டெல்லியில் முஸ்லிம் கடைகள் இடித்த போது நியாயமாக நீதி மன்றம் தடை விதித்தது ஆறுதலாக எடுத்து கொள்ளலாமா?

நீதி மன்றம் அளித்த தடை ஆறுதல் அளித்தாலும் அது நிரந்தரமல்ல, சில நாட்கள் கழித்து விதி முறைகள் மீறியதாக கட்டிடங்களை இடிக்க நீதி மன்றமே உத்தரவு இடலாம்.
கட்டிடங்கள் விதி முறைகளை மீறி கட்டியது விவகாரம் அல்ல, கடைகள் இடிக்கப்பட்டதன் பின்னணியே சங் பரிவாரங்களுக்கு முஸ்லிம்கள் பதில் தாக்குதல் கொடுத்தது தான் அதிகாரிகளுக்கு எரிச்சலை கொடுத்து விட்டது.
சங்பரிவாரங்களுக்கு முஸ்லிம்கள் பதிலடி கொடுப்பதை அனுமதித்தால் கலவரம் செய்ய காசுக்கு ஆள் பிடிக்க முடியாது என்று எண்ணிய டெல்லி அரசும், அமீதுஷா காவல்துறையும் அவசர அவசரமாக முன்னறிவிப்பு இல்லாமல் முஸ்லிம்களின் வீடுகள் கடைகளை இடிக்க களம் இறங்கியது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பாரபட்சத்தை நீதி மன்றம் தடுத்து நிறுத்தி விட்டாலும் எல்லா விவகாரங்களிலும் முஸ்லிம்களிடம் நீதி மன்றங்கள் நியாய உணர்வோடு நடந்து கொண்டதில்லை
இந்தியாவின் 500 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நீதி மன்ற தீர்ப்பை எதிர் பார்த்து முஸ்லிம்கள் அமைதிகாத்தனர். ஆனால் நீதி மன்றங்கள் பாபர் மசூதி விசயத்தில் சட்டத்தின் படி நீதி வழங்கியதா?
இடித்தவனுக்கே இடம் சொந்தம் என்று தீர்ப்பளித்தது. உலகில் எந்த நீதிமன்றமும் இப்படி தீர்ப்பளிக்குமா? முஸ்லிம்கள் விவகாரத்தில் சட்டம் நீதி நேர்மை நியாம் எல்லாம் பின்னுக்கு சென்று விடுகிறது, இதில் வேடிக்கை என்ன வென்றால் இடித்தது தவறு என்று தீப்பு வாசித்தவர்கள் இறுதியில் இடித்தவர்களுக்கே இடம் சொந்தம் என்றார்கள்.
இது மட்டும் அல்ல, குற்றம் நிரூபணம் ஆகாத அப்சல் குருக்கு கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்கு தண்டனை கொடுத்தாகள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று சொன்ன காந்தியின் தேசத்தில் தான் இது போன்ற தீர்ப்புகள் வாசிக்கப்பட்டன.
ஒட்டகம் குர்பானி இடப்படுவதை தடை செய்ததும் நீதி மன்றங்கள் தானே ஒட்டகம் காட்டு விலங்கு என்று வினோத தீர்ப்பளித்ததே.
நமது ஊர்களில் நடக்கும் சர்க்கஸ் கொட்டகையில் சிங்கம், புலியை கூண்டில் அடைத்து வைப்பது போல ஒட்டகத்தை கூண்டில் அடைத்து வைப்பது இல்லை, ஒட்டகங்கள் திறந்த வெளியில் விடப்பட்டிருக்கும்.
மரங்கள் நிறைந்த பகுதியை காடுகள் என்று அழைக்கிறோம். மரங்களே இல்லாத வெறும் மண் திட்டுக்கள் கொண்ட பாலைவனத்தில் வாழும் ஒட்டகத்தை காட்டு விலங்காக கருதி நீதி மன்றங்கள் வினோத தீர்ப்பளித்தது.
சாமானியன் விடயத்தில் சட்டங்கள் ஏடுகளில் தான் நடை முறையில் இல்லை என்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் விசயத்தில் ஏடுகளில் இருக்கும் சட்டங்கள் கூட மாற்றி எழுதப்படுகின்றன.
நீதி மன்றங்களில் கூட முஸ்லிம்களை கிள்ளு கீரையாக பார்ப்பது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டது,
சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை பாருங்கள், ஹிஜாப் அணிவது அவரவர் மதச் சுதந்திரம் என்று சட்டம் சொல்வதை நீதி மன்றம் பார்க்க வில்லை, இஸ்லாத்தில் இருக்கிறதா என்று ஆதாரம் கேட்டது, குர்ஆனில் ஆதரம் காட்டிய போதும் அதில் வலியுறுத்தி சொல்லப்பட வில்லை அதனால் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்று வினோத தீர்ப்பு சொன்னதே?
மதசார்பற்ற நாட்டில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு சரியா? இப்படித்தான் எல்லா மதத்தினரின் மத விவகாரத்தையும் நீதி மன்றம் பார்க்குமா? இந்து மதத்தினரின் விவகாரங்களில் வேதநூல்களில் இருந்து ஆதாரத்தை கேட்குமா?
அவர்கள் மத விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் போது ரிக் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றதா என்று பார்க்குமா? அல்லது அவர்களின் நம்பிக்கையையே நீதி மன்றம் ஆதாரமாக எடுத்து கொள்ளுமா? முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்களின் நம்பிக்கை என்று பார்க்கும் நீதி மன்றங்கள் முஸ்லிம்களிடம் குர்ஆனில் ஆதாரம் கேட்கிறது.
சாம்னிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதி மன்றங்கள் தானே அதன் கதவுகள் பூட்டிக் கொண்டால் எப்படி? முஸ்லிம்கள் விசயத்தில் யாரும் விதிவிலக்கல்ல, கடந்த கால நிகழ்வுகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.