6920. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘பொய்ச் சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது’ என்றார்கள்.5
Book :88