அத்தியாயம் : 102
வசனங்களின் எண்ணிக்கை: 8
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, ஒருவருக்கொருவர் (செல்வத்தைப்) பெருக்கிக் கொள்வது உங்களைத் திசை திருப்பிவிட்டது.655
3. அவ்வாறல்ல! நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
4. பின்னரும் அவ்வாறல்ல! நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
5. அவ்வாறல்ல! நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் (திசை திரும்பி இருக்க மாட்டீர்கள்.)
6. நீங்கள் நரகத்தைக் காண்பீர்கள்.
7. மேலும் நீங்கள் அதைக் கண்கூடாகக் காண்பீர்கள்!
8. பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.656