ஏகத்துவம் – ஏபரல் 2019

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.
இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும்.
இந்த விதி ஏன்? எதற்கு?
ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும்.
“புகை பிடிக்காதீர்” என்று போதனை செய்யும் ஒருவர் புகை பிடித்துக் கொண்டே மற்றவர்களை நோக்கி அதைச் சொல்லும் போது மக்களிடத்தில் அது எந்த ஒரு பிரதிபலிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் போன்று, மது அருந்துபவர் மற்றவர்களுக்கு மது அருந்தாதீர் என்று போதனை செய்ய முடியாது.
அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, ராதாரவி போன்றவர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். அது மக்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம், பாலியல் வன்கொடுமைகளுக்கும் தலைவிரித்தாடும் விபச்சாரத்திற்கும் அடித்தளமாக, ஆணி வேராக அமைந்திருப்பது திரைப்படங்கள் தான். அதில் நடிக்கும் இவர்கள் விபச்சாரத்திற்கு விதிவிலக்கானவர்கள் கிடையாது. அதனால் இவர்கள் பேச்சு மக்கள் காதில் விழவில்லை.
ஒரு தீமையைத் தடுப்பவர் அதைத் தம் வாழ்வில் செய்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வரதட்சணையைப் பற்றி வாய் கிழிய, வானளாவப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் தங்களது திருமணத்திலோ அல்லது தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் திருமணத்திலோ அதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதனால் தான் வரதட்சணை எனும் தீமை இன்னும் ஒழிந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. மார்க்கம் ஏன் இந்த வரையறையை வைத்திருக்கின்றது என்பதற்கு இது நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நன்மை மக்களிடம் வளரவும் ஒரு தீமை அழியவும் வேண்டுமானால் அதைப் பிரச்சாரம் செய்வோர், தாங்கள் எடுத்துச் சொல்கின்ற நன்மைக்குத் தங்கள் வாழ்க்கையில் முன்மாதிரியாகவும், தடுக்கின்ற தீமையை தங்கள் வாழ்க்கையில் தவிர்ப்பவராகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நன்மை மக்களிடம் வளராது; தீமை விலகாது.
அதனால் இஸ்லாம் அழைப்புப்பணியின் அடிப்படை விதியாக இதை வகுத்திருக்கின்றது. வரதட்சணை எனும் தீமையை இப்படித்தான் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்கொண்டது. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்களது வாழ்க்கையில் அந்தத் தீமையை விட்டு விலகிக் கொண்டனர். அது மட்டுமின்றி, வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அத்தகைய திருமணங்களை விட்டும் விலகிக் கொண்டனர். அதற்குக் காரணம் கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் தான்.
தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது
அல்குர்ஆன் 5:78, 79
அல்லாஹ் இத்தகையவர்களை சாபத்திற்கு உரியவர்கள் என்று கூறுகின்றான். இது போன்ற சாபத்திற்கு இலக்காகாமல் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும். இது தீமைக்கு எதிரான நமது ஜமாஅத்தின் அணுகுமுறை.
எளிமைத் திருமணம் என்ற நன்மையை நமது ஜமாஅத் மக்களிடத்தில் அறிமுகம் செய்து அதை செயல்படுத்தியும் காட்டியதால் தான் மக்களிடம் நமது ஜமாஅத்தின் பிரச்சாரம் எடுபடுகின்றது. இல்லையென்றால் அது தூர்ந்து போயிருக்கும்.
அழைப்புப்பணியில் உள்ளவர் அல்லது ஒரு சமூக சீர்திருத்தவாதி, குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வகுத்திருக்கின்ற இந்த விதியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனால் இவ்வுலகில் ஏற்படும் தீய விளைவு, ஒரு நன்மை வளராமல் போய்விடுகின்றது; ஒரு தீமை ஒழிக்கப்படாமல் நீடிக்கின்றது. அதனால் சமுதாயம் சீரழிவையும் சிதைவையும் சந்திக்கின்றது. எனவே அல்லாஹ்வின் கோபம் இவர்கள் விஷயத்தில் கடுமையாக வெளிப்படுகின்றது.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அல்குர்ஆன் 2:44
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
அல்குர்ஆன் 61:2, 3
மறுமையில் இதற்கு என்ன தண்டனை என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விவரிக்கின்றது.
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்’ என்று கூறுவார்.
அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: புகாரி 3267
இதனால் தான் அழைப்புப்பணியில் உள்ளவர்கள் இந்த விதிக்கு மாற்றமாக நடக்கக் கூடாது என்பதில் தவ்ஹீத் ஜமாஅத் கடுமை காட்டுகின்றது. நாம் செய்து கொண்டிருப்பது நபிமார்கள் செய்த அழைப்புப்பணியாகும்.
ஷுஐப் (அலை) அவர்கள் இதை தனது மக்களிடம் இதை பகிரங்கமாகவே மக்களிடம் தெரிவிக்கின்றார்கள்.
“எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்’’ என்று (ஷுஐப்) கூறினார்.
அல்குர்ஆன் 11:88
மக்களிடத்தில் ஒன்றைத் தடுத்து விட்டு, அதை ஒருவர் தன் வாழ்க்கையில் செய்கிறார் என்றால் அவரிடம் வெட்க உணர்வு நீர்த்துப் போய்விட்டது என்று தான் அர்த்தம். பின்வரும் ஹதீஸ் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்’ என்பதாகும்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி)
நூல்: புகாரி 3483
‘திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தாயுடன் படுப்பதற்குச் சமம்’ என்று பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார். ஆனால் அதன் பின்பு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். ‘அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று சமீப காலமாக, திரும்பத் திரும்ப முழங்கிக் கொண்டிருந்தார். அது ஊடகங்களிலும் பதிவானது. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ‘அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எத்தனை தடவை சொல்வது? பத்திரம் போட்டு எழுதித் தரவா?’ என்று ராமதாஸ் கேட்டார். பத்திரிக்கையில் வந்த அந்தச் செய்தியின் மை கூடக் காயவில்லை. அதற்குள் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அன்புமணி ராமதாஸை நிருபர்கள் வெளுத்து வாங்குகின்றார்கள். கோபத்தில் கொந்தளித்த அவரது முகம் ஊடகத்தில் வெளியானது. அவரது வெட்கங்கெட்ட தன்மையைப் பார்த்து உலகமே காரித் துப்பியது.
இதுமாதிரியான ஓர் அவமானத்தை ஓர் அரசியல்வாதி தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அழைப்புப் பணியில் உள்ள ஓர் அழைப்பாளரை விடுங்கள்; ஒரு சாதாரண முஸ்லிம் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
இது போன்ற விவகாரங்களில் மற்றவர்களைக் காட்டிலும் பன்மடங்கு வெட்க உணர்வு ஓர் அழைப்பாளனுக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணர்வைத் தான் ஷுஐப் (அலை) அவர்களின் இந்த நிலைப்பாடு ஓர் அழைப்பாளனுக்குத் தருகின்றது. இவற்றைப் பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு அழைப்பாளர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள் எவை?
எம்.ஐ.சுலைமான்

முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் நபிகளார் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
ஒருவர், நாள் ஒன்றுக்கு 12 ரக்அத்கள் உபரியாகத் தொழுதால் அவருக்குச் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டித் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 161)
1727 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ – يَعْنِى سُلَيْمَانَ بْنَ حَيَّانَ – عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ قَالَ حَدَّثَنِى عَنْبَسَةُ بْنُ أَبِى سُفْيَانَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ யு. قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.
وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ. وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: முஸ்லிம் (1319)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 161)
1728 – حَدَّثَنِى أَبُو غَسَّانَ الْمِسْمَعِىُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا دَاوُدُ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ بِهَذَا الإِسْنَادِ « مَنْ صَلَّى فِى يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ سَجْدَةً تَطَوُّعًا بُنِىَ لَهُ بَيْتٌ فِى الْجَنَّةِ யு.
மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
நூல்: முஸ்லிம் (1320)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 161)
1729 – وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِى سُفْيَانَ عَنْ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّى لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلاَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِى الْجَنَّةِ أَوْ إِلاَّ بُنِىَ لَهُ بَيْتٌ فِى الْجَنَّةِ யு. قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ. وَقَالَ عَمْرٌو مَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ. وَقَالَ النُّعْمَانُ مِثْلَ ذَلِكَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் ‘அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்’ அல்லது ‘அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது’.
நூல்: முஸ்லிம் (1321)
இந்தச் செய்தியில் ‘(கடமையல்லாத) உபரியான வணக்கமாக 12 ரக்அத்கள் தொழுதால்’ என்று இடம்பெற்றுள்ளது.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 162)
1730 – وَحَدَّثَنِى عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ وَعَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِىُّ قَالاَ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ أَخْبَرَنِى قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ أَوْسٍ يُحَدِّثُ عَنْ عَنْبَسَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ تَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ صَلَّى لِلَّهِ كُلَّ يَوْمٍ யு. فَذَكَرَ بِمِثْلِهِ.
அவற்றில் “ஒரு முஸ்லிமான அடியார் செம்மையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு நாளும் (கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள்) தொழுதால்…’’ என்று ஹதீஸ் தொடங்குகிறது.
நூல்: முஸ்லிம் (1321)
இந்த அறிவிப்பில், ‘ஒவ்வொரு நாளும் அழகுற உளூ செய்து 12 ரக்அத் தொழுதால்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அழகுற உளூ செய்து தினமும் 12 ரக்அத் உபரியாகத் தொழுது வந்தால் அவருக்குச் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டித் தருவான் என்ற நற்செய்தி இந்த நபிமொழிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தினமும் 12 ரக்அத்கள் தொழவேண்டும் எனில் எந்தெந்த கடமையான தொழுகைக்கு முன், பின் எத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும்? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளனவா? அவை ஆதாரப்பூர்வமானவையா? என்பதைப் பார்ப்போம்.
பன்னிரண்டு ரக்அத்கள் எவை என்பது குறித்த செய்திகள்
சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுத் தரும் 12 ரக்அத்கள் இவைதான் என்று தெளிவாகக் கூறும் செய்திகள், உம்மு ஹபீபா (ரலி), ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திகள், அவற்றின் தரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
سنن النسائي – بأحكام الألباني (3/ 262)
1778أخبرنا الربيع بن سليمان قال أنبأنا أبو الأسود قال حدثني بكر بن مضر عن بن عجلان عن أبي إسحاق الهمداني عن عمرو بن أوس عن عنبسة بن أبي سفيان عن أم حبيبة أن رسول الله صلى الله عليه و سلم قال : اثنتا عشرة ركعة من صلاهن بنى الله له بيتا في الجنة أربع ركعات قبل الظهر وركعتين بعد الظهر وركعتين قبل العصر وركعتين بعد المغرب وركعتين قبل صلاة الصبح
யார் 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: நஸாயீ (1778)
இந்தச் செய்தி நஸாயீயில் இன்னும் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن النسائي – بأحكام الألباني (3/ 262)
1779 – أخبرنا أبو الأزهر أحمد بن الأزهر النيسابوري قال حدثنا يونس بن محمد قال حدثنا فليح عن سهيل بن أبي صالح عن أبي إسحاق عن المسيب عن عنبسة بن أبي سفيان عن أم حبيبة قالت قال رسول الله صلى الله عليه و سلم : من صلى اثنتي عشرة ركعة بنى الله له بيتا في الجنة أربعا قبل الظهر واثنتين بعدها واثنتين قبل العصر واثنتين بعد المغرب واثنتين قبل الصبح قال أبو عبد الرحمن فليح بن سليمان ليس بالقوي
سنن النسائي – بأحكام الألباني (3/ 263)
1780 – أخبرنا أحمد بن سليمان قال حدثنا أبو نعيم قال أنبأنا زهير عن أبي إسحاق عن المسيب بن رافع عن عنبسة أخي أم حبيبة عن أم حبيبة قالت : من صلى في اليوم والليلة ثنتي عشرة ركعة سوى المكتوبة بنى له بيت في الجنة أربعا قبل الظهر وركعتين بعدها وثنتين قبل العصر وثنتين بعد المغرب وثنتين قبل الفجر
இதே செய்தி இமாம் நஸாயீ அவர்களின் மற்றொரு நூலான அஸ்ஸுனனும் குப்ரா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
السنن الكبرى للنسائي (2/ 183)
1477- أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، عَنْ زُهَيْرٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ، عَنْ عَنْبَسَةَ أَخِي أُمِّ حَبِيبَةَ ، عَنْ أُمِّ حَبِيبَةَ ، قَالَتْ : مَنْ صَلَّى فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً سِوَى الْمَكْتُوبَةِ ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ، أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَثِنْتَيْنِ قَبْلَ الْعَصْرِ ، وَثِنْتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَثِنْتَيْنِ قَبْلَ الْفَجْرِ.
இதே செய்தி திர்மிதியிலும் இடம்பெற்றுள்ளது.
سنن الترمذي – شاكر + ألباني (2/ 274)
380 – حدثنا محمود بن غيلان حدثنا مؤمل [ هو ابن إسماعيل ] حدثنا سفيان الثوري عن أبي إسحق عن المسيب بن رافع عن عنبسة بن أبي سفيان عن أم حبيبة قالت : قال رسول الله صلى الله عليه و سلم من صلى في يوم وليلة ثنتي عشرة ركعة بني له بيت في الجنة أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر
قال أبو عيسى وحديث عنبسة عن أم حبيبة في هذا الباب حديث حسن صحيح
இந்தச் செய்தி இடம்பெறும் அனைத்து நூல்களிலும் அபூஇஸ்ஹாக் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு செய்பவர்) என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
الثقات لابن حبان (5/ 177)
4449 – أبو إسحاق السبيعي اسمه عمرو بن عبد الله الهمداني ஞ் وكان مدلسا
அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ என்பவர் தத்லீஸ் செய்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: அஸ்ஸிகாத், பாகம்: 5, பக்கம்: 177
ميزان الاعتدال (1/ 460)
قال النسائي – ذكر المدلسين، الحجاج بن أرطاة، والحسن، وقتادة، وحميد، ويونس بن عبيد، وسليمان التيمى، ويحيى بن أبى كثير، وأبو إسحاقஞ்
இமாம் நஸாயீ அவர்கள் தத்லீஸ் செய்பவர்களின் பட்டியலில் அபூஇஸ்ஹாக் அவர்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:1, பக்:460
أسماء المدلسين (ص: 77)
41-عمرو بن عبد الله أبو إسحاق مشهور بالتدليس
அம்ர் பின் அப்துல்லாஹ் அபூஇஸ்ஹாக் என்பவர் தத்லீஸ் செய்பவர்களில் பிரபலமானவர் ஆவார்.
நூல்: அஸ்மாவுல் முதல்லிஸீன், பக்கம்: 77
தத்லீஸ் என்பதன் பொருள் மறைத்தல் என்பதாகும். விற்பவரிடம் பொருளின் குறைகளை மறைப்பதை தத்லீஸ் என்று அகராதியில் குறிப்பிடுவர்.
ஹதீஸ் துறையில் தத்லீஸ் என்பது ஒருவர் தன் ஆசிரியரிடமிருந்து சில செய்திகளைக் கேட்டிருப்பார். சில செய்திகளை அவரிடம் நேரடியாகக் கேட்டிருக்கமாட்டார். இந்நிலையில் தான் நேரடியாகக் கேட்டிராத ஒருவரிடம், நேரடியாகக் கேட்டிருப்பதற்கும் கேட்காமலிருப்பதற்கும் வாய்ப்புள்ள வாசகத்தைப் பயன்படுத்திச் சொல்வார்.
இப்படி அறிவிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அறிவித்தால் அவர் நேடியாகக் கேட்டேன் என்று தெளிவான வாசகத்தில் அறிவித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும்.
இந்தச் செய்தியில் ‘நேரடியாகக் கேட்டேன்’ என்ற வாசகம் இல்லாத வார்த்தையை அபூ இஸ்ஹாக் பயன்படுத்தியிருப்பதால் இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.
மேலும் நஸாயில் 1779ஆவதாக இடம்பெறும் செய்தியில் ஃபுலைஹ் பின் சுலைமான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலமானவர் இல்லை என்பதை அந்தச் செய்தியின் கீழே இமாம் நஸாயீ குறிப்பிட்டுள்ளார்கள்.
திர்மிதியில் இடம்பெறும் செய்தியில் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். அவரும் பலவீனமானவராவார்.
تقريب التهذيب (2/ 555)
7029- مؤمل بوزن محمد بهمزة ابن إسماعيل البصري أبو عبد الرحمن نزيل مكة صدوق سيء الحفظ من صغار التاسعة مات سنة ست ومائتين خت قد ت س ق
முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பவர் நினைவாற்றலில் கோளாறு உள்ளவர்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 555
ஆயிஷா (ரலி) வழியாக இடம் பெறும் செய்தி
سنن الترمذي (2/ 273)
379 – حدثنا محمد بن رافع النيسابوري حدثنا إسحق بن سليمان الرازي حدثنا المغيرة بن زياد عن عطاء عن عائشة قالت : قال رسول الله صلى الله عليه و سلم من ثابر على ثنتي عشرة ركعة من السنة بنى الله له بيتا في الجنة أربع ركعات قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغربن وركعتين بعد العشاء وركعتين قبل الفجر
[ قال ] وفي الباب عن أم حبيبة و أبي هريرة و أبي موسى و ابن عمر قال أبو عيسى حديث عائشة حديث غريب من هذا الوجه
و مغيرة بن زياد قد تكلم فيه بعض أهل العلم من قبل حفظه
‘‘யார் சுன்னதான 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதீ (379)
ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக இப்னு மாஜாவிலும் இந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது.
سنن ابن ماجة ـ محقق ومشكول (2/ 223)
1130- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ، أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக இமாம் நஸாயீ அவர்களின் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
السنن الكبرى للنسائي (2/ 181)
1471- أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ النَّيْسَابُورِيُّ ، قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ زِيَادٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ، دَخَلَ الْجَنَّةَ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ
ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக முஸ்னத் அபீயஃலா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
مسند أبي يعلى ـ محقق (8/ 21)
4525 – حدثنا اسحاق حدثنا اسحاق بن سليمان عن المغيرة بن زياد عن عطاء : عن عائشة قالت : قال رسول الله صلى الله عليه و سلم : من ثابر على ثنتي عشرة ركعة من السنة سوى الفريضة بنى الله له بيتا في الجنة : أربعا قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد العشاء وركعتين قبل الفجر
ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்துச் செய்திகளிலும் முகீரா பின் ஸியாத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.
تهذيب التهذيب ـ محقق (10/ 232)
وقال عبدالله ابن أحمد عن أبيه مضطرب الحديث منكر الحديث أحاديثه مناكيرஞ்وقال ابن أبي حاتم سألت أبي وأبا زرعة عنه فقالا شيخ قلت يحتج به قالا لا ஞ்وقال الدارقطني ليس بالقوي يعتبر به
முகீரா பின் ஸியாத் என்பவர் குளறுபடியாக ஹதீஸ்களை அறிவிப்பவர். அவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று அஹ்மத் பின் ஹன்பல் குறிப்பிட்டுள்ளார்கள். என் தந்தையிடமும் அபூஸுர்ஆ அவர்களிடமும் ‘இவரை ஆதாரமாகக் கொள்ளலாமா?’ என்றேன். அதற்கு அவ்விருவரும் கூடாது என்று பதிலளித்தரர்கள் என்று இப்னு அபீ ஹாத்திம் குறிப்பிட்டார்கள். இவர் வலிமையானவர் அல்ல என்று தாரகுத்னீ குறிப்பிட்டார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:10, பக்கம்: 232
الضعفاء والمتروكين للنسائي (ص: 226)
562 – مغيرة بن زياد أبو هشام الموصلي يروي عن عطاء ليس بالقوي
முகீரா பின் ஸியாத் என்பவர் வலிமையானவர் அல்ல என்று இமாம் நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவுல் மத்ரூகீன், பக்கம்: 226
அபூஹுரைரா (ரலி) வழியாக இடம்பெறும்செய்தி
سنن ابن ماجة ـ محقق ومشكول (2/ 225)
1132- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الأَصْبَهَانِيِّ ، عَنْ سُهَيْلٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ، رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ ، أَظُنُّهُ قَالَ : قَبْلَ الْعَصْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، أَظُنُّهُ قَالَ : وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ.
‘‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். (அவை) பஜ்ருக்கு முன் 2 ரக்அத்கள், லுஹருக்கு முன்னர் 2 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்கு பின் 2 ரக்அத்கள்’’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா (1132)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக முஸ்னத் பஸ்ஸாரிலும் இடம்பெற்றுள்ளது.
مسند البزار 18 مجلد كاملا (16/ 47)
9085- وَحَدَّثَنا علي بن سعيد بن مسروق حَدَّثَنا مُحَمَّد بن سليمان الأصبهاني عن سهيل بن أبي صالح, عن أبيه, عن أبي هريرة رضي الله عنه, عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال من صلى ثنتي عشرة ركعة كل يوم بني له بيت في الجنة ثنتين قبل الفجر وأربعا قبل الظهر واثنين بعد الظهر واثنين قبل العصر واثنين بعد المغرب.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக இடம் பெறும் நூல்களில் முஹம்மத் பின் சுலைமான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.
ميزان الاعتدال (3/ 569)
7619 – محمد بن سليمان [ ت، س، ق ] بن الاصبهاني.
عن سهيل بن أبي صالح، وعطاء بن السائب. وعنه لوين، وابنا أبي شيبة، وطائفة. قال أبو حاتم: لا يحتج به، ولا بأس به. وقال النسائي: ضعيف.
وقال ابن عدي: هو قليل الحديث. أخطأ في غير شئ.
முஹம்மத் பின் சுலைமான் என்பவரை ஆதாரமாக எடுக்கக்கூடாது என்று அபூஹாத்திம் அவர்களும், பலவீனமானவர் என்று நஸாயீ அவர்களும், இவர் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவர்; பல தவறுகளை இழைத்தவர் என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:3, பக்:569
சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுத் தரும் அந்த பன்னிரண்டு ரக்அத்கள் எவை? என்று கூறும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் கடமையல்லாத உபரியான தொழுகைகள் எத்தனை ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்ற விவரம் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கிடைக்கிறது. அதில் 12 ரக்அத்கள் விவரம் இடம்பெற்றுள்ளது. எனவே அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நாமும் தொழுது சொர்க்கத்தில் வீட்டைப் பெறலாம்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 162)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ تَطَوُّعِهِ فَقَالَتْ كَانَ يُصَلِّى فِى بَيْتِى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّى بِالنَّاسِ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّى رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّى بِالنَّاسِ الْمَغْرِبَ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّى رَكْعَتَيْنِ وَيُصَلِّى بِالنَّاسِ الْعِشَاءَ وَيَدْخُلُ بَيْتِى فَيُصَلِّى رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّى مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ فِيهِنَّ الْوِتْرُ وَكَانَ يُصَلِّى لَيْلاً طَوِيلاً قَائِمًا وَلَيْلاً طَوِيلاً قَاعِدًا وَكَانَ إِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ وَإِذَا قَرَأَ قَاعِدًا رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَاعِدٌ وَكَانَ إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (கடமையல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (லுஹர்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
மக்களுக்கு மஃக்ரிப் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்.
மக்களுக்கு இஷா தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் ஸஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்வார்கள்.
ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷக்கீக்,
நூல்கள்: முஸ்லிம் (1323), அபூதாவுத் (1060)
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், ஃபஜ்ருக்குப் முன் 2 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் 12 ரக்அத்கள் இடம்பெற்றுள்ளது. இது தவிர்த்து இரவுத் தொழுகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நபிகளார் தொழுது வந்த இந்த எண்ணிக்கையில் தொழுவதன் மூலம் நாம் சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

கோடை வெயிலில் கல்வி தாகம்
ஹாரிஸ் (இஸ்லாமியக் கல்லூரி)

கோடை வெயில் தனது வேலையை மிகக் கச்சிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓரிரு மணி நேரங்களுக்கு மேல் வாகனங்களில் பயணிக்க முடியவில்லை. ஒரு தர்பூசணியை உள்ளே அனுப்பினால் தான் நம்முடைய ஆற்றலை ஒருசில மணி நேரத்திற்காவது தக்க வைக்க முடியும்.
வெயில் அதிகமாவதைப் போன்றே நம் குழந்தைகளின் மீதுள்ள அக்கறையும் அதிகரிக்கிறது. கோடை விடுமுறை வேறு வந்து விட்டது. இனி இரண்டு மாதங்களுக்குக் குழந்தைகள் நம்முடன் தான் இருப்பார்கள். நம்முடன் இருப்பதை விட வெயிலுடன் தான் அதிகமாக இருப்பார்கள் என்று சொல்லலாம்.
பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற தாகத்தைத் தீர்ப்பதற்காகவும், அவர்களுடய உடல் நலத்தைப் பேணுவதற்காகவும் என்ªன்ன செய்யலாம்? எங்கே சுற்றுலா செல்லலாம் என்று பலரும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி எனும் தாகத்தை ஊட்டி, அதற்கான தீனியைப் போட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்ற பெற்றோர்கள் என்னவோ குறைவுதான்.
வருடத்தின் அனைத்து நாட்களும் நம்முடைய பிள்ளைகளுக்கு உலகக் கல்வியை கற்றுக் கொடுப்பதற்காக எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தோம்? எத்தனையோ தந்தைமார்கள் தங்களுடைய பல நாள் வேலை போனாலும் பரவாயில்லை என்றெண்ணி, பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக ஏறி, இறங்கியிருப்பார்கள். தாய்மார்கள் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லித் தருவதற்காக தங்களுடைய பல நாள் தூக்கத்தைத் தியாகம் செய்திருப்பார்கள்.
ஆனால் நம் வீட்டில் கோடைகாலப் பயிற்சிக்கான துண்டுப் பிரசுரங்கள் வந்திருக்கும். வருடம் முழுவதும் உலகக் கல்விக்காகப் பாடுபடும் பெற்றோர்களில் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்குச் சுயமாக மார்க்க அறிவு வளர வேண்டும், அவன் மார்க்கத்தில் தெளிவு பெற வேண்டும் என்று விரும்பியிருக்கிறோம்?
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். தம்முடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தன்னுடைய மனைவி, மக்களுக்கு பொறுப்பாளி. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி. அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
நூல்: புகாரி (2409)
நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறோம். குழந்தைகளுக்கு உலகக் கல்வி கற்றுக் கொடுத்தோம் தவறில்லை. அவர்களுக்கு மார்க்கம் சம்பந்தமாக நாம் எவ்வளவு கற்றுக் கொடுத்திருக்கிறோம்? அல்லது அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டால் அல்லாஹ் நம்மை விசாரிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டிருக்கிறோமா?
நம்முடைய குழந்தைகளை நோக்கி நீ ணிஸீரீவீஸீமீமீக்ஷீ ஆக வேண்டும், ஞிஷீநீtஷீக்ஷீ ஆக வேண்டும், இவ்வாறு சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று அவர்கள் மீது உள்ள அக்கறையில் அன்றாடம் அறிவுரை கூறுகிறோம். தவறில்லை! ஆனால் அவர்களை நோக்கி, நீ மார்க்கத்தில் விளக்கம் பெற்றவனாக மாற வேண்டும், நீ தொழுகைகளை அன்றாடம் சரிவர கடைப்பிடிக்க வேண்டும் என்று மறுமைக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிய பெற்றோரை நம்மால் அதிகம் காண முடியவில்லை.
திருமறைக் குர்ஆனை புரட்டிப் பார்க்கும்போது நமக்கு முன் வாழ்ந்த, அல்லாஹ்வால் புகழப்பட்ட ஏராளமான நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். ஒழுக்கமான குழந்தைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் விரும்பிக் கேட்டும் இருக்கிறார்கள்.
நபி நூஹ் (அலை)
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!’’ என்று நூஹ் கூறினார்.
அல்குர்ஆன் 11:42, 43
இப்ராஹிம் (அலை)
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் 37:100
இஸ்மாயில் (அலை)
இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டு வீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையை யும், ஸகாத்தையும் ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
அல்குர்ஆன் 19:54, 55
இறையச்சவாதிகளின் வார்த்தை
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 25:74
இப்படி ஏராளமான நபிமார்கள், நல்லடியார்கள் தங்களுடைய குழந்தைகள் சரிவர வளரவேண்டும் என்றும், ஒழுக்கமிக்கவர்களாக மாற வேண்டும் என்றும், அவர்களுடைய இம்மை வாழ்வு மற்றும் மறுமை வாழ்வு ஆகிய இரண்டும் சீராக அமைவதற்காகவும் அவர்களுக்கு அற்புதமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து இருக்கிறார்கள்.
மேற்கண்ட வசனங்களையெல்லாம் எடுத்துப் பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் நமது பிள்ளைகள் இவ்வாறு ஆகி விடக்கூடாது என்றால் அவர்களுக்கு நேரத்திற்கேற்ற சரியான அறிவுரைகளும் பயிற்சிகளும் தேவை.
இன்றைக்கு கிஸீபீக்ஷீஷீவீபீ எனும் அரக்கனின் பிடியில் மாட்டி கொண்டிருக்கும் சமுதாயத்தில் வாழக்கூடிய சிறு வயதுக் குழந்தைகளின் கரங்களில் தான் நாம் யோசித்துப் பார்க்க முடியாத அசிங்கங்களும் அனாச்சாரங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஙிறீuமீஷ்லீணீறீமீ எனும் விளையாட்டின் மூலம் முட்டாள்தனமாக உயிரை விட்ட பிள்ளைகள், சிறுவயதிலேயே பாலியல் தாக்கத்துக்கு இரையாகி அதன் மூலம் தவறிழைக்கும் குழந்தைகள், சினிமாக்களைப் பார்த்து அதில் வரக்கூடியவனைப் போன்று தானும் புகை பிடிப்பேன், மது அருந்துவேன், காதலிப்பேன் என்று தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் வாழும் குழந்தைகள் என இவர்களுடைய இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
கொஞ்சம் யோசியுங்கள்! நாம் மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் மேலே கூறிய அதே வர்ணனையுடைய உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுடய பிள்ளைகள் இந்தப் பட்டியலில் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நபிகளாரின் அமுதமொழிகள் அவசியம். சிறுவர்களுக்கு நபிகளார் கொடுத்த பயிற்சிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தொழுகை பயிற்சி
நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹு தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (183)
இன்று நம்முடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் காலையில் ஃபஜ்ர் தொழுகைக்குக் கூட எழுப்பி விடாத பெற்றோர்களாகத் தான் நாம் இருக்கிறோம். இவ்வாறு சிறிய வயதில் நாம் கொடுக்கின்ற பயிற்சி தான் நாளைக்கு அவர்கள் சீரழியாமல் இருப்பதற்கான ஆயுதம் என்று சொல்லலாம். ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்புகளையெல்லாம் தவற விட்டுவிட்டு, கடைசியில் என்னுடய குழந்தைக்கு மறுமை சம்பந்தமாக எந்த ஒன்றையும் நான் சொல்லித் தரவில்லையே என்று புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை.
துஆ மனனப் பயிற்சி
ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
வித்ரில் நான் ஓதவேண்டிய வார்த்தைகளை அவர்கள் எனக்கு கற்று தந்தார்கள்.அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லி வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு ல யதுள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)
நூல்: திர்மிதி 426
பெரியவர்களாக வளர்ந்ததற்கு பின்னால் தவறான பாதைக்கு நம்முடைய குழந்தைகள் செல்லக்கூடாதென்றால் நபிகளாரை போன்று இறைவனை துதிக்கின்ற துஆ க்களை அதிகமாக கற்று கொடுக்கவேண்டும்.
இஸ்லாமிய ஒழுங்குகளை கற்று கொடுத்தல் :
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அறிவிப்பவர்: உமர் பின் அபீ சலமா (ரலி
நூல்: புகாரி (5376)
இன்றைக்கு தவறுகளுக்கு அடிப்படை காரணம் சிறிய வயதில் குழந்தைகளுக்கு எது ஹராம் எது ஹலால் என்று பெற்றோர்கள் பிரித்து சொல்லித்தராததுதான். இதோ நபிகளாரின் வழிமுறை…
மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களை கொண்டு வந்தததும் அது ஒரு பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவார்களான )ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபிகளார் உடனே அதை வெளியே எடுத்து “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக்கூடாது என்பதை நீ அறியவில்லையா?’’ எனக்கேட்டார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1485)
நமது பிள்ளைகளும் நபிகளார் காலத்துப் பிள்ளைகளும்
அப்படியானால் நாங்கள் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று கூற வருகிறீர்களா? என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் நம்முடைய நோக்கம் அதுவன்று.
மாறாக நம் குழந்தைகளை நபிகளார் காலத்துச் சிறிய வயது ஸஹாபாக்களைப் போன்று சரியாகத் தான் வளர்த்து இருக்கிறோமா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பீடு.
நபிகளார் காலத்தில் சிறு வயதினர் எப்படி வார்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
குர்ஆனை அதிகம் மனனம் செய்த இப்னு அப்பாஸ் (ரலி)
நான் அல்லாஹ்வின் தூதர் (வாழ்ந்த)காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் ‘அல் முஹ்கம்’ என்றால் என்ன என்று கேட்டேன் அவர்கள் ‘அல் முஃபஸ்ஸல்’ தான் (அல் முஹ்கம்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
நூல்: புகாரி ( 5036)
நம்முடைய குழந்தைகளிடம் கேட்டால் எனக்கு இத்தனை படத்தில் உள்ள முழுப்பாடல்களும் தெரியும் என்று வேண்டுமானால் கூறுவதற்கு வாய்ப்பதிகம். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அல்முஹ்கம் என்று பெயரிடப்பட்ட அத்தியாயங்களை மனனம் செய்துள்ளார்கள்,
ஏழு வயதில் அனைவருக்கும் இமாமத் செய்த அம்ர் பின் ஸலிமா (ரலி)
திருக்குர்ஆனை அனைவரை விடவும் அதிகமாக மனனம் செய்து இமாம் என்ற கண்ணியத்தையும் பெற்று தம்முடைய தாய், தந்தையாருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த ஒரு (சிறிய) நபித்தோழரைப் பாருங்கள்.
மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா (ரலி)
நூல்: புகாரி (4302)
இறுதியாக…
போன வருடம் ஊட்டி சென்றோம், அதற்கு முந்தைய வருடம் கொடைக்கானல் சென்றோம், இந்த வருடம் எங்கே செல்லலாம் என்ற திட்டம் தான் ஒவ்வொரு பெற்றோருடைய கோடைகால யோசனைகளாக இருக்கும். ஆனால் இந்த வருடம் முதல் அந்தத் திட்டத்தில் ஒரு சிறிய மாறுதலோடு, நமது ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற கோடைகாலப் பயிற்சிக்கு அனுப்பிய பிறகு ஊட்டி போகலாமா அல்லது கொடைக்கானல் போகலாமா என்ற திட்டம் அனைத்து பெற்றோர்களின் உள்ளத்திலும் உதிக்க வேண்டும் ,இன்ஷா அல்லாஹ்.
ஏனென்றால் ஒரு தந்தைக்குத் தனது மகன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான் என்பதோ அல்லது அவன் பெரிய வீடு கட்டிவிட்டான் என்பதோ மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை விட, அவனிடம் மார்க்கம் சம்பந்தமாக ஏதேனும் கேட்கப்பட்டால் அதற்குச் சரியான பதில் கூறுவான் என்பதே அவருக்கு அதிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
உமர் (ரலி) அவர்களுடய எண்ணம் இவ்வாறே இருந்தது.
‘ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறை நம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்தேன். அப்போது மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்’ என்றனர். ‘அது பேரீச்சை மரம் தான்’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தைக் கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் ‘நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்’ என்றார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (131)
மறுமை வெற்றிக்காக வேண்டி நாம் அனுப்புகின்ற இந்தப் பயிற்சி என்பது அவர்களை மிகப் பெரிய ஆலிமாக ஆக்காது. எனினும் அவர்கள் சொர்க்கம் எனும் நிரந்தர வீட்டைக் கட்டுவதற்கான ஒரு செங்கலாக அமையலாம். அதை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

பிறருக்காகப் பிரார்த்திப்போம்
ஆர். அப்துல் கரீம்

இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான உறவையும் நெருக்கத்தையும் உயிரோட்டமாக வைத்திருப்பவற்றில் பிரார்த்தனைக்கு மிக முக்கிய பங்குண்டு.
வறண்ட நிலமாகக் காட்சியளித்த, பாலைவன பூமியான மக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையே காரணம் என்பதைப் புரிந்தால் பிரார்த்தனைக்கென்று உள்ள தனித்துவமிக்க வலிமையை அறியலாம்.
உறுதியான நம்பிக்கையோடு இறைவனிடம் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனையும் வலிமை மிகுந்ததே!
இத்தகைய துஆவின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.
நமது பிரார்த்தனை இறைவனிடம் ஏற்கப்பட எத்தகைய ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் கூடப் பல நேரங்களில் நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
இதில் அதிகம் கவனத்தில் கொள்ளாதது பிறருக்காக துஆ செய்வது எனும் அம்சமேயாகும்.
நல்ல பண்பு
நமக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைப் போல பிறருக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும். அதை அல்லாஹ் நல்ல பண்பாக, பாராட்டிக் கூறுகிறான்.
மார்க்கத்திற்காக சொந்த ஊரை விட்டு ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டு மதீனா வந்த முஹாஜிர்களுக்காக மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரி நபித்தோழர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளதை அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான்.
அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 59:10
பிறருக்காக துஆ செய்வது அல்லாஹ்வின் பாராட்டுக்குரியது என்பதை இந்த வசனம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்தப் பண்பை உயரிய பண்பாகவும் இறைவனது அருளுக்கு நம்மை உரித்தாக்கும் பண்பாகவும் குறிப்பிடுகிறார்கள்.
பிறருக்காக நாம் நன்மை வேண்டி துஆ செய்தால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் நமக்காக இறைவனிடம் நன்மையை வேண்டுவார் என்று நபிகளார் இதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘‘ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா அவர்களின் மனைவி) உம்முத்தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5280
ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் அவர்கள் கூறுகிறார்கள்:
தர்தா அவர்கள், ஸஃப்வான் அவர்களின் மனைவியாக இருந்தார்.
ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ‘‘இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார். நான் ‘‘ஆம்’’ என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ‘இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5281
பிறருக்காக துஆ செய்த நபிகளார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் பிறருக்காக இறைவனிடம் நன்மையை வேண்டிப் பிரார்த்தனை புரிந்த நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றுள்ளன.
பல நேரங்களில் நபிகளார் அடுத்தவர்களுக்காக துஆ செய்துள்ளார்கள்.
தொழுகையில் தவறிழைத்தவருக்காக…
நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 783
அபூபக்ரா (ரலி) அவர்கள் தொழுகையின் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விடுகிறார்கள். தொழுகையின் ரக்அத் தவறி விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு இது தெரியவந்த போது, இது தவறு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். அத்துடன் நன்மையின் மீதான அபூபக்ரா (ரலி) அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, அது இன்னும் அதிகரிக்கட்டும் என்று அவருக்காக இறைவனிடம் துஆ செய்கிறார்கள்.
ஒருவரது தவறை உணர்த்தும் போது கூட அவருக்காக துஆ செய்யும் பண்பு நபிகளாரிடம் இருந்துள்ளது என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கின்றது.
விபச்சாரத்திற்கு அனுமதி கேட்டவருக்காக…
நபிகளாரின் வாழ்வில் பிறருக்காக துஆ செய்த மற்றுமொரு சுவாரசியமான சம்பவத்தையும் பார்க்கலாம்.
ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்து, ‘‘நிறுத்து நிறுத்து’’ என அவரைத் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நெருங்கி வா என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார்.
அப்போது நபியவர்கள், ‘‘இதை உன் தாய்க்கு விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோ, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்க, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
‘‘உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார். ‘‘உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.
அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்து, ‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: அஹ்மத் 22265
ஒரு நபித்தோழர் நபிகளாரின் அவைக்கு வந்து பலர் முன்னிலையிலே தனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறார்.
விபச்சாரம் மார்க்கத்தில் தடை செய்யப் பட்டுள்ளது என்பதை அவர் நன்கறிவார். இருப்பினும் தடை செய்யப்பட்ட விபச்சாரத்தை யாருக்கும் தெரியாமல் செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்வதை விட, நபிகளாரிடம் அனுமதி பெற்று விட்டால் அது குற்றமாகாது அல்லவா? என்பது அவரது வெள்ளந்தியான எண்ணம்.
இவ்வாறு தனக்கு மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த நபித்தோழர் கேட்கின்ற போது நபிகளார் அவர்களோ, இதே அனுமதியை உன் தாய்க்கும் வழங்கலாமா? உன் மகளுக்கும் வழங்கி விடவா? உன் சகோதரிகள், பெண் பிள்ளைகள் அவர்களுக்கும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதை விரும்புவாயா? என்று கேட்டு இது தவறான சிந்தனை என்பதை அவருக்குப் புரியும் படி உணர்த்தி விடுகின்றார்கள்.
அத்துடன் நில்லாமல் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தனை புரிகிறார்கள். இந்தத் தவறான சிந்தனைக்கு உள்ளத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்பதால் அவரது உள்ளத்தின் பரிசுத்தத் தன்மைக்கு அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.
அவரது கற்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் துஆ செய்கிறார்கள்.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நபிகளார் அடுத்தவர்களுக்காக துஆ செய்துள்ளார்கள்.
இதிலிருந்து பிறருக்கு துஆ செய்யும் வழக்கம் நபியிடம் அதிகம் காணப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நபிகளாரைப் பின்பற்றிய நபித்தோழர்கள்
நபித்தோழர்களிடையேயும் பிறருக்காக துஆ செய்த வழக்கம் இருந்துள்ளதை பல செய்திகளில் பார்க்கலாம்.
சாதாரண நிகழ்வின் போது மாத்திரம் என்றில்லாமல் உச்சக்கட்ட உணர்ச்சி ததும்பும் தருணத்திலும் கூட, பிறருக்கு துஆ செய்துள்ளார்கள்.
அப்படியொரு நிகழ்வை ஹுதைபா (ரலி) அவர்களின் வாழ்வில் பார்க்க முடிகின்றது.
அந்தச் சம்பவம் இது தான்
உஹுதுப் போரின் (தொடக்கத்தின்) போது இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!’ என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 4065
உஹதுப் போரின் போது, தவறுதலாகத் தனது தந்தை கொல்லப்படுவதைப் பார்த்த நேரத்திலும் கொன்றவர்களை நோக்கி, ‘அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக’ என்று ஹுதைபா (ரலி) அவர்கள் துஆ செய்துள்ளார்கள் என்றால் இது எத்தகைய குணம்? இது நபிகளாரிடம் பயின்ற பாடத்தின் வெளிப்பாடாகும்.
ஆயிஷா (ரலி) அவர்களின் வழக்கம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை எடுத்துக் கொண்டால் பிறருக்கு துஆ செய்வதில் தனிச்சிறப்புடன் விளங்கியுள்ளார்கள்.
பின்வரும் நபிமொழி இதை விளக்குகின்றது.
உமர் (ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்த போது ‘சகோதரனே! நண்பனே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர் (ரலி) ‘ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?’ என்றார்.
உமர் (ரலி) இறந்தபோது, (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), ‘‘அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ‘குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக ‘குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ என்று கூறி, ‘ஒருவரது பாவச் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்’ (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்குப் போதுமே’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1288
புகாரியின் மற்றொரு (1289) அறிவிப்பில்
‘‘இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்’’ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போது தான் நபி (ஸல்) கூறினார்கள்’’ என்று ஆயிஷா (ரலி) கூறியதாக வருகின்றது.
இந்த செய்தியைப் பாருங்கள்.
நபியவர்கள் சொன்னதை உமர் (ரலி) அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு சொல்லும் போது, அது ஆயிஷா (ரலி) அவர்களின் கவனத்திற்கு வந்ததும், ‘அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக’ என்று துஆ செய்து விட்டு தமது தரப்பு விளக்கத்தை அளிக்கின்றார்கள். உமர் (ரலி) கூறியது தவறு என்று புரிய வைக்கின்றார்கள்.
இது போன்று பல நேரங்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க முன்வருவோர், ‘அவர் இவ்வாறு கூறினார்’ என்பதாகச் சொல்லும் போது, அது தவறாக இருக்கும் பட்சத்தில் ‘அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக’ என்று பிரார்த்தித்து விட்டுத் தனது விளக்கத்தை அளிக்கும் வழக்கத்தை ஆயிஷா (ரலி) கடைப்பிடித்துள்ளார்கள் என்பதைப் பல நபிமொழிகளில் பார்க்கலாம்.
இஸ்லாத்தின் கலாச்சாரம்
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?
பிறர் நலனில் அக்கறை கொள்வதோடு, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிவதுமே இஸ்லாமிய கலாச்சாரமாகும்.
அன்றாடம் கடைப்பிடிக்கத் தக்கவையாக இஸ்லாம் கற்றுத் தந்த பல நடைமுறைகளில் பிறருக்காக துஆ செய்யும் பண்பு மிளிர்வதைக் காணலாம்.
தும்மினால்…
தும்மிய ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அவருக்காக நாம் யர்ஹமுகல்லாஹ் என்று பிரார்த்திக்க வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6224
இஸ்லாத்தின் கலாச்சாரம் எதுவென்பதைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இச்செய்தி அமைந்துள்ளது.
நீங்கள் இப்படிக் கற்பனை செய்து பாருங்கள்
ஒருவர் தும்மியதும் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறுகிறார். அதைக் கேட்கும் அவரது பகைவர் இஸ்லாமிய போதனையின் படி ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று கூற வேண்டும். அதாவது அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
யர்ஹமுக்கல்லாஹ் என்று கூறியவருக்காக இப்போது தும்மியவர், ‘அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்’ என்று துஆ செய்ய வேண்டும்.
இப்படி ஒருவருக்கொருவர் அடுத்தவர் நலனுக்காகப் பிரார்த்திக்கும் இருவரின் உள்ளத்தில் அதற்குப் பிறகும் பகையுணர்வு எஞ்சி இருக்குமா?
பகையுணர்வை வேரோடு பிடுங்கி எறியும் வகையில் இஸ்லாம் கற்றுத் தரும் போதனை அமைந்துள்ளது. இதுவே இஸ்லாமியப் பண்பாடு.
இப்படி திருமணத்தில் இணைவோருக்காக, நோயாளிக்காக, உணவளித்தவருக்காக என்று பிறருக்காகக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய பிரார்த்தனை என்று மார்க்கம் கற்றுத் தந்தவற்றை ஆராய்ந்தால், பிறருக்காக துஆ செய்வது இஸ்லாமிய கலாச்சாரங்களில் ஒன்று என்பதைக் கண்ணை மூடிக் கூறிவிடலாம்.
நமக்காக இறைவனிடம் இறைஞ்சுவதோடு பிறருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அழகிய இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோம்.

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர்
எம்.முஹம்மது சலீம் M.I.Sc.

சமூகத்தில் பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளைச் சார்ந்த மக்களால் போற்றப்படும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது நடை, உடை, பாவனை போன்ற வெளிப்படைத் தோற்றமே அவர்களின் அந்தஸ்தை காட்டிக் கொடுத்துவிடும்.
அவர்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் ஏற்ப இருக்கிறார்கள் என்று அதற்குக் காரணத்தைச் சொல்லக் கூடும்.
அதுகூடப் பரவாயில்லை! அவர்கள் மக்களோடு கலந்து வாழ்வதில்லை. சமூக நீரோட்டத்தில் இணையாமல், சுற்றியிருக்கும் நபர்களை விட்டும் விலகியே இருக்கிறார்கள். மற்றவர்களை விடவும் கூடுதல் தகுதியும் உயர்வும் பெற்றவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
இத்தகைய நபர்களை பார்த்துப் பழகிப்போன சமூகத்திற்கு, இப்படித் தான் எங்கும் தலைவர்கள் இருக்க வேண்டும்; இருப்பார்கள் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்த மாயத் தோற்றத்தை உடைத்தெறியும் வகையில் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது.
இன்றைய காலத்தில் ஒரு தலைவர் வந்தால், ‘வழிவிடுங்கள், வழிவிடுங்கள்’ என்று கூவிக் கொண்டு, மக்களை அகற்றிச் செல்லும் பாதுகாவலர்கள் இருபக்கமும் இருப்பார்கள். பின்புறம், தொண்டர்கள் மூலம் அவரின் அருமை பெருமைகள் கோஷமாய் ஒலித்துத் கொண்டிருக்கும்.
இதுதான் ஊரறிந்த தலைவர்களின் நிலையாய் இருக்கிறது. இத்தகைய ஆரவாரத்தைத் தலைவர்களும் விரும்புகிறார்கள். ஆனால், இதற்கு மாற்றமாக முஹம்மது நபி திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூற்கள்: அபூதாவூத் (3278), அஹ்மத் (6262)
ஆட்சித் தலைவர், ஆன்மீகத் தலைவர் என்ற இரு அதிகாரத்தில் இருந்தாலும் முஹம்மது நபி எளிமையாக நடந்து கொள்வார்கள். வெளியூரில் இருந்து எவரேனும் வந்தால் எளிதில் அறிய முடியாத அளவுக்கு மக்களோடு கலந்து வாழ்வது நபியின் இயல்பாக இருந்தது. இதோ ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் ‘உங்களில் முஹம்மத் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். ‘இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத் நபி)’ என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ‘அப்துல் முத்தலிபின் பேரரே!’ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.
அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பியதைக் கேளும்’ என்றார்கள். உடனே அம்மனிதர் ‘உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ் சாட்சியாக ஆம்!’ என்றார்கள்.
அடுத்து அவர் ‘அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ‘ஆம்! அல்லாஹ் சாட்சியாக’ என்றார்கள். அடுத்து அவர் ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ‘ஆம்! அல்லாஹ் சாட்சியாக’ என்றார்கள்.
அடுத்து அவர், ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் (இறைவன் மீது சாட்சியாக)’ என்றார்கள். உடனே அம்மனிதர் ‘நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்’ என்று கூறிவிட்டு ‘நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதரன்’ என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி (63)
மிடுக்கான ஆடையும், விரைப்பான காவலர்களும் முஹம்மது நபிக்கு இருந்திருந்தால் அங்கு வந்தவர், உங்களில் முஹம்மத் யார்? என்ற கேள்வியேக் கேட்டிருக்க மாட்டார். அந்தளவுக்கு, சர்வ சாதாரணமாக தமது தோழர்களோடு முஹம்மது நபி இருந்தார்கள்.
“நீங்கள் நபி (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?’’ என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) என்ற நபித்தோழரிடம் கேட்டேன். அதற்கவர் “ஆம்’’ என்றார். மேலும் தொடர்ந்து “வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தில்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபி (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்’’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்பு
நூல்: முஸ்லிம்
இதுபோன்ற தலைவர்களை இன்று காண முடியுமா? தொண்டர்கள் தமக்கு அருகே அமர்வது, தமக்குக் குறுக்கே செல்வது கூடத் தனது கவுரவத்திற்கு இழுக்கு எனக் கதறும் தலைவர்கள் ஏராளம்! சாமானிய மக்களை மட்டமாய் நினைத்து மதிப்பில்லாமல் நடப்பவர்களும், அவர்களைக் கேவலமாக நடத்துபவர்களும் உள்ளனர். இதுபோன்ற ஆட்களுக்கு முஹம்மது நபியின் வாழ்வில் தக்க பாடம் உள்ளது.
ஒரு அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) கடந்து சென்றார்கள். “இறைவனை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைப்பிடி!’’ என்று அப்பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்பெண் நபியவர்களை அறியாததால் “உமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லும்! எனக்கேற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை’’ எனக் கூறினார். பின்னர், தமக்கு அறிவுரை கூறியவர் நபி (ஸல்) என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பெண் நபியவர்களின் வீட்டுக்கு வந்தார். வாசலில் எந்தக் காவலர்களையும் அவர் காணவில்லை. உள்ளே வந்து “உங்களைப் பற்றி அறியாமல் பேசி விட்டேன்’’ எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “துன்பத்தின் துவக்கத்தில் ஏற்படுவது தான் பொறுமை’’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி (1283, 7154)
பார்த்த உடனே நாட்டின் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் வகையில், படை பரிவாரங்கள் சூழப் பவனி வருபவராக நபிகளார் இருக்கவில்லை. மிகவும் யதார்த்தமாக இருந்தார்கள்.
மேலே சொன்ன சம்பவத்தைப் போன்று அறியாமல் கூட ஒரு தலைவரை, அதிகாரியை இன்று திட்டிவிட முடியுமா? அதற்குப் பிறகு திட்டியவரின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால், நபியின் செயல்பாடு எப்படி இருந்தது தெரியுமா? உள்ளத்தை நெகிழச் செய்யும் ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.
ஒரு மனிதர் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். “சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்
நூல்: ஹாக்கிம் (3733)
மன்னர் முன்பு கூனிக் குறுகிதான் நிற்க வேண்டும்; குனிந்து கொண்டு பேச வேண்டும். இதுவே அன்றைய கால நடைமுறை. அப்படித் தான் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிர்பார்ப்பு இருக்குமென்று ஒருவர் நடுங்கிக் கொண்டே வந்து நிற்கிறார். ஆனால், நடந்தது என்ன?
நானும் சாதாரண மனிதன் தான்; என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று அவரை அமைதிப்படுத்தினார்கள். அவருக்கு இருந்த பயத்தைக் களைந்தார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தாலும், மக்களோடு இறங்கிப் பழகும் பெருந்தன்மை மிக்கவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் “இந்த ஆட்டைச் சமையுங்கள்’’ என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்’’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூற்கள்: அபூதாவூத் (3773), பைஹகீ (14430)
மக்களை அரவணைத்துச் செல்லும் அன்பாளராக அல்லாஹ் என்னை அனுப்பி இருக்கிறானே தவிர, பெருமையடித்து அடக்குமுறை செய்பவராக இல்லை என்று தமது தன்மையை தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள், நபியவர்கள்.
மக்களைக் கவர இவ்வாறு சொன்னதாக நினைத்து விடக் கூடாது. உண்மையாகவே மக்களோடு நெருங்கிப் பழகும் பண்பாளராக வாழ்ந்தார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதுவே அவர்களின் ஆசையாக இருந்தது. இதை இன்னொரு சம்பவம் மூலமும் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, “வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபியவர்களுக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “இந்தத் தண்ணீரையே தாருங்கள்’’ எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே’’ என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்’’ எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள்.
பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி “இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1635)
தலைவர் என்றால் அறை, உணவு, இருக்கை, வாகனம் என்று அனைத்திலும் தனித்துவமான வசதியை விரும்பும் தலைவர்களே அதிகம். இப்படியான தேடல் முஹம்மது நபிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது. அதனால் தான் மக்கள் கை பட்டு, கலங்கிப் போன நீரையும் சங்கடப்படாமல் வாங்கிப் பருகினார்கள்.
சில நேரங்களில் தம்மீதுள்ள பாசம் காரணமாகத் தோழர்கள் அளவு கடந்த மரியாதையை வெளிப்படுத்தும் போது அதைத் தவிர்த்து இருக்கிறார்கள். அதுவும் கூட அவர்களை அவமதித்து அல்ல. அந்த மரியாதை எல்லை மீறிவிடக் கூடாது என்பதற்காக!
ஏனெனில், மக்களில் ஒருவராக இருப்பதையே விரும்பினார்கள். எனவே, தனக்கென தனி மரியாதையைக் கொடுக்க தோழர்கள் முன்வந்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்’’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: பஸ்ஸார் (1293)
மக்களில் ஒருவராகக் கலந்து வாழ வேண்டுமென முஹம்மது நபி விரும்பினார்கள். இப்படியான இயல்பான நடத்தையை மற்ற தலைவர்களிடம் காண்பது அரிதுதான். இதைக் கீழுள்ள சம்பவங்கள் மூலமும் புரிந்து கொள்ளலாம்.
ஒரு இளைஞர் அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்’’ என்றார்கள். தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸமீத் (ரலி)
நூற்கள்: அபூதாவுத் (157) இப்னுமாஜா (3170)
மக்களின் நல்வாழ்வுக்கு, முன்னேற்றத்திற்கு உரிய வழிகாட்டாமல் உறங்கிக் கிடக்கும் தலைவர்கள் இருக்கையில், சின்னஞ்சிறு விஷயத்தையும் சிறப்பாகச் செய்வதற்குத் துணைபுரியும் முஹம்மது நபியின் பண்பு நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. இப்படி, குடிமக்களிடம் தோழமையோடு நடக்கும் தலைவரை இன்று காண முடிகிறதா?
நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) “இஸ்மாயீலின் வழித்தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்திவிட்டீர்கள்? என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டனர். “நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’’ என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ (ரலி)
நூல்: புகாரி (2899, 3373)
தலைவராக இருப்பவர் தமக்கு நிகரான தலைவர்கள், பிரபலங்கள், செல்வாக்கு கொண்டவர்களோடு மட்டும் தான் இயல்பாகப் பழகுவார்கள் எனும் நிலைக்கு விதிவிலக்காக நபிகளார் வாழ்க்கை இருந்தது.
என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். நான் புழக்கத்தினால் கருத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (380, 860)
கிராமவாசிகள், அடிமைகள், ஊழியர்கள் என்று எல்லோரிடமும் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எங்கே என்று விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ‘‘அப்போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?’’ என்று கேட்டனர். பின்னர் ‘‘அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டியதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 458, 460, 1337
தம்மைச் சுற்றியிருந்த சாதாரண மக்களையும் கூட அறிந்து வைத்து, அவர்கள் மீது அன்புகொண்ட நபியவர்கள், குடிமக்களின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டினார்கள். நபி (ஸல்) அவர்களை அணுகுவது அனைத்து மக்களுக்கும் எளிதாக இருந்தது. தாமும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை எல்லா நேரத்திலும் பிரதிபலித்தார்கள்.
இதனால் தான் இன்றளவும் கோடான கோடி மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இனியும் நபியை நேசிக்கும் மக்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய மக்களின் பட்டியலில் நாமும் தொடர்ந்து இருப்போமாக! எந்நாளும் நபிவழியில் நடந்து வெற்றி பெறுவோமாக!

பெற்றோரைப் பேணுவோம்
ஆசிக் (இஸ்லாமியக் கல்லூரி)

பெற்றோருக்குப் பணிவிடை செய்யுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள், பணிந்து நடங்கள், மதித்து நடங்கள், அவர்களுடன் தோழமை கொள்ளுங்கள், அவர்கள் இணை வைத்தாலும் உலக விஷயங்களில் அவர்களுக்கு உதவுங்கள், அவர்களை ‘சீ’ என்று கூடச் சொல்லாதீர்கள், விரட்டாதீர்கள், துன்புறுத்தாதீர்கள் என்றெல்லாம் மார்க்கம் கட்டளையிடுகின்றது. இன்னும் தாய்மையின் சிறப்பையும், நமக்காக அவர்கள் அனுபவித்த வலியையும் அல்லாஹ் இந்த வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றான்.
“என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
அல்குர்ஆன் 17:23
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
அல்குர்ஆன் 46:15
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அல்குர்ஆன் 31:14
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
அல்குர்ஆன் 31:15
குர்ஆனிலும், நபிமொழிகளிலும் அதிகமாக வலியுறுத்திய உறவுகளில் பெற்றோர்களைப் பற்றி மட்டும் தான் இறைவன் அதிகமாகக் கூறியுள்ளான்.
ஏன் இறைவன் அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளான்? என்ன காரணம்? இறைவன் சொன்னால் காரணம் இல்லாமல் இருக்காது என்று சிந்திக்க முற்பட்டால் அதற்கான பதிலை உலகில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு பெண், தான் கருவுற்றிருப்பதை அறிந்த நாள் முதல் அது ஆணோ பெண்ணோ, கருப்போ சிவப்போ என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் வர இருக்கின்ற பிள்ளை மீது வைக்கும் அன்பு அளவிட முடியாதது.
கருவைச் சுமக்கின்ற பொழுது தன் பிள்ளைக்காக அவள் அனுபவிக்கின்ற வலிகள், இழந்த இழப்புகள், துறந்த ஆசைகள், தொலைத்த தூக்கங்கள், பட்ட கஷ்டங்கள் என எதையும் குறைத்துக் கூறி விட முடியாது.
கருவில் இருக்கின்ற பொழுதே எப்படி வளர்க்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? எது சரியாக இருக்கும்? எது சரியாக இருக்காது? என்ன படிக்க வைக்கலாம்? என்றெல்லாம் கனவில் மிதக்கின்ற பெற்றோர்ககள் இங்கு ஏராளம்.
பிள்ளைகள் சிறப்பாக வாழக் கல்வி மிக அவசியம். அதை வழங்குவதற்காக இரவும் பகலும் வியர்வையை, உடல் உழைப்பை குறைவில்லாமல் வழங்கும் பெற்றோர்களின் பாசத்தை வார்த்தையில் சொல்ல முடியாது.
வறுமை வாட்டி, பசியின் கோரப்பிடியில் இருக்கும் பொழுதும் கிடைத்த உணவைத் தன் பிள்ளைக்குக் கொடுத்து விட்டு, பிள்ளையின் முகம் பார்த்துத் தன் பசியை மறக்கும் பெற்றோரின் பாசத்தை அளவிட முடியுமா?
பிள்ளையின் ஆசையை, தேவையை நிறைவேற்ற, தன் ஆசையை மறைத்துக் காலம் தள்ளுகின்ற பெற்றோர்கள் ஏராளம்.
லண்டனில் பெர்லின் என்ற நகரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் 24 மாடிக் கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதனை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களால் 12 மாடி தாண்டிச் செல்ல முடியவில்லை. 6வது மற்றும் 12வது மாடியில் இருந்த இரு பெற்றோர்கள் தங்களால் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து பிள்ளைகளை மேலிருந்து கீழே இருந்த வலையில் போட்டு விட்டுத் தங்களது உடலைத் தீக்கு இரையாக்கினார்கள் என்பதைப் படிக்கும் பொழுது, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறும் வார்த்தை பெற்றோர்களுக்குத்தான் கன கச்சிதமாகப் பொருந்துகிறது.
தனக்கு ஒரு நோய் என்று வரும் பொழுது, தெருமுனையில் இருக்கும் மெடிக்கலில் நோயைச் சொல்லி மாத்திரை வாங்கிப் போட்டு விட்டு அன்றைய பிழைப்பைப் பார்க்கச் செல்லும் பெற்றோர், தன் பிள்ளைக்கு என்று வரும் பொழுது மார்பில் அணைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.
சாலையோரங்களில், குடிசைகளில், டெண்டுகளில், பாலத்தின் அடியில் வாழும் பெரும்பாலான தந்தைமார்கள் பிள்ளைகளுக்குக் கொசு கடிக்கக் கூடாது என்பதற்காகத் தன் வேட்டியோ சட்டையோ கழற்றிக் கொடுத்து விட்டு, பிள்ளைகள் தூங்கும் அழகில் தன் தூக்கத்தை மறந்தவர்கள் இங்கு ஏராளம்!
வீதி ஓரங்களில், டிரை சைக்கிள்களில் வாழும் குடும்பங்களில் உள்ள தாய்மார்கள், பிள்ளைகளைக் குளிர் வாட்டும் பொழுது தங்கள் முந்தானைகளைக் கூடாரமாக மாற்றுகின்ற அரவணைப்பை என்னவென்று சொல்லுவது?
தன் பிள்ளைகளுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஒருநாள் கூலியை மனநிறைவோடு கொடுக்கும் பெற்றோரும் உண்டு!
தன் பிள்ளைகள் டியூஷன் ஃபீஸ், வெளியூர் சுற்றுலா என பணம் கேட்கும் பொழுது அன்றைக்கு இரவு ஓவர் டைம் வேலை பார்க்கும் தந்தைமார்களின் பாசமும், வீட்டு வேலை செய்து பணம் கொடுக்கும் தாய்மார்களின் பாசமும் மதிப்பிட முடியாதவை.
அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் வைத்திருக்கும் ஷூ, சைக்கிள், பேக், பேனா, பென்சில் போன்றவற்றைப் பார்த்துவிட்டு, அதை வாங்கிக் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்காகவே முழு சம்பளத்தையும் கரைத்துவிட்டு, பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றிச் சாப்பிடும் பெற்றோர்களும் உண்டு.
தன் பிள்ளையை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, வக்கீலாகவோ ஆக்க வேண்டும் என்பதற்காகக் கங்கணம் கட்டி கொண்டு மாட்டைப் போன்று உழைக்கும் பெற்றோர்கள் இந்தச் சமூகத்தில் வாழ்கிறார்கள்.
தங்களது பெண் பிள்ளைகளது வாழ்வின் அடுத்தக் கட்டமான திருமண வாழ்விற்கு வரதட்சணை, திருமணச் செலவு போன்றவற்றைச் சமாளிக்க ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி, ஒவ்வொரு மனிதராகப் பார்த்துப் பிச்சை கேட்கும் பெற்றோர்களின் பாசத்தை எழுதுவதை விட உங்கள் மனக்கண் முன்னால் ஓடவிட்டுப் பாருங்கள்.
இப்படி தனக்காக என்று எதையும் சேமிக்காமல் தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து சேவகம் செய்கின்ற பெற்றோர்களைப் பார்த்துவிட்டு, வீதியில் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக இருக்கின்ற பெற்றோரைப் பார்க்கின்ற பொழுது பிள்ளைகளின் மனம் எப்படிக் கல்லாய் போனது என்ற கேள்வி எழும்.
பெற்றோரின் பாசம் இப்படியென்றால் பிள்ளைகளின் நிலை என்ன தெரியுமா?
சுடுகாட்டில் தாயை விட்டுச் சென்ற மகன், பராமரிப்பதற்குச் சிரமமாக உள்ளது என்று சொல்லி மாடியிலிருந்து தாயைத் தள்ளி விட்ட மகன், மிறிலி மேட்ச் பார்க்க டி‌வி ரிமோட் தரவில்லை என்று தந்தையை அடித்துக் கொன்ற மகன், குடிப்பதற்குக் காசு தரவில்லை என்பதற்காகத் தாயை அடித்துக் கொன்ற மகன், உணவு தராமல் கொடுமைப்படுத்தி, பெற்றோரைக் கொன்ற மகன் என்றெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்திகளை இப்போது பார்க்க முடிகின்றது.
முதியோர் இல்லங்களில் விடப்பட்டவர்கள், வீதிக்கு விரட்டப்பட்டவர்கள், பிச்சை எடுப்பவர்கள் என எல்லோருமே யாரோ ஒருவருடைய பெற்றோர்கள் தானே! ஏன் இந்த நிலை?
அப்பா, அம்மா தான் உலகம், அவர்கள் தான் எங்கள் ஹீரோ, வழிகாட்டி என்று அவர்கள் கையைப் பிடித்து வாழ்ந்த நாம், இன்று அவர்கள் நம் கையைப் பிடிக்கின்ற நிலைமை வருகின்ற பொழுது தட்டிவிட எப்படி மனம் வருகிறது?
அவரவர் குடுபம், மனைவி, பிள்ளைகள், பொருளாதார மாற்றம், வாழ்க்கைப் போட்டி என்று வருகின்ற பொழுது இப்படித் தானே என் பெற்றோரும் எனக்காகச் சிரமப்பட்டிருப்பார்கள் என்ற எண்ணம் ஏன் வராமல் போனது?
அல்லாஹ் தனது திருமறையில் சொல்வதைப் பாருங்கள்.
அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.
அல்குர்ஆன் 46:15
யாருக்காகவும் வாழாமல் உங்களுக்காகவே வாழுகின்ற, உங்கள் மீது உண்மையான அன்பு வைத்திருக்கின்ற, உங்களுக்கு ஏதாவது என்றால் துடித்துப் போகிற, எத்தனை வயதானாலும், என்ன தவறு செய்தாலும் என் பிள்ளை என்று யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்ற பெற்றோர்களை எப்படி விட்டுக்கொடுக்க மனம் வருகிறது?
இதற்கெல்லாம் ஒரே கரணம் தான். அவர்களது பாசத்தை, தியாகத்தை, வலிகளை, நாம் உணரவில்லை. அந்தப் பாசத்தை உணர்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.
நல்ல நாள் பெருநாளில் நமது பிள்ளைக்காகப் புத்தாடை எடுக்கும் நாம், நமக்காக எதையும் எடுக்காத பொழுது அந்த நொடி யோசியுங்கள். இப்படித் தானே என் பெற்றோரும் இருந்திருப்பார்கள் என்று….
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காகப் படுகின்ற கஷ்டங்கள், வாங்குகின்ற வசவுகள், தொலைத்த தூக்கங்கள், துறந்த ஆசைகள் என எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோர்கள் பற்றிய எண்ணம் வந்தால் அப்பொழுது பெற்றோரின் பாசத்தை உங்களால் உணர முடியும். அப்படி உணர்கின்ற பொழுது தான் இந்த உலகத்தில் பெற்றோரின் பாசத்தை விட எதுவும் பெரியதில்லை என்று புரியும்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டுச் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.
அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி 5976
இதிலிருந்து பெற்றோர்களுக்கு இஸ்லாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை அறியலாம்.
எனவே முஸ்லிம்கள் எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் பெற்றோரைத் துன்புறுத்தாமல் இருப்பது கடமையாகும்.
அதே போல் இறைவனும் பெற்றோருக்காக துஆ செய்ய நமக்குச் சொல்லித் தந்திருக்கிறான்.
“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!’’
அல்குர்ஆன் 17:24
என்ற துஆவை அதிகமாக, அவர்களுக்காகச் செய்யுங்கள். இந்த உலகத்தில் பெற்றோரின் பாசம் விலை மதிப்பற்றது என்பார்கள். அது இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் தானோ என்னவோ இன்றைக்கு அவர்களது பாசம் உதாசீனப்படுத்தப்படுகின்றது.
எனவே, பெற்றோரை மிதிக்கின்ற பிள்ளைகளாக இல்லாமல், மதிக்கின்ற பிள்ளைகளாக வாழக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக!

ஆட்சியாளர்களை வழிநடத்தும் இஸ்லாம்
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு சாராரும் தங்களின் பெற்றோர்களும், தங்களின் முன்னோர்களும் எந்த மதத்தில் தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களோ, அந்த மதத்திலேயே தங்களின் வாழ்க்கை வழிமுறைகளை அமைத்துக் கொள்கின்றார்கள்.
இதில் விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் தங்களின் முன்னோர்களின் மதக் கோட்பாட்டுத் தத்துவங்களை சீர்தூக்கிப் பார்த்து, சரியா? தவறா? என்று ஆய்வு செய்து பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான மக்கள், தலைமுறை தலைமுறையாக எந்தக் கடவுள் கொள்கையில், சித்தாந்தத்தில் வாழ்ந்தார்களோ அப்படிப்பட்ட கொள்கையையே தங்களின் வாழ்வியல் மதமாக ஏற்று நடக்கின்றனர்.
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் அறிவுரைகளும் போதனைகளும் சிறு பிள்ளைகளின் உள்ளங்களில் கூட ஆழப்பதிய வைக்கப்படுகின்ற அளவுக்கு ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய மார்க்கம் இஸ்லாம். இது வெறுமனே வாயளவில் புகழ்வதற்காகச் சொல்லப்படுகின்ற கருத்து அல்ல. இஸ்லாத்தைப் படித்துக் கடைப்பிடிக்கின்ற அனைவரும் இந்தக் கருத்தைத் தான் முன்வைக்கின்றார்கள்.
இஸ்லாம், ஆன்மீகத்தை மட்டும் போதித்து விட்டுச் சென்று விடாமல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் சட்டமாகச் சொல்லி விட்டுப் போகாமல் மக்களை வழிநடத்துகின்ற, மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற ஆட்சியாளர்களும் எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.
ஆட்சியாளர்கள் என்றால் யார்? ஆட்சியாளர்களின் கடமைகள் என்ன? ஆட்சியாளர்களின் தகுதி என்ன? ஆட்சி செய்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் என்ன? ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஆட்சிப் பொறுப்பை சரிவர நிறைவேற்றாத ஆட்சியாளரின் நிலை என்ன? என்று சொல்லி நம்முடைய உள்ளங்களின் ஒரு ஆட்சியாளருக்கென்று நாம் என்னென்ன அளவுகோலைத் தீர்மானித்து வைத்திருக்கின்றோமோ, கேள்விக்கணைகளைத் தொடுத்து வைத்திருக்கின்றோமோ அவை அத்தனைக்கும் தெளிவான, அற்புதமான பதிலைத் தருகின்றது இஸ்லாம்.
ஆட்சியாளர்களில் மிகவும் கெட்டவர்கள்
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களைப் பாடாய் படுத்துகின்ற, மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடுகின்ற, மக்களின் தூக்கத்தைக் கெடுத்து சோதனையிலும் வேதனையிலும் தள்ளி விடுகின்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
மேலும், ஆட்சியாளர் என்பவர் மக்களின் பாதுகாப்புக் கேடயமாகவும், மக்களின் பாதுகாவலராகவும் தான் இருக்க வேண்டும். மக்களின் துன்பம், துயரம், வேதனை போன்ற இன்னல்களின் போது மக்களின் நலனில் அக்கறை காட்டுபவரே ஆட்சியாளராக இருக்க முடியும். மக்களை வேதனைப்படுத்தி, அந்த வேதனையை ரசித்துக் கொண்டிருப்பவர் ஆட்சியாளராக இருக்க முடியாது என்று இஸ்லாம் பாடம் நடத்துகின்றது.
ஹசன் பின் அபில்ஹசன் யசார் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 3736
நிர்வாகிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பை இந்தச் செய்தி வலியுறுத்துகின்றது. ஆட்சியாளர்களில் மிகவும் மோசமானவர்கள் மக்களை வதைக்கின்ற, துன்புறுத்துகின்ற கடும் உள்ளமும், கல் நெஞ்சமும் கொண்டவர்கள் தான் என்று வன்மையாக நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.
ஒரு ஆட்சியாளர் மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்று இரத்தினச் சுருக்கமாக, அற்புதமான வார்த்தைகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கும், இன்னும் உலகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் பாடம் நடத்துகின்றார்கள்.
ஒரு ஆட்சியாளருக்குத் தான் ஆட்சி செய்கின்ற மக்களின் மீது இரக்கமும் அன்பும் பரிவும் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் தன்னுடைய மனம் போன போக்கிலே சட்டங்களைக் கொண்டு வராமல், மக்களின் வாழ்வியல் சூழலுக்கு தகுந்தாற்போன்று தங்களின் நடவடிக்கையை அமைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்கள் கடின சித்தம் கொண்டவர்களாகவும், கோர குணம் படைத்தவர்களாகவும், இரக்க குணத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதன் காரணமாகத் தான் மக்கள் என்ன அவதிப்பட்டாலும் வேதனைப்பட்டாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல், தங்களுக்கு ஆட்சி கிடைத்து விட்டது, இருக்கின்ற குறிப்பிட்ட ஆண்டுகளில் மக்களை எந்த அளவிற்குப் பிழிய முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமைப்படுத்தி, ஆனந்தமடைகின்றார்கள்.
சிறந்த ஆட்சியாளர் நபிகள் நாயகம் (ஸல்)
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களின் மனோநிலைக்குத் தகுந்தாற்போன்று ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் அதற்குக் கீழ் உள்ள பகுதிகளிலும் ஆட்சியாளர்கள் அமைந்து விட்டால் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சாக அமைந்து விடும்.
மேலும் ஒரு ஆட்சியாளரிடத்தில் மக்கள் எந்தெந்த குணநலன்களை எல்லாம் எதிர்பார்க்கின்றார்களோ, ஆட்சியாளர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சிந்தனை ஓட்டத்தில் ஓட விடுகின்றார்களோ அதுபோன்ற ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கிடைப்பது எட்டாக்கனியாகவும், குதிரைக் கொம்பாகவும் இருக்கின்றது.
ஆனால் ஆட்சியாளர் என்றால் யார்? ஆட்சியாளரின் குணநலன் என்ன? ஆட்சியாளர் மக்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? ஆட்சியாளரின் பண்புகள் என்ன? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆட்சி செய்த, மக்களை வழிநடத்திய முன்மாதிரித் தலைவர் உலகத்தில் ஒருவர் இருப்பார் என்றால், சவாலாகச் சொல்வதாக இருந்தால் அது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 33:21
இறைவன் கற்றுத் தந்த அடிப்படையில் மக்களை வழிநடத்துகின்ற ஆட்சியாளர் என்ற அடிப்படையிலும் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஏராளமான முன்மாதிரிகள் இருக்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை காட்டி, ஆட்சி என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். மக்களை எவ்வாறெல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடந்தாலும், அவைகளில் ஒரு சில முக்கியமான செய்திகளை, இன்றைய கால ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம்.
வீரமிக்க ஆட்சியாளர்
மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர் வீரமிக்கவராக, எதிரிகளைக் கலங்கடிக்கக் கூடிய வகையில் தைரியமான, துணிச்சல் மிகுந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பண்பு ஆட்சி செய்பவர்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று.
ஏனென்றால் தன்னுடைய மக்களின் உயிர், உடைமை, பொருளாதாரம் என்று சொல்லி அத்தனைக்கும் பாதுகாவலராக ஒரு ஆட்சியாளர் இருக்க வேண்டும். மக்களுக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு வீர வசனம் பேசுவது மட்டும் ஆட்சியாளரின் வீரத்தை எடுத்துரைக்காது.
மாறாக, எதிரிகள் எப்போது தாக்க வந்தாலும், தாக்குதலைத் தொடுத்தாலும், துன்பங்களை அள்ளித் தெளித்தாலும் மக்களுக்கு முன்னணியில் ஆட்சியாளர் தான் நிற்க வேண்டும்.
பத்ருப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமே எங்களை நாங்கள் காத்துக் கொண்டோம். அவர்கள் தான் எதிரிகளுக்கு எங்களை விட நெருக்கத்தில் இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் தாம் கடுமையாகப் போரிட்டனர்.
நூல்: அஹ்மத் 619, 991
எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது பெரும்பெரும் வீரமிக்க நபித்தோழர்கள் கூட, நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே நின்று தம்மைக் காத்துக் கொண்டு நிற்கின்றார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு மிகவும் நெருக்கத்தில் நிற்கின்றார்கள்.
இதுபோன்ற வீரமிக்கவர்களாகவும், மக்களைப் பாதுகாக்கின்ற கேடயமாகவும் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். கோழைகளாக இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடுதான்.
மேலும், இதுபோன்ற வீரத்தைப் பறைசாற்றுகின்ற மற்றொரு செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சிறந்த வீரமிக்க மக்களின் பாதுகாவலர் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தக் கூடியதாக இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப் பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், “பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்’’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2908
இந்தச் செய்தி ஒரு ஆட்சியாளரின் சிறப்பு மிக்க மாவீரத்திற்கு முன்னுதாரணமாக உள்ள செய்தியாகும். மக்கள் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற வேளையிலோ, அல்லது ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போதோ கடைக் கோடிப் பகுதியிலிருந்து கடுமையான சப்தம் வருகின்றது.
மக்களெல்லாம் என்ன சப்தம்! என்ன சப்தம்! என்று பேசிக் கொண்டிருக்கின்ற வேளையிலே, சப்தம் வருகின்ற திசையிலிருந்து சிங்கமாகக் கர்ஜித்து, யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியாக என்னவென்று பார்த்து விட்டுத் திரும்பி வந்து, ‘மக்களே! பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்!’ என்று மக்களின் பாதுகாவலராகத் திகழ்ந்தாரே, இவரல்லவா ஒரு வீரமிக்க ஆட்சியாளர்.
ஆனால், இன்றைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஏழை, நடுத்தர மக்களின் தூக்கத்தை நாசப்படுத்தி, நிம்மதியைத் தொலைத்து ஒவ்வொரு நாளும் அவதிப்பட வைக்கின்ற காரியங்களில் ஈடுபட்டு மக்களை வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு ஆட்சியாளருக்கு உகந்த குணமல்ல.
மக்களின் கடனை அடைத்த ஆட்சியாளர்
மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர் மக்கள் படுகின்ற சிரமத்தைப் போக்குகின்ற வகையில் இருப்பார். மேலும், மக்கள் ஏதாவது தங்களின் வாழ்வாதாரத்திற்காக, உணவுக்காக, இன்னபிற தேவைக்காகக் கடன் வாங்கியிருந்தால், அவரது கடனை ஆட்சியாளர் பொறுப்பேற்று, தன்னுடைய அரசு கஜானாவிலிருந்து பொருளை எடுத்து அடைக்க வேண்டும். இவர்தான் சிறந்த ஆட்சியாளர்.
நபியவர்களிடம் கடன்பட்டவரின் உடல் (ஜனாஸா தொழுகைக்காகக்) கொண்டு வரப் பட்டால், ‘‘கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். கடனை அடைக்க எதையேனும் அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லாவிட்டால் ‘‘உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’’ என்று முஸ்லிம்களிடம் கூறி விடுவார்கள். ஏராளமான வெற்றிகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய போது ‘‘மூமின்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிக உரிமை படைத்தவன். எனவே கடன்பட்டு மூமின்கள் யாரேனும் மரணித்து விட்டால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பு. அவர் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேர்ந்தது’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2297, 5371
ஒரு மனிதர் மரணமடைந்தவுடன் அவர் விஷயத்தில் எப்படிப்பட்ட அழகான அணுகுமுறையை ஒரு ஆட்சியாளர் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தச் செய்தி அற்புதமான முறையில் பறைசாற்றுகின்றது.
இறந்த மனிதருக்குக் கடன் இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. ஆம்! கடன் இருக்கின்றது என்று கூறினால், இதோ! அந்தக் கடனைத் தீர்ப்பது என் பொறுப்பு! என்று சொல்லி மக்களின் கடனைத் தீர்த்தார்களே, இவர் தான் உண்மையில் மக்களின் பாதுகாவலர்.
ஆனால் இன்றைய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் குறிப்பிட்ட ஒரு தொகையை கடனாக நிர்ணயித்து, யார் வாங்கிய கடன் என்று தெரியாமல் சாதாரண மனிதர்கள் அந்தக் கடனை அடைக்க கூடிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
மேலும் ஒரு சாமானியன், அரசிடம் கடன் வாங்கியிருந்தால் அவனால் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டாலும் கூட அவனைக் கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி, அவனது கடனை எப்படியாவது வசூலித்து விடுவதைப் பார்க்கின்றோம். அல்லது கடனை அடைக்க முடியாமல் அவன் உயிரை விட்டு விடுவதையும் பார்க்க முடிகின்றது. இதுபோன்ற கோரமான ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் இருப்பது இழிவே!
வட்டியை ஒழித்துக் கட்டிய ஆட்சியாளர்
இன்றைய காலகட்டத்தில் வட்டி என்ற சாபக்கேடு, ஒவ்வொருவருடைய குடும்பத்தாரின் ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கின்றது.
மக்களின் சிரமங்களையும், பலவீனங்களையும் கன கச்சிதமாக அரசு பயன்படுத்திக் கொள்கின்றது.அதாவது, மனிதர்களின் பொருளாதார சிரம கால கட்டத்தில் மக்களிடமிருந்து அதிகப்படியான வட்டியை உறிஞ்சி எடுக்கும் அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் வட்டி என்ற வன்கொடுமையை எவ்வாறு ஒழித்துக் காட்டினார்கள் என்பதற்கு அற்புதமான சான்று இதோ!
“அறியாமைக் கால நடவடிக்கைகள் அனைத்தையும் என் காலுக்கடியில் மிதித்துப் புதைக்கிறேன். அறியாமைக் காலத்தில் நடந்த எல்லாக் கொலைகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுகின்றது. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆவின் மகனுடைய கொலையை நான் மன்னிக்கிறேன். அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸின் வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நபி (ஸல்) தமது இறுதிப் பேருரையில் பிரகடனம் செய்தார்கள்.
நூல்: முஸ்லிம் 2334
வட்டி வாங்குவது அதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார்.
வட்டியைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.
தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக, தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதன் முதலாகத் தள்ளுபடி செய்து, மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கின்றார்கள்.
இன்றைக்கு வட்டி காரணமாக சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கின்ற குடும்பங்கள் ஏராளம்! ஏராளம்! இன்னும் ஒருபடி மேலாக, வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பத்தோடு கொடூரமாகத் தற்கொலை செய்து கொள்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஆனால் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்கள் வட்டியைக் கண்டும் காணாமலும், அலட்சியமாக ஆட்சி நடத்திக் கொண்டும், வட்டியின் மூலமாக அரசாங்கத்தையும், வயிறையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதுபோன்ற ஆட்சியாளர்கள் வேரறுக்கப்பட வேண்டும்.
நீதியை நிலைநாட்டிய ஆட்சியாளர்
மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர் தனக்கோ, தன்னுடைய குடும்பத்தாருக்கோ, தன்னோடு நன்கு பழகிய நண்பர்களுக்கோ, பணக்காரர்களுக்கோ இவ்வாறு யாருக்குப் பாதகமாக இருந்தாலும், அத்தகையவர்கள் செய்த தவறுகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டி, உரிய தண்டனை வழங்க வேண்டும். அவர் தான் மக்களை நிர்வகிக்கின்ற சிறந்த ஆட்சியாளர்.
மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3475
ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்தச் செய்தியை நன்றாக, ஆழமாக படித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
மக்ஸூமி குலம் என்பது அன்றைய கால அரபு மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த குலமாகக் கருதப்பட்டவர்கள் ஆவார். அப்படிப்பட்ட உயர்ந்த குலத்தைச் சார்ந்த பெண்மணி திருடி விடுகின்றார்.
எனவே அவருக்குத் தண்டனையிலிருந்து விலக்கு கேட்டு நபி (ஸல்) அவர்களின் மிகவும் பிரியத்திற்குரிய நபரான உஸாமாவைப் பரிந்து பேச அனுப்பி வைக்கின்றார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவுக்குக் கொடுத்த பதிலில் கோபக் கணைகளால் கொந்தளிக்கின்றார்கள். என்னுடைய அன்பு மகள் ஃபாத்திமாவுக்கும் இதே சட்டம் தான்! சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்கள். இவர்தான் உண்மையில் சிறந்த ஆட்சியாளர்.
மேலும் இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் அறிவுரை கூறும்போது…
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:135
இந்த இறை போதனைக்கேற்ப, குறிப்பாக ஆட்சியாளர்கள் நீதி வழங்குவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் மனோ இச்சைகளை ஒருக்காலும் பின்பற்றக் கூடாது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும், ஏழைகளுக்கு ஒரு நீதியும் என்று சொல்லி ஏழைகளை அடித்துத் துவம்சம் செய்தும், பணக்காரர்களைக் காப்பாற்றியும் தங்களின் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், பாமர மக்களை நசுக்குவதிலும், துன்புறுத்துவதிலும் முழுக் கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள். இவர்கள் ஆட்சியில் இருப்பது மக்களுக்குப் பெருத்த துன்பத்தைத் தான் தந்து கொண்டிருக்கின்றது.
வார்த்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள்
இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டிய அடிப்படையில் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்கள் தங்களின் பணிகளை, சேவைகளை, தொண்டுகளை செவ்வனே சிறப்பாகச் செய்து முடித்தார்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன அற்புதமான செய்திகள், இன்றளவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வார்த்தைகளாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது இந்த நாடு சிறப்பான, வீரியமிக்க, மக்கள் நலனில் அக்கறை காட்டுகின்ற, மக்களைப் பாதுகாக்கின்ற நாடாக மாற வேண்டுமானால், உமர் (ரலி) அவர்களின் ஆட்சி போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றார்.
உண்மையில், நபி (ஸல்) அவர்களின் பாசறையில் பாடம் படித்த உமர் (ரலி) அவர்கள் அற்புதமான ஆட்சியாளராக, மக்களைப் பாதுகாக்கின்ற, மக்களுக்காகவே ஆட்சி செய்கின்ற வேலையை கன கச்சிதமாகச் செய்து முடித்தார்கள்.
ஆனால் இன்றைய நவீன ஆட்சியாளர்கள் மக்களை எந்த அளவுக்குத் துன்பத்திற்கு உள்ளாக்க முடியுமோ, மக்களின் பொருளாதாரங்களை எந்த அளவுக்குச் சுரண்ட முடியுமோ, மக்களை எந்த அளவுக்குக் கதற வைக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடும் சிரமத்தையும், வேதனையையும் கொடுத்து, தங்களின் கொடூர ஆட்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆட்சியின் அதிபதியே!
இந்த உலகத்தில் மனிதர்கள் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிற மக்களை ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், உண்மையான ஆட்சியாளன் உலகத்தைப் படைத்த இறைவன் தான். இந்தச் செய்தியை ஆட்சியாளர்கள் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:26
இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் தமது பலத்தினாலும் திறமையினாலும் ஆற்றலினாலும் அறிவினாலும் அனுபவத்தினாலும் தான் நமக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கின்றது என்று நினைக்கின்றார்கள்.
ஆனால் நல்லவர்களாக இருந்தாலும் கொடூர குணம் கொண்டவர்களாக இருந்தாலும் ஆட்சியையும் பதவியையும் வழங்குவது இறைவனே! கெட்டவர்களுக்குக் கூட இறைவன் ஆட்சியைக் கொடுத்துக் கேவலப்படுத்துவான்.
இதைக் கவனத்தில் வைத்து ஆட்சியாளர்கள் அகம்பாவம், ஆணவம், கொடூர குணம் படைத்தவர்களாக இல்லாமல், மக்களின் நலனில் அக்கறை கொண்டு, மக்களுக்காக ஆட்சி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட மனிதர்களாக, முழுமையாக இல்லையென்றாலும் இருப்பதில் ஓரளவு நற்குணம் படைத்த ஆட்சியாளர்கள் யார்? என்பதை மக்கள் தேர்ந்தெடுக்கவும் கடமைப்பட்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வே நன்கறிந்தவன்!!

பன்னிரெண்டாயிரம் தடவை குர்ஆன் ஓதிய சூஃபி?
இந்து நாளேட்டின் பகிரங்க பொய்

ஒவ்வொரு நாளிதழும் வணிகம், திரையுலகம், ஆன்மீகம் போன்ற தலைப்புகளில் தினமும் ஒவ்வொரு இணைப்பு இதழ்களை வெளியிடுகின்றன.
அது போல் இந்து தமிழ் நாளிதழில் ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் ஆனந்த ஜோதி என்ற இணைப்பு இதழ் இடம் பெறுகின்றது. அதில் இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து ஆகிய மதங்களின் கட்டுரைகள் இடம்பெறும். இஸ்லாம் சார்பாக சூஃபிகளின் ஞான வழி என்ற தலைப்பில் முஹம்மது ஹுசைன் என்பவர் ஒரு தொடரை எழுதி வருகின்றார்.
இஸ்லாமிய மார்க்கம் உலகத்தில் ஏனைய மார்க்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, வித்தியாசமான, தனக்கென்று ஒரு தனித்தன்மையைப் பதிய வைத்துப் பயணம் செய்கின்ற ஒரு மார்க்கமாகும். பத்தோடு பதினொன்றாவது மார்க்கம் என்பது போல் இஸ்லாம் அமையவில்லை.
ஆனால் எழுத்தாளர் முஹம்மது ஹுசைன் இஸ்லாத்தைப் பத்தோடு பதினொன்று என்பது போன்ற தோற்றத்தைத் தான் தனது கட்டுரையில் பதிய வைக்கின்றார். ஒருக்கால், இந்து நாளிதழ் காட்டிய திசையில் தனது கலத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கின்றாரோ என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்ற ஒரு தோற்றம் இன்று உலகெங்கிலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்ற உண்மையை உலகிற்குச் சொல்லத்தக்க வகையில் ஏராளமான செய்திகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் கொஞ்சத்தை வாசகர்களின் கவனத்திற்குப் படைத்தாலே போதும். இஸ்லாத்தின் மீது அவர்களது பார்வை தெளிவு பெறும்.
இதற்கு நேர்மாற்றமாக இந்த எழுத்தாளரின் படைப்பு அமைந்திருப்பது வேதனைக்குரியதாகும். அதிலும் சூஃபிஸம் என்ற தலைப்பில் ஞானிகளைத் தொடர வைத்திருக்கின்றார். சூஃபிஸம் இஸ்லாத்தில் இல்லாத ஒரு துறை. இஸ்லாத்திற்குத் சூஃபிஸத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பிறமதக் கலாச்சாரத்திலிருந்து இஸ்லாத்திற்குள் திணிக்கப்பட்ட கலாச்சாரமாகும். சூஃபிஸம் என்பது துறவு நிலையைப் போதிக்கின்றது. இஸ்லாம் அப்படி ஒரு நிலை இல்லை என்று மறுக்கின்றது.
இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிரகடனத்தை பாருங்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினா தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே’ என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையைக் கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5063
இஸ்லாத்தில் துறவு நிலை இல்லை என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விடுகின்றார்கள். சூஃபிஸம் என்பது துறவு நிலையைத் தூக்கிப்பிடிக்கின்றது. இதிலிருந்து சூஃபிஸம் என்பது இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்ப்பட்ட ஓர் அந்நியக் கலாச்சாரம் என்பது மிகத் தெளிவாக விளங்கி விடுகின்றது. இந்த முன்னுரையுடன் இப்போது எழுத்தாளர் முஹம்மது ஹுசைன் அவர்களின் கட்டுரைக்கு வருவோம்.
அந்த கட்டுரையின் தலைப்பு, ‘இறைவனை உன்னுள் பார்’ என்பதாகும். கடந்த மார்ச் 7ம் தேதி ஆனந்த ஜோதி என்ற இணைப்பு இதழில் இது வெளியானது. அதில் பாக்தாதில் பிறந்த அபூபக்கர் அல்கத்தானி என்ற சூஃபியின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடுகின்றார். அவரைப் பற்றிய பல்வேறு கதைகளைக் குறிப்பிடுகின்றார். அவை அனைத்தையும் நாம் அலசவில்லை. அதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைக்கும் பகுத்தறிவுக்கும் நேர் முரணான விஷயத்தை இப்போது அலசுவோம்.
தொழுகையும் குர்ஆனை ஓதுவதும் மட்டுமே அவரது வாழ்வாக மாறியது. 30 ஆண்டு காலம், கஅபாவில் இருந்து வரும் தண்ணீர் குழாயின் கீழ் அமர்ந்து தொழுதபடியே இருந்தார். ஒவ்வொரு நாளும், முழுக் குர்ஆனை ஓதி முடிப்பார். கஃபாவை சுற்றி வரும்போது மட்டும் 12,000 தடவை குர்ஆனை ஓதி முடித்துள்ளார். இறை பக்தியில் அவரது முகம் பிரகாசமாக ஒளிர்ந்ததன் விளைவாக, ‘சூபியின் ஒளிவிளக்கு’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் இரண்டே இரண்டு தான். இவ்விரண்டு அல்லாத வேறெதுவும் இஸ்லாத்தின் ஆதாரமாக ஆகாது. எம்மாபெரிய பெரியாராக இருந்தாலும் எம்மாபெரிய அறிஞராக இருந்தாலும் அவருடைய சொல், செயல் எதுவும் இந்த மார்க்கத்தின் ஆதாரமாகாது. அந்த அடிப்படையில் முஸ்லிம்களின் முழு மொத்த முன்மாதிரியும், முன்னோடியும் மூல ஆதார நாயகருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவதற்கென்று ஒரு வழிமுறையைக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
அபூபக்கர் அல்கத்தானி கஅபாவைச் சுற்றி வரும் போது 12,000 தடவை குர்ஆனை ஓதிமுடித்துள்ளார் என்று இந்தக் கதை செல்கின்றது. ஒருவர் முழுக் குர்ஆனையும் ஓர் இரவில் அல்லது ஒரு நாளில் ஓத இஸ்லாத்தில் அனுமதியே கிடையாது. இது நபியவர்களின் வழிமுறைக்கு எதிரான பாவச் செயலாகும்.
ஒரே இரவிலென்ன? ஒரு நாளிலோ, இரண்டு நாளிலோ கூட குர்ஆனை ஓதிமுடிப்பது பாவமான காரியமாகும். குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அதனை ஓதும் போது அதற்குரிய கண்ணியத்துடன் நிறுத்தி நிதானமாக ஓதவேண்டும் என்பதற்காகத் தான் நபியவர்கள் இவ்வாறு நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!’’ என்று கூறினார்கள். அப்போது நான், “(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். “அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 5054
“ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்றார்கள். “இதை விட அதிகமாக (ஓத) எனக்கு சக்தி உள்ளது!’’ என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்து முடிவில், “மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (1978)
அதிகப்பட்சம் ஏழு அல்லது மூன்று நாட்களுக்குக் குறைவாக குர்ஆனை ஓதி முடிப்பது கூடாது எனும் போது, நான் ஒரே இரவில் குர்ஆனை ஓதி முடித்துவிட்டேன் என்று கூறுவது இஸ்லாத்தின் பார்வையில் சாதனையல்ல. மாறாக இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் வேதனையாகும்.
சில பெரியார்கள் இவ்வாறு ஒரே இரவில் ஓதியிருக்கின்றார்களே எனச் சிலர் கூறலாம். நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக யார் செய்திருந்தாலும் அது நமக்கு ஆதாரமாகாது. அதைப் பின்பற்றுவதும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் கடமையாகாது. நபியவர்களின் வழிகாட்டுதலைத் தான் நாம் நம் உயிருக்கும் மேலாகப் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(அல்குர்ஆன் 33:21)
நம்பிக்கை கொண்டோருக்குத் தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். இதை நாம் நம்முடைய உள்ளத்தில் முதலில் பதிய வைக்க வேண்டும். இதன் அடிப்படையில் அபூபக்கர் அல்கத்தானி செய்தது மார்க்கத்திற்கு முரணான காரியமாகும்.
12 ஆயிரம் ஒரு பச்சையான பொய்!
கஅபாவைச் சுற்றி வரும் போது 12 ஆயிரம் தடவை குர்ஆனை ஓதி முடிப்பார் என்பது ஒரு பச்சைப் பொய்யாகும். கஃபாவை ஒரு முறை வலம் வர அல்லது சுற்றி வர அரைமணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும் மொத்தக் குர்ஆனில் என்ன தான் ராக்கெட் வேகத்தில் ஓதினாலும் 15 நிமிடத்திற்கு மேல் ஒரு பகுதியை (ஒரு ஜுஸ்வை) தாண்டி ஓதமுடியாது. அரை மணி நேரம் என்றால் இரண்டு ஜுஸ்உக்கள் ஓத முடியும். மொத்தம் இது போன்று 7 சுற்றுக்கள் சுற்றினால் 14 ஜுஸ்உக்கள் தான் ஓத முடியும். அதாவது மொத்த குர்ஆனில் பாதிக்கும் குறைவாகத்தான் ஓத முடியும். 12000 தடவை குர்ஆன் எப்படி ஓத முடியும்? அது அசாத்தியமான ஒன்று.
இப்படித் தான் சூஃபிஸ ஞானிகள் வாழ்க்கையில் கதைகள் மலிந்து காணப்படும். இந்தக் கதையில் ஒருக்கால் இரவெல்லாம் கண்விழித்து, தூங்காமல் ஓய்வெடுக்காமல் வணங்கியிருப்பாரானால் அது அவரது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்பாடாகும். இதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை.
இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதுமாதிரி தூக்கத்தைத் துறந்து வணங்கிய ஒரு சகோதரருக்குப் போட்ட தடையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாட்கள்!’ என்றார்கள்.
‘அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) வயோதிகம் அடைந்த பின் ‘நபி(ஸல்) அவர்களின் சலுகைகளை நான் ஏற்காமல் போய் விட்டேனே’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்!’ என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னி ஆஸ் (ரலி)
நூல்: புகாரி 1975
இதுதான் தூய இஸ்லாத்தின் மார்க்க வழிமுறையாகும். இந்தத் தடையைத் தாண்டி வணக்கம் என்ற பெயரில் குர்ஆன் ஓதுவதில் ஒருவர் ஈடுபடுவாரேயானால் அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவாராவர்.
எழுத்தாளர் முஹம்மது ஹுசைன் அவர்களின் இந்த ஆக்கத்தை ஏகத்துவம் மாத இதழ் விமர்சனம் செய்வதற்கு அடிப்படைக் காரணம் சூஃபி, ஞானி என்ற வாழ்க்கை வரலாறுகளில் களமிறங்கினால் அவை அனைத்தும் பொய்களும் முரண்பாடுகளும் நிறைந்தவையாகும். அதனால் முஸ்லிம்களுக்கும் பலனில்லை. பிறமத சகோதரர்களுக்கும் பலனில்லை.
மொத்தத்தில் ஒரு நாளிதழ் இஸ்லாமிய போதனைக்காக ஒரு கணிசமான பகுதியை ஒதுக்குகின்றது என்றால் அது பாராட்டுக்குரியது. ஆனால் அதில் எழுதும் எழுத்தாளர்கள், குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை எழுதினால் அது இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கும் பிறமத சகோதரர்களுக்கும் எடுத்துச் சொன்னதாக அமையும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கிறோம்.

மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம் – தொடர் 2
ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம்
ஆர். ரஹ்மத்துல்லாஹ்

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும்.
திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல், முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும்.
ஒரு திட்டம் நீண்ட நாட்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் செயல்படுபவரே தலைவர். எதிர்கால விளைவுகளை ஓரளவு அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பது அவசியம். பெரிய விஷயங்களை நன்கு கவனித்துச் செயல்படுத்தும் அதே வேளையில் சின்ன விஷயமாக இருந்தாலும் அக்கறை செலுத்தி, கவனத்துடன் செயல்படும் பாங்கு உள்ளவராக இருக்க வேண்டும்.
சிறந்த வல்லமை பெற்றவராக இருப்பதுடன் நேர்மை, நம்பிக்கை, நாணயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஊழல் கறை படியாதவராக, ஆடம்பரத்தில் திளைக்காதவராக, லஞ்ச லாவண்யங்களில் புரளாதவராக இருப்பவரே மக்கள் எதிர்பார்க்கும் தலைவர்.
இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்மறையாகத் தான் தற்போதைய அரசியல்வாதிகள் திகழ்கிறார்கள். இதில் படித்த அரசியல்வாதி, படிக்காத அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம் இல்லை.
படிக்காத அரசியல்வாதிக்கும் படித்த அரசியல்வாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
படிக்காதவன் கொள்ளை அடித்து மாட்டிக் கொள்வான்.
படித்தவன் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பான்.
நாட்டையே மாற்றுபவன் அறிவாளி!
நாட்டை ஏமாற்றுபவன் அரசியல்வாதி!
வக்கற்ற அரசியல்வாதிகளால் வாடும் மக்களின் வயிறெரிந்த வார்த்தைகள் தான் இவை. இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகள் இருந்தால் நாடு ஐந்து வருடமல்ல! ஐயாயிரம் வருடமானாலும் அது உருப்படப் போவதில்லை.
ஒரு நாடு உருப்பட வேண்டுமென்றால் அதை ஆட்சி செய்பவன் உருப்படியாக இருக்க வேண்டும்.ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டுமென்றால் அந்த நாட்டில் நல்லரசு அமைய வேண்டும். நல்லதொரு ஆட்சியாளரே அந்த நாட்டை வல்லமை மிக்க நாடாக மாற்றுவார்.
அதன் முன்னோடியாகத்தான் நபிகளார் அரபுலகத்தில் நல்ல அரசை அமைத்து, பிறகு வல்லரசாக மாற்றினார்கள்.
இந்த அசுர மாற்றத்திற்கு நபிகளார் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள் தான். பத்தாண்டுகளில் நாடு வல்லரசாக அமைய நபிகளார் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
துணிவு
துணிவு என்பது ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும். அன்பு, இரக்கம் என்று ஒரு புறமும் துணிவு, வீரம் என்று மறுபுறமும் ஒரு மனிதனிடம் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
தன் நாட்டைக் காக்கவும், எதிரிகளிடம் விவேகத்துடன் பல்வேறு பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ளவும் ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய பண்பு துணிவு.
அதற்கு நபிகள் நாயகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒருநாள் (ஏதோ ஒரு சப்தத்தினால்) மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி சப்தம் வந்த திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். ‘‘அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்!’’ என்று கூறிக் கொண்டே வந்தனர். “(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது” எனவும் குறிப்பிட்டனர்.
நூல்: புகாரி 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212
சேணம் பூட்டாத குதிரையில் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும் அவசியம்.
ஒருவேளை எதிரிகள் வந்தால் தன்னந் தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
அபூ தல்ஹாவின் வீடு, நபி (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு, துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்கள்.
எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு நள்ளிரவில், தன்னந்தனியாக எவ்வளவு பெரிய வீரரும் போக மாட்டார்.
அதுவும் மாபெரும் தலைவராக, ஆட்சியாளராக இருப்பவர்கள் இதுபோன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள்.
ஆயினும், தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு, மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் அந்த மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.
தொடரும் இன்ஷா அல்லாஹ்…

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே!
சுலைமான் (இஸ்லாமியக் கல்லூரி)

வேதனைகளாலும் சோதனைகளாலும் மன அழுத்தங்களாலும் சூழப்பட்டது தான் இந்த உலக வாழ்க்கை! இதுபோன்ற சோதனைகளிலிருந்து நம்மை மீட்டெடுத்த அபூர்வ அருட்கொடை தான் இஸ்லாம்.
நாம் எதை வாழ்க்கையின் அடித்தளமாக உருவாக்கி வைத்திருக்கிறோமோ அந்த இன்பங்களாலும் சில சமயம் வேதனைகள் ஏற்படும். பொருளாதாரம், பெண்ணாசை போன்றவையும் இதில் அடங்கும். இத்தகைய உலகக் கவர்ச்சிகளால் நாம் நேரடியாகச் சோதனைகளைச் சந்திக்க நேரலாம்.
இதுபோன்ற சமயத்தில் எக்காலத்திற்கும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தை, எக்காரணத்தைக் கொண்டும் இழக்க மாட்டேன் என்று ஒரு முஸ்லிம் உறுதியேற்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் இந்தக் கவர்ச்சிகளால் ஒரு முஸ்லிமின் உள்ளம் சிறை பிடிக்கப்பட்டு, அதற்காக இந்த மார்க்கத்தை வளைத்து விடலாம் என்ற எண்ணம் ஒருவனிடம் தோன்றி விட்டால் அவன் இஸ்லாம் என்ற தடத்தில் இனி பயணிக்க முடியாது.
இது கற்பனையல்ல! பின்வரும் சம்பவத்தால் நமக்குக் கற்பிக்கப்பட்ட பாடம்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போரின் போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச்செல்வமாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப்பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) ‘வாதீ (அல்குரா)’ எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை ‘பனுள்ளுபைப்’ குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார். அவர் ‘ரிஃபாஆ பின் ஸைத்’ என்று அழைக்கப்பட்டார்.
நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்!” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச்செல்வங்கள் பங்கிடும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 183
மேற்கண்ட சம்பவத்தில் அம்பு தைக்கப்பட்ட உடன், அவர் ஷஹீதாகி விட்டார் என்பதை அறிந்து, நபித்தோழர்களின் உள்ளத்தில் உருவான மகிழ்ச்சியே அவர் முஸ்லிம்தான் என்பதற்குப் போதுமான சான்று.
தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, கம்பீர நடை போட்டு சுவனத்தில் நுழைய வேண்டிய ஒரு முஸ்லிம் நரகத்தில் எரிக்கப்பட்ட பின்னணி என்ன?
அவருக்கு, போர் செல்வத்தை நபிகளார் தான் பங்கிடுவார்கள் என்ற உண்மை தெரியாமல் இல்லை. ஆனாலும் அற்பமான ஒரு போர்வையே குற்றவாளிக்கான விலங்காக அவரது கரத்தை ஆக்கிரமித்தது. உள்ளத்தைத் தடுமாறச் செய்தது. இறுதியில் நரகமே அவருக்குப் போக்கிடமானது.
எப்படி இருந்தவர்களும் இந்தக் கவர்ச்சி, தடுமாற்றம் என்ற போராட்டத்தில் சிக்கிவிட்டால் அவர்களின் நிலை எப்படி ஆகிவிடுகின்றது என்பதற்குப் பின்வரும் வசனம் ஓர் உதாரணம்.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
அல்குர்ஆன் 9:25
மேலே சுட்டிக்காட்டப்பட்ட செய்தியின் கருத்தாழத்தை நம்மால் உணர முடிகிறது.
கூட்டத்தின் எண்ணிக்கையை வைத்து இஸ்லாத்தின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடாது, போர்க்களத்தைச் சந்தித்து விட்டால் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பன போன்ற போதனைகள் நபித்தோழார்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனினும் ஹுனைன் களத்து எண்ணிக்கையின் கவர்ச்சி அவர்களை மிகைத்து விட்டது.
எனவே, அல்லாஹ்வின் பாராட்டுக்களால் அலங்கரிக்கப்பட வேண்டிய சமுதாயம், குர்ஆனால் கண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
சில சமயம், அன்பின் உச்சியில் வைத்துப் பார்த்தவர்களை நாம் இழக்கும் போது உண்டாகும் கோபம், நம் கொள்கைப்பிடிப்பை அசைத்துப் பார்க்கும்.
இதோ! அத்தகைய தடுமாற்றத்தையும் தன் பாதத்தில் போட்டுப் புதைத்த வரலாறு.
உஹதுப்போர் நடந்த போது இணை வைப்பவர்கள் (ஆரம்பத்தில்) தோற்கடிக்கப் பட்டார்கள். உடனே, இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று (முஸ்லிம்களாகிய) தமது பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.
அப்போது, அங்கு இருந்த தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்களின் முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!” என்று (உரக்கச்) சொன்னார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் அவரை விட்டு வைக்கவில்லை. இறுதியில், அவரை (தாக்கிக்) கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிபானாக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3290
தன் தந்தை கொலை செய்யப்படுகிறார். கொன்றவர்கள் முஸ்லிம்கள்.
தன் கண் முன்னாலேயே தன் தந்தை கொல்லப்படுவதால் ஏற்படும் உச்சக்கட்டக் கோபம், அந்தக் கட்டமைப்பை விட்டே அவரை வெளியேற்றி விடும். ஆனால், இந்த நேரத்திலும் தடுமாற்றம் என்ற வழிகேட்டை, மன்னிப்பால் தகர்த்து எறிந்த வரலாறு நம் உள்ளத்தைப் பலப்படுத்துகின்றது.
அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே! உங்கள் மறுமை வாழ்க்கையைச் சிதைக்கும் சோதனைகள் உங்களை எதிர்கொண்டால், உங்கள் உள்ளத்தின் உறுதியால் அதைத் தரைமட்டமாக்கி விட்டு, ஏகன் தந்த அற்புத மார்க்கத்தை ஆரத் தழுவுவோமாக!

ஏழு வயதில் தொழுவதற்கு ஏவ வேண்டுமா?
சபீர் அலி

சில ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவையாக இருக்கும். அவற்றை ஆதாரப்பூர்வமான செய்திகள் என்று நம்பியே மக்கள் பிறருக்கும் அதை உபதேசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை பலவீனமானவையாக இருக்கும்.
அவ்வாறான செய்திகளில் ஒன்றுதான், “குழந்தைகளுக்கு ஏழு வயதில் தொழக் கட்டளையிட வேண்டும். பத்து வயதில் தொழுமாறு அடித்து அறுவுறுத்த வேண்டும்” என்ற செய்தி.
இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் தொடர்களும் பலவீனமானதாகும்.
முதல் அறிவிப்பு
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (1/ 185)
495 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ – يَعْنِى الْيَشْكُرِىَّ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ سَوَّارٍ أَبِى حَمْزَةَ – قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِىُّ الصَّيْرَفِىُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ யு.
السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (2/ 229)
3361- وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِىُّ أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِىٍّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ الْقَزَّازُ بِمِصْرَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى كَاتِبُ الْعُمَرِىِّ حَدَّثَنَا مُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ عَنِ اللَّيْثِ بْنِ أَبِى سُلَيْمٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« عَلِّمُوا صِبْيَانَكُمُ الصَّلاَةَ فِى سَبْعِ سِنِينَ ، وَأَدِّبُوهُمْ عَلَيْهَا فِى عَشْرِ سِنِينَ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ أَمَتَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلاَ تَنْظُرْ إِلَى عَوْرَتِهِ وَالْعَوْرَةُ فِيمَا بَيْنَ السُّرَّةِ وَالرُّكْبَةِ யு.
உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது அவர்களை அதற்காக அடியுங்கள்.
இச்செய்தியின் இந்த அறிவிப்பு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை அவரிடமிருந்து அவரது மகன் ஷுயைப் அறிவிக்க, அவரிடமிருந்து அம்ரு என்ற அவரது பேரன் அறிவிக்கிறார்.
அம்ரு என்பவரிடமிருந்து ஸவ்வார் பின் தாவூத் என்பவரும் லைஸ் பின் அபீ சுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள்.
இவ்விருவருமே ஹதீஸ்துறையில் ஏற்றுக் கொள்ளத்தகாத பலவீனமானவர்கள் ஆவர்.
ஸவ்வார் பின் தாவூத் என்பவரது அறிவிப்புகள் அபூதாவூத், அஹ்மத், தாரகுத்னீ, பைஹகீ, ஹாகிம், இப்னு அபீ ஷைபா உள்ளிட்ட பல நூற்களில் இடம்பெற்றுள்ளது.
ஸவ்வார் பின் தாவூத் பற்றிய விமர்சனங்கள்
تهذيب التهذيب ـ محقق (4/ 235)
وقال اسحاق بن منصور عن ابن معين ثقة وقال الدارقطني لا يتابع على احاديثه فيعتبر به وذكره ابن حبان في الثقات قلت: وقال يخطئ.
ஸவ்வார் பின் தாவூத் என்பவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.
இவரது ஹதீஸ்கள் துணைச் சான்றாகக் கூட எடுக்கப்படாது என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
تهذيب الكمال 742 (12/ 236)
قال أبو طالب (2) ، عن أحمد بن حنبل : شيخ بصري لا بأس به ،
இவர் பஸராவைச் சார்ந்தவராவார். இவரைக் கொண்டு பிரச்சனையில்லை என்று இமாம் அஹ்மது அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 4, பக்கம் 235, தஹ்தீபுல் கமால், பாகம் 12, பக்கம் 236
இவைதான் ஸவ்வார் பின் தாவூத் என்பவர் தொடர்பான கருத்துக்களாகும்.
இதுவல்லாமல் இவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு ஹிப்பானும் கூறியுள்ளார்.
இமாம் ஹிப்பான் ஒருவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
இவர் தொடர்பான மேற்குறிப்பிட்ட இக்கருத்துக்கள் இவரை பலமானவர் என்று முடிவெடுப்பதற்குப் போதுமானவைகளாக இல்லை.
இந்தக் கருத்துக்களை வைத்து இவர் பலமானவரில்லை என்றாலும் ஹஸன் என்ற நடுத்தரத்தைச் சார்ந்தவர் என்று சில இமாம்கள் கூறுகின்றனர்.
தஹபீ, பஸ்ஸார் போன்ற இமாம்கள் இவர் பலவீனமானவர் என்றே முடிவெடுத்துள்ளனர்.
எனவே, இந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளத்தக்க செய்தி என்ற தரத்தை எட்டுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாததால் இதை ஏற்றுக் கொள்ள இயலாது.
ஸவ்வார் பின் தாவூத் என்ற இந்த அறிவிப்பாளரின் பெயர் சில இடங்களில் தாவூத் பின் ஸவ்வார் என்று தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் அனைத்து அறிவிப்புகளிலும் அம்ரு பின் ஷுயைப் என்பவர் வழியாகவே நேரடியாக அறிவிக்கிறார். பைஹகீ என்ற ஹதீஸ் கிரந்தத்தில் மாத்திரம் இவருக்கும் அம்ரு பின் ஷுயைபிற்கும் மத்தியில் முஹம்மது பின் ஜுஹாதா என்பவர் இடம்பெறுவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சில குளறுபடிகளும் இந்தச் செய்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்டதைப் போல் இந்தச் செய்தியை அம்ரு பின் ஷுயைப் வழியாக லைஸ் பின் சுலைம் என்பவரும் அறிவிக்கிறார்.
அவர் இடம்பெறும் அறிவிப்பு பைஹகீ என்ற ஹதீஸ் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
லைஸ் பின் அபீ சுலைம் பற்றிய விமர்சனங்கள்
تهذيب الكمال 742 (24/ 282)
قال عَبد الله (1) بن أحمد بن حنبل : سمعت أبي يقول : ليث ابن أَبي سليم مضطرب الحديث ، ولكن حدث عنه الناس.
وَقَال معاوية (2) بن صالح عن يحيى بن مَعِين : ليث بن أَبي سليم ضعيف إلا أنه يكتب حديثه (3).
وَقَال أبو معمر القَطِيعِيّ (3) : كان ابن عُيَيْنَة يضعف ليث بن أَبي سليم (4).
وَقَال أيضا (2) : سمعت أبا زرعة يقول : ليث بن أَبي سليم لين الحديث ، لا تقوم به الحجة عند أهل العلم بالحديث.
லைஸ் பின் சுலைம் என்பவர் ஹதீஸில் குளறுபடி செய்யக்கூடியவர் என்று இமாம் அஹமத் பின் ஹம்பல் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவரை இமாம் இப்னு உயைனா பலவீனப்படுத்தியுள்ளார்.
இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்றும் ஹதீஸ்துறை வல்லுநர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள் என்றும் இமாம் அபூ ஸுர்ஆ கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம் 24, பக்கம் 282
மேற்குறிப்பிட்ட விமர்சனங்களும் இது அல்லாத இன்னும் ஏராளமான விமர்சனங்களும் இவர் விஷயத்தில் கூறப்படுவதால் இவருடைய அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இரண்டாம் அறிவிப்பு
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (1/ 185)
494 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى – يَعْنِى ابْنَ الطَّبَّاعِ – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « مُرُوا الصَّبِىَّ بِالصَّلاَةِ إِذَا بَلَغَ سَبْعَ سِنِينَ وَإِذَا بَلَغَ عَشْرَ سِنِينَ فَاضْرِبُوهُ عَلَيْهَا யு.
இந்த அறிவிப்பு ஸபிரா பின் மஃபத் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது.
இது அபூதாவூத், அஹ்மத், பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹுஸைமா, இப்னு அபீஷைபா உள்ளிட்ட பல நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அனைத்து இடங்களிலும் அவரது பேரன் அப்துல் மலிக் பின் ரபீஃ என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.
அப்துல் மலிக் பின் ரபீஃ பற்றிய விமர்சனங்கள்
الجرح والتعديل (5/ 350)
سئل يحيى بن معين عن احاديث عبد الملك بن الربيع ابن سبرة عن ابيه عن جده فقال: ضعاف.
المجروحين (2/ 132)
عبد الملك بن الربيع بن سبرة (3)، يروى عن أبيه، روى، روى عنه أولاده والقرباء وحرملة بن عبد العزيز وإبراهيم بن سعيد، منكر الحديث جدا، يروى عن أبيه ما لم يتابع عليه.
அப்துல் மலிக் அறிவிக்கும் செய்திகள் பற்றி இமாம் இப்னு மயீனிடம் கேட்கப்பட்ட போது, அவை பலவீனமானவை என்று குறிப்பிட்டார்.
இவர் ஹதீஸ் துறையில் அதிகம் மறுக்கப்படக் கூடியவர் என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 350, மஜ்ரூஹீன், பாகம் 2, பக்கம் 132
யாரும் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிடாமல் இவர் தொடர்பாகக் குறைகளே மிகைத்து இருக்கும் காரணத்தினால் இவர் பலவீனமானவர் ஆவார்.
எனவே, இந்தச் செய்தியின் இரண்டாவது அறிவிப்பும் பலவீனமடைகிறது.
மூன்றாம் அறிவிப்பு
سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (1/ 432)
891- حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مُرُوهُمْ بِالصَّلاَةِ لِسَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلاَثَ عَشْرَةَ
இந்த அறிவிப்பு அனஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது.
இது தாரகுத்னீ, தப்ரானீ உள்ளிட்ட சில நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இடம்பெறும் அனைத்து இடங்களிலும் தாவூத் பின் முஹப்பிர் என்பவர் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்களை அதிகம் இட்டுக்கட்டக் கூடியவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.
தாவூத் பின் முஹப்பிர் பற்றிய விமர்சனங்கள்
تهذيب الكمال 742 (8/ 445)
قال عَبد الله بن أحمد بن حنبل (1) : سَأَلتُ أبي عن داود بن المحبر ، فضحك ، وَقَال : شبه لا شيء ، كان لا يدري ما الحديث.
وقَال البُخارِيُّ مثله (2).
وَقَال علي ابن المديني (2) : ذهب حديثه.
وَقَال إبراهيم بن يعقوب الجوزجاني (3) : كان يروي عن كل ، وكان مضطرب الامر.
وَقَال أبو زُرْعَة (4) : ضعيف الحديث.
وَقَال أبو حاتم (5) : ذاهب الحديث عبر ثقة.
وَقَال أبو داود (6) : ثقة شبه الضعيف. بلغني عن يحيى فيه كلام أنه يوثقه.
وَقَال النَّسَائي (7) : ضعيف.
وَقَال صالح بن محمد البغدادي (8) : ضعيف ضاحب مناكير.
وَقَال في موضع آخر (1) : يكذب ، ويضعف في الحديث.
وَقَال الدَّارَقُطنِيّ (2) : متروك الحديث.
وَقَال في موضع آخر ، فيما حكاه عنه عبد الغني بن سَعِيد (3) : كتاب”العقل”وضعفه أربعة : أولهم ميسرة بن عبدربه ، ثم سرقه منه داود بن المحبر ، فركبه بأسًانيد غير أسانيد ميسرة ، وسرقه عبد العزيز بن أَبي رجاء فركبه بأسًانيد أخر ، ثم سرقه سُلَيْمان بن عيسى السجزي ، فأتى بأسًانيد أخر ، أو كما قال الدَّارَقُطنِيّ.
தாவூத் பின் முஹப்பிர் ஹதீஸ் என்றால் என்னவென்றே அறியமாட்டார் என்று இமாம் அஹ்மதும் புகாரியும் கூறியுள்ளார்கள்
ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூ சுர்ஆ, நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.
இவர் பலவீனமானவர் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்றும், இவர் பொய் சொல்பவர் என்றும் இமாம் பக்தாதீ கூறியுள்ளார்.
இவர் ஹதீஸ்துறையில் விடப்பட வேண்டியவர் என்றும், இவர் மைஸிரா என்பவரிடமிருந்து ஹதீஸைத் திருடி சம்பந்தமில்லாத வேறு அறிவிப்பாளர் தொடரை இணைத்து விடுவார் என்றும் இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம் 8, பக்கம் 445
இட்டுக்கட்டக்கூடிய ஒருவருக்கு ஹதீஸ் கலையில் என்னென்ன வார்த்தைகள் புலங்கப்படுமோ அத்தகைய கருத்துக்கள் இவர் விஷயத்தில் கூறப்படுவதால் இவரை அறிஞர்கள் இட்டுக்கட்டக்கூடியவர் என்று முடிவெடுத்துள்ளனர்.
எனவே, இந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளத் தகாத, இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும்.
நான்காம் அறிவிப்பு
مسند البزار 18 مجلد كاملا (17/ 189)
9823- حَدَّثَنا مُحَمَّد بن حرب الواسطيّ , حَدَّثَنا مُحَمَّد بن ربيعة , حَدَّثَنا مُحَمَّد بن الحَسَن العوفي , عن مُحَمَّد بن عبد الرحمن , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قال : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : علموا أولادكم الصلاة إذا بلغوا سبعا واضربوهم عليها إذا بلغوا عشرا وفرقوا بينهم في المضاجع.
இந்த அறிவிப்பு அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு முஸ்னத் அல்பஸ்ஸாரில் இடம்பெறுகிறது.
இதில் முஹம்மது பின் ஹஸன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.
முஹம்மது பின் ஹஸன் பற்றிய விமர்சனங்கள்
تهذيب التهذيب ـ محقق (9/ 103)
قال الحسين بن الحسن الرازي عن ابن معين ثقة وقال أبو زرعة لين الحديث وقال أبو حاتم ضعيف الحديث وقال البخاري لم يصح حديثه
قلت: وقال أبو جعفر العقيلي مضطرب الحفظ وكناه أبا سعيد وقال ابن حبان أبو سعيد كوفي منكر الحديث جدا وهو الذي يقال له محمد بن الحسن ابن عطية وقال الذهبي ضعفوه ولم يترك.
முஹம்மது பின் ஹஸன் என்பவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூஸுர்ஆ, அபூ ஹாதம் ஆகியோர் கூறியுள்ளனர்.
இவரது ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.
இவரது மனனத்தன்மை குளறுபடியாகி விட்டது என்று இமாம் உகைலீ கூறியுள்ளார்.
இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்கம் 103
மேற்படி விமர்சனங்களுக்குரிய அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.
ஐந்தாம் அறிவிப்பு
معرفة الصحابة لأبي نعيم (4/ 1809)
4574 – أَخْبَرَنَاهُ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَجَّاجِيُّ، إِجَازَةً، ثنا. . . . ابْنُ عَبْدَانَ، ثنا حَمَّادُ بْنُ خَالِدٍ، ثنا عَلِيُّ بْنُ عَزَّابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ، ثنا أَبُو يَحْيَى، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ إِذَا بَلَغُوا سَبْعَةً. . .யு الْحَدِيثَ
இந்த அறிவிப்பு மஃரிஃபத்துஸ் ஸஹாபா எனும் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.அவரிடமிருந்து அவரது மகன் அம்ரு அறிவிக்கிறார்.
இவரைப் பற்றிய ஒரு கருத்தும் அறிவிப்பாளர் தரம் பிரிக்கும் நூற்களில் இடம்பெறவில்லை.
இத்தகைய நிலையில் அறிவிப்பாளர்களை ஹதீஸ் கலையில் ‘மஜ்ஹூலுல் ஹால்’ என்று குறிப்பிடுவர்.
இந்த நிலையில் உள்ள அறிவிப்பாளர் ஏற்றுக்கொள்ளத் தக்கவர் அல்ல என்பதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.
எனவே, இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாக உள்ளதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளவோ, பிறருக்குச் சொல்லவோ கூடாது.
குழந்தைகளை ஏழு வயதில் தொழக் கட்டளையிட வேண்டும் என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனம் என்றாலும், இன்ன வயது எனத் தீர்மானிக்காமல் குழந்தைகளுக்கு எவ்வளவு சிறுபிராயத்திலிருந்து தொழுகை உட்பட அனைத்து மார்க்கக் காரியங்களையும் கற்றுக் கொடுக்கிறோமோ அது நல்லது தான். ஏனெனில் சிறு வயதில் கற்றுக் கொடுப்பது பசுமரத்தாணி போல் பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்துவிடும்.