உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

வட மாநில மாணவர்களை மீட்பதில் முனைப்பு காட்டுவதை போல தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முனைப்பு காட்டுவதில்லை.
உக்ரைனிலிருந்து மீண்டு வந்த பல மாணவ, மாணவியர்கள் அளிக்கும் பேட்டியில் இப்படி குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
யுத்த மழை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் சாதி பார்த்து மதம் பார்த்து உதவிக்கரம் நீட்டுவது எப்படி அருவருப்பானதோ அதுபோலவே கட்சி மற்றும் மாநிலம் பார்த்து உதவிகள் செய்வதும் அருவருப்பானதே.
நெருக்கடியான நேரங்களில் அனைத்து மக்களையும் பாகுபாடின்றி மீட்பதே ஒரு அரசின் கடமையாகும். குண்டு மழை பொழிவிற்கு மத்தியில் பதுங்கு குழிகளிலும் இரயில் தண்டவாளத்திற்கு அடியிலும் உயிரை பிடித்துக் கொண்டு தவிக்கும் இந்திய மாணவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி மத்திய அரசு துரிதமாக மீட்க வேண்டும்.
இப்போதைக்கு அத்தனை இந்தியர்களின் கோரிக்கை அது ஒன்று தான்.