அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்

அத்தியாயம் : 86

வசனங்களின் எண்ணிக்கை: 17

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானத்தின்மீது சத்தியமாக! ‘தாரிக்’ மீதும் சத்தியமாக! 627
2. ‘தாரிக்’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3. அது மின்னும் நட்சத்திரமாகும்.
4. ஒவ்வொருவருக்கும் அவர்மீது ஒரு கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.
5, 6. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அவன் கவனிக்கட்டும். பாய்ந்து வெளியேறும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.
7. முதுகந்தண்டிற்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து அது வெளிப்படுகிறது.
8, 9. இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் அந்நாளில் இவனை (உயிர்ப்பித்து) மீட்டுக் கொண்டு வருவதற்கும் அ(ந்த இறை)வன் ஆற்றலுடையவன்.628
10. மனிதனுக்கு எந்தச் சக்தியும் இருக்காது. உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.
11. திருப்பிக் கொடுக்கும் தன்மையுடைய வானத்தின்மீது சத்தியமாக!
12. பிளந்துவிடும் தன்மையுடைய பூமியின்மீது சத்தியமாக!
13, 14. இது தெளிவுபடுத்தும் சொல்லாகும். இது கேலிப் பொருளல்ல!
15. அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
16. நானும் பெரும் சூழ்ச்சி செய்கிறேன்.
17. எனவே, இறைமறுப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! சிறிது அவகாசம் அளிப்பீராக!