ஜிகாத் என்பது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு சொல்லப்படும் வார்த்தை. அநியாயத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் இஸ்லாம் ஜிகாத் என்று சொல்கிறது. ஆனால் பாசிச வெறியர்கள் மத மோதலை ஏற்படுத்த இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத பல வகையான பெயர்களில் ஜிகாத் என்பதை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
குர்ஆனிலோ, நபி மொழியிலோ கூறப்படாத விஷயங்களை எல்லாம் இவர்களாக கற்பனை செய்து பல ஜிகாத் களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இஸ்லாமியர்கள் இடத்தில் இவர்கள் சொல்லும் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை.
மதம் பார்க்காமல் காதலித்து இருவர் திருமணம் முடிப்பது என்பது எல்லா மதத்திலும் உள்ளது. முஸ்லிம் பெயர் தாங்கிகள் எங்காவது வேறு மதத்தவரை திருமணம் செய்தால் லவ் ஜிகாத் என்று பெயர் வைத்து அதன் மூலம் மத வெறுப்பு அரசியலை செய்து வந்தனர்.
பாஜக மகளிர் அணி தலைவி சுனிதா சின் கவுர் சொல்லும் போது முஸ்லிம் பெண்களை கும்பல் வல்லுறவு செய்ய வேண்டும் என்று பேசியுள்ளா£¢.
உபி மாநிலத்தில் யோகி இதையே பிரச்சாரமாக செய்தார். இரு இந்து பெண்ணை முஸ்லிம் திருமணம் முடித்தால் நூறு முஸ்லிம் பெண்களை நாங்கள் திருமணம் முடிப்போம் என்று பேசினார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மாற்றுக் கொள்கை சார்ந்தவர்களை திருமணம் முடிப்பதை இஸ்லாம் தடுத்து உள்ளது.
லவ் ஜிகாத் என்று ஆரம்பித்து புதுப் புதுப் பெயர்களில் ஜிகாத் பட்டியலை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்.
•வவ் ஜிகாத்
•கொரோனா ஜிகாத்
•பிரியாணி ஜிகாத்
•ஹிறிஷிசி ஜிகாத்
•ஹலால் ஜிகாத்
•பொருளாதார ஜிகாத்
ஹிஜாப் பிரச்சனையை கையில் எடுத்து அது முடிவதற்குள், திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடை போடக்கூடாது என்று சொன்னார்கள். அடுத்து ஹலால் இறைச்சியை கையில் எடுத்துள்ளார்கள்.
தற்போது பொருளாதார ஜிகாத் என்று எடுத்து இதன் மூலம் ஏதாவது வெறுப்பு அரசியல் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். இதற்கு தற்போது மக்கள் ஆதரவு இல்லை. பாஜகவிற்கு எதிராக மக்கள் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி சாப்பிடும் போராட்டத்தை கர்நாடகாவில் செய்து வருகின்றனர்.
மத வெறியும், மத வெறுப்பும் மக்களிடம் ஊட்டுவதை தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. உபியில் இப்படி ஊட்டி வளர்த்த மத வெறியால் சாலை முழுக்க மாடுகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து கர்நாடகாவை உபியாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் மத வெறுப்பு அரசியலை செய்வதற்கு காரணம் இவர்களிடம் நாட்டை முன்னேற்றும் எந்தத் திட்டமும் இல்லை. ஒவ்வொரு நாளும் எதாவது மத வெறுப்பை முன்னுறுத்தி பாஜக என்ற பெயரை மக்கள் உச்சரிக்க வேண்டும். அந்த அரசியலை வைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் இதை தவிர பாஜக வில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.