பாசிச பாஜக இல்லாத இந்தியா சாத்தியமாகுமா?

குஜராத்தில் மோடி ஆட்சியினால் பாலாறு, தேனாறு ஓடியதாக மக்களை ஏமாற்றி, மோடி என்ற பிராண்டை முன்னிறுத்தி கார்ப்பிரேட் கம்பெனிகள் மூலமாக பெறபட்ட பல கோடிகளை செலவு செய்து 2014 ல் பாஜகவினர் ஆட்சியை பிடித்தனர்.
வெளிநாட்டு அதிபர்கள் வருகையில் சுவர் மூலமாகவும், ஸ்கீரின் மூலமாகவும் மறைத்ததும் அம்பலமாகி குஜராத் மாடல் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது.
பாஜக வை கூடிய விரைவில் மக்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.
இந்தியாவின் பல மாநிலங்களில் அவர்களின் தேர்தல் வெற்றி படு மோசமாக உள்ளது. குதிரை பேரம் பேசி சொகுசு பங்களாக்களில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதுக்கி வைத்து நடக்கும் அரசியல் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. இதற்கு கூவத்தூரில் நடந்த தமிழக அரசியல் மிகப்பெரும் உதாரணமாக இருந்து வருகிறது.
பல மாநிலங்களில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் இன்றைய நிலை கவலைக்கிடமாக தான் உள்ளது.

  • மிசோரமில் 40 க்கு 1 இடம்.
  • ஆந்திராவில் 175 க்கு 0 இடம்.
  • கேரளாவில் 140 க்கு 1 இடம்
  • பஞ்சாபில் 117 க்கு 3 இடங்கள்.
  • தமிழகத்தில் 234 க்கு 4 இடங்கள்.
  • வங்காளத்தில் 294 க்கு 70 இடங்கள்.
  • தெலுங்கானாவில் 119 க்கு 3 இடங்கள்.
  • டெல்லியில் 70 க்கு 8 இடங்கள்.
  • ஒரிசாவில் 147 க்கு 22 இடங்கள்.
  • சிக்கீமில் 32 க்கு 12 இடங்கள்.
  • நாகாலாந்தில் 60 க்கு 12 இடங்கள்.
  • மேகாலயாவில் 60 க்கு 2 இடங்கள்.
  • பீகாரில் 243 க்கு 77 இடங்கள்.
  • யி&ரி இல் 87 க்கு 25 இடங்கள்.
  • கோவாவில் 40 க்கு 20 இடங்கள்.


மேற்கண்ட மாநிலங்களில் 1858 சீட்டுகளில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 260 மட்டும் தான் உள்ளது.
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் பல இடங்களில் ஈவிஎம் மிஷினை கொண்டு பல தில்லுமுல்லுகளை பாஜக செய்தது. தேர்தலில் வெற்றி பெற பல நரித் தனத்தையும் பாஜக கையாண்டது. மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டமாக தேர்தலை நடத்தியது.
உண்மையில், நாட்டின் 66% இடங்களில் பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வில்லை. மிகப்பெரும் தோல்விகளைத் தான் பாஜக சந்தித்து வருகிறது.
பாஜகவின் அலையும் இல்லை, புயலும் இல்லை. இவர்களின் நிர்வாக திறமையின்மையை மக்கள் அறிந்துதான் வைத்துள்ளார்கள். மக்களின் அறியாமையை மதவெறி மூலம் அறுவடை செய்ய பாஜக முயற்சி செய்கிறது. பாஜக இல்லாத இந்தியா கூடிய விரைவில் சாத்தியமாகும்.