மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறதே?

அரியலூர் மாவட்டம் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற லாவண்யா என்னும் மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசுபொருளானது .
மாணவி லாவண்யா அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக எங்கும் இல்லை.
ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியை மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அதனாலேயே மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜக கூறிவந்தது.
அதற்கேற்ப லாவண்யா அளித்த மரண வாக்குமூலத்தில் எடிட்டிங் செய்து முன் பின் வாசகங்களை மாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினர்.
பாஜகவை பொருத்தவரை எடிட்டிங், மார்பிங் போன்றவை கைவந்த கலை என்பதை நாடறியும்.
லாவண்யா மரணம் குறித்து அரசும் அதன் சார்பில் நியமிக்கப்படும் விசாரணை கமிஷன்களும் உரிய முறையில் விசாரித்து அறிக்கையை தெரிவிக்கட்டும்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது மதமாற்றத் தடைச் சட்டம் பற்றி பாஜக பேசலாமா? என்பது தான்.
இது பற்றி பேச பாஜவுக்கு கிஞ்சிற்றும் தகுதியில்லை.
இந்தியாவெங்கும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது பாஜகவே!
ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷத்தை சொல்ல வற்புறுத்தி நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பாஜக கொன்று குவித்தது.
தங்களது மதக்கடவுளை ஏற்குமாறு இன்னொரு சமூகத்தை கட்டாயப்படுத்தியது.
அதை ஏற்க மறுப்பவர்களை கொன்று குவித்தது.
மாட்டிறைச்சியின் பெயரால் எண்ணற்ற தலித்களையும் முஸ்லிம்களையும் அடித்தே கொன்றார்கள்.
தங்களது மத நம்பிக்கையை இன்னொரு சமூகத்தின் மீது திணித்தது மட்டுமின்றி அதை ஏற்க மறுத்தவர்கள் இந்த பாஜக வகையினர்.
அக்லாக் முதல் … வரை
ஜூனைத் கான் முதல் பெஹ்லுகான் வரை
இவர்களது கட்டாய மத திணிப்பை ஏற்க மறுத்ததால் கொல்லப்பட்டவர்களது பட்டியல் மிக நீண்டது.
தங்களது மதத்தையும் மத சடங்கையும் ஏற்காதவர்களை எல்லாம் கும்பல் படுகொலையில் ஈடுபடும் பாஜகவினர் கட்டாய மதமாற்றம் பற்றி பேச துளியும் அருகதையற்றவர்கள்.
லாவண்யா தற்கொலைக்கு பெண்கள் மீதான அக்கறை அடிப்படையில் நியாயம் கேட்க கூடாதா? என்றால்
பாஜகவுக்கு ஏது பெண்கள் மீது அக்கறை? என்பதே அதற்கு போதுமான பதிலாகும்.
ஜம்முவை சார்ந்த ஆசிபா எனும் சிறுமி சங்பரிவார கும்பல் மூலம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாளே! அப்போது எங்கே போனது பாஜவின் பெண் அக்கறை?
உன்னாவ் பலாத்காரம்
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவு
இது போன்ற எண்ணற்ற பாலியல் படுகொலைகளில் அசாத்திய மவுனம் காத்த பாஜக திடீரென்று லாவண்யா மரணத்திற்கு கூப்பாடு போடுகிறது என்றால் என்ன அர்த்தம்.
எதுவொன்றிலும் இறங்கும் முன்பு பாஜக சிந்திப்பது இதை மத அரசியலாக்கி ஓட்டு அறுவடை செய்ய முடியுமா என்பது தான்.
மதம், கடவுள், பெண்கள், தேசம், தேசப்பற்று இது எல்லாமே பாஜக அரசியல் ஓட்டுக்காக அணிந்து கொள்ளும் போலி முகமூடிகளே!
இதே அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவி அனிதா நீட் கொடுமையினால் தற்கொலை செய்து கொண்டாள்.
அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்தது.
ஆனால் பாஜக என்ன செய்தது நீட் தேர்வு தமிழகத்தில் வர வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை விடுத்தது.
இதுதான் தமிழக மாணவ-மாணவியர் நலனில் பாஜக கொண்டுள்ள சமூக அக்கறை.
எஸ்.வி. சேகர், எச் ராஜா போன்ற கேடு கெட்டவர்கள் ஒட்டுமொத்த பெண்களை இழிவுபடுத்தி கருத்துக்கள் தெரிவிக்கின்ற பொழுது கள்ள மௌனம் சாதித்த கயவர் கூட்டம் தான் இந்த பாஜக என்பதை மறந்து விடக்கூடாது.
சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவிலேயே சிறந்த முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் எப்படியேனும் மதக்கலவரத்தை ஏற்படுத்திவிட துடியாய் துடிக்கிறது பாஜக.
வெறி கொண்ட நாய்களை சுதந்திரமாக உலவ விடுவது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையல்ல.
முளையிலேயே இதை தமிழக அரசு கிள்ளியெறிய வேண்டும்.