பி வைத்தார். அந்த உரையில் அறிஞர் அல்பானி அவர்கள் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன என்ற கருத்தைக் கூறுகின்றார். அந்த உரை இந்த நேரத்தில் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்பதால் அந்த அரபி உரையின் தமிழாக்கத்தை இவ்விதழில் தந்துள்ளோம்.

எந்த அறிஞரின் கருத்துக்களிலும் ஏற்கத்தக்கவையும், நிராகரிக்கத் தக்கவையும் உண்டு என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம், இவர்களுக்கு சாதகமான உரை என்பதால் இதை வெளியிட்டிருக்கிறார்கள் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் செய்யும் விமர்சனத்திற்குப் பதிலளிப்பதற்காகத் தான். ஏற்கனவே அல்பானி அவர்களின் ஆய்வுகள், ஆக்கங்கள் ஏகத்துவத்தில் வெளியாகியுள்ளன. அதுபோன்று இந்த உரையாக்கமும் வெளியாகியுள்ளது. அல்பானி அவர்கள் இந்த உரையில் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையாகக் கொண்டிருக்கின்ற ஓர் அடிப்படை விஷயத்தை முன்வைக்கின்றார். அதை தமிழ் பேசும் தவ்ஹீதுவாதிகளின் சிந்தனைக்குத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்படுகின்றது.

இப்போது அந்தக் கேள்வி பதில் உரைக்குள் செல்வோம்.

கேள்வி: புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். இதற்கு முன்பு எந்த அறிஞராவது இதைக் கூறியிருக்கின்றார்களா? இது தொடர்பாக நீங்கள் தனி நூல் எதுவும் வெளியிட்டிருக்கிறீர்களா?

அல்பானியின் பதில்: புகாரியில் பலவீனமான ஹதீஸ் உள்ளது என்று எனக்கு முன்னால் உள்ள அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அந்த உண்மையை ஒப்புக் கொண்டாக வேண்டும். அதை மறுக்கக் கூடாது.

இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

முதலவதாக, ஒரு முஸ்லிம் – அவர் ஆசிரியராகவோ அல்லது மாணவராகவோ இருக்கலாம். பண்டிதராகவோ அல்லது பாமரராகவோ இருக்கலாம். முஸ்லிம்களில் எந்த ரகமாகவும் இருக்கலாம். அவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக ஒருமித்து ஒத்துக் கொண்ட உண்மை, தவறான கருத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட செய்தி (குர்ஆன்) வழங்கப்பட்டவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே என்பது தான்.

இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் தோன்றுகின்ற அல்லது அவரது காதில் விழுகின்ற எந்தச் செய்தியாக இருக்கட்டும். நூலாக இருக்கட்டும். அதை அவர் புரட்டிப் பார்ப்பதற்கு முன்பு, அதில் புகுவதற்கு முன்னால் அந்த நூல் தவறுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற உறுதிப்பாட்டை அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதித்தாக வேண்டும். ஏன்? பாதுகாக்கப்பட்ட, தவறுக்கு அப்பாற்பட்ட செய்தி (குர்ஆன்) அருளப்பட்ட பாக்கியம் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மனித சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லை என்பது முஸ்லிமின் கொள்கையாகும்.

இந்தப் பின்னணியில் தான் இமாம் ஷாஃபீ அவர்கள், திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அல்லாஹ் முழுமையளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.

இது விவாதித்து ஏற்க வேண்டிய அவசியமில்லாத ஓர் அடிப்படையான உண்மையாகும். ஹதீஸ் கலையின் அடிப்படை விதிகள், அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை அலசுகின்ற ஆற்றலை அல்லாஹ் தனது அருட்கொடையாக எனக்கு அளித்துள்ளான். அதற்கு அவனுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

பலமான ஹதீஸ்களை, பலவீனமான ஹதீஸ்களிலிருந்து தரம் பிரிக்கின்ற ஹதீஸ் கலைக் கல்வி மூலம் ஒரு பெருமளவுக்கு இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டேன்.

அதே கலை அறிவின் மூலம் புகாரி ஹதீஸ்களை ஆழ்ந்து, அதிகக் கவனம் எடுத்து ஆய்வு செய்ததில் புகாரியில் சில ஹதீஸ்கள் (ஸஹீஹ் என்ற) சரியான தரத்தில் அமைவது ஒருபுறமிருக்கட்டும். ஹஸன் என்ற தரத்தில் கூட அமையவில்லை.

புகாரியின் நிலை இப்படி எனும் போது முஸ்லிமின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இது, புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக நான் செய்த ஆய்வுகள் பற்றிய பதில் ஆகும்.

புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பாக முந்தைய அறிஞர்கள் ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்பது உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதியாகும்.

இது தொடர்பாக நான் இங்கு குறிப்பிட விரும்புவது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதிகமான அறிஞர்கள் எனக்கு முன்னரே இதே கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் என்னை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தியவர்கள். ஆய்விலும் என்னை விட மிக மிக முந்தியவர்கள்.

இமாம் தாரகுத்னீ, புகாரியில் பத்து ஹதீஸ்கள் அளவிற்குக் குறை கண்டிருக்கிறார்கள். அவற்றை விமர்சித்துள்ளார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் புகாரியில் நான் விமர்சனம் செய்யும் ஹதீஸ்களின் எண்ணிக்கை பத்தை அடையவில்லை. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

நான் வாழ்கின்ற இந்தக் காலத்தில் சுனன் திர்மிதி, சுனன் அபூதாவூத், சுனன் இப்னுமாஜா, சுனன் நஸாயீ ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கின்ற ஹதீஸ்களின் தரங்களை ஆய்வு செய்து, அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியத்திற்கும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டேன். சுனன் இல்லாமல் முஸ்னத் அஹ்மத், முஃஜம் தப்ரானீ போன்ற நூற்களில் இடம்பெறும் ஹதீஸ்களையும் ஆய்வு செய்து அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியமும் கட்டாயமும் இருக்கின்றது. ஆனால் அவற்றின் பக்கம் நெருங்குவதற்குப் போதுமான அவகாசம் இல்லை.

புகாரி, முஸ்லிமைப் பொறுத்த வரையில் லட்சக்கணக்கான ஹதீஸ்களில் சரியானவற்றை பெருமளவிற்கு வடிகட்டி, தேர்வு செய்யும் பணியைச் செய்துள்ளார்கள். உண்மையில் இது மகத்தான பணியாகும். அந்த அளவுக்கு வார்த்து, வடிகட்ட வேண்டிய ஹதீஸ்களில் நான் ஆய்வு செய்ய இறங்குவது எனக்கு விவேகமான செயலாகவும், காலத்தின் கட்டாயமாகவும் தெரியவில்லை. அதனால் என்னுடைய முழுக் கவனத்தை நான்கு சுனன்களான திர்மதி, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகிய நூற்களில் இடம்பெற்ற ஹதீஸ்களில் திருப்பி விட்டேன்.

புகாரியில் பலவீனமான ஹதீஸ்

இந்நிலையில் என்னுடைய ஆய்வின் போது புகாரி, முஸ்லிமிலோ அல்லது இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றிலோ சில பலவீனமான ஹதீஸ்கள் இருப்பது எனக்குத் தெரியவந்தது. இவ்வாறு நான் சொல்லும் போது யாருக்கேனும் எனது ஆய்வின் முடிவில் ஐயம் ஏற்பட்டால் அவர் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல்பாரியைப் புரட்டுவாராக! அதில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியில் இடம் பெறுகின்ற பல ஹதீஸ்கள் பற்றி அவர் செய்த விமர்சனங்களை அவர் காண்பார்.

ஹாஃபிழ் அஹ்மத் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் அமீருல் முஃமினீன் என்று அனைவராலும் போற்றப்படக்கூடியவர் ஆவார்.

இந்தத் துறையில் பங்கெடுத்த அனைவரும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்ற ஒரு பிள்ளையை எந்தவொரு தாயும் பெற முடியாது என்ற எனது கருத்தை அப்படியே வழிமொழிந்து விடுவார். அந்த அளவுக்கு ஹதீஸ் துறையில் அவரது ஞானம் கொடி கட்டிப் பறக்கின்றது.

அப்படிப்பட்ட அந்த அறிஞர் புகாரிக்கான தனது விரிவுரையில், அதில் பதிவான ஹதீஸ்களில் அதிகமான தவறுகளை விமர்சனம் செய்திருக்கின்றார்.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள, சுனன் மற்றும் முஸ்னதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களைக் கூட அவர் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யவில்லை என்ற அளவுக்கு புகாரியின் ஹதீஸ்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

புகாரி ஹதீஸ்கள் மீதான என்னுடைய விமர்சனப் பார்வையில், சில சந்தர்ப்பங்களில் ஒரு ஹதீஸ் முழுவதுமே பலவீனமாகி விடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் பலவீனமாகி, அதன் மற்ற பகுதி சரியாக அமைந்துவிடுகின்றது. இதில் முதல் வகையை இப்போது பார்ப்போம்.

முதல் வகை

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

நூல்: புகாரி 1838, முஸ்லிம் 2755

இந்த ஹதீஸைப் பொறுத்தவரை முஸ்லிமுடன் சேராமல் புகாரி மட்டும் தனியாக அறிவிக்கின்ற ஹதீஸ் கிடையாது. மாறாக புகாரி, முஸ்லிம் இருவரும் கூட்டாகப் பதிவு செய்த ஹதீஸ் ஆகும்.

இப்போது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைப் பார்ப்போம்.

இந்தத் தொடரின் முதல் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீது எந்தக் குறையும் கிடையாது. அவர் அல்லாத அறிவிப்பாளர்கள் எவர் மீதும் குறை சொல்ல முடியாது. புகாரியில் வேறு சில ஹதீஸ்கள் உள்ளன. நபித்தோழர் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் யாராவது ஒருவரிடம் கோளாறு இருக்கும். அதுபோன்ற தொடராக இந்த ஹதீஸின் தொடர் அமையவில்லை. அது மிகச் சரியான தொடராக அமைந்துள்ளது.

உதாரணத்திற்கு ஃபுலைஹ் பின் சுலைமான் என்ற புகாரியின் ஓர் அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜனர் அவர்கள், உண்மையாளர், மனனம் கெட்டவர் என்று குறிப்பிடுகின்றார். ஹதீஸ் துறையில் இந்த நிலையில் உள்ளவர் மிகக் குறைந்த தரத்தில் உள்ளவராகவே கருதப்படுவார். இந்தத் தரத்தில் உள்ளவரின் ஹதீஸை ஏற்க வேண்டும் என்றால் இதே ஹதீஸ் வேறொரு நல்ல அறிவிப்பாளர் தொடரில் வந்திருக்க வேண்டும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இதை ஒரு துணைச் சான்றாக எடுத்துக் கொள்வார். இவர் மட்டுமே தனியாக அறிவித்திருந்தால் அந்தத் தொடரை வகை வைக்க மாட்டார்கள். அந்த ஹதீஸை ஏற்கவும் மாட்டார்கள். மொத்தத்தில் சரியான அறிவிப்பாளர் தொடரில் இந்த ஹதீஸ் வராத வரை இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே முடிவாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்ற, மைமூனா (ரலி) திருமணம் தொடர்பான இந்த ஹதீஸின் தொடர் பக்காவான, பலமான தொடராகும். இதில் ஃபுஹைல் பின் சுலைமான் போன்றோர் இடம் பெறாததால் இதை விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பு அறவே கிடையாது. அதன் காரணமாக முந்தைய ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை விமர்சிக்காமல் விட்டு விட்டனர்.

அவர்கள் ஒருவேளை குறை காண வேண்டுமென்றால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரையும் குறை காண முடியாது. காரணம் அவர் கண்ணியத்திற்குரிய நபித்தோழர். அதனால் இப்னு அப்பாஸ் சிறிய வயதுடையவராக இருந்ததால் இந்தத் திருமண விஷயத்தைத் தவறாக விளங்கி அறிவித்து விட்டார் என்று அந்த ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஒரு காரணம்.

மற்றொரு காரணம், சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள், நாங்கள் இருவருமே இஹ்ராம் அல்லாத சாதாரண நிலையில் தான் திருமணம் முடித்தோம் என்று கூறிவிட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்புக்கு மாற்றமாக மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள். மேற்கண்ட இந்தக் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகிவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்ற இந்த ஹதீஸில் நான்கு அரபி வார்த்தைகள் உள்ளன. இப்படிப் பலவீனமாகும் ஹதீஸ், இதுபோன்று சிறிய அளவிலும் இருக்கலாம். சமயத்தில் இதைவிடப் பெரிதாகவும் அமையும். அதற்கு புகாரியில் எடுத்துக்காட்டுகள் உண்டு.

இரண்டாவது வகை

ஒரு ஹதீஸின் மூலம் சரியாக அமைந்திருக்கும். அந்த ஹதீஸ் தொடரின் இடையில் இடம்பெறுகின்ற யாராவது ஒரு அறிவிப்பாளரின் செய்தி ஹதீஸில் செருகப்பட்டிருக்கும். இதற்கு புகாரி 136, முஸ்லிம் 415 ஹதீஸ் எடுத்துக்காட்டாகும்.

நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

இந்த ஹதீஸில், “உங்களில் எவருக்குத் தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்’ என்ற வாசகம் நபி (ஸல்) அவர்களின் வார்த்தை இல்லை. அபூஹுரைராவின் வார்த்தைகள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, இப்னும் கய்யூம், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, ஹாபிழ் அல் முன்திரி போன்றோர் இதை அடையாளம் காட்டியுள்ளனர்.

இப்படி ஹதீஸின் ஒரு பகுதி பலவீனமாக அமைந்திருப்பதையும் நாம் பார்க்கலாம்.

முடிவுரை

இது தான் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பதிலாகும். சூனியம் போன்ற புகாரி ஹதீஸை பலவீனம் என்ற தரத்திற்கு அல்பானி அவர்கள் கொண்டு வரவில்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ் உண்டு என்று ஓர் ஆய்வுப் பார்வையை இந்த உரையில் அல்பானி அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு ஓர் அழகான அடிப்படையையும் பதிவு செய்கின்றார்கள்.

அல்லாஹ்வின் செய்தியில் மட்டுமே தவறு ஏற்படாது; மற்றவை தவறிலிருந்து தப்பாது என்பது தான் அந்த அடிப்படை! குறைந்தபட்சம் இந்த அடிப்படையைக் கூட ஸலஃபுகள் என்ற பெயரில் உள்ளவர்கள் மறுப்பது இறை நெறிக்கும் இயற்கை நெறிக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களின் பார்வைக்குத் தந்திருக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 14

இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம்.

ஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, “அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்’ என்பது போன்றது.)

அதே சமயம் சொர்க்கம், நரகம் தொடர்பான விஷயங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதற்கு மாற்று விளக்கம் கொடுக்கக் கூடாது என்று தடையும் விதிக்கின்றனர். இவர்கள் அஷ்அரிய்யா என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்னொரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளான பார்த்தல், செவியுறுதல் போன்றவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். மிஃராஜுக்கு மாற்று விளக்கம் கொடுத்து, மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தமது உடலுடன் செல்லவில்லை என்று விளக்கம் அளிக்கின்றனர். இத்துடன் மட்டும் இவர்கள் நிற்கவில்லை. கபர் வேதனை, மீஸான் (தராசு), ஸிராத் (பாலம்) போன்ற மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் மாற்று விளக்கம் சொல்கிறார்கள். இவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதில் உச்சக்கட்டமாக மூன்றாவது சாரார், மறுமை சம்பந்தப்பட்ட அத்தனைக்குமே மாற்று விளக்கம் தான் அளிக்கின்றனர். நரகத்து வேதனை என்றால் அது அறிவுரீதியிலானது மற்றும் ஆன்மா அளவிலானது. சுவனத்து இன்பம் என்றால் அதுவும் அறிவுரீதியிலானது தான் என்று விளக்கம் தருகின்றனர். அத்துடன் மனித உடல்கள் மறுமையில் மீண்டும் எழுப்பப்படாது என்று மறுக்கின்றனர். இவர்கள் ஃபல்ஸஃபா என்ற தத்துவவியலாளர்கள்.

மேற்கண்ட அத்தனை சாராரும் வரம்பு கடந்தவர்கள்; எல்லை மீறியவர்கள். இவற்றுக்கு இடையே ஒரு நடுநிலையான நிலைப்பாடு உள்ளது. இறை ஒளி வழங்கப்பட்டவர்கள் மட்டும் அந்தப் பாக்கியத்தை அடைவார்கள். அவர்கள் இந்த செவிவழிச் செய்தியின் வாயிலாக (அதாவது ஹதீஸ் வாயிலாக) இதை அடைய மாட்டார்கள்.

பின்னர், விஷயங்களின் ரகசியங்கள் அவர்களுக்கு அப்படியே காட்சியளிக்கும் போது தான் அவர்கள் செவிவழிச் செய்தியையும் (அதாவது ஹதீஸையும்) அதில் வந்திருக்கும் வார்த்தைகளையும் அவர்கள் உற்று நோக்குவார்கள்.

அது அவர்கள் ஏற்கனவே கண்ட உறுதிமிக்க ஒளிக்கு ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையென்றால் அதற்கு மாற்று விளக்கம் சொல்வார்கள். செவிவழிச் செய்தி (ஹதீஸ்) மூலம் மட்டுமே கல்வி அனைத்தைம் கற்பவருக்கு இதில் ஓர் உறுதிப்பாடு உருவாகாது.

கஸ்ஸாலியின் இந்தக் கருத்து தெரிவிக்கின்ற சாராம்சம் என்ன? கல்வி ஞானத்தை ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வழியாக ஒருபோதும் அடைய முடியாது. ஒரு மனிதன் அதை அடைய முடியும் என்றால் அது இறைக்காட்சி, வெளிப்பாடு, ஒளி இவற்றின் மூலம் தான் அடைய முடியும்.

இதுதான் கஸ்ஸாலி தெரிவிக்கின்ற கருத்தின் சாராம்சமாகும்.

ஆன்மீக ஞானிக்குக் காட்சியளிக்கும் ஒளிக்கு ஒத்திருந்தால் குர்ஆன், ஹதீஸில் உள்ளதை அவர் ஒத்துக் கொள்வார். அவருடைய அந்தரங்க ஞானத்தில் கிடைத்த அந்தச் செய்தி குர்ஆன், ஹதீசுக்கு ஒத்திருக்கவில்லை என்றால் அவர் மாற்று விளக்கம் கொடுப்பார் என்ற கஸ்ஸாலியின் வாதம் கடைந்தெடுத்த இறைமறுப்பாகும்.

ஞானி எவராக இருக்கட்டும். அவர் தன்னுடைய ஞானத்தை, குர்ஆன் ஹதீஸை வைத்துத் தான் எடைபோட வேண்டும். குர்ஆன் ஹதீசுடன் தான் அதை உரசிப் பார்க்க வேண்டும். அப்படி எடை போட்டு உரசிப் பார்க்கவில்லை என்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்தவராவார்.

இருபெரும் இறைநேசர்கள்

இறைநேசர்களில் மிகவும் சிறந்தவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவர். இந்தச் சமுதாயத்தில் ஞானம் கொடுக்கப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள் என்று சொன்னால் அது இரண்டு ஹதீஸ்களின் அடிப்படையில் மிகப் பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்கüல், (பல்வேறு பிரச்சினைகüல் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3689

அல்லாஹ் உமரின் நாவிலும் உள்ளத்திலும் சத்தியத்தை ஆக்கியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 2573, அஹ்மத் 4898

உமர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருந்தாலும் அவர்களை விட அபூபக்ர் (ரலி) சிறந்தவர் ஆவார். இந்த உண்மையாளர் அபூபக்ர் (ரலி) ஞானத்தைக் கற்றதும் பெற்றதும் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற தூய மட்டத்திலிருந்து தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஞானம் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஞானமாகும்.

உரையாடல், காட்சியளித்தல், அகப்பார்வை என்ற பெயரில் சிலருக்கு உதிக்கும் ஞானத்தில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல்மிகு அளவுகோல் இறைத்தூதர் கொண்டு வந்த தூதுச் செய்தி தான்.

உமர் (ரலி) அவர்களுக்குத் தோன்றுகின்ற செய்தியை, தூதுச் செய்தியுடன் ஒப்பிட்டு உரசிப் பார்ப்பார்கள். ஒத்திருந்தால் ஏற்பார்கள். இல்லையெனில் தூற வீசியெறிவார்கள்.

அறிஞர்களின் அறிவுரைகள்

குர்ஆனும் ஹதீசும் கொண்டு வந்த கல்வியில் நமக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் உள்ளது. இந்த அகப்பார்வை ஞானத்திற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. மக்களிடமிருந்து புதிய தத்துவம், புரட்சிக் கருத்து என்று எந்தக் கருத்து வந்தாலும் அந்தக் கருத்தை குர்ஆன், ஹதீஸ் அதற்குச் சான்று வழங்கினாலே தவிர ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அபூபக்ர் சுலைமான் அத்தாரானி கூறுகின்றார்.

அல்லாஹ்வின் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஹதீசும் சான்றளிக்காத எந்தவொரு சுவைமிகு கருத்தாக இருந்தாலும், ஒரு துணுக்காக இருந்தாலும் ஆணித்தரமாக அது ஓர் அசத்தியம் தான் என்று அபூஅம்ர் இஸ்மாயீல் என்ற அறிஞர் கூறுகின்றார்.

நமக்கு வருகின்ற எந்தக் கல்வியும் குர்ஆன், ஹதீஸ் என்ற கடிவாளத்திற்குள் அடங்கியது தான். குர்ஆனைப் படிக்காத, ஹதீஸை எழுதாத எவருக்கும் நம்முடைய ஞானத்தைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் தகுதியும் அறவே கிடையாது என்று அறிஞர் ஜுனைத் பின் முஹம்மத் தெரிவிக்கின்றார்.

இறை விருப்பத்தில் நாட்டம் கொண்டோரே! குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறுகின்ற ஞானத்தை விட்டு விட்டு வெற்றுத் தத்துவங்களை நோக்கிச் செல்லாதீர்கள். அவ்வாறு செல்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார் என்று அறிஞர் ஸஹ்ல் கூறுகின்றார்.

இவை குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்க ஞானம் என்று கூறுகின்ற அறிஞர்களின் கருத்துக்களில் ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். இதுபோன்ற அறிஞர்களின் அற்புதக் கருத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. தவ்ஹீதின் உண்மை விளக்கம், ஞானம், உறுதிப்பாடு ஆகிய அனைத்துமே இறைத்தூதர்களைப் பின்பற்றுவதன் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் மேற்கண்ட அறிஞர்கள்.

இறை வேதத்திற்கு இசைந்த ஞானம்

அன்றாடம் நிகழ்கின்ற இயற்கை அற்புதங்களிலிருந்தும், அறிவுப்பூர்வமான சான்றுகளிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை உண்மைப்படுத்துகின்ற விளக்கங்கள் அறிஞர்களுக்குத் தோன்றுகின்றன.

உண்மையில் இது அல்லாஹ் தனது குர்ஆனில் சொல்வது போன்று அமைந்துள்ளது.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?

அல்குர்ஆன் 41:53

(முஹம்மதே!) “உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மைஎன்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

அல்குர்ஆன் 34:6

உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோரே படிப்பினை பெறுவார்கள்.

அல்குர்ஆன் 13:19

அகமிய ஞானம், அறிவு, சிந்தனை என்று ஞானப்பாட்டையில் செல்வோரிடம் குழப்பங்கள் மிகைத்து நிற்கின்றன. அவர்கள் வைக்கின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரண்படுகின்றன. வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானத்தின் மூலம் விளக்கங்கள் கிடைப்பதாகச் சொல்வது தான்.

அறிவும் செயல்பாடும்

கல்வி கற்க முயல்வோர் இரண்டு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

முதலில் கற்பது, இரண்டாவது கற்றபடி செயல்படுவது. இந்த இரண்டும் கல்வி கற்பவரிடம் இருந்தாக வேண்டும். யார் கற்றபடி செயல்படுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவர் அறியாத ஞானத்தை அளிக்கின்றான்.

அதே சமயம், கல்வி, செயல் ஆகிய இரண்டுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் இசைந்ததாகவும், இணங்கியதாகவும் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஞானம், அகமியம், ஆன்மீகக் காட்சி என குர்ஆன் ஹதீஸின் தடங்களை விட்டு மாறிச் சென்றால் அவர் வழிகேட்டில் வீழ்ந்து விடுகின்றார்.

தனக்கு ஞான ஊற்று உதித்து விட்டது; அகஞானம் துலங்கி விட்டது என்று சொன்னால் அது சுத்த பித்தலாட்டமும் பிதற்றலும் ஆகும்.

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

அல்குர்ஆன் 26:221, 222

இந்த வசனத்தின்படி இவை ஷைத்தானின் இட்டுக்கட்டுகள் தான். அவனது சித்து விளையாட்டுக்கள் தான்.