தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று அண்ணாமலை உளறி வருகிறாரே, அதன் உண்மை நிலை என்ன?

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்தது. அதிமுகவின் ஓட்டுக்களை பெற்றதால் நான்கு சட்டமன்ற தொகுதிகளை பெற்றார்கள். அதிமுகவின் ஓட்டுக்களை மறைத்து தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள்.
நடந்த முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் தொண்டர்களையும், வாக்குகளையும் இழக்கும் நிலை உணர்ந்து பாஜகவை கழட்டி விட்டது அதிமுக.
கழட்டி விடபட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வார்டாக சென்று வேட்பாளர்களை தேடி பிடித்து தான் பாஜகவினர் களம் கண்டார்கள். சுயேட்சையாக நின்றாலே வெற்றி பெறும் செல்வாக்கு உள்ளவர்களை விலைக்கு வாங்கியது பாஜக.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை பெற்று தாமரையின் வாக்குகள் போல் பிரச்சாரம் செய்தவர்கள், நகர் புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையின் வாக்குகளை பிஜேபியின் வாக்குகள் போல் பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜக சரிந்து வருகிறது என்பதற்கு தான் நடந்து முடிந்த இந்த தேர்தல் சான்றாக உள்ளது.
2011ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பெற்ற வெற்றிகளை கூட 2022ல் பெற முடியவில்லை என்பதை பார்க்கிறோம்.
இவர்கள் பெற்ற வெற்றிகளில் 65% குமரி மாவட்டத்தில் மட்டும்தான்.
கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான வார்டுகளிலும் டெபாசிட் இழந்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளது பாஜக.
பெரும் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் என்று சொல்லப்படுகிற எச்.ராஜா, நைநார் நாகேந்திரன் போன்றவர்களின் பகுதிகளில் கூட பாஜக பெரும் தோல்வியை தான் தழுவி உள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், அகில இந்திய பெண்கள் தலைவி என்று சொல்ல படுகின்ற வானதி சீனிவாசன் பகுதியிலும் கோவை மக்கள் பெரும் சரிவை தான் பரிசாக தந்துள்ளார்கள். கோவை மாநகராட்சி 98 இடங்களில் 0 தான் கிடைத்தது.
மாநகராட்சி, ஊராட்சி, பேருராட்சி என்று 12819 தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் வெற்றி பெற்றதை தவிர்த்து 12511 தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பல தொகுதிகளில் இவர்களுக்கு வேட்பாளர்கள் கூட கிடைக்கவில்லை. பல பகுதிகளில் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை.
ஒத்த ஓட்டு பாஜக இப்ப மூட்டை ஓட்டு பாஜக வாகத்தான் மாறி உள்ளது.
4000 ஓட்டுக்கள் உள்ள பகுதிகளில் இவர்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் தான் பதிவாகி உள்ளது. மற்ற 3999 பேர் இவர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. இது போல் நூற்றுக்கணக்கான தொகுதிகள் உள்ளது.
உதாரணத்திற்கு சில,
•திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் அசோகன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை.
•பவானி சாகர் பேரூராட்சி 11 வது வார்டில் நரேந்திரன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார்.
•கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியில் சரவணன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார்.
•விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேருராட்சியில் நிரோஷா என்பவர் ஒரே ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை.
•மதுரை மாவட்டம் மேலூரில் எட்டு ஓட்டுக்கள் வாங்கியுள்ளார்.
•செங்கல்பட்டு நகராட்சி 9 வது வார்டில் லோகேஷ் கண்ணன் ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார்.
•திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சியில் கிரிதரன் என்பவர் மூன்று ஓட்டுக்கள் வாங்கியுள்ளார்.
•முக்கூடல் பேரூராட்சியில் தேவி என்பவர் ஒரே ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை.
சமூக வலைதளங்களே மீம்ஸ்கள் மூலம் பாஜக வை கிண்டல் செய்யக்கூடிய நிலையில் பொய்யை திரும்ப், திரும்ப பேசி உண்மை ஆக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
10 மாவட்டங்களில் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. இதுவெல்லாம் தெளிவாக தெரிந்தும் அவர்கள் உளறி வருகின்றனர்.
பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு இது பெரிய விஷயமல்ல.